TNPSC Thervupettagam

மாவட்டப் புத்தகத் திருவிழா: உள்ளூர் எழுத்தாளருக்கான பரிவட்டம் அல்ல

February 23 , 2025 4 days 16 0

மாவட்டப் புத்தகத் திருவிழா: உள்ளூர் எழுத்தாளருக்கான பரிவட்டம் அல்ல

  • ​மாவட்​டந்​தோறும் நடக்​கும் புத்​தகக் காட்​சிகளில் பேச அழைக்​கப்​படு​பவர்கள் குறித்த சர்ச்​சைகள் சிலரால் தொடர்ந்து எழுப்​பப்​படு​கின்றன. உண்மையான ஆதங்​கங்கள் கவனிக்​கப்பட வேண்​டும், நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்​டும் என்ப​தில் மாற்றுக் கருத்தே இல்லை. அதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்​கொள்​ளப்​படு​கின்றன. ஆனால், இந்தப் பேச்​சாளர்கள் தொடர்பான பிரச்​சினைகளை முன்​வைத்து புத்​தகக் காட்​சிகளுக்கு எதிரான மனநிலை​யைச் சிலர் உருவாக்கி வருகின்​றனர். இதன் அபாயம் அவர்​களுக்​குப் புரிய​வில்லை. அது புத்​தகக் காட்​சிகளை ஒழித்துக்​கட்டும் இடத்​தில்​தான் கொண்​டு​போய் நிறுத்​தும்.
  • சென்னை புத்​தகக் காட்​சிக்​குப் பிறகு பெரிய அளவில் நடத்​தப்​பட்ட மாவட்டப் புத்​தகக் காட்சி 2006இல் மதுரை​யில் நடந்த காட்​சி​தான். இப்போது நிதித்​துறை செயலராக இருக்​கும் உதயச் சந்திரன் அப்போது மதுரை மாவட்ட ஆட்சித்தலை​வராக பணியாற்றினார். அவர்​தான் அரசு ஆதரவுடன் மாவட்​டங்​களில் புத்​தகக் காட்​சிகளை நடத்து​வதற்காக முதற்​புள்​ளியை வைத்​தார். மதுரை​யில் பிரமாண்​டமான புத்​தகக் காட்​சியை நடத்​திக் காட்​டி​னார். அவரைப் பின்​பற்றி பெரம்​பலூரில் மாவட்ட ஆட்சித்தலை​வராக இருந்த தாரேஸ் அகமது அந்த மாவட்​டத்​தில் பெரிய அளவில் புத்​தகக் காட்​சிகளை நடத்​தினார். மாவட்ட நிர்​வாகம், உள்ளூர் கல்வி அமைப்பு​கள், பண்பாட்டு அமைப்புகள் இணைந்து ஒரு புத்​தகக் காட்​சியை நடத்​தும் முன்​மா​திரி அப்போதே உருவாக்​கபட்டு​விட்​டது.
  • 2021இல் அமைந்த மாநில அரசு எல்லா மாவட்​டங்​களி​லும் புத்​தகக் காட்​சிகள் என்ற மாபெரும் திட்​டத்தை அறிவித்​தது. பள்ளிக் கல்வித்​துறை​யின் வழிகாட்டு​தலில் பொது நூலகத்​துறை, மாவட்ட நிர்​வாகம், பபாஸி, தமிழ்​நாடு அறிவியல் இயக்​கம், உள்ளூர் கலை இலக்கிய அமைப்புகள் இணைந்து இக்காட்​சிகளை நடத்து​வதற்காக ஏற்பாடுகள் செய்​யப்​பட்டன. அரசு அதற்கு மானியமாக ஒரு பெரும் தொகையை ஆண்டு​தோறும் ஒதுக்​கிவரு​கிறது. மாவட்​டத்​தின் அளவுக்கு ஏற்ப 15 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை ஒவ்வொரு காட்​சிக்​கும் ஒதுக்​கீடு செய்​யப்​படு​கிறது.
  • மூன்று ஆண்டு​களாக இந்தக் காட்​சிகள் எல்லா மாவட்​டங்​களி​லும் வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஒரு புத்​தகக் கடைகூட இல்லாத சிறிய மாவட்​டங்​களில்கூட ஒரு பெரிய புத்​தகக் காட்சி நடக்​கும் என்று யாரும் கற்பனை செய்​து​கூடப் பார்த்திருக்க மாட்​டார்​கள். இவ்வளவு புத்​தகங்களை ஒரு சேரப் பார்ப்பது அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு புதிய அனுபவம். பல்லா​யிரக்​கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் அந்த அனுபவத்​தைப் பெற்று​வரு​கின்​றர். ஒரு அறிவுசார் பண்பாட்டை வளர்க்​கும் முயற்​சி​யில் இது மாபெரும் முன்னெடுப்பு. பள்ளிக் கல்லூரி மாணவர்​களின் திறன் வெளிப்​பாட்​டிற்கான நிகழ்ச்​சிகள், போட்​டிகள், உள்ளூர் கலைஞர்​களின் கலை நிகழ்ச்​சிகள் என பெரும் பண்பாட்டுத்​திரு​விழாவாக இந்தக் காட்​சிகள் நடக்​கின்றன.
