TNPSC Thervupettagam

வாக்களிக்க வாரீகளா

March 23 , 2024 121 days 117 0
  • மக்களவைத் தேர்தல் நெருங்கிவருகிறது; அரசியல் களம் சூடுபிடித் திருக்கிறது. கோடைக்காலம் வந்தேவிட்டது; சூடு ஏற்கெனவே தலையில் இறங்கத் தொடங்கிவிட்டது.
  • உலக மக்கள்தொகையில் இந்தியாவின் பங்கு மெச்சத்தக்கது (!); உலக மக்களில் இந்தியர்கள் 17% பேர், புவியின் 2.4% நிலப்பரப்பில் வாழ்ந்துவருகிறோம். வாக்களிக்கும் உரிமைபெற்ற வயதுவந்த இந்தியர்கள் 96.7 கோடி பேர், இந்தியாவை உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக நிலைநிறுத்தும்கடமையை வரும் வாரங்களில் ஆற்றவிருக்கிறோம்.
  • ஏப்ரல் 19 தொடங்கும் முதல் கட்ட வாக்குப்பதிவுஏறக்குறைய கோடைக்காலம் முழுவதும் நீண்டுஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்தியாவின் தேர்தல் வரலாற்றில் நீண்ட காலம் நடைபெறும் இரண்டாவது தேர்தலாக அமையவிருக்கும் இது, சமூக - அரசியல் தளத்தில்இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியத்துவத்தைமுந்தைய தேர்தல்கள் எவற்றையும்விட - மேலதிகமாகக் கொண்டிருக்கிறது.
  • வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தேர்தலை நோக்கிய அணுகுமுறை பலவாறாகப் பரந்துவிரிந்திருக்கிறது; சமூக-அரசியல் தளங்களில் பல்வேறு விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், நாம் கவலைப்படவில்லை என்றாலும் காலநிலை மாற்றத்தின் பின்னணியிலும் இந்தச் சூழலை அணுக வேண்டிய நிர்ப்பந்தத்துக்குக் காலம் நம்மைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

வெப்ப அலைகள்

  • புவியின் சராசரி வெப்பநிலை, இதுவரை இல்லாத அளவுக்குப் புதிய உச்சத்தைக் கடந்த பிப்ரவரி மாதம் எட்டியிருக்கிறது. காலநிலை மாற்றத்தின் விளைவுகளால், தொழிற் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தின் சராசரி வெப்பநிலையைவிட 1.77 டிகிரி செல்சியஸ் அதிக அளவுக்கு வெப்பநிலை பதிவாகியிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை தெரிவித்துள்ளது.
  • இந்தியாவில் 1901ஆம் ஆண்டுக்குப் பிறகு, மிக அதிக வெப்பம் 2023 பிப்ரவரி மாதத்தில் பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது; இந்தியாவில் வெப்ப அலைகளால் 2023ஆம் ஆண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 264.
  • புவியியல்ரீதியில் ஒரு பகுதி அமைந்துள்ள விதத்துக்கு ஏற்ப வெப்ப அலையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெவ்வேறு விதங்களில் வரையறுக்கிறது. சமவெளிகளில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல்; கடலோரப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல்; மலைப்பாங்கான பகுதிகளில், 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் என்கிற அளவுகளில் வெப்ப அலைகள் வரையறுக்கப்படுகின்றன. இந்தியாவில் வெப்ப அலைகள் பொதுவாக மார்ச் - ஜூலை மாதங்களிலும், கடுமையான வெப்ப அலைகள் பெரும்பாலும் ஏப்ரல் - ஜூன் காலகட்டத்திலும் ஏற்படுகின்றன.
  • 2022ஆம் ஆண்டு, இந்தியாவில் 16 மாநிலங்களில் 280 நாள்கள் வெப்ப அலைகள் நிலவியதாக புதுடெல்லி அறிவியல்சுற்றுச்சூழலுக்கான மையத்தின் அறிக்கை கூறுகிறது. நீரிழப்பு, தலைச்சுற்றல், சோர்வு, வெப்ப மயக்கம் (heat stroke) போன்ற பாதிப்புகளை வெப்ப அலைகள் மனிதர்களிடம் ஏற்படுத்துகின்றன; கடுமையான வெப்ப அலைகளால் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.
  • ஏழைகள், எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும் பிரிவினர் உள்ளிட்ட சமூகத்தின் நலிவடைந்த மக்களை வெப்ப அலைகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, ‘வெப்ப செயல் திட்டங்கள்என்கிற வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது.
  • 2010இல் ஏற்பட்ட வெப்ப அலையைத் தொடர்ந்து அகமாதாபாத் நகர நிர்வாகம் இந்தியாவில் முதல் வெப்ப செயல் திட்டத்தை 2013இல் நடைமுறைப்படுத்தியது. இதன் மூலம் 2014-2015 காலகட்டத்தின் வெப்ப அலைகளில் இருந்து சுமார் 1,000 மரணங்கள் வரை தடுக்கப்பட்டிருக்கலாம் என அறிவியலாளர்கள் மதிப்பிட்டனர்.
  • தற்போது இந்தியா முழுவதும் மாநிலம், நகரம், மாவட்டம் ஆகிய நிலைகளில் 37 வெப்ப செயல் திட்டங் களின் செயல்பாடுகளை ஆராய்ச்சி செய்த கொள்கை ஆராய்ச்சிக்கான மையம் (CPR), குறைவான நிதி ஒதுக்கீடு, உள்ளூர்க்குத் தகுந்த மாதிரியான நடைமுறைகள் போன்றவற்றில் இடைவெளி நிலவுவதைக் கண்டறிந்துள்ளது. வெப்ப அலைகளின் பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவை இந்த இடைவெளி ஏற்படுத்துகிறது.

வாக்களிக்க வாரீகளா

  • வெப்ப அலைகள் ஒவ்வோர் ஆண்டும் தீவிரமடைந்துவரும் நிலையில், கோடைக்காலத்தின் உச்சியில் இந்தியா நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது.
  • மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பண்டிகைகள், விடுமுறை நாள்கள், நாட்டின் பல பகுதிகளில் அறுவடைக் காலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங் களைக் கருத்தில் கொண்டே வாக்குப்பதிவுக்கான தேதிகள் முடிவுசெய்யப்பட்டிருப்பதாகத்தேர்தல் அறிவிப்பு குறித்த இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.
  • மேலும், இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்திடம் இருந்து பெறப்பட்ட தரவுகளையும் கருத்தில் கொண்டிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. ஆனால், வெப்ப அலைகள் பற்றிய ஒரு சிறு குறிப்புகூட அந்த அறிக்கையில் இல்லை.
  • மகாராஷ்டிரத்தில், 2023 ஏப்ரல் 16 அன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் வெப்பம் தாளாது (42 டிகிரி செல்சியஸ் என அமித் ஷாவே குறிப்பிட்டார்) 12 பேர் உயிரிழந்தனர்; 600 பேர் கடுமையான பாதிப்புகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
  • புணேவில் அமைந்துள்ள இந்திய வெப்பமண்டல வானிலையியல் மையம் (IITM Pune), ‘மார்ச் தொடங்கி மே மாதம் வரை வெப்ப அலைகள் நீடிக்கும்எனக் கணித்துள்ளது. மேலும், அனைத்துப் பிரச்சாரங்கள், பேரணிகள் போன்ற தேர்தல் தொடர்பான செயல்பாடுகளும் வெப்ப அலைகளை ஒரு காரணியாகக் கொண்டு திட்டமிடப்பட வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது.

ஏறும் ஏற்றத்தாழ்வு

  • காலநிலை மாற்றம் உள்ளிட்ட சுற்றுச் சூழல் பிரச்சினைகளின் விளைவுகளில் ஒன்று ஏற்றத்தாழ்வு; ஏற்றத்தாழ்வுள்ள சமூகத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கமும் ஏற்றத்தாழ்வுடன்தான் எதிரொலிக்கிறது. இது ஒரு சுழற்சி.
  • காலநிலை மாற்றத்துக்கு வரலாற்று ரீதியாக முதன்மைப் பங்களித்த வர்க்கப் படிநிலையின் உச்சிக் கொம்பில் அமர்ந்திருக்கும் 1% மக்கள், அந்தப் படிநிலையின் அடியாழத்தில் அழுந்திக்கொண்டிருக்கும் மக்களின் மீது நிகழ்த்திக்கொண்டிருப்பது பெரும் சமூக-சூழலியல் அநீதி.
  • 2022இல், இந்தியாவின் தேசிய வருமானத்தில் 22.6%, வர்க்கப் படிநிலையில் உச்சியில் உள்ள 1% இந்தியர்களிடம் சென்று சேர்ந் திருக்கிறது; 1951இல் இது வெறும் 11.5% தான். அதேபோல், உச்சியில் உள்ள10% இந்தியர்களின் பங்கும் 1951- ஒப்பிட (36.7%) 2022இல் கணிசமாக (57.7%) உயர்ந்திருக்கிறது.
  • அடித்தளத்தில் உள்ள 50% இந்தியர்களுக்கோ இந்தியாவின் தேசிய வருமானத்திலிருந்து சென்ற பங்கு, 2022இல் வெறும் 15%தான்; 1951இல் இது 20.6%-ஆக இருந்தது என்பதுதான் இங்கு சுவாரசியம். இடைப்பட்ட 40% இந்தியர்களுக்கான பங்கு, 42.8%இல் இருந்து சரமாரியாகக் குறைந்து 27.3%இல் வந்து நிற்கிறது.
  • ஒரு தேர்தல் எல்லாவற்றையும் சரிசெய்துவிடும் என்கிற நம்பிக் கையில்தான் ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்களிக்க வரிசையில் வந்து நிற்கிறது பொதுஜனம். மூர்ச்சையடைய வைக்கும் ஏற்றத்தாழ்வு இன்றைய இந்தியாவின் யதார்த்தங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால், வாக்களிக்கச் சென்று வெயிலின் கொடுமையால் மூர்ச்சையடையாமல் வீடு திரும்புவதன் வெற்றியும்கூட இன்றைய இந்தியாவின் யதார்த்தங்களில் ஒன்றுதான்.

சரி, வாக்களிக்க வாரீகளா

  • வெப்ப அலைகள் ஒவ்வோர் ஆண்டும் தீவிரமடைந்துவரும் நிலையில், கோடைக்காலத்தின் உச்சியில் இந்தியா நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories