TNPSC Thervupettagam

முறையற்ற தூக்கம் கூடாது

November 30 , 2024 44 days 84 0

முறையற்ற தூக்கம் கூடாது

  • முறையற்ற தூக்கமானது மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிப்ப தாகச் சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ‘ஜர்னல் ஆஃப் எபிடமியாலஜி & கம்யூனிட்டி ஹெல்த்’ (Journal of Epidemiology & Community Health) இதழ் 40 முதல் 79 வயதுக்கு உள்பட்ட 72,000 பேரிடம் அன்றாட உறக்க முறை குறித்த பரிசோதனையில் ஈடுபட்டது.
  • அந்த ஆய்வின் முடிவில், ‘தினமும் 8 மணி நேரத் தூக்கத்தை ஒருவர் பெற்றாலும் உறங்கும் நேரமும் எழுந்திருக்கும் நேரமும் ஒவ்வொரு நாளும் மாறுபட்டால் அந்தத் தூக்கம் முறையற்றதாகக் கருதப்படுகிறது. இம்மாதிரியான உறக்கம் உடல்நலனைப் பாதித்து மாரடைப்பு, பக்கவாதம், இதயச் செயலிழப்பு போன்றவை ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மன அழுத்தம், பதற்றம் போன்ற வற்றால் ஏற்படும் முறையற்ற தூக் கத்திலிருந்து விடுபட உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவற்றில் ஏதாவது ஒரு பயிற்சியைப் பின்பற்றலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
  • மேலும், ஆரோக்கியமான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறையைக் கடைப் பிடிப்பதன் மூலம் இரவில் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சினையிலிருந்து தப்பிக்கலாம் எனவும் மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories