TNPSC Thervupettagam

ஜனநாயக விரோதம்

July 21 , 2020 1645 days 1346 0
  • இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, ஓர் உலகளாவிய யுத்தம் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஐ.நா. சபை உருவாக்கப்பட்டது.

  • ஆனால், .நா சபை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமாக இருக்கும் நாடுகள் மேற்கொள்ளும் முடிவுகளை உலகில் உள்ள சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  • வியத்நாம் மீதும், ஈராக் மீதும், ஆப்கானிஸ்தான் மீதும் அமெரிக்கா போர் தொடுத்தபோது ஐ.நா. சபையால் தடுக்க முடியவில்லை.

அமெரிக்காவின் நியதி

  • அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலில் பின்லேடனின் அல்கொய்தா இயக்கம்தான் பொறுப்பு என்கிற முறையில், பாகிஸ்தானில் தங்கியிருக்கும் பின்லேடனை அமெரிக்க அதிரடிப் படைகள் கண்டுபிடித்து அதிகாலை வேளையில் தாக்குதல் நடத்தி பின்லேடனை சுட்டுக் கொல்லும் காட்சியை சர்வதேச ஊடகங்கள் வெளிப்படுத்தின.

  • இந்தியாவில் மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருக்கிறார் என அமெரிக்காவிடம் ஆதாரபூர்வமாக எடுத்துச் சொல்லியும், பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்கிற அறிவுரையை அமெரிக்கா அளித்தது.

  • அதாவது, பயங்கரவாத தாக்குதல் அமெரிக்காவில் நடைபெற்றால்தான், சர்வதேச பயங்கரவாதம் என்று பெயர்பெறும். மற்ற நாடுகளில் நடைபெற்றால் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், வேண்டுமானால் தான் நடுவராகச் செயல்படுகிறேன் என்றும் அமெரிக்கா சொல்லும். இதுதான் அதன் நியதி.

  • அமெரிக்காவின் நியூயார்க்கில்தான் இன்றைய ஐ.நா. சபை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 193 நாடுகள் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றன. ஒவ்வொரு நாடும் தங்களின் பிரதிநிதிகளாக ஐந்து பேரை இந்த அவைக்கு அனுப்பி வைக்கலாம்.

  • அதாவது, உலகின் மிகச் சிறிய நாடான துனிஷியாவும், உலகில் மக்கள் தொகை எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவும் ஒரே மாதிரியான எண்ணிக்கையில்தான் பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும்.

  • .நா. சபை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமான முறையில் உறுப்பு நாடுகளாக அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து நாடுகள் சிறப்பு அதிகாரத்துடன் (வீட்டோ பவர்) வீற்றிருக்கின்றன.

  • .நா. சபையின் உறுப்பு நாடுகள் எல்லாமே மேற்சொன்ன வீட்டோ பவர் கொண்ட நாடுகளை வலுவான முறையில் எதிர்க்க முடியாது.

  • ஏனெனில், ஒரு நாடு ஐ. நா. சபையில் தீர்மானம் முன்மொழிந்தால், இந்த வீட்டோ பவர் கொண்ட நாடு ஒன்று ஆட்சேபனை செய்து எதிர்ப்பு தெரிவித்தால் தீர்மானம் தோல்வி அடையும். தீர்மானத்தின் மீது பெரும்பான்மை கணக்கெல்லாம் கிடையாது.

  • இந்த ஐந்து நாடுகளுடன் நிரந்தரமில்லாத நாடுகள் என இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் ஐந்து நாடுகள் தேர்வு செய்யப்படும்.

  • இரண்டாண்டு வரையில் இந்த நாடுகள் நிரந்தரமில்லாத உறுப்பினராக பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கலாம். ஏற்கெனவே 1950, 1967, 1972, 1977, 1984, 1992, 2010 ஆகிய காலகட்டங்களில் இந்தியா இதுபோன்ற நிரந்தரமில்லாத பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ளது.

