TNPSC Thervupettagam

சங்க காலம் ஏன் ஒவ்வொரு தமிழருக்கும் முக்கியமானது கா.ராஜன் பேட்டி

January 2 , 2024 375 days 246 0
  • பண்டைய தமிழ்நாட்டின் வரலாற்றை வாசிக்க ஆரம்பிக்கும் எவரும் அறிந்துகொள்ள வேண்டிய முதல் விஷயம், சங்க காலம். தமிழ்நாடு தொல்லியல் துறையின் கல்வி மற்றும் ஆய்வுப் பணி ஆலோசகராக உள்ள பேராசிரியர் கா.ராஜன், இன்று தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொல்லியல் ஆய்வுகளோடு மிக நெருக்கமான உறவைக் கொண்டிருப்பவர். தமிழகத்தின் வரலாற்றில் ஏன் சங்க காலம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இங்கே பேசுகிறார். 'சோழர்கள் இன்று' நூலில் இடம்பெற்றுள்ள முக்கியமான பேட்டிகளில் ஒன்று இது.

தமிழக வரலாற்றில் சங்க காலத்தின் முக்கியத்துவம் என்ன? ஏன் நம் வரலாற்றைக் குறைந்த பட்சம் சங்க காலத்திலிருந்து தொடங்குகிறோம்?

  • நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்களைத்தான்சங்க இலக்கியங்கள்என்று சொல்கிறோம். இந்த இலக்கியங்கள் எழுதப்பட்ட காலத்தைசங்க காலம்என்று குறிப்பிடுகிறோம்.
  • .வே.சாமிநாதையரால் இந்த இலக்கியங்கள் சேகரிக்கப்பட்டு, பொதுச் சமூகத்தின் கவனத்துக்கும் வந்தபோது, ‘இப்படி நமக்கு ஒரு வளமான வரலாறு இருந்திருக்கிறதே, அது என்ன காலகட்டமாக இருந்திருக்கும்?’ என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.
  • ஏனென்றால், இந்த இலக்கியங்களில் நம்முடைய முற்கால அரசர்களைப் பற்றி, அன்றைய ஊர்களைப் பற்றி, நம் முன்னோரின் வாழ்க்கையைப் பற்றி விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. ‘பட்டினப்பாலையை வாசித்தால், அதில் கரிகாலனைப் பற்றியும் அன்றைய காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றியும் பிரமிப்பாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், கரிகாலன் எந்தக் காலத்தில் வாழ்ந்தார், எந்தக் காலத்தில்பட்டினப்பாலைஎழுதப்பட்டிருக்கும் என்று மக்களுக்குப் பெரும் ஆவல் எழுகிறது.
  • ஏனென்றால், இந்த இலக்கியங்களைத் தவிர, கரிகாலனைப் பற்றி நமக்கு வேறு சான்றுகள் இல்லை. இன்றைய பூம்புகார்தான் அன்றைய காவிரிப்பூம்பட்டினம் என்றால், சரி அங்கே ஒரு தொல்லியல் ஆய்வை நடத்துவோம்; ஏதாவது கிடைத்தால், இலக்கியம் சொல்வது உண்மையான வரலாறாகவும் இருக்கலாம் என்ற எண்ணத்தோடுதான் ஆய்வை ஆரம்பிக்கிறார்கள்.
  • இப்படித்தான் உறையூரில், பூம்புகாரில், மதுரையில், கொற்கையில், கரூரில், முசிறியில், கொடுமணலில், பொருந்தலில் என்று நம்முடைய இலக்கியங்கள் குறிப்பிடும் ஊர்களில் எல்லாம் ஆய்வுகளை நடத்துகிறார்கள். இப்படி எங்கெல்லாம் மண்ணைத் தோண்டுகிறோமோ அங்கெல்லாம் தொல்பொருள்கள் வெளிப்படுகின்றன. நம்முடைய இலக்கியங்கள் வெறும் கற்பனையும் புனைவுகளும் மட்டுமே இல்லை என்று தெரியவருகிறது. ஆக, நம்முடைய வரலாறும் இலக்கியமும் இந்த அளவுக்குப் பிணைப்பைக் கொண்டிருப்பதாலேயே இலக்கியங்கள் எழுதப்பட்ட காலமான சங்க காலம் நமக்கு அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது.

சங்க காலம் என்பதன் வரையறை என்ன

  • அது பின்னோக்கிப் போய்க்கொண்டே இருக்கிறது. இந்தியத் துணைக் கண்டத்தில் கிடைத்ததிலேயே அசோகனுடைய கல்வெட்டுகள்தான் பழமையானவையாகக் கருதப்படுகின்றன. அந்தக் கல்வெட்டுகளில் உள்ள எழுத்து வடிவத்தைத்தான்பிராமிஎன்கிறோம்.
  • அசோகனின் ஆட்சிப் பகுதிகளில் கிடைத்த கல்வெட்டுகளில் உள்ள அந்தபிராமி எழுத்துவடிவத்தில் எழுதப்பட்டிருக்கும் மொழி பிராகிருதம். அசோகனுடைய காலகட்டம், பொது ஆண்டுக்கு முந்தையஅதாவது கி.மு. - மூன்றாம் நூற்றாண்டு என்று கணிக்கப்படுவதால், அவருடைய காலகட்டத்தில் எழுதப்பட்ட இந்தபிராமி எழுத்துகள்அதே காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.
  • பிற்பாடு தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட அகழாய்வுகளிலும் அதே போன்ற எழுத்துகள் கல்வெட்டுகளிலும், பாறைகளிலும், பானையோடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், இந்தபிராமி எழுத்து வடிவத்தில் எழுதப்பட்டிருக்கும் மொழி தமிழ். ஆகையால், இதற்குத்தமிழ் பிராமி எழுத்து’ (தமிழி) என்று பெயர் சூட்டினார்கள். இந்த எழுத்துகளும் கிட்டத்தட்டஅசோக பிராமி எழுத்துகள்போன்று இருந்ததால், இவையும் அதே கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.
  • ஆகையால், கி.மு. மூன்றாம் நூற்றாண்டைத்தான் சங்க காலத்தின் ஆரம்ப எல்லையாக நாம் வைத்திருந்தோம். அதேபோல, கி.பி. மூன்றாம் நூற்றாண்டை சங்க காலத்தின் முடிவு எல்லையாகக் கொண்டிருந்தோம்; ஏனென்றால், இதற்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் எழுத்து வடிவமும் மொழி நடையும் மாறுகின்றன. ஆக, கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலமே சங்க காலமாக இருக்கும் என்று நீண்ட காலமாக நம்பியிருந்தோம்.
  • ஆனால், பிற்பாடு இங்கே நடந்த ஆய்வுகளில் கிடைத்த சான்றுகள் நம்முடைய தமிழி எழுத்து வடிவம் அசோகன் காலத்துக்கும் முந்தையது என்று யோசிக்கும் சாத்தியத்தைத் தந்தன. திண்டுக்கல் பக்கத்திலுள்ள பொருந்தலிலும், அதைத் தொடர்ந்து ஈரோடு பக்கத்திலுள்ள கொடுமணலிலும் நடந்த ஆய்வுகளுக்குப் பின் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு எனும் காலகட்டத்தை நோக்கி நாம் நகர முடிந்தது. அடுத்து, கீழடியில் நடந்த ஆய்வானது, கி.மு. ஆறாம் நூற்றாண்டு நோக்கி நம்மை நகர்த்துகிறது. எனில், அசோகன் காலத்துக்குக் குறைந்தது 300 ஆண்டுகள் முன்பே இங்கே எழுத்தறிவு இருந்திருக்கிறது.
  • இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நீங்கள் பாண்டிச்சேரிக்குப் பக்கத்தில் அரிக்கமேட்டில் தோண்டினாலும் சரி, தூத்துக்குடிக்குப் பக்கத்தில் துளுக்கர்பட்டியில் தோண்டினாலும் சரி; கிடைக்கும் தொல்பொருள்களில் தமிழி எழுத்துகள் கிடைக்கின்றன. வத்தலகுண்டுக்குப் பக்கத்தில் உள்ள சின்ன கிராமங்கள் புலிமான்கோம்பை, தாதப்பட்டி. அங்கேதான் இந்தியாவிலேயே காலத்தால் முற்பட்ட நடுகற்கள் கிடைத்தன. அவற்றிலும் தூய தமிழில் எழுத்து வடிவங்கள் கிடைக்கின்றன.
  • இதன் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், இவ்வளவு காலத்தால் முற்பட்ட எழுத்துகள் இந்தியாவில் வேறு எங்கும் கிடைக்கவில்லை; அசோகன் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள் அரசின் கல் தச்சர்களால் எழுதப்பட்டவை; ஒருவகையில் அவை அரசாணைகள். ஆனால், புலிமான்கோம்பை நடுகற்களில் நாம் பார்க்கும் எழுத்துகள் குடிமக்களால் எழுதப்பட்டவை. எனில்கி.மு. ஆறாம் நூற்றாண்டு வாக்கிலேயே தமிழகம் பரவலான எழுத்தறிவைப் பெற்றிருக்கிறது என்று இது யோசிக்க வைக்கிறது.

சரி, அந்தக் காலகட்டத்திலேயே இவ்வளவு முன்னோக்கியதாகத் தமிழ்ச் சமூகம் இருந்திருக்கிறது என்றால், அதற்கு எது அடிப்படை வளமாக இருந்திருக்க முடியும்?

  • இரும்புப் பயன்பாடாக இருக்கலாம். கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள மயிலாடும்பாறையில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில் கிடைத்த தொல்பொருள்களைக் கதிரியக்கக் காலக் கணிப்புக்கு உட்படுத்தியதில், காலகட்டம் கி.மு. 2172 என்று வந்தது; கிடைத்த தொல்பொருள்களில் இரும்பு வாள்கள், கத்திகளும் அடக்கம். அதாவது, 4,000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பைப் பயன்படுத்தியிருக்கிறோம்.

நாம் குறிப்பிடும் காலகட்டத்தில், உலகில் வேறு எந்தெந்தச் சமூகங்கள் முன்னோக்கிய ஒரு நாகரிகத்தில் இருந்தன? அவற்றோடு நம்முடைய வரலாற்றை ஒப்பிட ஏதும் இருக்கிறதா?

  • பல சமூகங்கள் இருந்திருக்கின்றன. நம்முடைய ஆர்வத்தைத் தூண்டுவது எதுவென்றால், கி.மு. 2,500 என்பது சிந்து சமவெளி நாகரிகக் காலகட்டம். நமக்குக் கிடைக்கும் சான்றுகள் கிட்டத்தட்ட அந்தக் காலகட்டத்துக்கு அருகில் நம் சமூகத்தைக் கொண்டுசெல்கின்றன. அப்படியென்றால், அவர்களுக்கும் நமக்கும் இடையில் என்ன தொடர்பும், உறவும் இருந்திருக்கும் என்றெல்லாம் யோசிக்க இந்த ஆய்வுகள் தூண்டுகின்றன.
  • எப்படியாயினும், இன்று பூமியில் உள்ள அத்தனை இனங்களைச் சேர்ந்த மனிதர்களின் வரலாற்றிலும் நெடிய பயணமும் ஏராளமான குருதிக் கலப்பும் இருக்கின்றன. அதேசமயம், ஒவ்வொரு சமூகத்துக்கும் என்று ஒரு தனித்துவமான வரலாறும் இருக்கிறது!

நன்றி: அருஞ்சொல் (02 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories