TNPSC Thervupettagam

ஆக்கிரமிப்பை அகற்றாமல் வெள்ளப் பாதிப்பைக் குறைக்க முடியுமா?

November 8 , 2024 8 days 63 0

ஆக்கிரமிப்பை அகற்றாமல் வெள்ளப் பாதிப்பைக் குறைக்க முடியுமா?

  • வட கிழக்குப் பருவமழை இந்த ஆண்டு தொடங்​கு​வதற்கு முன்பே மழையால் தமிழ்​நாட்டில் குளம், ஏரிகளின் கரைகளை உடைத்து, சாலைகளைச் சேதப்​படுத்தி, வீட்டுக்குள் புகுந்து, மக்களுக்குப் பெரும் சிரமத்தை வெள்ளநீர் ஏற்படுத்​தி​விட்டது. ஏறக்குறைய 347 டிஎம்சி நீரை சேமிக்​கக்​கூடிய 41,127 குளம், ஏரிகளைக் கொண்டுள்ள தமிழகத்தில் வெள்ளச் சேதங்கள் ஏன் ஒவ்வோர் ஆண்டும் தொடர்​கின்றன? நீர்நிலைகளில் ஏற்பட்​டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பு​களைக் குறைக்க முடியுமா?

குளங்​களின் பயன்கள்:

  • பல நூற்றாண்​டு​களுக்கு முன்னால் உருவாக்​கப்பட்ட குளங்கள், நீர்த் தேவைகளைப் பூர்த்தி​செய்​ததோடு, மழை வெள்ளப் பாதிப்பு​களையும் குறைத்து​வந்தன. நீர்ப்​பிடிப்புப் பகுதியில் மட்டுமல்​லாமல், மழைநீரைக் குளங்களுக்குக் கொண்டு ​செல்லும் வாய்க்​கால்​களும், நீர் சேமிப்புப் பகுதி​களிலும் அரசு நிறுவனங்​களாலும் தனிமனிதர்​களாலும் மேற்கொள்​ளப்​படும் ஆக்கிரமிப்​பாலும், நீர்நிலைகளை ஆழப்படுத்திச் செம்மை செய்யாத காரணங்​களாலும், குளங்​களின் நீர்க் கொள்ளளவு பெரிதும் குறைந்​து​விட்டது. இதனால், சிறிய மழையளவைக்​கூடத் தாக்குப்​பிடிக்க முடியாமல் வெள்ளம் ஏற்பட்டு வீடுகளுக்குள் நீர் புகுந்​து​விடு​கிறது.
  • நவீன கால்வாய், நிலத்தடி நீர்ப்பாசன முறைகள் வருவதற்கு முன்னால், விவசாயம், கால்நடை வளர்ப்பு, குடிநீர்த் தேவை போன்ற பயன்பாடு​களுக்​காகக் குளங்கள் பயன்பட்டு வந்துள்ளன. நவீன நீர் ஆதாரங்​களி​லிருந்து குளங்கள் பல வகைகளில் மேம்பட்டவை. குளங்கள் சிறியவை, இவற்றை எளிதாக நிர்வாகம் செய்ய முடியும்.
  • புதிதாகக் குளங்களை அமைப்​ப​தற்கும் பராமரிப்​ப​தற்கும் தேவைப்​படும் செலவு, நவீன நீர் ஆதாரங்​களுக்கான செலவைவிட மிகவும் குறைவு. குளங்கள் மூலமாக வேளாண் துறையில் நீர்ப்​பகிர்வு மேலாண்மை செய்வதும் மிகவும் சுலபம். கால்வாய்ப் பாசனத்தில் ஏற்படு​வதுபோல் இல்லாமல், நீர்ப்​பகிர்வு தொடர்பான சண்டைச் சச்சர​வுகள் குளத்துப் பாசனப் பகுதி​களில் குறைவு.
  • சிறு நீர்நிலைகளான குளங்கள், வசதி குறைவான சிறு-குறு விவசா​யிகளின் பயிர் சாகுபடிக்கு இன்றும் முக்கிய நீர் ஆதாரமாகத் தமிழ்நாடு போன்ற மாநிலங்​களில் திகழ்ந்​து​வரு​கின்றன. மழை பெய்கின்​ற​போதெல்லாம் குளங்கள் மூலமாகச் சேமிக்​கப்​படும் நீர், கிணறுகளின் நீர்ச்​சுரப்பை அதிகரித்து கிணற்றுப் பாசனம் வளர்வதற்​கும், விவசாயம் தங்குதடை​யின்றி நடைபெறு​வதற்கும் உதவுகிறது. இப்படி​யாகப் பல நன்மை​களைக் கொடுக்கும் குளங்​களின் குரல்​வளைகள் இன்று நசுக்​கப்​படு​கின்றன.
  • குளங்​களின் மகத்து​வத்தை அறிந்து, அவற்றின் வளர்ச்​சிக்கு மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை உருவாக்கி உள்ளன. கடந்த 30 ஆண்டு​களில் தமிழ்​நாட்டில் மட்டுமல்​லாமல், குளங்கள் அதிகம் உள்ள கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்​களில் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஐரோப்​பியப் பொருளா​தாரக் குழுமங்​களின் உதவியுடன் குளங்​களைச் சீர்ப்​படுத்தி, அவற்றின் பயன்பாட்டை அதிகரிப்​ப​தற்குப் பல நடவடிக்கைகள் எடுக்​கப்​பட்​டுள்ளன.
  • இதற்கான புத்து​யிர்த் திட்டத்​துக்காக 2004-05 மத்திய பட்ஜெட்டில் அதிக நிதியும் அப்போது ஒதுக்​கப்​பட்டது. கடந்த 10 ஆண்டு​களில் குடிம​ராமத்து, குளங்​களின் நவீனமய​மாக்கல் திட்டங்கள் மூலமாக, தமிழ்நாடு அரசு அதிக நிதி ஒதுக்கி​யிருக்​கிறது. எனினும், மழைக்​காலத்​தில்கூட அவை நிரம்​பாமலும், பாசனப் பரப்பளவில் வளர்ச்சி இல்லாமலும் உள்ளன.

குளங்​களின் நிலைமை:

  • அதிக மழை பெறும் காலங்​களில் வெள்ளநீர் சேமிப்புக் கிடங்காக இருந்த குளங்கள், தற்போது அழிக்​கப்​பட்டு​வரு​கின்றன. தொடர் ஆக்கிரமிப்​பாலும் தேவையான நிதி ஒதுக்கிக் குளங்களை ஆண்டு​தோறும் பராமரிக்காத காரணத்​தா​லும், நீர்க் கொள்ளளவு குறைந்து பாசனப் பரப்பளவும் கிடுகிடுவெனக் குறைந்​து​விட்டது.
  • குளங்கள் மூலமாக 1960-61இல் இந்தியா பெற்ற மொத்த நீர்ப்​பாசனப் பரப்பளவு 46.30 லட்சம் ஹெக்டேர். இது 2019-20இல் 16.68 லட்சமாகக் குறைந்​து​விட்டது. இதே காலக்​கட்​டத்​தில், தமிழ்​நாட்டின் குளத்துப் பாசனப் பரப்பளவு 9.36 லட்சத்​திலிருந்து 3.72 லட்சம் ஹெக்டேராகக் குறைந்​து​விட்டது. அதாவது, தமிழகத்தின் மொத்த நீர்ப்​பாசனப் பரப்பளவில் குளத்தின் பங்களிப்பு 38%லிருந்து 12.66%ஆகக் குறைந்​து​விட்டது.
  • இதனால், குளத்துப் பாசனம் மூலமாகப் பயிர்ச் சாகுபடி செய்துவந்த விவசா​யிகள் விவசா​யத்​தை​விட்டு வெளியேறி​யிருக்​கக்​கூடும். சராசரி அளவைவிட அதிகம் மழைபெய்த ஆண்டு​களில்​கூடத் தமிழகத்தில் குளத்துப் பாசனப் பரப்பளவு அதிகரிக்க​வில்லை; ஆக்கிரமிப்பு​களால் குளங்கள் தொடர்ந்து மூடப்​படு​கின்றன என்பதை இத்தர​வுகள் உறுதிப்​படுத்து​கின்றன.
  • வேகமான நகர வளர்ச்​சி​யால், நகரங்​களுக்கு அருகில் உள்ள குளங்கள் மீது அரசுத் துறைகள், கட்டிடங்கள் கட்டி அடைத்து​விட்டன. பல இடங்களில் குளங்​களுக்கு மழை நீர் செல்லும் வழிகள் அடைக்​கப்​பட்டு​விட்டன. இந்திய அரசின் நீர்வள நிலைக் குழு 2012-13இல் வெளியிட்​டுள்ள 16ஆவது அறிக்கை (Repair, Renovation and Restoration of Water Bodies), அரசின் அமைப்பு​களால் குளங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்​கப்​பட்டு அழிக்​கப்​படு​வ​தாகக் கூறியுள்ளது.
  • இந்தியாவில் மொத்தமாக 5.92 லட்சம் குளங்கள், சிறு நீர்நிலைகள் உள்ளதாக​வும், ஆக்கிரமிப்பு, போதிய பராமரிப்பு இல்லாதது போன்ற காரணங்​களால் இவற்றில் தற்போது 72,853 பயன்பாட்டில் இல்லை என்றும் சொல்கிறது ஐந்தாவது குறுநீர்ப்​பாசனக் கணக்கெடுப்பு (Minor Irrigation Census, 2013-14).
  • மத்திய நீர்வள அமைச்சகம் 2023இல் வெளியிட்​டுள்ள நீர்நிலைகள் பற்றிய முதல் மொத்தக் கணக்கெடுப்​பின்படி (First Census on Water Bodies), தமிழ்​நாட்டில் மட்டும் 7,828 நீர்நிலைகள் ஆக்கிரமிக்​கப்​பட்​டுள்ளன. இது இந்தியாவில் மொத்தமாக ஆக்கிரமிக்​கப்​பட்​டுள்ள நீர்நிலைகளில் ஏறக்குறைய 21% ஆகும். அதாவது, ஆக்கிரமிப்பு செய்யப்​பட்​டுள்ள மொத்த நீர்நிலைகளில் ஏறக்குறைய நான்கில் ஒரு பகுதி தமிழ்​நாட்டில் உள்ளது.

செய்ய வேண்டியவை:

  • தமிழ்​நாட்டில் குளங்கள் பெரும்​பாலும் சங்கி​லித்​தொடர்​புடன் (cascade system) அமைக்​கப்​பட்​டுள்ளன. மேல் பகுதியில் உள்ள குளம் நிரம்​பினால், அதன் உபரிநீர் கீழ் உள்ள குளத்​துக்​கும், அதன் பிறகு அடுத்த குளத்​துக்கும் செல்லும். ஆனால், ஒருபுறம் அரசுத் துறைக்குத் தேவைப்​படும் கட்டிடங்கள் (சமுதாயக் கூடங்கள், பள்ளிகள், பொதுக்​கழிப்​பிடம், சுகாதார நிலையங்கள்) கட்டப்​படு​வ​தா​லும், மறுபுறம் அரசியல்​வா​தி​களும், ஆதிக்க வர்க்க விவசா​யிகளும், நீர்வழித் தடங்களை விவசாயம் உள்ளிட்ட பல பயன்பாடு​களுக்காக ஆக்கிரமிப்பு செய்வ​தா​லும், இந்தச் சங்கி​லித்​தொடர்பு பெரும்​பாலான இடங்களில் சிதைக்​கப்​பட்​டுள்ளது.
  • குளங்​களுக்கு அருகில் அமைக்​கப்​பட்​டுள்ள செல்வாக்கு படைத்த பெரிய தனியார் நிறுவனங்கள், தனியார் கல்லூரிகள், பல்கலைக்​கழகங்கள், பணக்கார ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், குளங்​களில் தண்ணீர் பெருகுவதை விரும்பாத காரணத்​தால், குளத்​துக்குச் செல்லும் நீர்வழிப் பாதையைச் சுயலாபத்​துக்காக அடைத்துத் திசைதிருப்​பி​விடு​கின்றன. இதனால், குறைந்த அளவு மழை பெய்யும் காலத்​தில்கூட வெள்ளப் பெருக்கு ஏற்படு​கிறது.

செய்ய வேண்டியவை:

  • மதுரை உயர் நீதிமன்றக் கிளை செப்டம்பர் 6, 2014இல் அளித்​துள்ள தீர்ப்பை மதித்து, நீர்நிலைகளில் ஏற்படுத்​தப்​பட்​டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். குளங்களை ஆக்கிரமிப்​பவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.
  • பல்வேறு காரணங்​களால் பொதுப்​பணித் துறை குளங்களை மாற்றாந்தாய் மனப்பான்​மையோடு பல காலமாகப் பாவித்து​வரு​கிறது. எனவே, தமிழ்​நாட்டு விவசா​யிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மைச் சட்டம் 2000 (சட்ட எண் 7/2006) கூறியுள்​ளது​போல், அனைத்துக் குளங்​களையும் மேலாண்மை செய்யும் அதிகாரத்தை விவசா​யிகளிடம் ஒப்படைத்​தால், குளங்கள் புத்துயிர் பெறுவதோடு, வெள்ளப் பாதிப்​பையும் குறைக்க முடியும்.

‘குளங்களை நவீனமய​மாக்கல்

  • மறுசீரமைப்புத் திட்ட’த்தில் குளங்களில் உள்ள வண்டல் மண்ணை நீக்கி நீர்க் கொள்ளளவை அதிகரிப்​ப​தற்கு முக்கி​யத்துவம் கொடுக்​கப்​படு​கிறது. இது போதாது, ஆக்கிரமிப்பால் அடைபட்​டுள்ள, திருப்​பி​விடப்​பட்​டுள்ள நீர்வரத்து வாய்க்​கால்​களைச் சரிசெய்து, மழைநீர்க் குளத்​துக்குத் தங்குதடை​யின்றிச் சென்றுசேர முக்கி​யத்துவம் கொடுத்​தால், மழை வெள்ளம் ஏற்படாமல் குறைக்க முடியும்.
  • குளங்​களைத் தொடர்ந்து பராமரிப்பதன் மூலம் அவற்றின் நீர்க்​கொள்ளளவை அதிகரித்து வெள்ளச் சேதத்தைக் குறைக்க முடியும். குறைந்தது இரண்டு ஆண்டு​களுக்கு ஒருமுறை​யாவது குளங்​களைப் புனரமைப்பு செய்ய வேண்டும். பெரிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் கார்ப்​பரேட் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் மூலமாக, குளங்​களைச் சீரமைத்துப் பாதுகாக்க அரசு முயல வேண்டும். புனரமைப்புப் பணிகளுக்கான பொறுப்பைக் கிராம நிர்வாகத்​திட​மும், மதிப்பு​மிக்க அரசுசாரா அமைப்பு​களிடமும் கொடுத்​தால், குளங்​களின் பராமரிப்பு மேம்படும்.
  • அதிகரித்து​வரும் காலநிலை மாற்றத்​தால், மழைப் பொழிவில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, சில மணி நேரத்​திலேயே பெய்து​விடு​கிறது. அந்தப் பின்னணியில் குளங்களை முறையாகப் பராமரித்தால் பாதிப்​புகளையும் நிச்சய​மாகக் குறைக்க முடியும்​!

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்