TNPSC Thervupettagam

குழந்தைகளைத் தாக்கும் ஹெபடைடிஸ்

July 20 , 2024 4 days 103 0
  • ஹெபடைடிஸ் என்பது கல்லீரலில் ஏற்படும் அழற்சி அல்லது வீக்கமாகும். இந்நோய் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வைரஸ் தொற்றுகளால் ஏற்படுகிறது. இது பொதுவாக வைரஸ்கள் காரணமாக நிகழ்கிறது. ஆனால், சிலருக்குச் சில மருந்துகளை எடுத்துக்கொள்வதாலோ ஆட்டோ இம்யூன் நோய் எனப்படும் தன்னுடல் தாக்கு நோயால் பாதிக்கப்பட்டாலோ இது நிகழலாம்.
  • உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய தரவின்படி, குழந்தைகளின் ஒரு முக்கிய உடல்நலப் பிரச்சினை யாக ஹெபடைடிஸ் தொடர்கிறது. 2021இல் உலக அளவில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் கடுமையான ஹெபடைடிஸ் B உடன் வாழ்ந்துவரு கின்றனர். இது, கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு உள்ளிட்ட தீவிரக் கல்லீரல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, ஹெபடைடிஸை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை யளிப்பது முக்கியம். ஏனெனில், இது குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டைப் பாதிக்கலாம்.

ஹெபடைடிஸ் வகைகளும் பாதிப்பும்:

  • ஹெபடைடிஸ் A (HAV): ஹெப டைடிஸ் A என்பது குடல் தொற்று. இது முதன்மையாக அசுத்தமான உணவு அல்லது அசுத்தமான தண்ணீரை உள்கொள்வதன் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபருடன் ஆன நெருங்கிய தொடர்பின் மூலமாகவும் இது பரவுகிறது.
  • ஹெபடைடிஸ் A பொதுவாகக் குழந்தைகளிடையே கடுமையான தொற்றுநோயை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், பலவீனம், நோய்வாய்ப்பட்ட உணர்வு, மஞ்சள் காமாலை, பசியின்மை, வாந்தி, வயிற்று வலி, அடர் நிறத்தில் சிறுநீர் கழித்தல் ஆகியவை இதன் சில அறிகுறிகள்.
  • பொதுவாக, பெரும்பாலான குழந்தைகளுக்குக் கல்லீரலில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் முழுமையாகக் குணமடைய பல வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை ஆகலாம்.
  • ஹெபடைடிஸ் B (HBV): ஹெபடைடிஸ் B, ரத்தம், விந்து, பிறப்புறுப்பு சுரப்புகள் போன்ற பாதிக்கப்பட்ட உடல் திரவங்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து பிரசவத்தின்போது இது குழந்தைக்கும் பரவுகிறது.
  • ஹெபடைடிஸ் Bஆல் பாதிக்கபப்டும் சில குழந்தைகளுக்குக் கடுமையான தொற்று ஏற்படலாம். அதாவது, அவர்கள் நோய்வாய்ப்படுவார்கள்; ஆனால் வைரஸ் அவர்களது உடலில் இருந்து வெளியேறிவிடும். பிறக்கும் போது தாய்மார்களிடமிருந்து பெறப் படும் வைரஸால் பாதிக்கப்பட்ட வர்கள் நீண்டகாலக் கல்லீரல் நோய், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்படலாம்.
  • கடுமையான ஹெபடைடிஸ் B உருவாகவும்கூடும். கடுமையான ஹெபடைடிஸ் B என்பது பெரும்பாலான குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை பெறுவது மற்றும் மருத்துவக் கவனிப்பு தேவைப்படும் நிலை.
  • ஹெபடைடிஸ் C (HCV): ஹெபடைடிஸ் C பாதிக்கப்பட்ட ரத்தத்தின் மூலம் முதன்மையாகப் பரவுகிறது. இது ஒரே ஊசிகளைப் பயன்படுத்துவதிலிருந்தோ, ரத்தப் பரிமாற்றத்திலிருந்தோ அல்லது பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து பிரசவத்தின்போது குழந்தைக்கோ பரவலாம்.
  • பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஹெபடைடிஸ் C அடிக்கடி கடுமை யான தொற்றுக்கு வழிவகுக்கிறது. ஹெபடைடிஸ் C பாதிப்புக்குள்ளான பல குழந்தைகள் நோயின் ஆரம்பக் கட்டங்களில் அறிகுறியற்றவர்களாக உள்ளனர். இருப்பினும் இந்த வைரஸ் கல்லீரலைச் சேதப்படுத்திவிடும்.
  • கடுமையான ஹெபடைடிஸ் C, சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் அழற்சி, கல்லீரல் புற்றுநோய் போன்ற கல்லீரல் நோய்களைப் பின்னாளில் நோயாளிக்கு ஏற்படுத்தலாம். ஹெபடைடிஸ் C சிகிச்சைக்கு ஆரம்பகாலக் கண்டறிதல் அவசியம். இதில் வைரஸ் தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படலாம்.
  • ஹெபடைடிஸ் D (HDV): ஹெபடைடிஸ் D என்பது ஹெபடைடிஸ் B நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய வைரஸ். இது பாதிக்கப்பட்ட உடல் திரவங்களின் தொடர்பு மூலம் பரவுகிறது.
  • குழந்தைகளிடம் ஹெபடைடிஸ் D, ஹெபடைடிஸ் Bஐ விடக் கல்லீரல் நோயின் போக்கை மேலும் மோசமாக்கு கிறது. ஏனெனில் இது சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோயின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துகிறது.
  • ஹெபடைடிஸ் E (HEV): ஹெப டைடிஸ் E என்பது மோசமான சுகாதார நிலைகளைக் கொண்ட பகுதிகளில் மிகவும் பொதுவாகக் காணப்படும். இது அசுத்தமான தண்ணீரை உள்கொள்வதன் மூலம் பரவுகிறது.
  • ஹெபடைடிஸ் E பொதுவாக மஞ்சள் காமாலை, சோர்வு, குமட்டல், வயிற்று வலி போன்ற ஹெபடைடிஸ் Aவின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். இது கல்லீரல் செயல்பாட்டில் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தாது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் முழுமை யாகக் குணமடைவார்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

  • ஹெபடைடிஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்குத் தடுப்பூசி போடுவதே சிறந்த வழியாகும். ஹெபடைடிஸ் A மற்றும் Bக்கு எதிரான தடுப்பூசி மிகவும் சக்தி வாய்ந்தது. இது பிறந்த உடனேயே குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது.
  • ஹெபடைடிஸ் Bக்கான மருந்து அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பூசி மூலம் வழக்கமாகச் செலுத்தப்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட அட்டவணையின் அடிப்படையில் மூன்று முதல் நான்கு தவணைகளில் வழங்கப்படும். குழந்தை பிறந்தவுடன் முதல் தவணை செலுத்தப்படுகிறது.
  • ஹெபடைடிஸ் Cக்குத் தடுப்பூசி இல்லை. எனவே, பாதிக்கப்பட்ட ரத்தத்துடன் தொடர்பைத் தவிர்ப்பது மட்டுமே தடுப்பு நடவடிக்கையாகும்.
  • ஹெபடைடிஸ் D, ஹெபடைடிஸ் B உடன் சேர்ந்து ஒரே நேரத்தில் ஏற்படுகிறது. எனவே, தடுப்பூசி மூலம் ஹெபடைடிஸ் Bயை ஒழிப்பது என்பது ஹெபடைடிஸ் Dயையும் ஒழிப்பதாகும்.
  • சிறந்த தனிப்பட்ட சுகாதாரம், பாதுகாப்பான நீர் பயன்பாடு ஹெபடைடிஸ் தொற்று அபாயத்தைக் குறைக்க உதவும். வீட்டில் கொதிக்க வைத்த நீரைப் பயன்படுத்துவது அல்லது குடிநீர் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்வதும் இதில் அடங்கும்.
  • ஒவ்வொரு வகை ஹெபடைடிஸும் குறுகிய கால நோய் மற்றும் நீண்ட கால உடல்நலப் பிரச்சினைகள் போன்ற பல சவாலான பிரச்சினைகளைக் கொண்டுவருகிறது. ஹெபடைடிஸ் உள்ள குழந்தைகள் சமூகப் பிரச்சனை களுடனும் போராட வேண்டியிருக்கும்.
  • எனவே, நிபுணர் ஆலோசனை, ஆதரவுக் குழுக்கள் அவர்களது உணர்வுகளைச் சமாளிக்க உதவும். கூடுதலாக, தடுப்பூசி, முறையான மருத்துவப் பராமரிப்பு ஆகியவை குழந்தைகளின் வளர்ச்சியில் ஹெபடைடிஸின் விளைவுகளைக் குறைப்பதற்கும் அவர்கள் இயல்பான, பயனுள்ள வாழ்க்கையை வாழவும் உதவும்.

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories