TNPSC Thervupettagam
June 15 , 2019 2036 days 14722 0
  • அயோத்தி தாஸ் ஒரு முன்னணி தமிழ் ஆர்வலரும் சாதி எதிர்ப்பாளரும் சித்த மருத்துவருமாவார்.

  • இவர் தீண்டத்தகாதவர்களுக்கு ஆதித் தமிழர், தமிழர், பௌத்தர்கள் போன்ற பல தனித்துவமான ஒரு அரசியல் அடையாளத்தை உருவாக்க முயன்றார்.

 

இளமைக்கால வாழ்க்கை
  • 1845 ஆம் ஆண்டு மே 20 அன்று பிறந்த இவரின் இயற்பெயர் காத்தவராயன் என்பதாகும்.
  • சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்த இவர் பின்னர் நீலகிரி மாவட்டத்திற்குக் குடிபெயர்ந்தார்.
  • தமிழ் இலக்கியம், தத்துவம் மற்றும் உள்நாட்டு மருத்துவத்தில் நிபுணரான இவரால் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் பாலி ஆகிய மொழிகளிலும் பேச இயலும்.

 

இவரின் செயல்பாடுகள்
  • 1870 ஆம் ஆண்டுகளில் நீலகிரியில் உள்ள பழங்குடியின மக்களை ஒருங்கிணைத்துப் பின்னர் 1876 ஆம் ஆண்டு அத்வைதானந்த சபையை அவர் நிறுவினார்.
  • 1885 ஆம் ஆண்டில் பேராயர் ஜான் ரத்தினம் என்பவருடன் இணைந்து “பாண்டியன்” எனும் பத்திரிக்கையை அவர் தொடங்கினார்.
  • 1886 ஆம் ஆண்டில் தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்படுபவர்கள் இந்துக்கள் அல்ல என்னும் அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
  • இவர் ரெட்டைமலை சீனிவாசனுடன் இணைந்து 1891 ஆம் ஆண்டு பஞ்சமார் மகாஜன சபையைத் துவங்கினார்.
  • பஞ்சமார்கள் என்போர் வர்ணாசிரம முறையினுள் வராமல் அவர்ணாக்கள் என்று அழைக்கப்படுவோராவர்.
  • 1881 ஆம் ஆண்டில் இரண்டாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ள காலனித்துவ அரசு திட்டமிட்ட போது அதன் பதிவு அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை இந்து மதத்திற்குள் ஒரு புதிய வகையாக வகைப்படுத்தினர்.
  • அந்த சமயத்தில் தமிழ் பேசும் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பினரை இந்துக்கள் என்றல்லாமல் ஆதித் தமிழராகவே கருத வேண்டும் என ஆங்கிலேயே அரசிற்கு ஒரு குறிப்பாணையை அயோத்தி தாஸ் வழங்கினார்.
  • 1891 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும் தலித் இன மக்கள் தங்களை இந்துக்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளாமல் “சாதியற்ற திராவிடர்கள்” எனப் பதிவு செய்யுமாறு அவர் வலியுறுத்தினார்.
  • உண்மையில் இதுவே, தற்போது பிராமணரும் தலித்தும் அல்லாதோர் எனக் கூறப்படும் பிராமண எதிர்ப்பு மரபினரின் உண்மை வழித்தோன்றல்களை தமிழ் தலித்துகளாக உருவாக்குகின்றது.
  • அமெரிக்க இராணுவ அதிகாரியும், பிரம்மஞான சபையை உருவாக்கியவருமான கர்னல் H.S. ஆல்காட்டை அயோத்தி தாஸ் சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் பௌத்த மதத்திற்கு மாறுவதற்கான தமது அதீத விருப்பத்தை அவர் தெரிவித்தார்.
  • இவரின் கூற்றுப்படி தமிழகத்தின் பறையர் இன மக்கள் உண்மையில் புத்த மதத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் பெருமளவில் நிலங்களைச் சொத்துகளாகக் கொண்டிருந்தனர். பின்னர் ஆரிய படையெடுப்பாளர்களால் அவை கொள்ளையடிக்கப்பட்டன.
  • மேலும் இவர் பறையர் இன மக்களின் உண்மையான சமயம் பௌத்தம் எனவும் அனைவரும் அச்சமயத்திற்குத் திரும்புமாறும் வாதிட்டார்.
  • ஆல்காட்டின் உதவியுடன் சிலோனுக்குப் பயணம் செய்த தாஸ் அங்குள்ள சிங்களப் பௌத்த துறவியான சுமங்கல நாயகேவிடம் தீட்சை பெற்றார்.
  • தாயகம் திரும்பிய தாஸ் மெட்ராஸில் சாக்கியப் புத்தச் சங்கத்தை நிறுவி தென்னிந்தியா முழுவதும் அதற்கு கிளைகளைத் தொடங்கினார்.
  • 1898 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த சாக்கியப் புத்தச் சங்கமானது இந்தியப் புத்தக் கூட்டிணைவு / சங்கம் எனவும் அறியப்பட்டது.
  • 1907 ஆம் ஆண்டு ஜுன் 19 ஆம் நாள் ஒரு பைசா தமிழன் தமிழ் எனும் செய்தித்தாளை இவர் தொடங்கினார்.
  • இவர் “பஞ்சமி நிலங்கள்” என்ற திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் பெற்று நிலமற்ற ஏழைகளுக்கு அவற்றைப் பிரித்து வழங்குவதில் வெற்றி பெற்றார்.

 

அவரது சித்தாந்தங்கள்
  • இவர் எப்பொழுதும் அரசியல் மாற்றங்களைவிட சமூக மாற்றத்தினையே அதிகம் வலியுறுத்தினார்.
  • இவர் சாதியற்ற சமூகத்தினை உருவாக்கிட கனவு கண்டார்.
  • திராவிட இயக்கத்தின் முன்னோடியாக இவர் கருதப்படுகின்றார்.
  • இவர் நவீன தலித் சமூகப் புரட்சியாளராவார்.
  • இவர் மெட்ராஸ் மாகாணத்தின் முதல் அங்கீகரிக்கப்பட்ட பிராமணீய எதிர்ப்புத் தலைவராக உள்ளார்.
  • இவர் சாதியமைப்புக்கு வெளியே தலித்துகள் உள்ளதால் அவர்களை சாதியற்ற திராவிடர்கள் என்றழைத்தார்.

 

புத்த சமய ஈடுபாடு
  • புத்த சமயத்தை தழுவிய குறிப்பிடத்தக்க முதல் தலித் தலைவர் இவரேயாவார்.
  • இந்தியாவில் புத்த சமய மறுமலர்ச்சிக்காக பணியாற்றிய முதல் தலைவர் இவரேயாவார்.
  • புத்த சமயத்தை இந்திய வரலாற்றில் முதல் பிராமணர் எதிர்ப்பு இயக்கம் என இவர் கூறினார்.
  • இவர் வர்ணாசிரம முறையை எதிர்த்த புத்த சமயத்தினை தங்கள் சமயம் என பதிவு செய்யுமாறுத் தீண்டத் தகாதவர்ளுக்கு அழைப்பு விடுத்தார்.
  • இவர் புத்த சமயத்தினைப் பின்பற்றிய பூர்வீக குடிமக்களை “யதார்த்த பிராமணர்” (உண்மையான பிராமணர்) எனக் குறிப்பிட்டார்.
  • இந்த இலட்சியத்தை அடைய தமிழ் பௌத்தமே சரியான பாரம்பரியம் என்ற கருத்தியல் முடிவிற்கு இவர் வந்தார்.
  • இவர் இந்திர தேசம் எனும் புத்தகத்தில் இந்தியாவின் வரலாற்றை எழுதினார். அதில் ஆரியர்களின் படையெடுப்பிற்கு முன்னர் இந்தியர்கள் பௌத்த சித்தாந்தங்களைப் பின்பற்றி சாதி முறைகளின்றி அமைதியாக வாழ்ந்தனர் என அவர் வாதிட்டார்.
  • அவர்கள் பிராமணர், சத்திரியர்கள், வைசியர் மற்றும் சூத்திரர் என்ற பிரிவுகளை உழைப்பின் அடிப்படையிலேயேக் கொண்டிருந்தனரே அன்றி தொழிலுக்கு ஏற்ப தரப்படுத்தப்பட்ட தகுதிநிலையைக் கொண்டிருக்கவில்லை.
  • இவரைப் பொறுத்தவரை, இந்த உழைப்பின் அடிப்படையிலான பிரிவை அவர்களின் முன்னேற்றத்திற்காக பிறப்பின் அடிப்படையிலான சாதிப் பிரிவாக நாகரிகமற்ற ஆரியர்கள் மாற்றினர்.
  • இவர் அம்பேத்கருக்கு அரை நூற்றாண்டிற்கு முன்னதாகவே தமிழ் வரலாறு, சமயம் மற்றும் இலக்கியங்களைத் தெற்கில் ஒரு காலத்தில் பிரபலமாகப் பரவி இருந்த புத்த சமயத்தின் பார்வையில் பகுத்துணர முயற்சித்தார்.

 

இறுதிக் கால வாழ்க்கை
  • அயோத்தி தாசர் 1914 ஆம் ஆண்டு தனது 69 ஆம் வயதில் காலமானார்.
  • சாதி அமைப்பின் பிரிவினையும் அடக்குமுறையும் தேசியவாதத்திற்கு நேர் எதிராக அவர் கருதினார் என்பதை அவரின் எழுத்துக்களிலிருந்து நம்மால் அறிய முடிகின்றது.

  • 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 அன்று அப்போதைய இந்தியப் பிரதமரான மன்மோகன் சிங்கால் சென்னையின் தாம்பரத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (தேசிய சித்த மருத்துவ நிறுவனம்) திறக்கப்பட்டு அதற்கு சாதி எதிர்ப்புப் புத்த சமய தலைவரான இவரின் பெயர் சூட்டப்பட்டது.

 

TNPSC தேர்வுகளில்

திராவிட மகாஜன சபா யாரால் தோற்றுவிக்கப்பட்டது? (2015 Group – I முதல் நிலைத் தேர்வு)

  1. அயோத்தி தாச பண்டிதர்
  2. S. ஸ்ரீனிவாச ராகவ ஐயங்கார்
  3. தியாகராய செட்டி
  4. நடேச முதலியார்

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்