  • இந்தியா​வில் எந்த மாநில அரசும் மாவட்டம் தோறும் புத்​தகக் காட்சி என்ற ஒரு மாபெரும் ஏற்பாட்டை செய்​த​தில்லை. தமிழ்​நாடு அரசு ஒரு மிகப்​பெரிய முன்னோடியாக இதை நடத்​திவரு​கிறது.
  • புத்தக விற்பனை போது​மானதாக இல்லை என்ற புகார் சிலரால் தொடர்ந்து எழுப்​படு​கிறது. சென்னை புத்​தகக் காட்சி இன்றைய இடத்தை வந்தடைய அரை நூற்​றாண்​டாகி இருக்​கிறது. நாம் பின் தங்கிய, வருவாய் குறைந்த மாவட்​டங்​களில் உடனடியாக பெரிய விற்​பனையை எதிர்​பார்க்க​விய​லாது. அங்குப் படிப்​படியாக வாசிப்புப் பண்பாட்டை உருவாக்க வேண்​டும். உயிர்மை, காலச்​சுவடு, எதிர், பாரதி புத்​த​காலயம் போன்ற சில பதிப்​பகங்கள் இதை ஒரு பண்பாட்டு இயக்​கமாக கருதி விற்​பனைக் கணக்​குகளை பொருட்​படுத்​தாமல் பெரும்​பாலான மாவட்ட காட்​சிகளில் பங்கேற்​கிறார்​கள். ஒட்டு மொத்​தமாக ஒரு ஆண்டில் எல்லா மாவட்ட புத்​தகக் காட்​சிகளி​லும் 60 கோடி ரூபாய்க்கு நூல்கள் விற்​பதாக சொல்​லப்​படு​கிறது. இது இந்தத் துறைக்கு ஒரு முக்கியமான பங்களிப்பு.
  • ஒரு புத்​தகக் காட்சி என்பது பலதரப்​பட்ட பொது​மக்​களுக்காக நடத்​தப்​படு​கிறது. அதை நவீன இலக்​கி​யத்தை மட்டும் மையமாக வைத்து நடத்த இயலாது. எந்தெந்தப் பேச்​சாளர்களை அழைப்பது என்பதை அந்த மாவட்ட நிர்​வாக​மும் புத்​தகக் காட்​சியை நடத்​தும் அமைப்பு​களும்​தான் முடிவு செய்​கின்றன. இலக்​கியப் பார்வை உள்ள மாவட்ட ஆட்சித்தலை​வர்கள் உள்ள இடங்​களில் நவீன இலக்​கியம் சார்ந்​தவர்கள் சற்று கூடுதல் முக்​கி​யத்துவம் பெறுகிறார்​கள். மற்ற இடங்​களில் அவர்​களின் பார்​வை​களின் எல்லைகளுக்கு ஏற்ப முடிவு செய்​கிறார்​கள். ஆனால், புத்​தகக் காட்​சிகளின் நோக்கம் புத்​தகப்​பண்​பாட்டை பரவலாக்குவதே தவிர அது பேச்​சாளர்கள் சம்பந்​தப்​பட்​டதல்ல. அவர்கள் ஒரு பெரிய நிகழ்​வின் சிறு பகுதி மட்டுமே.
  • நவீன எழுத்​தாளர்கள் பேச அழைக்​கப்பட வேண்​டும். ஆனால், எத்தனை நவீன எழுத்​தாளர்கள் பொது​மக்களை ஈர்க்​கக்​கூடிய வகையில் பேச்​சுத்​திறன்​கொண்​ட​வர்​கள்? அப்படி பேசக் கூடிய​வர்கள் பேச அழைக்​கப்​படு​கிறார்​கள். பார்​வை​யாளர்​களைத் தக்கவைப்பது அத்தனை எளிதல்ல. பொதுப்​பேச்​சாளர்களை ஒரு வெகுசன நிகழ்​வில் தவிர்க்கவே இயலாது.
  • உள்ளூர் எழுத்​தாளர்​களுக்கு இடம் வேண்​டும் என்பது நியாய​மானது​தான். அவர்கள் அழைக்​கப்​படவே செய்​கிறார்​கள். ஆனால், உள்ளூர் ஆட்களை மட்டும் வைத்து நடத்த புத்​தகக் காட்சி ஒன்றும் பரிவட்டம் கட்டும் வைபவம் அன்று. ஒரு வருடத்​தில் பல புத்​தகக் காட்​சிகள் நடக்​கின்றன. ஆயிரம் உரைகளுக்கு மேல் நிகழ்த்​தப்​படு​கின்றன. அதில் பிரபலப் பேச்​சாளர்​கள், நவீன இலக்​கிய​வா​தி​கள், உள்ளூர் எழுத்​தாளர்கள் எல்லோரும்​தான் கலந்து இருக்​கிறார்​கள்.
  • இடம் வேண்​டும் என்று கேட்​கலாம். ஆனால், அதற்காக ஒரு அறிவு சார் பண்​பாட்டு இயக்​கத்தை ​கொச்​சைப்​படுத்​தக் கூடாது. மாற்​றங்​களும் செழு​மைப்​படுத்​தல்​களும் ஜனநாயகத்​தன்​மை​யும் தேவைப்​படலாம். ஒரு இயக்​கத்தை வலிமைப்​படுத்​தினால்​தான்​ அதைச்​ செய்​ய ​முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories