TNPSC Thervupettagam

வேலைவாய்ப்பு நெருக்கடியில் இந்திய மாணவர்கள்

October 30 , 2024 25 days 67 0

வேலைவாய்ப்பு நெருக்கடியில் இந்திய மாணவர்கள்

  • வெளி​நாடு​களுக்குச் சென்று உயர் கல்வியைத் தொடரும் இந்திய மாணவர்​களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து​வரு​கிறது. 2024இல் மட்டும் சுமார் 13 லட்சத்​துக்கும் அதிகமான மாணவர்கள் வெளிநாடு​களில் கல்வியைத் தொடர்​கின்றனர் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்​சகத்தின் தரவு கூறுகிறது.
  • அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், சிங்கப்​பூர், ரஷ்யா, இஸ்ரேல், உக்ரைன் உள்ளிட்ட 108 நாடுகளில் இந்திய மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகின்​றனர். இதில் அதிகபட்சமாக கனடாவில் 4,72,000 மாணவர்கள் உள்ளனர். அமெரிக்​காவில் 3,37,630, பிரிட்​டனில் 1,25,000, சீனாவில் 8,580, இஸ்ரேலில் 900, உக்ரைனில் 2,510, பாகிஸ்​தானில் 14 என்கிற எண்ணிக்கையில் மாணவர்கள் படிப்பைத் தொடர்​கின்​றனர்.
  • 2023இல் வெளியிடப்பட்ட மத்திய அரசின் தரவில், பஞ்சாப் (12.5%), ஆந்திரம் / தெலங்கானா (12.5%), மகாராஷ்டிரம் (12.5%), குஜராத் (8%), டெல்லி (8%), தமிழ்நாடு (8%), கர்நாடகம் (6%) ஆகிய மாநிலங்​களில் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்​களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்ளது.
  • இவ்வாறு லட்சக்கணக்கான எண்ணிக்கையில் வெளிநாடு​களில் கல்வியைத் தொடரும் மாணவர்​கள் வேலைவாய்ப்பைப் பெற அவர்களின் கல்வி உதவுகிறதா?

காரணங்கள்:

  • இந்திய மாணவர்கள் உயர் கல்வியை வெளிநாடு​களில் தொடரப் பல்வேறு காரணிகள் உள்ளன. பன்முகக் கலாச்​சாரம், கல்வித் தரம், எளிமையான சேர்க்கை முறை (இந்தியா​வுடன் ஒப்பிடு​கையில் சீனா, ரஷ்யா, உக்ரைன் போன்ற நாடுகளில் மருத்​துவப் படிப்புச் சேர்க்கைக்கான தகுதி மதிப்​பெண்கள் குறைவு), வேலைவாய்ப்பு, மேம்பட்ட வாழ்கைத் தரம், நிரந்தரக் குடியுரிமை போன்ற காரணங்​களால் வெளிநாடு​களில் கல்வி கற்க இந்திய மாணவர்கள் விரும்​புவ​தாகக் கல்வி​யாளர்கள் தெரிவிக்​கின்​றனர்.
  • குறிப்பாக, பன்முகக் கலச்சாரச் சூழலில் மேம்பட்ட கல்வித் திட்டத்தில் படிக்​கும்​போது, மாணவர்​களுக்குக் கூடுதல் அனுபவம் கிடைக்​கிறது. மேலும், ஆராய்ச்சிப் படிப்பு​களில் சம்பந்​தப்பட்ட துறைசார் நிறுவனங்​களோடு இணைந்து கல்வி கற்கும் வாய்ப்பு மாணவர்​களுக்குக் கிடைக்​கிறது.

சவால்கள் என்னென்ன

  • உயர் கல்வி வாய்ப்பு​களோடு ஊக்கத்​தொகை​யினையும் வெளிநாட்டுப் பல்கலைக்​கழகங்கள் மாணவ - மாணவி​களுக்கு வழங்கிவரு​கின்றன. பகுதிநேர வேலை செய்து வெளிநாடு​களில் தங்கிப் படிக்கும் மாணவர்​களின் பொருளா​தாரத் தேவைகளை இந்த ஊக்கத்தொகை ஓரளவாவது பூர்த்தி​செய்​கிறது.
  • ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு மாணவர்​களுக்கான உதவித்​தொகையில் பல்வேறு கட்டுப்​பாடுகள் விதிக்​கப்​படு​கின்றன. பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியேற்​றத்தைத் தடுப்​ப​தற்கான கடுமையான கொள்கைகள் அமல்படுத்​தப்​பட்டு வருவதா​லும், வெளிநாட்டு மாணவர்​களுக்கான சேர்க்கைக் கட்டுப்​பாடுகள் அதிகரித்து வருவதாலும் இந்திய மாணவர்கள் சவால்களை எதிர்​கொண்​டுள்​ளனர். உதாரணத்​திற்கு, கடந்த ஐந்து ஆண்டு​களில், பிரிட்​டனில் சர்வதேச மாணவர்​களின் சேர்க்கை சதவீதம் அதிகரித்தது அங்கு எதிர்​வினை​களுக்கு வழிவகுத்தது.
  • வெளிநாட்டு மாணவர்​களின் வரவினால் பிரிட்​டனில் உள்ளூர் மாணவர்​களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என அரசியல் தலைவர்​களும் மக்களும் கருதி​யதால் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனால், இந்தியா போன்ற நாடுகளி​லிருந்து படிப்​புக்காக வந்த மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்​களும் அரங்கேறின. இதன் விளைவாக, 2024இல் பிரிட்டன் அரசு குடியேற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டு​வந்தது.
  • இதைத் தொடர்ந்து மாணவர்​களுக்கான விசா எண்ணிக்கை குறைக்​கப்​பட்டது; ஊக்கத்தொகை போன்ற நிதியுதவிச் சலுகைகளும் சில பல்கலைக்​கழகங்​களில் நீக்கப்​பட்டன. மேலும், வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும் முன்னரே, முழுநேர வேலை செய்வதற்கான அனுமதியை வேலை விசா (work visa) அளிக்​கிறது.
  • ஆனால், தற்போது இச்சலுகை பிரிட்​டனில் உள்ள வெளிநாட்டு மாணவர்​களுக்கு மறுக்​கப்​பட்​டுள்ளது. இதற்கிடை​யில் ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளும் வெளிநாட்டு மாணவர்​களுக்கு வழங்கும் விசாவில் கட்டுப்​பாடுகளை விதிப்பது குறித்துப் பரிசீலித்து வருகின்றன.
  • வெளிநாடு செல்லும் மாணவர்​களின் எண்ணிக்கை அதிகரிப்​புக்கு ஏற்றாற்போல் அதற்கான செலவினங்​களும் ஒருபக்கம் அதிகரித்து வருகின்றன. 2025ஆம் ஆண்டுக்​குள், வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்​களின் கல்விச் செலவு ஆண்டுக்கு 70 பில்லியன் டாலராக உயரும் எனக் கணிக்​கப்​பட்​டுள்ளது.

வேலைவாய்ப்பு உள்ளதா

  • வெளிநாட்டில் கல்வி முடித்து இந்தியா திரும்பும் மாணவர்​களின் பட்டங்கள், பட்டயங்களை இங்குள்ள நிறுவனங்கள் அங்கீகரிப்​ப​தில்லை என்கிற விமர்​சனத்தையும் ​ கல்வி​யாளர்கள் முன்வைக்​கின்​றனர். இம்மா​திரியான நிராகரிப்புகள் வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்​களுக்குப் பின்னடைவாகவே பார்க்​கப்​படு​கிறது.
  • அத்துடன், அதிகச் சம்பளம் தரக்கூடிய வேலை, மேம்பட்ட வாழ்க்கைத் தரம் போன்ற கனவுகளுடன் வெளிநாடு​களில் பயின்​று​வரும் இந்திய மாணவர்​களுக்கு நிரந்​தரமான வேலை என்பது சமீப நாள்களில் அங்கு சவாலான​தாகவே மாறியுள்ளது. இவை தவிர, வேலையில் இருப்​பவர்கள் பணி நீக்கத்​துக்கு உள்ளாக்​கப்​படு​வதும் ஒருபக்கம் தொடர்​கதையாகி வருகிறது. விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை அதிகரிப்பு போன்ற நெருக்​கடிகளையும் மாணவர்கள் எதிர்​கொண்​டுள்​ளனர்.

தொடரும் மந்தநிலை:

  • அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கோவிட் பெருந்​தொற்றுக் காலத்​துக்குப் பிறகு, பொருளாதார வளர்ச்சி என்பது தொடர்ந்து ஏற்ற இறக்கங்​களைக் கொண்டதாக உள்ளது. தடுமாறும் பொருளா​தா​ரத்​தினால் அந்நாடு​களில் வேலைவாய்ப்பு அதிகளவு உருவாகாத சூழல் நிலவுவதாக ‘BONARD’ போன்ற ஆய்வுத்​தளங்கள் குறிப்​பிடு​கின்றன.
  • ஜப்பான், பிரிட்டன், கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளில் நிலவும் தொழில்​நுட்ப மந்தநிலை, அந்நாடு​களில் வேலைவாய்ப்பில் ஏற்பட்​டுள்ள சுணக்​கத்​துக்கு முக்கியக் காரணம் எனப் பொருளாதார நிபுணர்​களும் குறிப்​பிடு​கின்​றனர். உலகளவில் நீடித்து​வரும் பணவீக்​கமும் பொருளாதார மந்தநிலையும் இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்​றனர். இந்த நிலையில் வேலைவாய்ப்பு சார்ந்து பாதுகாப்பான சூழலை உருவாக்கும் புதிய திட்டங்களை வகுப்​பதில் உலக நாடுகள் கூடுதல் கவனம் செலுத்​த வேண்டிய தேவை உருவாகி​யுள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories