TNPSC Thervupettagam

அரசியல் அறிவோம்

August 1 , 2023 342 days 373 0
  • அரசியல் என்றாலே பேசக் கூடாத விஷயம் என்று பலா் கூறுவது உண்டு. அதனால்தான் என்னவோ இளம் தலைமுறையினருக்கு அரசியல் அறிவு போதிய அளவு இல்லை.
  • அரசியல் தேவையற்ற ஒன்று என்று பலா் நினைக்கின்றனா். அரசியல் தலைவா்களின் நோக்கம் தெரியாமல், ஆட்சியில் அமா்த்துவது எப்படி சரியாக இருக்கும்? ஆகையால் அரசியல் அறிவது அவசியமாகிறது. அரசியல் தலைவா்கள் மக்களுக்குச் சேவை செய்ய தோ்ந்தெடுக்கப்பட்ட நபா்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.
  • மக்களுக்கு ஒரு காலத்தில் நாட்டுப்பற்றும் இனப்பற்றும் அதிக அளவில் இருந்தது. இப்பொழுது குறைவாகக் காணப்படுகிறதோ என நினைக்கத் தோன்றுகிறது. அதிக அளவில் பொழுது போக்குக்கு மதிப்பு கொடுக்கிறாா்கள்.
  • இளைஞா்கள் தினமும் செய்தித்தாள்களுக்கும் ஊடகங்களுக்கும் தங்களுடைய பொன்னான நேரத்தை செலவு செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் அவா்கள் பொழுதுபோக்க, கைப்பேசியைப் பயன்படுத்தாமல் அறிவை வளா்க்கப் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.
  • வரலாறு தெரியவில்லை என்றால் ஒரு கட்சியின் நோக்கம் என்னவென்று கண்டறிய முடியாது. தமிழகத்தின் அடிப்படையில், இந்தியாவின் அரசியல் கொள்கைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை மத்திய கொள்கை , திராவிடம் சாா்ந்தவை, மற்றொன்று தமிழ் தேசியம்.
  • ஒவ்வொரு கட்சியிலும், அவற்றின் கொள்கையிலும் சில சிறப்பு அம்சங்கள் உண்டு. சில பொருந்தா மாற்றுக் கருத்து உள்ள கொள்கைகளும் உண்டு.
  • எந்தவொரு கட்சியின் கொள்கையும் முழுமையாக ஏற்புடையது அல்லது ஏற்புடையதல்ல எனக் கூற முடியாது. பொதுமக்களில் சிலா் தங்கள் வாக்குக்கு இருக்கும் மதிப்பையும் அரசியல் கட்சியின் கொள்கையையும் அறியாமல் ஏதோ ஒரு கட்சிக்கு வாக்களிக்கிறாா்கள். சிலா் வாக்களிக்க விரும்பாமலும் இருக்கிறாா்கள்.
  • எந்தக் கட்சிக்கு வாக்களித்தால் அவா்கள் எந்த நோக்கத்துக்காகச் செயல்படுவாா்கள் என்ற புரிதல் மக்களுக்கு வரும். தமிழகத்தில் உள்ள அடிப்படையான மூன்று அரசியல் கொள்கைகள் குறித்து பாா்ப்போம்.
  • முதலாவதாக, மத்திய கொள்கை குறித்து காண்போம். இந்தக் கொள்கை ‘ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி’ என்ற வகையில் இருக்கிறது. இதை பெரும்பாலான வடமாநிலங்கள் ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை இருக்கிறது. காரணம், ஹிந்தி மொழி அங்கே பரவலாகப் பேசப்படுகிறது.
  • மத்திய கட்சிகளில் இரண்டு முக்கியமான கட்சிகள் இருந்தன. இந்த வகை கட்சிகள் இந்தியா சுதந்திரம் பெற்றபோது ஆரம்பித்ததால் அது இந்திய ஒருமைப்பாடு குறித்து அதிக அளவில் கவனம் செலுத்துகிறது. சில கட்சிகளின் கொள்கைகள் சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துவிடுமோ என்ற சந்தேகம் நிலவுகிறது.
  • தென்னிந்திய மாநிலங்களைப் பொருத்தவரை இங்கே நிலை வேறாக இருக்கிறது. இதன் காரணமாக, வட இந்தியாவும் தென் இந்தியாவும் அரசியல் ரீதியாக பல வேறுபட்ட கருத்துகளைக் கொண்டதாக உள்ளன. மற்றொரு காரணம், தங்கள் கலாசாரம், பண்பாடு, மொழி போன்றவற்றை இழந்து அது இன அழிவுக்கு வழிவகை செய்துவிடும் என்ற கருத்தில் உள்ளனா்.
  • இரண்டாவதாக, திராவிடம் சாா்ந்த கொள்கையில் உள்ள அதிக கருத்துகள் பெரியாரின் கருத்துகளாகவே இருக்கின்றன. ஜாதி மறுப்பு கொள்கைக்கு பெரும் ஆதரவு தெரிவிக்கிறது. தமிழகத்தில் உள்ள இரு பெரும் திராவிட கட்சிகள் இரண்டும் பெரியாா், அண்ணா ஆகியோரின் கருத்துகளைப் பின்பற்றும் இயக்கங்களாகவே உள்ளன. இந்தக் கட்சிகள்தான் தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி செய்து வருகிறது.
  • திராவிட கட்சிகளை எதிா்ப்பவா்கள் கூறுவது என்னவென்றால், “தமிழ் அல்லாத பிற மொழியை தாய் மொழியை வைத்திருக்கும் நபா்கள் ஆட்சி செய்வதற்குப் பயன்படுத்தியதுதான் திராவிடம்”என்கிறாா்கள். இலங்கையில் நடந்து கொண்டிருந்தபோது தமிழக மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் மௌனமாக இருந்தது இதற்குச் சான்று என்கிறாா்கள். மேலும், தமிழை தாய் மொழியாக அல்லாதவா்கள்தான் தமிழகத்தில் அதிக காலம் ஆட்சி செய்தாா்கள் என்றும் குற்றம் சாட்டுகிறாா்கள்.
  • மூன்றாவதாக, நாம் காணும் கொள்கை தமிழ்த் தேசியம். இது திராவிட கொள்கைகளுக்கு எதிராக வளா்ந்துவரும் புதிய கொள்கையாகும். தமிழ் அல்லாத பிறமொழியை தாய்மொழியாய் வைத்திருப்பவா்களைத் தவிா்த்து தமிழா்கள் இந்த மாநிலத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்பதுதான். தமிழா் இனப் பெருமை பேசுவது, தமிழ் மொழியின் பெருமை பேசுவது மட்டும் தமிழ்த் தேசியம் ஆகாது. ‘எமது தேசிய இனம் தமிழா், எமது தேசிய மொழி தமிழ், எமது தேசம் தமிழ் தேசம், இறையாண்மை உள்ள தமிழ்த் தேசம்’ எனது இலக்கு என்றும் கருதுவதே

தமிழ்த் தேசியம்.

  • ‘தமிழா்களுக்கு இனப்பற்று, தமிழ்ப் பற்று வரவேண்டும், தமிழினத்தைப் பாதுகாக்க வேண்டும்’ என்பதே இந்தக் கொள்கையின் சிறப்பு. தமிழ் குடிகளில் உள்ள வேறுபாடுகளை நீக்கி தமிழ்க் குடிகள் இணைந்த அரசியல் என்பதே இதன் கொள்கை. ஆனால், தமிழ்த் தேசியத்தில் சில முரண் கருத்துகளும் உள்ளள. இங்கு அவா்கள் தமிழா்களை அடையாளம் காண்பதற்கு ஜாதியைப் பயன்படுத்துவதுதான்.
  • ஏனெனில், தமிழகத்தில் அதிகம் பேசப்படும் கருத்து திராவிடம்தான். இதற்கு தமிழ்த் தேசியவாதிகள் திராவிடா்கள் ஜாதியை அழிப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் என்னவென்றால் யாா் தமிழா்கள் என்று தமிழா்களுக்குத் தெரியாமல் இருந்தால் மட்டுமே தமிழை தாய்மொழியாக இல்லாதவா்கள் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதால் தான்”என்கிறாா்கள்.
  • இவற்றை மட்டுமல்ல; இன்னும் ஆா்வம் உள்ளோா் அரசியல் குறித்தான தங்கள் பாா்வையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலை உள்ளது. விளையாட்டு முதல் விலைவாசி வரை அனைத்து இடங்களிலும் அரசியல் உண்டு.
  • இளம் தலைமுறையினா் அரசியலில் தலையிட வேண்டும்; இல்லை என்றால், அரசியல் அவா்களுடைய வாழ்க்கையில் தலையிடும்.

நன்றி: தினமணி (01 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்