தமிழ்நாடு அரசு பெற்ற விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
February 19 , 2020 1805 days 3795 0
ஒட்டுமொத்த செயல் திறன்மிக்க முதன்மை மாநிலமாக இந்தியா டுடே ஆய்வில் இரண்டாவது முறையாக தமிழ்நாடு தேர்வு
கிருஷி கர்மான் விருதினை 5 முறை பெற்று சாதனை
உடல் உறப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 5 வருடங்களாக மிகச்சிறந்த மாநிலத்திற்கான விருது
ஊராட்சிகளில் மின் ஆளுமை, வலிமைப்படுத்துதல், குழந்தைகள் நேயம், வலுவான கிராம சபை செயல்பாட்டிற்கென 12 தேசிய விருதுகள்
பெங்களூருவில் உள்ள “பொது விவகாரங்கள் மையத்தின்” அறிக்கையில் நல் ஆளுமையில் இரண்டாவது சிறந்த மாநிலமாகத் தேர்வு
ஃபிராஸ்ட் அண்ட் சல்லிவன் (Frost & Sullivan) நிறுவன ஆய்வறிக்கையில் ஒட்டு மொத்த செயல்பாட்டில் இரண்டாம் இடத்தை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழ்நாடு பெற்றுள்ளது
தாய்மார்கள் இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்ததற்காக மத்திய அரசின் விருது
“பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” திட்டத்திற்காக மத்திய அரசின் விருது
தூய்மை பாரத திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநில விருது
பொது விநியோகத் திட்டத்தை கணினிமயமாக்கியமைக்கு விருது
ஊரக வளர்ச்சித் துறையின் சிறப்பான செயல்பாட்டிற்காக 9 தேசிய விருதுகள்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 4 தேசிய விருதுகள்
மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக கடனுதவி வழங்கிய தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு தேசிய விருது
இணைய வழி கற்றலில் முன்னோடி மாநிலத்திற்கான தேசிய விருது
மூத்த குமக்கள் சேவைக்காக தேசிய விருது
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய விருது
சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு உடல் உறுப்பு தானத்திற்கான சிறப்பு விருது
புதுப்பிக்கப்பட்ட எரிசக்தித் துறைக்கு விருது
சாலை பாதுகாப்பில் சிறந்த செயல்பாட்டிற்காக மத்திய அரசின் விருது
போக்குவரத்துக் கழகங்களின் சிறந்த செயல்பாட்டுத் திறனுக்காக 9 விருதுகள்
உயர் கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலம்
பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையத்திற்கு தென் மண்டலத்திற்கான தேசிய காமதேனு விருது
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு முதுநிலை விருது
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் தரவரிசையில் இந்தியாவிலேயே முதலிடம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு “சிறந்த மேலாண்மைக்கான” மத்திய அரசின் விருது
2018 ஆம் ஆண்டிற்கு மத்திய அரசின் தேசிய நீர் ஆதார விருது
2018 ஆம் ஆண்டிற்கு மத்திய தூய்மையான நகரத்திற்கான சுவச் சர்வக்ஷன் விருது
மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் “தூய்மையான புனித தலம்” விருது
பழமை மாறாமல் திருப்பணி மேற்கொண்டதற்காக ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு யுனஸ்கோ விருது