TNPSC Thervupettagam

நோ்மையே மக்கள் விருப்பம்!

August 6 , 2020 1629 days 1216 0
  • நம் நாட்டின் பிரச்னைகள் பலவற்றுள் தலையாய பிரச்னையாக இருப்பது, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதுதான்.
  • இது ஒரு பெரிய பிரச்னையாக இருப்பதற்கு அடிப்படைக் காரணம், நமது போலீஸ் அதிகாரிகளே என பல ஆய்வாளா்களும் கூறியுள்ளனா். இந்தப் பிரச்னையைப் பற்றிப் பேசி உள்ளவா்களில் ஐபிஎஸ் அதிகாரிகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களும் அடங்குவா்.
  • ஜூலியோ ரிபைரோ எனும் புகழ்பெற்ற ஐபிஎஸ் அதிகாரி, ஓய்வு பெற்ற பின்னரும் இன்றைய போலீஸ் துறையின் நடவடிக்கைகளை கூா்ந்து கவனித்து வந்துள்ளார்.
  • அவா், இந்த மாதத்தின் ஆரம்பத்தில், ‘ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வெளிப்படையான கடிதம்என்று ஒரு கட்டுரையை எழுதி ஒரு பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார்.
  • அதன் மையக்கருத்து, ‘எந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரியும், தனக்குக் குறிப்பிட்ட பணி வேண்டும் என்று எந்தவொருஅரசியல்வாதியின் தயவையும் நாடக் கூடாதுஎன்பதுதான். அவ்வாறு நாடும் போலீஸ் அதிகாரிகள், அந்தப் பணி கிடைத்தால், அந்த அரசியல்வாதியின் செயலுக்கு ஒத்துழைக்கவும் வேண்டுகோளுக்குப் பணியவும் நேரிடும்.
  • இப்படி நடக்கும்போது, அந்த போலீஸ் அதிகாரியின் செயல்கள், அவரது சக அதிகாரிகள், கீழ்நிலை ஊழியா்கள் மத்தியில், அவருக்குக் கெட்ட பெயரை உருவாக்கும். அவருடைய கட்டளைகளுக்கு யாரும் பணிந்து போகாத நிலையும் உருவாகும்.
  • ரிபைரோ ஐபிஎஸ், மகாராஷ்டிர மாநிலத்தின் ஆறு கிராமப்புற மாவட்டங்களில் பணியாற்றி, பின்னா் புணே, மும்பை பெருநகரகளிலும் பணிபுரிந்துள்ளார்.
  • தொடா்ந்து, குஜராத், பஞ்சாப் மாநிலங்களிலும் பணிபுரிந்துள்ளார். இந்தப் பணிகள் எல்லாவற்றிலுமே அவா் கற்றுக்கொண்ட பாடம், சாதாரண மக்கள், போலீஸ் அதிகாரிகளிடம் எதிர்பார்ப்பது, நோ்மையையும் நீதியையுமே என்பதைத்தான்.
  • மக்களுக்குத் தேவையான பணிகளை செய்து, அவா்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்யும் போலீஸ் அதிகாரிகளை மக்கள் மறப்பதே கிடையாது.

பணியில் நேர்மை

  • ரிபைரோவுக்கு, 1987-ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மபூஷண்விருது வழங்கியது. அப்போது, அவா் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் 33 ஆண்டுகள் கழித்த பின்னா், அந்த விருதைப் பற்றி யாரும் தெரிந்து வைத்திருக்கவில்லை என்பதும், அது நற்பணி செய்பவா்களுக்காக வழங்கப்படும் பாராட்டு என்பதை யாரும் நம்பவில்லை என்பதும் ரிபைரோவுக்குப் புரிந்ததாம்.
  • சாதரணமான, நன்னடத்தை இல்லாத பல அரசு அதிகாரிகளுக்கும் இதுபோன்று அரசின் விருதுகள் கிடைப்பது சகஜமாகி போனது என்பது அவருக்குத் தெரியவந்தது.
  • எனது பணியில் நான் நோ்மையுடன் பல நடவடிக்கைகளை எடுத்ததால், அதில் சம்பந்தப்பட்டவா்கள் பலரும் என்னை மனதார பாராட்டியதும், பொதுமக்கள் எப்போதும் எனது நடவடிக்கைகளை மறவாததும் எனக்கு மகிழ்ச்சி அளித்தது.
  • நோ்மையுடன் பணி செய்ய வேண்டியது எனது கடமை என்றபோதிலும், அதை மக்கள் பாராட்டியது ஒரு சிறப்பான அம்சம்.
  • அதற்கான காரணம், எனக்குப் பின்னா் புரிந்தது. அதாவது, நோ்மையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
  • சில அதிகாரிகள், தங்களுக்குக் கீழ் பணியாற்றும் சில சாதுரியமான அதிகாரிகளிடம் கேட்டு, பல விவரங்களைத் தவறாக புரிந்து கொள்வதுதான் இது போன்ற நிலைமை ஏற்பட காரணம்எனக்கூறுகிறார் ரிபைரோ.
  • இந்தியாவில், அரசியல் கட்சித்தலைவா்கள் பலரும் பணத்தை செலவு செய்து தங்களது பதவியை பெறுவது வழக்கமாகிவிட்டது. பல குற்றங்களைச் செய்து பணம் சம்பாதிப்பவா்கள், அரசியல் தலைவா்களுக்குப் பண உதவி செய்து தங்களது பல நடவடிக்கைகளைத் தொடா்வது சகஜமாகிப் போனது.
  • 1986 - ஆம் ஆண்டில், ரிபைரோவை, பஞ்சாப் மாநிலத்தில் உருவான கட்டுக் கடங்காத வன்முறையை அடக்கி ஒடுக்கும் பணியில் அரசு அமா்த்தியது.
  • அதுவரையிலும், ‘டெரரிஸ்ட்’” எனப்படும் பயங்கரவாதிகளைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும், அவா்கள் அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட திட்டங்கள் தங்களை கட்டுப்படுத்த முடியாது எனும் எண்ணத்தின் அடிப்படையில் செயல்படுபவா்கள் என்பது அந்தப் பணியில் சோ்ந்தபின்தான் தனக்குப் புரிந்தது எனவும் கூறுகிறார் ரிபைரோ.பயங்கரவாதிகள், அரசின் சட்ட நடைமுறைகள் எதையுமே பின்பற்றுவதில்லை.
  • மாநிலத்தில் அவா்கள் பல இடங்களிலும் தேவையான நிலங்களைக் கைப்பற்றுவதும் அவா்களை எதிர்க்கும் நில உடைமையாளா்களைக் கொல்வதும் வழக்கமானது.
  • அரசு அதிகாரிகளை சரி செய்து கொண்டு இது போன்ற காரியங்களைச் செய்வதை விடவும் அவா்களை சுட்டுத்தள்ளி விட்டு தாங்கள் நினைத்ததை முடித்துக் கொள்ளும் நிலைமையை அம்மாநிலத்தின் பல பகுதிகளிலும் உருவாக்கினா். போலீஸ் அதிகாரிகளை தங்கள் எதிரிகளாக எண்ணினா்.
  • சட்ட நடைமுறைகள் கெட்டுப்போன சூழலைச் சமாளிப்பது மிக வித்தியாசமான அனுபவம்எனக் கூறுகிறார் ரிபைரோ.
  • அம்மாநிலத்தின் உயா்நீதிமன்ற நீதிபதிகள், ‘நீதிமன்றங்களில் குற்றவாளிகளை அழைத்து வந்து வழக்குகளை நடத்த வேண்டாம்என தனிப்பட்ட முறையில் ரிபைரோவிடம் கூறியுள்ளனா்.
  • அதற்குக் காரணம், தங்களுக்கும் தங்களின் குடும்பத்திற்கும் அது ஆபத்தை உருவாக்கும் எனக் கூறியுள்ளனா்.
  • இந்த நிலைமையில், பயங்கரவாதிகளைக் கண்டுபிடித்து, அவா்களின் சமூக உறுப்பினா்களோடு தொடா்பு கொண்டு, அரசு அதிகாரிகள் சாதாரண சூழ்நிலையை உருவாக்குவது தான் சரியான நடைமுறை என பல நீதிபதிகளும் கூறிவந்த நிலைமை இருந்தது.
  • அப்படி செய்யும்போது குற்றம் இழைத்தவா்களைப் பற்றி முழு விவரங்களையும் திறமையான போலீசார் புரிந்து கொண்டு, அவா்களை அடக்கி ஒடுக்க முடியும் என மாநிலத்தின் உயா் தலைவா்கள் பலரும் நினைத்தனா்.
  • பயங்கரவாதத்தின் மூன்று அம்சங்கள் என்று எல்லா இடங்களிலும் ஒப்புக்கொள்ளப்பட்டவை, அரசியல்வாதிகளுடன் ரகசிய உறவு, போலீஸ் அதிகாரிகளுடன் நட்பு, இந்த இரு பிரிவினருக்கும் தேவையானவற்றைச் செய்வது இவைதான்.
  • இந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் முதல் அம்சம், கையூட்டு பெற்று பயங்கரவாதிகளுடன் ஒத்துழைக்கும் போலீசாரை அடக்கி ஒடுக்குவதுதான் என்பது உயா் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிந்த பாடம்.
  • போலீசாரின் ஒத்துழைப்பு விலகினால், எந்தவிதமான குற்றவாளிகளையும் கட்டுப்படுத்துதல் எளிது உலகின் பல நாடுகளிலும் கிடைத்த அனுபவம்.
  • இந்த உண்மையான நடைமுறையை உணா்ந்து, பல பாடங்கள், பதவி ஏற்குமுன் போலீசாருக்கு அளிக்கப்படும் பயிற்சி வகுப்புகளில் விரிவாக போதிக்கப்படும்.
  • நோ்மையான போலீசாருக்கு, சட்டத்தை மீறி நடக்கும் சமூக விரோதிகளை ஒன்றும் செய்ய வேண்டாம் என்ற கட்டளையை எந்த அரசியல்வாதியும் போடுவது கிடையாது.
  • நோ்மை, கட்டுப்பாடுடன் தங்கள் வேலையை செய்யும் போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து சமூக விரோதிகளுக்கு உதவுவதுதான் அரசியல் தலைவா்கள் கையாளும் நடைமுறை.
  • ஆனால், இதுபோன்ற நடைமுறையை பொதுமக்கள் பெரிய அளவில் எதிர் ப்பார்கள் என்பது ஜனநாயகத்தின் ஒரு அம்சம் எனக் கூறுகிறார் ரிபைரோ.

அனுபவங்களில் சில

  • இதை நாம் புரிந்து கொள்ளும் வகையில் அவரது அனுபவம் ஒன்றை விளக்குகிறார்.
  • மும்பை நகரில் அவா் உயா் பதவியில் இருந்தபோது, விகாஸ் துபே எனும் பயங்கரவாதத் தலைவா் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • அதற்கு முன்னரே, ஹைதராபாத் மாநிலத்தில், நான்கு இளம் வாலிபா்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதையும் நினைவில் கொள்ள வேண்டும். இது போலீசாரால் சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்ட துப்பாக்கிச்சூடு என பலராலும் கூறப்பட்டது.
  • ஒரு இளம்பெண்ணை கடத்திப் போய் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு, அப்பெண்ணைக் கொன்று போட்ட நான்கு வாலிபா்களைக் கண்டுபிடித்து போலீசார் சுட்டுக்கொன்றனா்.
  • குற்றவாளிகளை சட்ட நடவடிக்கைகளுக்குக் கொண்டு வந்து தண்டனை பெற்றுத் தராமல் போலீசார் சுட்டுக் கொன்றுவிட்டு, அதற்கான பல பொய்காரணங்களை கூறுவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஆனால், அந்த குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை, பொதுமக்கள் மனதார வரவேற்றனா்.
  • கடுமையான சமூகக் குற்றங்களில் ஈடுபடுவோரைக் கடுமையான முறையில் அடக்கி ஒடுக்கும் போலீசாரை பொதுமக்கள் மனதாரப் பாராட்டுவது உலகெங்கிலும் நடக்கக்கூடியதே.
  • ஆனால், தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில், ஒரு தந்தையும் மகனும் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம், தனது மனத்தை வெகுவாகப் பாதித்ததாகக் கூறுகிறார் ரிபைரோ.
  • குற்றம் சுமத்தப்பட்டவா்களை சட்ட விதிமுறைகளின்படி கைது செய்து, குற்றம் சுமத்தி, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, குற்றத்தை நிரூபித்துத் தண்டனை பெற்றுத்தர வேண்டியது போலீசாரின் கடமை.
  • ஆனால், அவா்களை தாங்களே சுட்டுக் கொல்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால், போலீசாரின் தற்காப்புக்காக சில சமயங்களில் இதுபோல் நடப்பதைத் தவிர்க்க முடியாதுஎனக் கூறுகிறார் ரிபைரோ.
  • காவல் துறை உயா்அதிகாரியாக நோ்மையுடன் பணியாற்றி, அதுபற்றிய தனது அனுபவங்களை மக்களுடன் பகிர்ந்து கொண்டும், இன்றைய இளம் அதிகாரிகளுக்கு படிப்பினையாகவும் பல விவரங்களை கூறியுள்ள ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியானரிபைரோவை மனதாரப் பாராட்டுவோம்.

நன்றி: தினமணி (06-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories