TNPSC Thervupettagam

அனந்தசயனம் ஐயங்கார்: மக்களவை நடைமுறைகளின் முன்மாதிரி

April 11 , 2019 2054 days 1124 0
  • இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் மக்களவைத் தலைவராக மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர் ஜி.வி.மவ்லாங்கர். அவருக்கு உறுதுணையாக இருந்த துணைத் தலைவர் மாடபூசி அனந்தசயனம் ஐயங்கார் (1891-1978), மவ்லாங்கரின் மறைவுக்குப் பிறகு தலைவராக அவையைத் திறம்பட நடத்தினார். இரண்டாவது மக்களவையில் அவைத் தலைவராக ஐந்து ஆண்டுகள் பதவிவகித்தார்.
இளமைப்பருவம்
  • திருப்பதியை ஒட்டிய திருச்சானூரில் 1891-ல் பிறந்த அனந்தசயனம், சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் சட்டக்கல்லூரியிலும் பயின்றார். வழக்கறிஞர் பட்டம் பெற்றும் முதலில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1915-ல் வழக்கறிஞரானார். பழைய வழக்குகளின் தீர்ப்பு விவரங்களைக் குறிப்பிட்டு வாதாடுவதில் அவரது அபார நினைவாற்றல் வியந்து பாராட்டப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் மேல் முறையீட்டு உச்ச நீதிமன்றம் லண்டனில் அல்ல, இந்தியாவில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் அவர்.
  • மிக இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் அனந்தசயனம். காந்தியின் அழைப்பையேற்று ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரப் பங்கெடுத்துக்கொண்டார். தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதற்காக 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
சட்டமன்றம்
  • 1934-ல் மத்திய சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் ஆந்திரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946-47-ல் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி செயலராகப் பொறுப்புவகித்தார். அரசமைப்பு நிர்ணய அவையிலும் அங்கம் வகித்திருக்கிறார்.
  • இந்தியச் சட்டங்களிலும் நாடாளுமன்ற நடைமுறைகளிலும் நன்கு பயிற்சிபெற்றவர் அனந்தசயனம். அவர் மக்களவைத் தலைவராகப் பதவி வகித்தபோது, அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி என்று எதுவும் இல்லாத நிலையிலும் எதிர்க்கட்சி வரிசையின் எல்லாத் தலைவர்களையும் கண்ணியமாகவும் பாரபட்சமின்றியும் நடத்தினார். சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்ட அவர், அவை அழுது வடிந்தால் எதையாவது
  • பேசி கலகலப்பாக்கிவிடுவார். விவாதங் களின்போது கடுமையான வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டால் தனது நகைச் சுவை திறனால், அவையை அமைதிப்படுத்திவிடுவார். ஒத்திவைப்புத் தீர்மானங்கள், மசோதாக்கள் அறிமுகம், தீர்மானங்கள், நிலைக் குழுக்கள் அமைத்தல், கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் ஆகியவற்றில் அவர் கையாண்ட அணுகுமுறை முன்மாதிரியாக விளங்குகின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்