நிரந்தரமில்லாத உறுப்பினர்

  • 1996-ஆம் ஆண்டில் இந்திய அரசியலில் ஏற்பட்ட நிரந்தரமின்மை, பொருளாதார பின்னடைவுகளின் காரணமாக, இந்தியா நிரந்தரமில்லாத பாதுகாப்பு கவுன்சிலுக்கு போட்டியிட்டபோது, 42 நாடுகள்தான் ஆதரித்தன.

  • அதனால், இந்தியா தோல்வியைச் சந்தித்தது. அதன் பிறகு 2010-ஆம் ஆண்டில் போட்டியிட்ட போது 192 நாடுகளில் 187 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களித்தன.

  • இந்தியாவின் இந்த செல்வாக்கை உணர்ந்த அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமா, வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தரமான முறையில் பாதுகாப்பு கவுன்சிலில் ஐந்து நாடுகளுடன் ஆறாவது நாடாக இந்தியாவைச் சேர்க்க வேண்டிய காலம் நெருங்கி வருகிறது என்று இந்திய சுற்றுப் பயணத்தின்போது குறிப்பிட்டிருந்தார்.

  • ஏனெனில்,அன்றைய சூழலில் அமரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் தாக்கம் உலக நாடுகளை பெருமளவில் பாதித்தது.

  • ஆனால், இந்தியாவில் எவ்விதப் பொருளாதாரச் சரிவும் ஏற்படவில்லை. அன்றைய நிலையில் நமது ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடையவில்லை.

  • இயற்கையிலேயே சேமிக்கும் பழக்கம் உள்ள மக்கள் நிறைந்த நாடு இந்தியா என்பதால், இந்த பொருளாதாரச் சுனாமியில் இருந்து தப்பியது என்றெல்லாம் உலக அளவில் புகழப்பட்டது.

  • ஆனாலும், .நா. சபையின் நிரந்தர பாதுகாப்பு உறுப்பினராக இந்தியாவால் இடம்பெற முடியவில்லை.

  • தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப், நம் இந்தியப் பிரதமர் மோடியை நல்ல நண்பர் என்கிறார்.

  • இந்தியாவை ஜி 7 என்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிறார். இருந்தாலும், .நா. சபையில் ஆளுமையுடன் இந்தியா வந்துவிடக் கூடாது என்பதில் கவனமுடன் இருக்கிறார்.

வளர்ச்சிக்குப் பெருமையைத் தராது

  • உலக அளவில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பரவிய இன்றைய சூழலில், இந்தியாவில் இருந்து ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து வேண்டும் என்று வல்லரசுகளாக இருக்கும் அமெரிக்க, பிரன்ஸ் உள்ளிட்ட நாடுகள் கையேந்தி நின்ற காட்சிகள் மறப்பதற்கில்லை.

  • இருந்தபோதும், வீட்டோ பவருடன் கூடிய 6-ஆவது நாடாக இந்தியா சேர்க்கப்படாமல் இருப்பது உலகளாவிய ஜனநாயக விரோதம் எனலாம்.

  • அமெரிக்க அதிபர் நிக்சன் காலத்தில் தைவான் குடியரசுக்கான அமெரிக்க ஆதரவு விலக்கப்பட்ட பிறகு, 1971-ஆம் ஆண்டில்தான் வீட்டோ பவருடன் கூடிய ஐந்தாவது நாடாக ஐ.நா. சபையால் சீனா அங்கீகரிக்கப்பட்டது.

  • அந்த வகையில் சீனாவுக்கு நிகரான சந்தைப் பொருளாதாரம், மனித வளத்தினைக் கணக்கில் கொண்டு இந்தியாவை வீட்டோ பவருடன் கூடிய ஆறாவது நாடாக ஐ.நா. சபை அங்கீகரிக்க, இந்தியா நிர்ப்பந்தம் செய்யும் நேரம் இது.

  • நிரந்தரமில்லாத பாதுகாப்பு கவுன்சிலில் தேர்வாவது தற்போதைய இந்திய வளர்ச்சிக்குப் பெருமையைத் தராது.

நன்றி: தினமணி (21-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories