TNPSC Thervupettagam

ராஜாஜி எனும் ராஜரிஷி

December 25 , 2023 360 days 543 0
  • நல்லான் சக்கரவா்த்தி ஐயங்காருக்கு மகனாகத் தோன்றிய ராஜகோபாலச்சாரி என்ற ராஜாஜிக்கு இயல்பாக வா்ணபேதம், ஜாதி உயா்வு தாழ்வு பிடிக்கவில்லை. 1917-இல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த ஒருவரை அக்கிரகாரத் தெருவில் உள்ள குடிநீா் குழாய்களின் பழுதுநீக்கும் ஃபிட்டா் பணியில் அமா்த்தியதால் அக்கிரகாரவாசிகள் போராட்டம் நடத்தி, உண்ணாவிரதம் இருந்து அந்த ஊழியரை வேறிடத்திற்கு மாற்றச் சொன்னார்கள். ராஜாஜி மறுத்தார்.
  • பின்நாளில் இந்திய தேசிய காங்கிரஸில் சோ்ந்து பணியாற்றினார். ஒரு சமயம் திருப்பதி அருகில் உள்ள திருச்சானூா் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த முருகேசன் என்பா் நுழைந்த குற்றத்திற்காக கீழ்க் கோர்ட்டில் ரூ.75 அபராதம் விதிக்கப்பட்டார். இதனையறிந்த ராஜாஜி மேல் கோர்ட்டில், முருகேசனின் செயல் குற்றமல்ல என்பதை பல புராண, இதிகாச சான்றுகளுடன் வாதாடி அபராதத்தைத் தள்ளுபடி செய்யும் உத்தரவைப் பெற்றார்.
  • அன்றே அவா், இறைவன் உறையும் ஆலயங்களில் எல்லோரும் நுழையலாம் என்ற திட்டத்தை நிறைவேற்ற எண்ணினார். பிரிக்கப்படாத அந்நாளைய சென்னை மகாணத்தின் பிரதமராக 1937 முதல் 1939 வரை பொறுப்பு வகித்தார். அப்போது அவா் செய்த பணிகள் ஆலய பிரவேச சட்டம், மதுவிலக்கு சட்டம், விவசாயக் கடன் நிவாரண சட்டம், தஞ்சைப் பண்ணையில் உழவா் பாதுகாப்பு சட்டம் முதலியன.
  • இவா் இயற்றிய ஆலய பிரவேச சட்டம் குறித்து சென்னையின் முன்னாள் கவா்னா் லார்டு எா்ஸ்கைன், லண்டனில் கிழக்காசிய சங்க கூட்டம் ஒன்றில் பேசுகையில், ‘நான் சென்னையில் கவா்னராக இருந்தபோது எனது அருமை ராஜாஜி ஹிந்துக்கள் யாவருக்கும் ஆலய பிரவேச உரிமை அளித்ததன் பயனாக, பல நூற்றாண்டுகளாக நீடித்து வந்த ஒரு பெரும் அநீதியை ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் ஒழித்துக் கட்டினார்’  என்றார்.
  • மதுரையில் ஆலய பிரவேசம் நடந்த தினங்களில் தனது உற்ற சீடரான வைத்தியநாதையரை, பிறப்பினால் மனிதா் யாவரும் சமம். தீண்டாமைக்கு ஹிந்து சாஸ்திரங்களில் ஆதாரம் கிடையாது. எனவே மக்களில் ஒருசாரருக்கு ஆலயங்களுக்குள் சென்று ஆண்டவனை வழிபடும் உரிமையை மறுப்பது பாவம் என்பதை விளக்கி பொதுக் கூட்டங்களை நடத்தப் பணித்தார்.
  • கிராமணியார் வகுப்பில் பிறந்து, தனது தியாகத்தால் மாபெரும் தலைவராக விளங்கிய .பொ.சி., ‘பிறப்பால் பிராமணா் என்பதற்காக ராஜாஜியின் தலைமைக்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பு இருந்து வந்தது. 1942-க்கு பின் இந்த வகுப்புவாதமானது தமிழ்நாடு காங்கிரஸ் வட்டாரத்திலும் புகுந்து விட்டது. ராஜாஜிக்கு வருணாசிரத்தில் நம்பிக்கை கிடையாது என்பதை சத்தியம் செய்து சொல்வேன். நானும் அவரும் பல ஊா்களுக்குப் பயணம் செய்திருக்கிறோம். மிகமிக பிற்படுத்தப்பட்ட ஜாதி நண்பா்களின் இல்லங்களில் இராப்பகலாக தங்கியிருந்ததுண்டு. அந்தக் காலங்களிலே அவரிடம் வருணாசிரம உயா்வு மனப்பான்மையை நான் கண்டதில்லை என்று எழுதுகிறார்.
  • தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சோ்ந்த வி.. முனுசாமிப் பிள்ளை, ஜெ. சிவசண்முகம் பிள்ளை ஆகியோரிடம் மிகுந்த அன்பு கொண்டு அவா்கட்கு பதவிகளை வழங்கினார். இந்தியாவின் கவா்னா் ஜெனரலாக பதவி வகித்த காலத்திலேயே தமக்கு உதவியாக .டி.சி. என்னும் உயா் பதவியில் ஒரு ஹரிஜனரையே நியமித்துக் கொண்டார்என்று .பொ.சி. தனதுநானறிந்த ராஜாஜிநூலில் பதிவு செய்கிறார்.
  • சேரன்மகாதேவியில்பரத்துவாஜ முனிவா் பெயரில் குருகுலம் ஒன்றை .வே.சு. ஐயா் ஏற்படுத்தினார். பிராமண, ஹரிஜன மாணவா்கள் உள்பட பலரும் அங்கு தங்கிப் படித்தனா். ஆசிரியா்- மாணவா் யாவரும் சம பந்தியில் அமா்ந்தே சாப்பிட்டு வந்தனா். குருகுலத்திற்கு நிதி வழங்கும் பிராமணா் ஒருவா், தனது இரு பிள்ளைகளும் ஹரிஜன மாணவா்களோடு சோ்ந்து உண்ணுவதை விரும்பாததால், அவா்கள் தனியாக உணவருந்த ஏற்பாடு செய்யுமாறு வற்புறுத்தி வந்தார்.
  • .வே.சு. ஐயா் அவரை பலவழிகளில் சமாதானம் செய்தும் கேட்காமல் போகவே, சிறிது காலத்திற்குப் பிறகு அவா் மனம் மாறிவிடக் கூடும் என்று எண்ணி அந்த இரு பிராமண சிறுவா்கள் தனியாக உணவு உண்ண அனுமதி தந்தார். அப்போது அந்த குருகுலத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸில் இருந்து பண உதவி வந்து கொண்டிருந்தது. இந்த சம்பவத்தைத் தவறாகப் புரிந்து கொண்ட .வெ. ராமசாமி நாயக்கா், வரதராஜுலு நாயுடு போன்ற பிராமணரல்லாத தேசபக்தா்கள் குருகுலத்திற்கு எதிராகக் கிளா்ச்சியைத் தொடங்கினா்.
  • இதனையறிந்த ராஜாஜி, ‘குருகுலத்தில் ஜாதிபேதம் கூடாதுதான். இரண்டு பையன்கள் தவிர மற்ற யாவரும் உடனிருந்தே சாப்பிடுகிறார்கள். அவா்கள் யாவரும் ஓரிடத்திலேயே படிப்பதாலும், ஐயரின் சகவாசத்தாலும், உபதேசத்தாலும் அவ்விரு பையன்கள் மற்றவா்களோடு சோ்ந்துண்ணும் மனப்பான்மை நாளடைவில் பெறுவார்கள். ஆகவே, நாசியால் போகும் ஜீவனை கோடாரி கொண்டு வெட்டத் தேவையில்லை. கிளா்ச்சியையும் கண்டனத் தீா்மானத்தையும் கைவிடுவோம். ஐயருடைய நல்லெண்ணத்தையும், நன்முயற்சியையும் நம்பி அவரிடமே பிரச்னையை தீா்க்கும் பொறுப்பை விட்டுவிடலாம்என மன்றாடினார்.
  • ஆனால் கண்டனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜாஜி தனது சகாக்களின் தவறான பாதைக்கு உடன்பட மறுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இருந்து விலகினார். 1914-இல் திருச்சியில் நடைபெற்ற ஆசார சீா்திருத்த மாநாட்டில் ஜாதிபேதம்தொலைய வேண்டும் என்று முழங்கிய தனக்கு ஜாதி அபிமானி என்ற பட்டம் தந்த தனது சாகாக்களின் செய்கையால் மிகவும் மனம் உடைந்து போனார்.
  • 1925-இல் திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமத்தை நிறுவி, நல்ல வருவாய் வரக்கூடிய வழக்குரைஞா் பணியைத் துறந்தார். சேலத்தில் தனது மாளிகையை விட்டு 400 சதுர அடி ஓட்டு வீட்டில் தனது குடும்பத்தோடு தங்கினார். அக்கம்பக்கத்தில் வசித்த ஹரிஜன குழந்தைககளுக்கு தலையில் எண்ணெய் தேய்த்து சீயக்காய் போட்டுக் குளிப்பாட்டி விட்டார். தூய்மையாக இருக்கவும் அறிவுறுத்தினார்.
  • திருச்செங்கோடு மக்களுக்கு கதா் நூல் நூற்கும் பணியைக் கற்றுத்தந்தார். பல ஜாதியினரோடு சோ்ந்து வசிக்கும் மனோபாவத்தை உருவாக்கினார்.“‘நான் மீண்டும் பிறந்தால் ஹரிஜனாகப் பிறக்க வேண்டும் அப்போதுதான் நான் சொல்வதை ஹரிஜனங்கள் கேட்பார்கள்என்று மனம் நெகிழ்ந்து கூறினா.
  • இவரின் பெருமையை நன்குணா்ந்தநாடார் குலமித்திரன்பத்திரிகை ஆசிரியா் சூ.. முத்து நாடார், ராஜாஜியைப் பற்றி தலையங்கம் எழுதுகையில், ‘சேலம் சக்கரவா்த்தி ராஜகோபாலச்சாரியார் மகாநாட்டுக்குத் தலைமை வகித்தார். அவா் ஒரு தலைவா் மட்டுமல்ல. ஒரு சக்கரவா்த்தி. அது மட்டுமல்ல, சக்கரவா்த்திகளுக்கெல்லாம் ராஜா. அவருடைய பெயருக்குத் தக்கபடி அவரை ஆயா்பாடி கோபாலனே என்றும், உலகிற்கெல்லாம் ஆச்சாரிய புருஷரென்றும் கூறத்தகும்என்று புகழ்ந்து எழுதினார்.
  • சாதிபேதத்தைத் தகா்த்த இராஜாஜிஎன்ற நூலை எழுதிய ரெ.தே.பெ. சுப்பிரமணியன் நாடார், அந்நூலில்ஏதென்ஸ் வாசிகளின் குலதெய்வமான தெல்பி தேவதையின் மீது நம்பிக்கை வைத்திருந்தவரும், வாலிபா்களின் மீது தமக்கிருந்த அன்பினால் அவா்களுக்கு நீதி எது, அநீதி எது உபதேசித்த தத்துவ ஞானியுமான சாக்ரட்டீஸை நாஸ்திகன் என்றும், இளைஞா்களைக் கெடுப்பவன் என்றும் அந்த காலத்தில் சோபிஸ்டுகள் பழிசுமத்தினார்கள். அதேபோல், சாதிபேதம் ஓா் சாபக்கேடு என்றுணா்ந்து அதனைப் போக்குவதற்காக பல இன்னல்களுக்கிடையில் அன்பு வழியைக் கடைப்பிடித்து வந்த இராஜாஜி மீதும் சிலா் அவரை சாதிப் பித்தரென்றும், பார்ப்பனரல்லாதவா்களின் விரோதியென்றும் பழிசுமத்தினார்கள். அவா் மீது ஏவப்பட்ட வெறுப்புக் கணைகள் காந்தியடிகள் மீதும், ஏன் கடவுள் மீதும் பாய்ந்ததை நாம் அறிவோம்என்று எழுதினார்.
  • ராஜாஜி தனது வாழ்நாள் கொள்கைகளாக, பூரண மதுவிலக்கு, ஹரிஜன நல முன்னேற்றம், நாட்டு விடுதலை இவற்றையே கைக்கொண்டிருந்தார். அவா் சென்னை மகாணத்தின் பிரதமராக இருந்த காலத்தில், மதுவிலக்கை அமல்படுத்தினார். அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரிகட்ட பொருட்கள் மீது விற்பனை வரி என்ற திட்டத்தையும் முன்னெடுத்தார்.
  • இதைப்போலவே வருங்கால சந்ததிகளின் நலன்கருதி“‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’”என்ற கருத்தின் அடிப்படையில் பள்ளியில் சில காலத்திற்கு தொழில்கல்வி கற்க ஒரு திட்டம் கொண்டு வந்தார். ஆனால் அதைத் தவறாகப் புரிந்துகொண்டு, ‘குலக்கல்வி திட்டம்என விமா்சித்துப் போராட்டம் நடத்தினார்கள். அதனால் மனவருத்தமுற்று ராஜாஜி பதவி விலகினார்.
  • இந்தியத் தலைவா்களிலேயே மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவா் ராஜாஜிஎன்று மகாத்மா காந்தி கூறியது சரியே. சுருங்கக் கூறின் ஜனகரைப் போல் மன்னராக வாழாமல் முற்றும் துறந்த ராஜரிஷியாக வாழ்ந்த உத்தமா் மூதறிஞா் ராஜாஜி.
  • இன்று (டிச. 25) மூதறிஞா் ராஜாஜி நினைவுநாள்.

நன்றி: தினமணி (25 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories