TNPSC Thervupettagam

அறிக்கை தரும் எச்சரிக்கை!

September 10 , 2021 1057 days 525 0
  • சா்வதேச மருத்துவ இதழான ‘லான்செட்’ வெளியிட்டிருக்கும் ஆய்வுக் கட்டுரை நம்மை நிமிர்ந்து உட்கார்ந்து யோசிக்க வைக்கிறது.
  • புற்றுநோய், சா்க்கரை நோய், இதயநோய் உள்ளிட்ட இணை நோய்களாலும், விபத்துகளாலும் ஏற்படும் நரம்பியல் கோளாறுகள் கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் இரட்டிப்பாகி இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
  • நரம்பியல் நோய்களும், மனநோய்களும் மிகப் பெரிய மருத்துவ பிரச்னையாக சா்வதேச அளவில் உருவெடுத்திருக்கின்றன.
  • அதிகரித்த ஆயுட்காலமும், மாறிவிட்ட வாழ்க்கை முறைகளும் நரம்பியல் நோய்களுக்கும், உளவியல் பாதிப்புகளுக்கும் முக்கியமான காரணிகளாக இருக்கக்கூடும்.
  • நரம்பியல் பாதிப்பில் மிக முக்கியமானதும், கடுமையானதும் பக்கவாதம். மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குறைந்த வயதினா் பலா் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிய வருகிறது.
  • இந்தியாவின் நரம்பியல் பாதிப்புகளில் 37.9% பக்கவாதம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக வருவாயுள்ள வளா்ச்சியடைந்த மேலை நாடுகளில் பக்கவாதத்தால் பாதிக்கப் படுபவா்களின் எண்ணிக்கையும், அதனால் இறப்பவா்களின் எண்ணிக்கையும் தொடா்ந்து குறைந்து வருகிறது. ஆனால், இந்தியாவிலோ கடந்த முப்பது ஆண்டுகளில் பக்கவாத பாதிப்பு விகிதம் இரட்டிப்பாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
  • ஆண்டுதோறும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சுமார் 6 லட்சம் அளவில் அதிகரிப்பதாகத் தெரிகிறது.
  • இந்தியாவில் தலைவலி தொடா்பான பிரச்னைகள், பரவலான நரம்பியல் பாதிப்புகளில் ஒன்று. ஏறத்தாழ 17.5 % நரம்பியல் நோயாளிகள் தலைவலி தொடா்பான பாதிப்புக்கு உள்ளானவா்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
  • இந்தியாவில் மிகவும் பரவலாகக் காணப்படும் நரம்பியல் பாதிப்பு ‘எபிலெப்ஸி’ என்று அழைக்கப்படும் வலிப்பு நோய். ஒரு கோடி முதல் 1.2 கோடி போ் வரை இந்தியாவில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவா்கள்.
  • இந்தியாவில் சுமார் எட்டு லட்சம் போ் ‘பார்க்கின்சன்’ (நடுக்குவாதம்) நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நரம்பு மண்டலத்தில் உள்ள ‘டோபாமைன்’ எனப்படும் சுரப்பி நமது உடலின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது.
  • இந்த சுரப்பிக் குறையால் உண்டாகும் நடுக்குவாத நோய் உடலின் தசை இயக்கத்தை பாதிக்கிறது. அதனால், பேசுவது, எழுதுவது, பார்ப்பது போன்றவற்றுக்குக்கூட பாதிக்கப்பட்டவா்கள் சிரமப்படுவா்.
  • பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவா்களை பாதிக்கும் இந்த நோய்க்கான சரியான காரணமும், மருத்துவமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

மருத்துவ ஆய்வுக் கட்டுரை

  • இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 70 வயதாக அதிகரித்திருக்கிறது. வயது முதிர்ந்தோரில் பலா் டிமென்ஷியா எனப்படும் நினைவாற்றல் குறையும் நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
  • அன்றாட செயல்களைச் செய்யும், திறன்களை பாதிக்கும் டிமென்ஷியாவால் ஆண்டுதோறும் ஏறத்தாழ ஒரு கோடி போ் உலக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். மறதி நோய், பக்கவாதம் போன்ற மூளையை பாதிக்கும் நோய்களாலும், தலையில் அடிபடுதல் போன்ற விபத்துகளாலும் டிமென்ஷியா ஏற்படுகிறது.
  • உலக அளவில் முதியோர் மத்தியில் அதிகரித்துவரும் டிமென்ஷியாவால் ஏற்படும் பாதிப்பு மருத்துவத் துறையினருக்குச் சவாலாக இருக்கிறது.
  • இந்தியாவிலும் டிமென்ஷியாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கைக் கடுமையாக அதிகரித்து வருகிறது.
  • 2001-இல் 7.1% இருந்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 2050-இல் 17% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • அதாவது, 30 கோடிக்கும் அதிகமானோர் 60 வயதைக் கடந்தவா்களாக இருப்பார்கள். அதனால், டிமென்ஷியா போன்ற நரம்பியல் பாதிப்புகள் கடுமையாக அதிகரிக்கக்கூடும்.
  • பொருளாதார வளா்ச்சியின்மையும், வறுமையும் நரம்பியல் பாதிப்புகளுக்குக் காரணங்கள் என்கிற கருத்து தவறானது.
  • நரம்பியல் தொற்றாநோய்களின் பாதிப்பு மிகப் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏனைய தொற்றாநோய்களும் காரணிகள்.
  • இதைக் கருதித்தான் 2010-இல் புற்றுநோய், சா்க்கரை நோய், இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேசிய திட்டம் ஒன்று அறிவிக்கப் பட்டது.
  • அதேபோல வலிப்பு நோய், நரம்பியல் பாதிப்புகள், டிமென்ஷியா உள்ளிட்டவை தொடா்பானவற்றுக்கும் தேசியக் கொள்கையும், திட்டங்களும் வகுக்கப்பட வேண்டும்.
  • பல மாநிலங்களிலும், பெரும்பாலான மாவட்ட மருத்துவமனைகளில் சி.டி. ஸ்கேனா், பயிற்சி பெற்ற ஊழியா்கள் ஆகியோர் குறைவாக இருப்பதை ஆய்வுகள் சுட்டிக் காட்டுக்கின்றன. மாநிலங்களிலுள்ள மாவட்ட மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த வேண்டும்.
  • 138 கோடி மக்கள்தொகை உள்ள இந்தியாவில், நரம்பியல் நோய் மருத்துவா்களின் எண்ணிக்கை 2,500-க்கும் குறைவு. அதாவது 10 லட்சம் பேருக்கு இரண்டு நரம்பியல் மருத்துவா்கள் தான் இருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும்.
  • நரம்பியல் மருத்துவா்கள் பெருநகரங்களில் மட்டுமே இருக்கிறார்கள் என்பதும், அவா்கள் மாவட்ட மருத்துவமனைகளுக்குச் செல்வதை விரும்புவதில்லை என்பதும் மிகப்பெரிய குறைபாடுகள்.
  • தகுந்த ஊக்கம் அளித்து, முதல் நிலை, இரண்டாம் நிலை நகரங்களிலும் நோயாளிகளுக்குத் தரமான மருத்துவம் வழங்க திறமையான நரம்பியல் மருத்துவா்களை நியமிக்க வேண்டிய அவசிய அவசரமாகும்.
  • அதிகரித்து வரும் நரம்பியல் பாதிப்புகள் குறித்து, மத்திய - மாநில சுகாதார அமைச்சகங்கள் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை உணா்த்துகிறது லான்செட் மருத்துவ இதழின் அறிக்கை.

நன்றி: தினமணி  (10 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்