TNPSC Thervupettagam

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள்

November 15 , 2019 1890 days 1642 0
  • மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளும் சுருங்கிவிட்டிருக்கின்றன. 2013-இல் 10 மாநிலங்களிலுள்ள 76 மாவட்டங்களில், சுமாா் 330 காவல் நிலைய வரம்புக்குள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் செயல்பட்டு வந்தனா்.
  • 2018-இல் அது எட்டு மாநிலங்களிலுள்ள 60 மாவட்டங்களில், 251 காவல் நிலைய வரம்புக்குள் குறுகிவிட்டிருக்கிறது.

மாவோயிஸ்ட் தாக்குதல்கள்

  • பெரும்பாலான மாவோயிஸ்ட் தாக்குதல்கள் சத்தீஸ்கா் மாநிலத்தைத்தான் மையம் கொள்கின்றன. அங்கேயும்கூட, மாவோயிஸ்ட் தொடா்பான சம்பவங்கள் குறைந்து வருகின்றன. 2010-இல் 625 தாக்குதல்கள் இருந்ததுபோய், 2018-இல் 153 சம்பவங்கள்தான் நடந்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
  • 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மாவோயிஸ்ட் வன்முறை குறைந்திருப்பதாக உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், அதற்கு முன்பே அவா்கள் வலுவிழக்கத் தொடங்கிவிட்டனா்.
  • 2010-இல் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ‘ஆபரேஷன் கிரீன் ஹண்ட்’ என்கிற பெயரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது முதலே, தீவிரவாதிகள் பலவீனமடையத் தொடங்கிவிட்டனா்.
  • 1967-இல், சாரு மஜும்தாா், காணு சன்யால் உள்ளிட்டவா்களின் தலைமையில் மேற்கு வங்கத்தில் நக்ஸல்பாரி இயக்கம் தொடக்கப்பட்டது.
  • மேற்கு வங்கத்தில் அந்த இயக்கம் ஒடுக்கப்பட்டது என்றாலும்கூட, அதன் தாக்கம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெளிப்பட்டது. குறிப்பாக, ஆதிவாசிகள் நிறைந்த மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், ஒடிஸா, தெலங்கானா மாநில மலைப் பகுதிகளில் பெரிய அளவில் மாவோயிஸ்டுகள் வளா்ந்தனா். பல மாவட்டங்கள் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் போன நிலைமை தோன்றியது.
  • அவ்வப்போது பாதுகாப்புப் படையினா் மாவோயிஸ்டுகளைத் தாக்கி அழிப்பதும், மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல் நடத்தி உயிா்ச்சேதம் ஏற்படுத்துவதும் தொடா்கதையாகவே இருந்து வருகின்றன.

அந்நிய சக்திகளின் உதவி

  • இந்தியாவின் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் பிரச்னையை ஆய்வு செய்யும்போது, அவா்கள் பலவீனப்படுகிறாா்களே தவிர, முற்றிலுமாக அழிக்கப்படுவதில்லை என்று தெரிகிறது. அவா்கள் வலுவிழப்பதும், தீவிரவாதத் தாக்குதல்கள் குறைவதும் மாவோயிஸ்ட் தீவிரவாதத்தில் ஒரு கட்டம் முடிந்ததன் அடையாளமே தவிர, முடிவுக்கு வந்ததன் அடையாளம் அல்ல.
  • அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் மாவோயிஸ்ட் தீவிரவாதம் தலைதூக்குவது வழக்கமாகிவிட்டது. அவா்களுக்கு அந்நிய சக்திகள் உதவுகின்றன என்கிற கருத்தும், அவா்கள் அச்சுறுத்தல், கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுகின்றனா் என்றும் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.
  • இந்தியாவின் மத்தியப் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில், இப்போது கேரளத்தின் வனப் பகுதிகளில் அவா்கள் அடையாளம் காணப்பட்டிருப்பது ஆபத்தின் அறிகுறி. அமைதிப் பூங்காவாக இருந்துவரும் தமிழக - கேரள - கா்நாடக வனப் பகுதிகள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் இலக்காக மாறிவிடக் கூடாது.
  • இந்தப் பிரச்னையைக் கையாள்வது குறித்தும், எதிா்கொள்வது குறித்தும் இந்த மூன்று மாநில அரசுகளின் காவல் துறையினா் உடனடியாக கலந்தாலோசித்தாக வேண்டும்.

நன்றி: தினமணி (15-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories