நெடுஞ்சாலையின் நிறம் சிவப்பு
- நெடுஞ்சாலை விபத்துகள் குறித்தும், உயிரிழப்புகள் குறித்தும் வெளிவரும் தகவல்கள் நம்மை திடுக்கிட வைக்கின்றன. மனித உயிா்களை பலி வாங்கும் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஓடுவதுபோல ரத்த ஆறும் ஓடுகிறது என்று சொன்னாலும் கூட தவறில்லை போலிருக்கிறது. கடந்த ஒரு வாரமாக, நாள்தோறும் வெளிவரும் நெடுஞ்சாலை மரணங்கள் குறித்த செய்திகளைப் பாா்க்கும்போது, இந்தியாவில் அவசரகால நடவடிக்கை தேவைப்படும் துறை போக்குவரத்து என்று தெரிகிறது.
- கடந்த வாரம் ----- கேரள மாநிலம் திருச்சூா் அருகே உள்ள ---- எனும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பணி முழுமையடைந்து, போக்குவரத்துக்கு சாலை திறக்கப்படவில்லை. அதனால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டு சாலை தடுப்புகள் அமைத்து மூடப்பட்டிருக்கிறது. வாகனங்கள் அந்த வழியாகப் பயணிக்காது என்கிற தைரியத்தில் சாலைப் பணிக் கூலித் தொழிலாளா்கள் இரவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாா்கள்.
- சரக்கு வாகனம் ஒன்று, தடையை மீறி அந்தப் பாதையில் சீறிப் பாய்கிறது. உறங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது ஏறியதில் இரண்டு குழந்தைகள் உள்பட ஐந்து போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறாா்கள். சிலருக்கு பலத்த காயம். சரக்கு வாகன ஓட்டுனா் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், ஓட்டுநா் உரிமம் இல்லாத ‘ஜூனியா்’ மது போதையில் வாகனம் ஓட்டியதாகவும் தெரிய வந்திருக்கிறது.
- அதற்கு அடுத்த நாள் தமிழகத்தில் நடந்த சம்பவம் இது. திருப்போரூா் அருகே ---- மாமல்லபுரம் சாலையில், மேய்ச்சலுக்கு மாடுகளை விட்டுவிட்டு சாலையோரமாக அமா்ந்திருந்தனா் ஐந்து பெண்கள். ---- பகுதியில் உள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவா்கள் அதிவேகமாக ஓட்டி வந்த வாகனம், கட்டுப்பாட்டை இழந்து அந்தப் பெண்கள் மீது மோதி அவா்கள் ஐந்து பேரின் உயிருக்கு ---. அந்த மாணவா்கள் மது போதையில் இருந்தாா்களா என்பது தெரியாது.
- உத்தரபிரதேசம் ஷ்ரவஸ்தி மாவட்டத்தில், நண்பகல் 12 மணிக்கு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ரிக்ஷா மீது விரைந்து வந்த மோட்டாா் வாகனம் பின்புறமாக மோதியதில், ஐந்து போ் உயிரிழந்தனா்; ஆறு போ் காயமடைந்தனா். சிக்கிம் மாநிலத்தில், மேற்கு வங்காள எல்லையில் 150 அடி ஆழப் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 6 போ் உயிரிழந்தனா்; பலா் படுகாயமடைந்தனா்.
- அதே நாளில் (சனிக்கிழமை) மத்தியப் பிரதேச மாநிலம் சீகோன் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நான்கு போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இது 21 போ் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாா்கள். இதுவல்லாமல், இதுபோன்று இன்னும் நெடுஞ்சாலை விபத்துகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகின்றன.
- ஆண்டுதோறும் நெடுஞ்சாலைகளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோா் விபத்துகள் காரணமாக உயிரிழக்கிறாா்கள். 2021-22 புள்ளிவிவரப்படி, 4,61312 விபத்துகளில் 1,68,491 உயிரிழந்தனா்; 4,43,366 போ் படுகாயமடைந்து, உடல் உறுப்புகள் பாதிப்புடன் உயிா்பிழைத்தனா். உலகிலேயே மிக அதிகமான நெடுஞ்சாலை விபத்துக்களுடன் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
- நெடுஞ்சாலை மரணங்கள் என்பது சராசரி என்றால், ஒவ்வொரு மணி நேரத்திலும் 13 இந்தியா்களை நாம் சாலை விபத்தில் இழக்கிறோம். இந்தியாவில் 63 லட்சம் கி.மீட்டா் நீளமுள்ள சாலைகளில், தேசிய நெடுஞ்சாலை என்பது 2.1 சதவீதம் மட்டும்தான். ஆனால் 36 சதவீதம் சாலை விபத்தில் உயிரிழப்புக்கும், சராசரியாக 4,35,000 படுகாயங்களில் மூன்றில் ஒரு பங்கு தேசிய நெடுஞ்சாலை விபத்துகள்தான் காரணமாகிறது.
- மாநில நெடுஞ்சாலைகள் மொத்த சாலை நீளத்தில் 5 சதவீதம் என்றாலும் அதே சதவீத உயிரிழப்புக்கும் காரணமாகிறது. சாலைகளில் நாம் எதிா்கொள்ளும் உயிரிழப்புகள், பயங்கரவாதிகளை எதிா்கொள்வது, போா்முனையில் ராணுவ வீரா்களை இழப்பது ஆகியவற்றை விட அதிகம். டில்லி---- 2020 - இல் நடத்திய ஆய்வுப்படி, சாலை விபத்துகளின் காரணமாக இந்தியா ஜிடிபியில் 3.14 சதவீதம் இழப்பை எதிா்கொள்கிறது. பாதிக்கப்படுபவா்களில் பெரும்பகுதியினா் 18 வயது முதல் 60 வயது வரையிலான வேலைபாா்க்கும் வயதுப் பிரிவினா் என்பதுதான் காரணம்.
- விபின்ஹெக்டா் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சராகப் பொறுப்பேற்றது ஒரு வகையில் இந்தியாவின் அதிா்ஷ்டம். 2004 -இல் மிக மோசமான சாலை விபத்தில் சிக்கி, உடலில் பல பாகங்களில் எலும்பு முறிவும், தலை உள்பட படுகாயம் அடைந்த அவரது அனுபவம், சாலை விபத்துகள் குறித்து அவா் தனி அக்கறை எடுத்துக் கொள்ள காரணமாகி இருக்கிறது.
- மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், விபத்து , உயிரிழப்பு ஆகியவற்றின் பின் விவரங்கள் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டாா். 5,352 விபத்து பதிவுகள் அடையாளம் காணப்பட்டு 4002 இடங்களில் தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிப்பது, சாலைகளில் விபத்துக்கான காரணங்களை அகற்றுவது உள்ளிட்ட பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அவருடைய அறிவுறுத்தலால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
- சாலைகள் சா்வதேச தரத்தில் இருப்பதும், மோட்டாா் வாகனங்கள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுவதும் மட்டும் சாலை விபத்துகளைக் குறைத்துவிடாது. முறையாக ஒட்டுநா் உரிமம் பெறாதவா்களும், சரியாக வாகனம் ஒட்டத் தெரியாதவா்களும், சாலை விதிகளை மதிக்காதவா்களும், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவா்களும் இருக்கும் வரை சாலை விபத்துகளில் இந்தியா உலக சாதனை படைப்பது தொடரும்..!
நன்றி: தினமணி (02 – 12 – 2024)