- தமிழகத்தில் 12 அரசு கலைக் கல்லூரிசுளில் மாணவ, மாணவிகளிடம் போதிய வரவேற்பு இல்லாமல் சேர்க்கை குறைந்ததால் கணிதம், இயற்பியல் பாடப் பிரிவுகளை நீக்கவும் அதற்கு பதிலாக புதிய பாடப்பிரிவுகளை சேர்க்கவும் உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. எப்போதும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருக்கும் இப்பாடப்பிரிவுகள் இந்நிலைக்கு தள்ளப்பட காரணம் என்ன?
- மேல்நிலைக் கல்வி பயிலும் அனைவரும் கல்லூரியில் சேர்க்கை பெற வேண்டும் என்பதற்காக தமிழ்வழியில் பயின்றால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, அரசுப் பள்ளிகளில் பயின்ற சுல்லூரி மாண விகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை என அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
- அதன்பொருட்டே உயர் கல்வியில் சேர்க்கை பெறும் மாணவ, மாணவியர் எண்ணிக்கையில் தமிழகம் மூன்றாமிடத்தில் உள்ளது. தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கையில் மாணவர்கள் எண்ணிக்கை 50.5 சதவீதமாகவும், மாணவியர் எண்ணிக்கை 49.5 சதவீதமாகவும் உள்ளது.
- 2019-20-இல் தமிழ்நாட்டின் சேர்க்கை விகிதம் 51.4 சதவிதமாகும். இதுவே 2012-13-இல் 42 சதவீதமாக இருந்துள் ளது. சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
- கடந்த சில ஆண்டுகளாகவே கல்லூரியில் சேர்க்கை பெறும் மாணாக்கர்கள் எண்ணிக்கை குறிப்பாக மாணவியர் எண்ணிக்கைஎதிர்பாராத அளவில் அதிகரித்து வருகிறது. ஆனால் கடந்த இரண்டாண் டுகளாக கணிதம், இயற்பியல் ஆகிய இருபாடங்களிலும் மாணாக்கர் கள் சேர்க்கை குறைவாகவே இருந்துள்ளது.
- பெருந்தொற்றுக் காலத்தின்போது பிளஸ்2 மாணாக்கர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதால் அவர்களது கற்றல் திற ளில் தொய்வு ஏற்பட்டதே காரணமாகக் கூறப்பட்டது. ஆனால், பெருந்தொற்றுக் காலம் முடிவுக்கு வந்த பிறகும் இந்நிலை நிலவ காரணம் என்ன?.
- அரசு கல்லூரிகள் பரவலாகத் தொடங் கப்பட்டது முதன்மையான காரணம் என்று கூறப் படுகிறது. ஆனால், கல்லூரியில் சேர்க்கை பெறும் மாணாக்கர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில் இந்நிலை நிலவ என்ன காரணம் என்பது சிந்திக்க வைப்பதாக உள்ளது.
- இவ்விரு பாடங்களில் மாணாக்கர் சேர்க்கை குறைவுக்கு பிளஸ் 2 வகுப்பில் கூடுதலான பாடச்சுமையே காரணம் என்பது பலரது கருத்தாகும். பிளஸ் 2 வகுப் பின் பாடத்திட்டம் இதர பாடத் திட்டங்களைத் தழுவி வகுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் போட்டித் தேர்வு எழுத பயனுள்ளதாக இருக்கும் என்பது இதன் நோக்கமாக இருந்தாலும் ஏற்கெனவே கற்றல் திறன் குறைந்துள்ள நிலையில் இது கூடுதல் சுமையாகக் கருதப்படுகிறது.
- இப்பாடங்களை மாணாக்கர்களுக்கு எவ்வாறு எளிமையாக நடத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டாலும் இப்பாடங்களை மாணாக்கர் கள் புரிந்து கொள்ளும் வகையில் நடத்த ஆசிரியர்களுக்கே அவகாசம் தேவைப்படுகிறது. இதனால் பள்ளிகளில் இவ்விரு பாடப்பிரிவுகளில் பயிலும் மாணாக்கர்கள் குறைந்த மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறுகின்றனர். அப்போது கல்லூரிகளில் சேர்க்கை பெற்று தேர்ச்சி பெற முடியுமா என்ற அச்ச உணர்வு அவர்களைத் தொற்றிக் கொள்கிறது. இது பெருந்தொற்றுக் காலத்தின் போது ஏற்பட்ட கற்றல் திறன் குறைவு இன்னும் தொடர்வதையே காட்டுகிறது.
- அதனால் பிளஸ் 2 பாடப்பிரிவில் இப்பாடங்களைப் பயின்று தேர்ச்சி பெறும் மாணாக்கர்கள் கல்லூரியில் கலைப் பாடப்பிரிவுகளில் சேர்க்கை பெறவும், இவ்விரு பாடங்களைத் தவிர்த்து இதர அறிவியல் பாடங்களைப் பயிலவும் ஆர்வம் காட்டுகின்றனர்.
- பெரும்பாலான மாவட்டங்களில் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மாணாக்கர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வினா- விடை புத்தகம் தயாரித்து விநியோகித்து வருகின்றனர். இதனால் சில பள்ளிகளில் மாணாக்கர்கள் இப்பாடங்களில் முழுமையான தேர்ச்சியும் பெற்று வருகின்றனர். இருப்பினும் இப்பாடங்களை நீக்கும் அளவிற்கு சேர்க்கை குறைவாக இருப்பது விந்தையாக உள்ளது.
- இதற்கான காரணங்களை ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். ஆரம்பப் பள்ளிகள் தொடங்கி அரசு கல்லூரிகள் வரையில் சேர்க்கை குறைவு என்பதற்காக பள்ளிகள் மூடப்படுவதோ, கல்லூரிகளில் பாடங்களை நீக்குவதோ தீர்வாக அமையாது.
- மாணாக்கர்களிடையே இருந்துவரும் கற்றல் திறன் குறைபாட்டைக் கருத்தில் கொண்டு பிளஸ் 2 பாடத்திட்டத்தை எளிமைப்படுத்தவேண்டும். சுற்றல் திறன் குறை பாட்டைப் போக்கி பாடத்திட்டங்களை மாற்றியமைக்கவேண்டும்.
- புதிதாக தொடங்கப்பட்ட பெரும்பாலான கல்லூரிகள் இரண்டாண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் தான் செயல்பட்டு வரு கின்றன. அங்கு போதிய கட்டட வசதிகளோ, போதுமான அளவில் பேராசிரியர்களோ இல்லை. இதுவும் கூட மாணாக்கர் சேர்க்கை குறைவுக்குக் காரணமாகும்.
- நடப்பு கல்வியாண்டில் சேர்க்கை குறைவு காரணமாக இவ்விரு பாடப் பிரிவுகள் தீக்கப் பட்டாலும் அடுத்த கல்வியாண்டில் இப்பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கை நடைபெற வழி வகை செய்ய வேண்டும். மேலும் இப்பா டங்களின் மீதான ஆர்வத்தை பிளஸ் 2 வகுப்பிலேயே மாணாக்கரிடையே ஏற்படுத்த வேண்டும்.
- மேலும், அரசு சுல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டு கட்ட கலந் தாய்வு நடந்து முடிந்துள்ள நிலையில் 1,07 299 இடங்களில் 75,817 பேர்சேர்க்கை பெற்றுள்ளனர். இதில் 31 621 மாணவர்சு ளும் 44,196 மாணவியரும் அடங்குவர்.
- சேர்க்கைக்கான காலக்கெடு முடிந்ததும் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கை நடைபெற்ற மேலும் சில பாடப்பிரிவுகள் நீக்கப்படுமோ என்ற அச்சமும் இருக்கிறது.
- மாணவர்களிடையே வரவேற்பு இல்லாமல் சேர்க்கை குறைவதால் அப்பாடங்களை நீக்குவது இதற்குத் தீர்வாக அமையாது, மாறாக சேர்க்கைக் குறைவுக்கான காரணங்களைக் கண்டறிந்து குறைகள் களையப்பட வேண்டும்.
நன்றி: தினமணி (29 – 06 – 2023)