TNPSC Thervupettagam

தொடர் இருமல்: காசநோயாகவும் இருக்கலாம்

December 7 , 2024 34 days 91 0

தொடர் இருமல்: காசநோயாகவும் இருக்கலாம்

  • அது ஓர் இனிய மாலைப் பொழுது. சமகால விஞ்ஞானிகள் பெர்லின் பல்கலைக்கழகக் கூட்ட அரங்கினுள் குழுமியிருந்தனர். பல காலம் ஆய்வில் ஈடுபட்டிருந்த அந்த இளம் மருத்துவர் தன் உரையைத் தொடங்கினார். அவருடைய உரை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. அவரது பேச்சைக் கேட்ட கூட்டத்தினரிடையே எந்தச் சலசலப்பும் இல்லை, ஆர்பாட்டமுமில்லை, எந்தவொரு தர்க்கமும் இல்லை. ஆழ்ந்த நிசப்தம் நிலவியது.
  • ஆச்சரியம் மட்டுமே அத்தனை முகங்களையும் அரவணைத்திருந்தது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. 5,000 வருடப் பழமையான புதிருக்கு அந்த மருத்துவர் விடை கண்டிருந்தார். பழமைவாதங்களுக்கும் பல மூட நம்பிக்கை களுக்கும் அறிவியலால் முற்றுப்புள்ளி வைத்திருந்தார். அவர் உலகிற்குக் கூறிய உண்மை - காசநோய் (TB) என்பது மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்கிற ஒரு வகை நுண்கிருமியால் ஏற்படுகிறது என்பதே.
  • இதை அந்த மருத்துவர் அறிவித்த நாள் மார்ச் 24, 1882. அறியாமையை அறிவியல் வென்ற நாளும் அதுதான். அந்த நாளே ஒவ்வோர் ஆண்டும் உலகக் காசநோய் நாளாக அனுசரிக்கப்படுகிறது. அந்த விஞ்ஞானி டாக்டர் ராபர்ட் காச்.

ஆளுமைகளை வீழ்த்திய காசநோய்:

  • காசநோயின் வரலாறு வேறு எந்த நோய்க்கும் இல்லாதவாறு சற்று விந்தையாக, விசித்திரமாக இருக்கிறது. கலை, இலக்கியம், அரசியல், தத்துவம் என்று ஒரு துறையைக்கூடக் காசநோய் விட்டு வைக்கவில்லை. இவ்வாறு எல்லாத் துறைகளிலும் பல ஆளுமைகளைக் காசநோய் வீழ்த்தி இருக்கிறது.
  • கணித மேதை ராமானுஜன், பாகிஸ்தானின் முதல் பிரதமர் முகமது அலி ஜின்னா, உலகப் புகழ்பெற்ற கவிஞர் கலீல் ஜிப்ரான் ஆகியோர் காசநோய்க்குப் பலியானவர்களில் சிலர். நம்முடைய சமகாலப் பிரபலங்கள் அமிதாப் பச்சன், சுஹாசினி மணிரத்னம், பாடகர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் காசநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று மீண்டவர்கள்.
  • 19ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவிலும் அமெரிக்க நாடுகளிலும் காசநோய் மரணங்கள் கட்டுக் கடங்காமல் இருந்தன. ஐரோப்பிய மருத்து வர்கள் காச நோயை ‘கொலைகார நோய்களுக்கெல்லாம் தலைவன்’ என்று வர்ணித்தனர். தற்போது மேற்கத்திய நாடுகளில் காசநோயின் பாதிப்பு ஏறக்குறைய முற்றிலுமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • ஆனால், ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் இன்னும் இந்த நோயின் தாக்கம் அதிகமாகவே இருக் கிறது. இந்தியாவில் காச நோயால் வருடத் திற்கு 28 லட்சம் பேர் பாதிப்படைகிறார்கள். இதில் 4.5 லட்சம் பேர் இறந்து போகி றார்கள். காசநோயால் 3 லட்சம் குழந்தைகள் பள்ளிப் படிப்பைத் தொடராமல் விட்டுவிடுகிறார்கள். கரோனாவை விடக் காசநோயால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகம்.

காசநோயின் அறிகுறிகள்:

  • பாதிக்கப்பட்ட நோயாளி இருமும் போதோ தும்மும்போதோ வெளியேறும் நீர்த்துளிகள் வழியாக மற்றவர்களுக்குக் காசநோய் பரவும். தொடர் இருமல், மாலைநேரக் காய்ச்சல், சளியில் ரத்தம், உடல் மெலிதல், பசியின்மை, இரவில் வியர்த்தல், நெஞ்சுவலி, மூச்சுத் திணறல் போன்றவை இதன் அறிகுறிகள். அனைத்து அறிகுறிகளும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒன்றிரண்டு இருந்தாலே காசநோயாக இருக்கலாம்.

பரிசோதனைகள்:

  • காசநோயின் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைக்குச் சென்று ‘சளி பரிசோதனை’ செய்துகொள்ள வேண்டும். சளி பரிசோதனை செய்து கொள்ள ‘சிபிநாட்’ என்கிற அதிநவீன கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சோதனை பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் கிடையாது.
  • இதற்குக் கட்டணமும் அதிகம். இது 2 மணி நேரத்தில் மிகத் துல்லிய மாகக் காசநோயைக் கண்டறியும். சளி பரி சோதனை தவிர்த்துக் கட்டணமின்றி அரசு மருததுவமனை களில் எக்ஸ்-ரே, சிடிஸ்கேன், சதை பரிசோதனை (பாதிக் கப்பட்ட உறுப்புகளில் இருந்து சிறு தசைப் பகுதியை எடுத்தல்) போன்றவை மேற்கொள்ளப் படுகின்றன.

எந்தெந்த உறுப்புகளைப் பாதிக்கும்?

  • காசநோய் முதன்மையாக நுரையீரலைப் பாதிக்கும். எனினும் உடலில் உள்ள எந்த உறுப்பு வேண்டுமானாலும் காசநோயால் பாதிக்கப்படலாம். அப்போது அந்த உறுப்புக்குரிய செயல்பாடுகள் குன்றும். நுரையீரலில் அல்லாத காச நோயைக் கண்டறிவதில் பல நேரம் கால தாமதம் ஏற்படுகிறது. நீண்ட கால இருமலோ காய்ச்சலோ இருந்தால் அலட்சியப்படுத்தக் கூடாது.
  • அது காச நோயாக இருக்க அதிகச் சாத்தியம் உள்ளது. தேசியக் காசநோய் ஒழிப்புத் திட்டம் இந்தியாவில் 1962 முதல் காசநோய்த் தடுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறையில் முன்னோடி மாநிலமாக விளங்கும் தமிழகத்தில் 1960களிலேயே காசநோய் தடுப்பிற்கென்று தனித் துறை உருவாக்கி மாவட்டம்தோறும் நுரையீரல் மற்றும் காசநோய் சிகிச்சை நிபுணர் களைத் துணை இயக்குநர்களாக நியமித்துள்ளது தமிழக அரசு.
  • 2019 முதல் காசநோய்த் தடுப்புத் திட்டம் என்பது தேசியக் காசநோய் ஒழிப்புத் திட்டம் என்கிற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்கப் பல்வேறு உத்திகளை அரசு முன்னெடுத்துள்ளது. அதன் ஓர் உத்தியாக டிசம்பர் 7, 2024 முதல் 100 நாள்கள் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நாடு முழுவதும் நடைபெற உள்ளன. தேசியக் காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் பரிசோதனை முதல் சிகிச்சை முடியும் வரை அனைத்து மருத்துவச் சேவைகளும் நோயாளிகளுக்கு வீடு தேடி வரும்.

சிகிச்சைகள்:

  • காசநோய்க்குச் சிகிச்சைக் காலம் 6 மாதங்கள். சிலருக்குக் கொஞ்சம் கூடுதல் காலம் சிகிச்சை தேவைப்படும். காசநோய் சிகிச்சையின்போது நோயாளிகள் புரதச் சத்துள்ள உணவைச் சாப்பிட வேண்டும்: முட்டை, இறைச்சி, பருப்பு வகைகள், புரதம் நிறைந்த உணவு வகைகள். நோயாளிகளின் ஊட்டச்சத்துத் தேவையைப் பூர்த்திசெய்ய மாதம் ரூ.500 வீதம் சிகிச்சை முடியும் வரை அரசு வழங்கிவருகிறது. இதை நோயாளிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தடுப்பு மருந்து:

  • காசநோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கும் நோய் எதிர்ப்பாற்றல் குன்றியவர்களுக்கும் காசநோய்த் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்த மாத்திரைகளை வாரத்திற்கு ஒரு முறை வீதம் மூன்று மாதங்கள் உட்கொள்ள வேண்டும்.

யாருக்கு வரும் காசநோய்?

  • இந்நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால், சர்க்கரை நோயாளிகள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், மது, புகைப்பழக்கம் உள்ளவர்களுக்குக் காசநோய் வரும் சாத்தியம் அதிகம்.
  • டிசம்பர் 11: விஞ்ஞானி ராபர்ட் காச்சின் பிறந்த நாள்

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories