TNPSC Thervupettagam

டேட்டா ஸ்டோரி: இந்தியாவும் அதன் மாநிலங்களும் ஏற்றுமதி

July 17 , 2023 498 days 924 0
  • நாட்டின் பொருளாதாராத்தை வலுப்படுத்துவதில் ஏற்றுமதிக்கு முக்கியப் பங்கு உண்டு. ஒரு நாடு எவ்வளவு அதிகமாக சரக்குகளை ஏற்றுமதி செய்கிறதோ அந்த அளவுக்கு அங்கு தொழில் செயல்பாடுகள் நல்ல நிலையில் இருப்பதாக அர்த்தம். அதேசமயம், ஏற்றுமதியை ஒப்பிட இறக்குமதி குறைவாக இருப்பது அவசியம்.
  • 2022-23 நிதி ஆண்டில் இந்தியா 447 பில்லியன் டாலருக்கு (ரூ.36.65 லட்சம் கோடி) சரக்குகளை ஏற்றுமதி செய்துள்ளது. இது 2021-22 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகம். இறக்குமதியைப் பொறுத்தவரையில் கடந்த நிதி ஆண்டில் 714 பில்லியன் டாலருக்கு (ரூ.58.55 லட்சம் கோடி) இறக்குமதி செய்துள்ளது. இது அதற்கு முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16.5 சதவீதம் அதிகம்.
  • ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை அதிகமாக இருந்தால், அது நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை பாதிக்கும். எனவே, வர்த்தக பற்றாக்குறையை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

ஏற்றுமதியில் டாப் 5 மாநிலங்கள்

பின்தங்கியுள்ள மாநிலங்கள்

  • வடகிழக்கு மாநிலங்கள் ஏற்றுமதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. அம்மாநிலங்களில் போதிய தொழில் கட்டமைப்பு இல்லாததன் காரணமாக அவற்றால் பெரிய அளவில் ஏற்றுமதி மேற்கொள்ள முடிவதில்லை.
  • மிசோரம், திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், மேகாலயா, சிக்கிம் ஆகிய 7 வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவிலேயே மிக மிக குறைவான அளவில் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களாக உள்ளன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் இந்த 7 மாநிலங்களின் பங்களிப்பு வெறும் 0.07 சதவீதம்தான்.

டாப் 6 ஏற்றுமதி மையங்கள்

  • ஒவ்வொரு மாநிலங்களிலும் சில குறிப்பிட்ட மாவட்டங்கள் மூலமே ஏற்றுமதி அதிகம் நிகழ்கிறது. உதாரணத்துக்கு பெட்ரோலிய ஏற்றுமதியை எடுத்துக்கொண்டால், குஜராத்தில் ஜாம்நகர் மாவட்டம் முதல் இடம் வகிக்கிறது. இம்மாவட்டத்திலிருந்து மட்டும் பெட்ரோலிய தயாரிப்புகள் 67 சதவீதம் ஏற்றுமதியாகிறது.
  • தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் வாகனம் மற்றும் மின்னணு சாதன ஏற்றுமதி மையமாக திகழ்கிறது. தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 33 சதவீதம் காஞ்சிபுரத்திலிருந்து நிகழ்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த வாகன ஏற்றுமதியில் 21 சதவீதம் காஞ்சிபுரத்திலிருந்து மேற்கொள்ளப்படுகிறது.

ஏற்றுமதி பொருட்கள்

  • இந்தியா பிரதானமாக பொறியியல் பொருட்கள், பெட்ரோலிய தயாரிப்புகள், ஆபரணங்கள், மின்னணு சாதனங்களை வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்கிறது.
  •  பெட்ரோலிய ஏற்றுமதியில் குஜராத் முன்னிலை வகிக்கிறது. இந்தியா சென்ற நிதி ஆண்டில் ரூ.7.75 லட்சம் கோடி மதிப்பில் பெட்ரோலிய தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய் துள்ளது. இதில் குஜராத்தின் பங்கு மட்டும் ரூ.5.89 லட்சம் கோடி. இது இந்தியாவின் மொத்த பெட்ரோல் ஏற்றுமதியில் 84 சதவீதம் ஆகும்.
  • தமிழ்நாடு மின்னணு சாதனங்கள், வாகனங்கள் மற்றும் தோல்பொருட்கள் ஏற்றுமதியில் நாட்டின் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இந்தியா கடந்த நிதி ஆண்டில் ரூ.1.93 லட்சம் கோடிக்கு மின்னணு சாதனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டின் பங்கு மட்டும் 23 சதவீதம் (ரூ.44,044 கோடி) ஆகும்.

நன்றி: தி இந்து (17 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories