TNPSC Thervupettagam

தொடுவானம் தொட்ட தொழில்நுட்பம்

December 18 , 2024 31 days 81 0

தொடுவானம் தொட்ட தொழில்நுட்பம்

  • 2024ஆம் ஆண்டை ‘ஏஐ ஆண்டு’ என்று சொல்லும் அளவுக்குச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியை உலகம் கண்டது. இந்த ஆண்டு நோபல் பரிசுத் தேர்வுகளும் ஏஐ முன்னேற்றத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலேயே அமைந்திருந்தன. கூடவே, இணையவழித் தாக்குதல்களும், அச்சுறுத்தல்களும், முறைகேடுகளும் அதிகரித்தன. சமூக ஊடகப் பரப்பில் செல்வாக்காளர்களின் (Influencers) தாக்கம் பெரும் விவாதத்துக்கு உள்ளானது. இன்னும் எண்ணற்ற நிகழ்வுகளும் தொழில்நுட்பச் சாதனங்களும் தாக்கம் செலுத்திய ஆண்டை ஒரு பறவைப் பார்வையாகப் பார்ப்போம்.

ஏஐ அலை:

  • சாட்​ஜிபிடி (ChatGPT) அதன் மூன்​றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்த நிலை​யில், எழுத்து வடிவிலான சேவை மட்டும் அல்லாமல், ஒலி, ஒளி திறன் கொண்ட ‘GPT-4o’ மே மாத வாக்​கில் அறிமுகம் ஆனது. சாட்​ஜிபிடி மேலும் பயனாளிகளை ஈர்த்​ததோடு, ஜிபிடி தேடு​பொறி சேவையை​யும் அறிவித்​தது. இதன் விளை​வாக, சாட்​ஜிபிடி​யின் தாய் நிறு​வனமான ஓபன் ஏஐயின் சந்தை மதிப்பு மேலும் அதிகரித்​தது. சாட்​ஜிபிடி​யின் போட்​டி​யாள​ராகக் கருதப்​படும் நிறு​வனங்​களில் ஒன்றான, ‘ஆந்த்​ரோபிக்’ (Anthropic), தனது ‘கிளாடு’ (Claude) சாட்​பாட்​டில், கணினிச் செயல்​பாடு​களைக் கையாளும் திறனை அறிவித்​தது. ஃபேஸ்​புக்​கின் பின்னே உள்ள ‘மெட்டா’ நிறு​வனம் தன்னுடைய எல்.எல்​.எம் சேவை​யில் மேம்​பாட்​டைக் கொண்டு​வந்​தது. கூகுளின் ‘ஜெமினி’​யும் பின்​தங்கி​விட​வில்லை. எக்ஸ் தளத்​தில், அதன் ஏஐ சாட்​பாட் ‘கிராக்’ (Grok) தாக்கம் செலுத்​தி​யது.

ஏஐ தேடல்:

  • ஏஐ சேவை​களின் தாக்கம் இணையத் தேடலிலும் எதிரொலித்​தது. புத்​தா​யிர​மாண்​டுக்​குப் பின், இணையத் தேடலில் கூகுளே ஆதிக்கம் செலுத்​திவரும் நிலை​யில், ‘பெர்​பெளக்​சிட்டி’ (Perplexity AI) உள்ளிட்ட ஏஐ தேடியந்​திரங்கள் பிரபலமடையத் தொடங்கி​யிருக்​கின்றன. இன்னொரு பக்கம், இணையத்​தில் தேடித் தகவல் பெறு​வதை​விட, சாட்​ஜிபிடி உள்ளிட்ட சாட்​பாட்​களிடம் கேட்டுப் பதில் பெறுவதே தேடலின் எதிர்​காலமாக இருக்​கும் என்கிற கணிப்பு​களும், கருத்து​களும் வெளியிடப்​பட்டன.
  • இந்த நோக்​கில் ஜிபிடி தேடல் தொடர்பான அறிவிப்பு முக்​கியமாக அமைந்​தது. இதனிடையே, தேடலில் ஏஐ போட்​டியைச் சமாளிக்க, ‘ஏஐ சர்ச் ஓவர்​வியூ’ என்னும் ஏஐ மூலம் தேடல் சார்ந்த முக்கிய தகவல்​களைச் சுருக்​கமாக முன்​கூட்​டியே வழங்​கும் வசதி​யைச் சோதனை முறை​யில் கூகுள் கொண்டு​வந்​தது.
  • ஆனால், இந்த ஏஐ வசதி, உணவு தொடர்பான தேடலுக்கு, ‘பீட்​ஸா​வில் கோந்தை ஒட்டுங்​கள்’ என்றும், ‘தீங்கான பொருள் ஒன்றைச் சாப்​பிட​வும்’ என்றும் ஆபத்தான பரிந்​துரையை முன்​வைத்தது அதிர்ச்​சியை ஏற்படுத்​தி​யது. இது விதி​விலக்கான பிழை என கூகுள் சமாளித்​தா​லும், தேடலில் ஏஐ நுட்​பத்தை நம்புவ​தில் உள்ள பிரச்​சினை​களுக்கான முன்னோட்​டமாக அமைந்ததை மறுப்​ப​தற்​கில்லை.

ஏஐ நிறு​வனம்:

  • இணையத் தேடலில் சவாலை​யும், சர்ச்​சையை​யும் கூகுள் எதிர்​கொண்​டதோடு, அமெரிக்காவில் இணையத் தேடல் சார்ந்த ஏகபோகம் தொடர்பான வழக்​கில் வந்த தீர்ப்பும் அந்நிறு​வனத்​துக்​குப் பாதக​மாகவே இருந்​தது. இதன் அதிர்​வுகள் வரும் ஆண்டிலும் தொடரும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இணைய உலகில் கூகுளின் ஏகபோக ஆதிக்க நிலை​யைக் கட்டுப்​படுத்துவது குறித்​துத் தொடர்ந்து விவா​திக்​கப்​படும்.
  • ஆப்பிள் நிறு​வனம், புதிய ஐபோன்களை அறிமுகப்​படுத்தி, அவற்றில் ஒருங்​கிணைக்​கப்​பட்ட ஆப்பிள் இண்டலிஜென்ஸ் ஏஐ சேவை​யால் தனது மதிப்பை மேம்​படுத்​திக் ​கொண்​டாலும், சிப் தயாரிப்பு நிறு​வனமான என்விடி​யாவே (Nvidia) தொழில்​நுட்ப உலகின் புதிய நட்சத்​திரமாக அறியப்​படு​கிறது. எங்கும் ஏஐ, எதிலும் ஏஐ எனப் பேசப்​படும் நிலை​யில், ஏஐ சேவை​களுக்கான உயிர்​நாடியான அதிவேக சிப்​களைத் தொலைநோக்​குடன் தயாரிக்கத் தொடங்கிய என்விடியா இந்த அலையால் அதிகம் பலன் பெறும் நிறு​வனமாக உருவாகி​யுள்​ளது.

சைபர் தாக்​குதல்:

  • மற்றொரு பெரும் தொழில்​நுட்ப நிறு​வனமான மைக்​ரோ​சாஃப்ட் ஓபன் ஏஐ கூட்டு மூலமான ‘கோபைலட்’ (Copilot) உள்ளிட்ட சேவைகள் வாயிலாக முன்னேற்றம் காட்​டி​னாலும், ‘கிர​வுட்​ஸ்​டிரைக்’ நிறு​வனத்​தின் எதிர்​பாராத சைபர் தாக்​குதலால் சிக்​கலுக்கு உள்ளானது. இந்தத் தாக்​குதலுக்கு மைக்​ரோ​சாஃப்ட் நிறு​வனம் பொறுப்போ, காரணமோ அல்ல என்றாலும், விண்​டோஸ் கணினிகளே அதிகம் பாதிப்​புக்​குள்​ளாகின. சைபர் பாது​காப்பு சேவை வழங்​கும் நிறு​வனமே சரியாகச் சோதனை செய்​யாமல் அனுப்​பி​வைத்த அப்டேட் வசதியே, உலகம் முழு​வதும் ஆயிரக்​கணக்கான கணினிகளை முடக்கி, விமான சேவை​களை​யும் மருத்துவ சேவை​களை​யும் பாதித்தது பெரும் அதிர்ச்​சியை உண்டாக்​கியது.
  • இந்தச் சம்பவம் சைபர் பாது​காப்​பில் கவனம் செலுத்து​வதன் அவசி​யத்தை உணர்த்தியது என்றால், இணையக் காப்​பகமாக விளங்​கும், ‘இன்​டர்​நெட் ஆர்கேவ்’ தளம் தாக்​காளர்​களின் கைவரிசைக்கு இலக்​கானது கூடுதல் அதிர்ச்சி அளித்​தது. இது தவிர, இன்னும் எண்ணற்ற தரவு மீறல்கள் இணையப் பாது​காப்பு தொடர்பான விழிப்பு​ணர்வை அடிக்​கோடிட்டுக் காட்​டின.

நீல வானம்:

  • சமூக ஊடக உலகைப் பொறுத்​தவரை, ‘எக்ஸ்’ (டிவிட்​டர்) சேவை தொடர்ந்து விமர்​சனத்​துக்​கும் சர்ச்​சைக்​கும் உள்ளானது. குறிப்​பாக, உலகின் முன்னணி நாளிதழ்​களில் ஒன்றான பிரிட்​டனின் ‘தி கார்​டியன்’, எக்ஸ் சேவை நச்சுத்​தன்மை மிகுந்​து​விட்​ட​தாகக் கூறி, அதிலிருந்து விலகு​வதாக அறிவித்​தது. மேலும் பல பயனாளி​களும், பல்துறைப் பிரபலங்​களும் எக்ஸ் தளத்​திலிருந்து வெளி​யேறிவரு​கிறார்​கள். ஆனால், இந்தப் போக்​கால் மெட்​டா​வின் குறும்ப​திவு சேவை ‘திரெட்ஸ்’ (Threads) பலன் பெற்​றதை​விட, ‘புளூஸ்கை’ (Bluesky) என்னும் போட்டி சேவையே அதிகம் பலன் பெற்​றது. பழைய டிவிட்டர் போன்ற அம்சங்கள் கொண்ட ‘புளூஸ்கை’ வேகமாக வளர்ந்​து​வரு​கிறது.

நானே ராஜா!

  • எக்ஸ் சேவை மீதான விமர்​சனங்கள் குறித்​தெல்​லாம், அதன் புதிய உரிமை​யாளரான எலான் மஸ்க் அதிகம் அலட்​டிக்​கொள்​வ​தாகத் தெரிய​வில்லை. எக்ஸ் தளத்​தில் தனது விருப்​பப்படி மாற்​றங்​களைக் கொண்டு​வந்​தவர், அமெரிக்க அதிபர் தேர்​தலில்​தான் அதிக ஆர்வம் காட்​டி​னார். அதற்​கேற்ப அவர் ஆதரவு தெரி​வித்த முன்​னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்​டும் ஆட்சிக்கு வந்திருப்​ப​தால், மஸ்க்​கின் ஆதிக்கம் கொடிகட்​டிப் பறக்​கிறது.
  • இதனிடையே, டெலிகி​ராம் சேவை சட்ட விரோதச் செயல்​களுக்​குப் பயன்​படுத்​தப்​படு​வதாக எழுந்த குற்​றச்​சாட்டு தொடர்பாக அதன் நிறு​வனர் பாவல் துரோவ் ஃபிரான்ஸ் அரசால் கைது செய்​யப்​பட்டு, நிபந்​தனை​களோடு விடுவிக்​கப்​பட்​டார். துரோ​வின் தனியுரிமைக்கு ஆதரவான செயல்​பாடும், போர் எதிர்ப்பு நிலை​யும், இன்னும் பிற ஆடம்​பரச் செயல்​பாடு​களும் அவரை நட்சத்திர அந்தஸ்​தைப் பெற வைத்தன.

ஏஐயில் இந்தியா:

  • உலகம் முழு​வதும் ஏஐ அலை வீசும் பின்னணி​யில் இந்தியா​வில் உள்நாட்டு மொழி மாதிரிகளை உருவாக்​கும் விவாதம் தீவிரம் அடைந்​தது. அதற்​கேற்ப இந்தியா​வில் உருவாக்கப்பட்ட பல்வேறு மொழி மாதிரி​களும் கவனம் ஈர்த்தன. ஓலா நிறு​வனம், தன் பங்குக்கு மொழி மாதிரி, ஏஐ சாட்​பாட் சேவையைக் கொண்டு​வந்​தது. மேலும், கூகுள் வரைபட சேவைக்​குப் போட்​டி​யாகச் சொந்த வரைபட சேவை​யில் கவனம் செலுத்​தப்​போவதாக அறிவித்தது.
  • இதனிடையே பாலிவுட் நட்சத்​திரங்களை ஆபாச​மாக, போலி​யாகச் சித்திரித்த டீப்ஃபேக் வீடியோக்​கள், ஏஐ நுட்​பத்​தின் இருண்ட பக்கத்தை உணர்த்தின. ஏஐ தொழில்​நுட்​பத்​தில் உள்ள பிரச்​சினைகள் குறித்​துப் பகிரங்​கமாக விமர்​சித்து​வந்த ஓபன் ஏஐ நிறு​வனத்​தின் முன்​னாள் ஊழியர் சுசிர் பாலாஜி சான்​பி​ரான்​சிஸ்​கோ​வில் உள்ள தனது வீட்​டில் மர்மமாக மரணமடைந்தது சர்ச்​சைக்​குள்​ளானது. ஓபன் ஏஐ நிறு​வனத்​தின் நிறு​வனர்​களில் ஒருவரும், கருத்து​வேறு​பாட்​டால் அதிலிருந்து வெளி​யேறிய​வருமான எலான் மஸ்க், இந்தச் சம்பவம் குறித்து ஆதங்​கத்​துடன் ட்வீட் செய்​ததும் பேசுபொருளானது.
  • இன்னொரு புறம், சமூக ஊடகப் பரப்​பில் செல்​வாக்​காளர்​களின் அதிகரிப்பும், அவர்​களின் தாக்​க​மும் முக்கிய விவாத​மானது. பிழைத் தகவல்கள் பெருக்​கத்​தின் பின்னணி​யில் இது நிகழ்ந்​தது. குறிப்​பாகப் பங்கு வர்த்​தகம் தொடர்பான பரிந்​துரைகளை நிதி செல்​வாக்​காளர்​கள் வழங்​குவது செபி அமைப்​பின் தலை​யீட்டுக்கு வழி​வகுத்​தது. சமூக ஊடகச் செயல்​பாட்​டிலும், புரிதலிலும் இன்னும் பெரு​மளவு ​விழிப்​புணர்​வு அவசியம்​ என்​பதையும்​ உணர்​த்​தியது.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories