TNPSC Thervupettagam

பெண்களிடையே அதிகரிக்கும் நுரையீரல் புற்றுநோய்

February 15 , 2025 7 days 25 0

பெண்களிடையே அதிகரிக்கும் நுரையீரல் புற்றுநோய்

  • புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும், குறிப்பாகப் பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் அதிகரிப்ப தாக உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வில், புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்குப் பரவலாகக் காணப்படும் நுரையீரல் அடினோகார்சினோமா எனும் புற்றுநோய் பெண்களில் 60% ஆகவும், ஆண்களிடம் 45% ஆகவும் பதிவாகியுள்ளது. 2022இல் மட்டும் 20 லட்சத்துக்கும் அதிக மானோர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
  • காற்று மாசு, மரபணுக் கடத்தல், நோயெதிர்ப்பு சக்தி குறைவு போன்றவை நுரையீரல் புற்றுநோய் அதிகரிப்பைத் தூண்டுகின்றன. குறிப்பாக, மரபணுக்கள் காரணமாக நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்துள்ளது. மரபணுவில் ஏற்படும் பிறழ்வுகள், கட்டுப்பாடற்ற செல் வளர்ச்சி ஆகியவையும் சுவாசப் புற்றுநோயைத் தூண்டு கின்றன. புகைபிடிக்காத ஆசியப் பெண்களில் 50% பேரிடமும், புகை பிடிக்காத மேற்கத்திய பெண்களில் 19% பேரிடமும் நுரையீரல் அடினோகார்சினோமா காணப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சுவாசப் பிரச்சினைகள் உள்ளிட்ட பாதிப்பு களை ஏற்படுத்தும் பிஎம் 2.5 (காற்றில் கலந்துள்ள 2.5 மைக்ரோமீட்டருக்குக் குறைவான விட்டம்கொண்ட நுண் தூசித் துகள்கள்) பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வு களுக்குப் பங்களிக்கின்றன. குறிப்பாக, நகர்ப்புறங்களில் காற்றில் பிஎம் 2.5 உமிழ்வுக்கு 60% முதல் 70% வரையிலும், நைட்ரஜன் ஆக்சைடு உமிழ்வுக்கு 40% முதல் 50% வரையிலும் கனரக வாகனங்கள் காரணமாக இருக்கின்றன. இதனால், காற்று மாசடைவதுடன் சுவாசம் தொடர்பான நோய்களும் அதிகரிக்கின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories