TNPSC Thervupettagam

குழந்தைகளிடம் அதிகரிக்கும் தூக்கமின்மை

January 4 , 2025 4 days 26 0

குழந்தைகளிடம் அதிகரிக்கும் தூக்கமின்மை

  • உலகளவில் 80% குழந்தைகள், தூக்கமின்மைக் கோளாறுகளால் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தூக்கமின்மையானது உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் நமது அன்றாடச் செயல்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • முதியவர்களிடம் பரவலாகக் காணப்பட்ட தூக்கமின்மைக் கோளாறு தற்போது குழந்தைகள், பதின்பருவத்தினரிடம் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதிக நேரம் தொலைக்காட்சி, திறன்பேசி, வீடியோ கேம் போன்றவற்றில் கவனம் செலுத்துவதால் இரவில் குழந்தைகள் சரியான நேரத்தில் தூங்குவதில்லை.

பாதிப்புகள்:

  • துக்கமின்மை காரணமாகப் பகலில் உறங்குவது, சோர்வடைதல், நினைவாற்றல் குறைவது, கவனமின்மை, கல்விசார் செயல்திறனில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் மன அழுத்தம், பதற்றம் போன்ற மனநலம் சார்ந்த பாதிப்புகளுக்குத் தூக்கமின்மை காரணமாகிறது.
  • எனவே, குழந்தைப் பருவத்தில் குழந்தைகளுக்குக் கூடுதல் தூக்கம் தேவை. அந்த வகையில் தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை இடையறாத தூக்கம் அவசியமானது. மூளைக்குப் போதுமான ஓய்வு கிடைக்கும்போது பிற செயல்பாடுகளில் அது புத்துணர்வுடன் இயங்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories