TNPSC Thervupettagam

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் - ரேடார்

May 15 , 2019 1874 days 3539 0
ரேடார் என்பது என்ன?
  • ரேடார் என்பது ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி ஒரு பொருளின் தூரம், கோணம் அல்லது திசைவேகத்தினை கணிக்கும் ஒரு கருவி அமைப்பாகும்.
  • ரேடார் எனும் பெயர் 1940 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கடற்படையால் உருவாக்கப்பட்டது. இது “ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி கண்டறிதல் மற்றும் வரம்பறிதல்” (Radio Detection and Ranging) என்பதன் சுருக்கமாகும்.
  • ரேடார் என்பது ஒரு காந்த முடுக்கி, அலை பரப்பி, அலை வாங்கி மற்றும் திரை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

  • இந்த நுண்ணலை உருவாக்கியானது ரேடியோ அலைகளை உருவாக்கி அலை பரப்பிகள் வழியாக ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் வெவ்வேறு திசைகளில் அவற்றை வெளியிடுகின்றன.
  • ஒருவேளை வான்வெளியில் ஒரு பொருள் இருப்பின் (உதாரணமாக ஒரு வானூர்தி) இந்த ரேடியோ அலைகள் அதன் மீது மோதி திரும்புகின்றன. இவை ரேடாரின் அலை வாங்கியால் பெறப் படுகின்றன.
  • எதிரொலிக்கப்பட்ட அலைகளை வரைபடமாக்கி திரையில் வலையமைப்புக் கட்ட வரைபடமாக அவை காண்பிக்கப்படுகின்றன. மேலும் ரேடியோ அலைகளானது குறிப்பிட்ட இடைவெளிகளில் அதன் மீது மோதி பிரதிபலிக்கப்படுவதன் மூலம் அதன் இயக்கமானது துடிப்பு திரைக்காட்சியாக காட்டப்படுகின்றது.
  • இதுவே ரேடார் இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடாகும்.
  • கடந்த பத்தாண்டு காலங்களில், ரேடாரில் மிகப்பெரிய அளவில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இவை மிகவும் அதி நவீனமாகவும் மிகவும் சக்தி வாய்ந்தவையாகவும் மாறியுள்ளன.
  • இவை ரேடியோ அலைகளினால் இயங்குவதால் இவற்றால் மேகமூட்டம், பகல் அல்லது இரவு என அனைத்து நேரங்களிலும் செயல்பட முடியும்.
முதன்மை மற்றும் இரண்டாம் நிலை ரேடார்கள்
  • அனைத்து விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களும் முதன்மை ரேடார்கள் மற்றும் இரண்டாம் நிலை ரேடார்கள் என இரண்டு விதமான ரேடார்களைக் கொண்டுள்ளனர்.
  • பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் முதன்மை ரேடார்கள் மேற்கூறிய செயல்பாட்டின் அடிப்படையில் செயல்படுகின்றன.
  • இரண்டாம் நிலை ரேடார்கள் விமானத்தில் உள்ள பரப்பி மற்றும் வாங்கி (டிரான்ஸ்பான்டர்) அமைப்புடன் தொடர்பு கொண்டு விமானங்களின் விவரங்களை கண்டறிகின்றன.

  • எனவே ரேடாரானது விமான நிலைய நடவடிக்கைகளை மேகமூட்டமான சூழ்நிலைகளிலும் செயல்பட உதவுகின்றது.
ரேடார்களின் தோற்றம்
  • ரேடார்கள் இரண்டாம் உலகப் போரின் காலகட்டத்தில் தோன்றியவையாகும். 1935 ஆம் ஆண்டு பிரிட்டனால் முதல் ரேடாரானது செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.
  • போர் தொடங்கிய காலகட்டத்தில் பிரிட்டன் தனது கடற்கரைப் பகுதியில் ஊடுருவல்களைக் கண்டறிவதற்காக ரேடாரின் தொகுப்புகளை உபயோகித்தது.
  • இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு அனைத்துப் பெரிய நாடுகளும் ரேடார்களைப் பயன்படுத்தத் தொடங்கின.
  • நிலத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடார்கள் பூமியின் வளைந்த வடிவம் கொண்ட கோள வடிவத் தன்மையை முதன்மை தடைக்கல்லாக கொண்டு இருக்கின்றன.
  • எனவே, 360 டிகிரியிலும் கண்காணிக்கக் கூடிய வகை ரேடார்கள் ஆயிரக்கணக்கான அடிகள் உயரத்தில் பறக்கும் விமானத்தில் பொருத்தப்பட்டன.
  • வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு (Airborne Warning and Control System-AWACS) என அறியப்படும் இவை இன்றைய காலகட்டத்தில் போர்க் களத்தில் முக்கிய சக்தியாக உள்ளன.
  • பிப்ரவரி 26 ஆம் நாள் நடைபெற்ற பாலகோட் வான்வழித் தாக்குதலின் போது இந்திய விமானப் படையானது உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட மற்றும் இஸ்ரேல் நாட்டால் தயாரிக்கப்பட்ட இரண்டு AWACS-ஐ தனது தாக்குதல் திட்டத்திற்கு போர் விமானங்களை வழிநடத்தவும் வான்வெளியில் பாகிஸ்தான் நாட்டு விமானங்களை கண்காணிக்கவும் பயன்படுத்தியது.
ரேடார் தவிர்ப்பு / புலப்படாத் தன்மை
  • காலப்போக்கில், ரேடார்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் அவற்றை தவிர்க்கும் தொழில்நுட்பங்களும் வளர்ந்தன.
  • இம்முறையில் ரேடாரைத் தவிர்த்தல், ரேடாருக்கான குறுக்கு வெட்டு தோற்றத்தினை அல்லது தடத்தினைக் குறைத்தல் என பல்வேறு வழிமுறைகள் உள்ளன.
  • இவையே புலப்படாத் தன்மை எனும் கோட்பாடாகும்.
  • புலப்படாத் தன்மை என்பது சார்புடைத் தன்மை கருத்து தானேயன்றி அது முழுமையானவை அல்ல.
  • பொதுவாக ரோடார்கள் எந்தவொருப் பொருளையும் அவற்றால் பிரதிபலிக்கப்பட்ட ரேடியோ அலைகளைக் கொண்டே கண்டறிகின்றன.
  • எனவே ரேடியோ அலைகள் ரேடியோ அலை வாங்கிக்குத் திரும்பாமல் வேறு புறமாக திசை திருப்பப்படும் போது அப்பொருளின் தடத்தினை ரேடார்கள் பெறுவதைக் குறைக்க முடியும்.
  • தற்போது பயன்பாட்டில் இல்லாத அமெரிக்காவின் US-F-117 விமானம் இதற்கான மிகச்சிறந்த உதாரணமாகும்.

  • ரேடாரால் அனுப்பப்படும் ரேடியோ அலைகளைப் பகுதியளவோ அல்லது முழுமையாகவோ ரேடார் வண்ணப்பூச்சு மூலம் உறிஞ்சுதல் மற்றும் விமானத்தின் குறுக்கு வெட்டுப் பகுதியின் அளவைக் குறைக்க அதன் வடிவத்தினை மாற்றுதல் போன்றவை மற்ற தவிர்ப்பு வழிமுறைகள் ஆகும்.
  • அமெரிக்காவின் பிரபலமான US B2 குண்டு வீசும் விமானம் இதற்கு உதாரணமாகும்.

  • சமீபத்தில் புலப்படாத் தன்மை வாய்ந்த F-22 மற்றும் F-35 வகை விமானங்கள் ரேடாரைத் தவிர்க்க மேற்கண்ட முறைகளின் கலவையைப் பயன்படுத்துகின்றன
  • இதே போன்று இந்தியாவும் கீழ்க்காணும் ஆளில்லா விமானத்தை கொண்டுள்ளது.
    • DRDO-இன் நிஷாந்த்
    • DRDO-இன் அவுரா (தன்னியக்க ஆளில்லா ஆய்வு விமானம்)
  • பல்வேறு புலப்படாத் தன்மை வாய்ந்த போர் விமானங்கள் இந்தியாவில் அதன் வடிவமைப்பில் முதற்கட்ட நிலையில் உள்ளன.

 

- - - - - - - - - - - - - - -

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்