TNPSC Thervupettagam

ஆசிய விளையாட்டுகள் - பகுதி 2

October 21 , 2023 448 days 627 0

(For English version to this please click here)

ஆசிய விளையாட்டுகள் - பகுதி 2

சின்னங்கள்

  • ஆசிய விளையாட்டு சாசனத்தில் பொதிந்துள்ள இலட்சியங்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கென்று ஆசிய விளையாட்டு இயக்கமானது குறியீடுகளைப் பயன்படுத்துகிறது.
  • "எப்போதும் முன்னோக்கி" என்ற பொன்மொழியினை ஆசிய விளையாட்டானது கொண்டுள்ளது.
  • இதை வடிவமைத்து முன்மொழிந்தவர் குரு தத் சோந்தி என்பவராவார்.
  • 1949 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுக் கூட்டமைப்பானது உருவாக்கப்பட்டது.
  • ஆசிய விளையாட்டுச் சின்னமானது சிவப்பு நிறத்தில் 16 கதிர்கள் கொண்ட பிரகாசமான சூரியன் மற்றும் அதன் வட்டத்தின் நடுவில் ஒரு வெள்ளை வட்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

https://s01.sgp1.digitaloceanspaces.com/inline/874993-pjdyqfvfxa-1523334651.png

சின்னத்தின் தோற்றம்

  • 1982 ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு, ஆசிய விளையாட்டுப் போட்டியானது ஒரு தனியான சின்னத்தைக் கொண்டுள்ளது.
  • இந்த சின்னங்களானது பொதுவாக கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில்  அப்பகுதிகளின் (தலைமையேற்கும் நாடு) பூர்வீக விலங்கு அல்லது  சிலநேரங்களில் மனித உருவங்களையும் கொண்டிருக்கும்.

பங்கேற்பு

  • ஆசிய ஒலிம்பிக் மன்றத்தில் (OCA) இணைந்துள்ள அனைத்து 45 உறுப்பு நாடுகளும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதி வாய்ந்தவையாகும்.
  • OCA உறுப்பினர்களின் கூற்றுப்படி, கண்டம் தாண்டி அமைந்துள்ள கஜகஸ்தான் ஒரு ஆசிய நாடு ஆகும்.
  • எனவே இது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாம், ஆனாலும் இவ்வுரிமையானது எகிப்து நாட்டிற்குப் பொருந்தாது.

  • ஒரு நாடாக, எகிப்தானது சினாயில் தனது நிலப்பரப்பில் 6%த்தை மட்டுமே கொண்டுள்ளது.
  • எனவே, இவ்விளையாட்டுகளுக்குப் பதிலாக ஆப்பிரிக்க நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளில் எகிப்து நாடானது பங்கேற்கிறது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளை விட ஐரோப்பிய விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு நாடுகள் பங்கேற்கின்றன.
  • துருக்கி மற்றும் ரஷ்யா/சோவியத் ஒன்றியமானது ஆசியக் கண்டத்தில் முக்கிய புவியியல் பகுதிகளையும், அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா போன்ற நாடுகள் கிட்டத்தட்ட ஆசியாவில் முழுமையான பகுதிகளையும்சைப்ரஸ் மற்றும் ஆர்மீனியா போன்ற நாடுகள் ஆசியாவில் ஒட்டுமொத்த பகுதிகளையும் கொண்டு உள்ளது.
  • வரலாற்று ரீதியாக காண்கையில், இவ்விளையாட்டுப் போட்டிகளுக்கு 46 தேசிய ஒலிம்பிக் குழுக்களானது (என்ஓசி) போட்டியாளர்களை  அனுப்பியுள்ளன.
  • 1976 ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேலானது இவ்விளையாட்டுப் போட்டிகளிலிருந்து விலக்கப் பட்டுள்ளது.
  • பாதுகாப்பு காரணங்களுக்காக விலக்கப்பட்டதாக அதற்கு காரணம் தெரிவிக்கப் பட்டது.
  • 1982 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இஸ்ரேல் கோரிக்கை வைத்தது.

  • ஆனால் முனிச் படுகொலை காரணமாக அந்த கோரிக்கையானது அதன் ஒருங்கிணைப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டது.
  • இஸ்ரேல் தற்போது ஐரோப்பிய ஒலிம்பிக் குழுக்களில் (EOC) உறுப்பினராக உள்ளது.
  • ஐரோப்பிய விளையாட்டுப் போட்டிகளில் இஸ்ரேல் போட்டியிடுகிறது.
  • தைவான், பாலஸ்தீனம், ஹாங்காங் மற்றும் மக்காவ் ஆகிய  நாடுகள் OCA அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பதால் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கின்றன.
  • அதன் தொடர்ச்சியான தெளிவற்ற அரசியல் நிலை காரணமாக, 1990  ஆம் ஆண்டு முதல் தைவான் சீன தைபே கொடியின் கீழ் இந்த விளையாட்டுகளில் பங்கேற்கிறது.
  • 1990 ஆம் ஆண்டு முதல் மக்காவ் நாடானது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் போட்டியிட NOC களில் ஒன்றாக அனுமதிக்கப்படுகிறது.
  • ஆனால் மக்காவ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் (IOC) அங்கீகரிக்கப்படவில்லை.

  • 2007 ஆம் ஆண்டில், OCA அமைப்பின் தலைவரான ஷேக் அகமது அல்-ஃபஹத் அல்-அஹ்மத் அல்-சபா என்பவர் ஆஸ்திரேலியாவை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கும் திட்டத்தை நிராகரித்தார்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆஸ்திரேலியா நல்ல மதிப்புகளைச் சேர்க்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
  • ஆனால் இது ஓசியானியா தேசிய ஒலிம்பிக் குழுக்களுக்கு (ONOC) நியாயமற்றதாக காணப்பட்டது.
  • ONOC அமைப்பில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் உறுப்பினர்களாக இருப்பதால், 2015 ஆம் ஆண்டு முதல் அவை பசிபிக் விளையாட்டுகளில் பங்கேற்கின்றன.
  • 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் ஆஸ்திரேலியா பங்கேற்ற பிறகு 2017 ஆம் ஆண்டு இந்த இலக்கானது மீண்டும் முன் வைக்கப் பட்டது.
  • அவர்கள் விரைவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முழு உறுப்பினராக ஆவதற்கு ஆலோசித்து வருகின்றனர்.
  • இருப்பினும், ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டியானது, ஆஸ்திரேலியா 2022 விளையாட்டுப் போட்டிகளில் சிறிய அளவிலான விளையாட்டு வீரர்களை அனுமதிக்கும் என்று அறிவித்தது.
  • கூடைப்பந்து மற்றும் கைப்பந்து போன்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் விளையாடப்படும் வரை அது நீண்டதாக இருக்கும்.
  • இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், இலங்கை, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகள் மட்டுமே உள்ளன.
  • அவர்கள் விளையாட்டுகளின் அனைத்து பதிப்புகளிலும் போட்டியிட்டனர்.
  • 2017 ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் ஆஸ்திரேலியா பங்கேற்ற பிறகு 2017 ஆம் ஆண்டில் இந்த இயக்கம் மீண்டும் முன்வைக்கப்பட்டது.
  • அவர்கள் விரைவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முழு உறுப்பினராக ஆவதற்கு ஆலோசித்து வருகின்றனர்.
  • இருப்பினும், 2022 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் சிறிய அளவிலான ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆஸ்திரேலிய ஒலிம்பிக் குழுவானது அறிவித்துள்ளது.
  • ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் விளையாடப்படும் கூடைப்பந்து மற்றும் கைப்பந்து போன்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதியானது  அதுவரை நீண்டதாக இருக்கும்.
  • அதில் இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், இலங்கை, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகள் மட்டுமே உள்ளன.
  • அவர்கள் விளையாட்டுகளின் அனைத்துப் பதிப்புகளிலும் போட்டியிட்டனர்.

விளையாட்டு

  • பாதிப்பு வாரியாக கணக்கிடுகையில் 24 விளையாட்டுப் போட்டி பிரிவுகளில், கிட்டத்தட்ட 260 போட்டிகளை ஆசிய விளையாட்டுப் போட்டிகளானது சராசரி பதிப்புகளாகக் கொண்டுள்ளது.
  • ஐம்பத்தொன்று விளையாட்டுகளானது 39 வெவ்வேறு துறைகள் மற்றும் கிட்டத்தட்ட 400 போட்டிகளாக பரந்து விரிந்து காணப்படுகின்றன.
  • 2018 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற விளையாட்டுகளும் ஒரு கட்டத்திலிருந்து ஆசிய விளையாட்டு நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
  • 2010 ஆம் ஆண்டு குவாங்சோ நகரில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான போட்டிகள் நடைபெற்றன.
  • இதில் 42 விளையாட்டுப் பிரிவுகளில் 476 போட்டிகள் நடத்தப்பட்டன.
  • தலைமை தாங்கி விளையாட்டுகளை நடத்தும் நாட்டின் உள்ளூர் ஒருங்கிணைப்புக் குழுவின் கோரிக்கைகளுக்கு ஏற்ப விளையாட்டுகளின் எண்ணிக்கை பதிப்பானது மாறுபடும்.
  • 2011 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளின் நிகழ்ச்சி நிரலின் மாற்றங்களை இவ்விளையாட்டு நிகழ்ச்சி நிரலானது கருத்தில் கொண்டு மாற்றங்களை மேற்கொள்ளும்.
  • மேலும் அதனுடன் உள்ளூர் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 விளையாட்டுகளும் ஆசியாவில் மிகவும் பிரபலமான எட்டு விளையாட்டுகளும் இந்நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப் பட்டுள்ளன.

பதக்கங்களின் எண்ணிக்கை

  • இவ்விளையாட்டின் ஒட்டுமொத்த வரலாற்றையும் உற்று நோக்குகையில் இப்போட்டியில் பங்கேற்ற 46 தேசிய ஒலிம்பிக் குழுக்களில், 43 நாடுகளானது குறைந்த பட்சம் ஒரு பதக்கத்தையாவது வென்றுள்ளன.
  • பூடான், மாலத்தீவுகள் மற்றும் திமோர்-லெஸ்டே ஆகிய மூன்று நாடுகள் இதுவரையில் இன்னும் ஒரு பதக்கத்தினைக் கூட வெல்லவில்லை.
  • 38 நாடுகள் குறைந்தபட்சமாக ஒரு தங்கப் பதக்கத்தையாவது வென்றுள்ளன (ஒவ்வொரு ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் ஜப்பான் மற்றும் இந்தியா மட்டுமே இவ்வெற்றியினை பெற்றுள்ளன).
  • இவ்விளையாட்டின் வரலாற்றில்  ஜப்பானும் சீனாவும் ஒட்டு மொத்த சாம்பியன்களாக வெளிப்பட்ட இரண்டு நாடுகளாக மாறியுள்ளன.

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/01/IRAN_Asain_games_medal_1974.jpg/220px-IRAN_Asain_games_medal_1974.jpg

நூற்றாண்டு விழா

  • 2012 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று மக்காவ்வில் ஒரு சிறப்பு பல விளையாட்டுப் போட்டிகளை நடத்த OCA அமைப்பின் 31வது பொதுச் சபையானது முடிவு செய்து உள்ளது.
  • ஓரியண்டல் விளையாட்டின் 100வது ஆண்டு விழாவினைக் கொண்டாடும் வகையில் இது ஆசிய விளையாட்டு நூற்றாண்டு விழா என்று அழைக்கப்பட்டது (பின்னர் இது தூரக் கிழக்கு சாம்பியன்ஷிப் விளையாட்டுகளாக மாற்றம் செய்யப்பட்டது).
  • இவ்விழாவினை நடத்தும் உரிமையினைப் பிலிப்பைன்ஸுக்கு OCA அமைப்பானது வழங்கியது.
  • இது 100 ஆண்டுகளுக்கு முன்பும் நடத்தப்பட்டது.
  • இந்த விழாவானது முதலில் 2013 ஆம் ஆண்டு நவம்பர் 27 முதல் 29 வரை மலாய் அக்லானில் உள்ள போராகே தீவில் நடத்த திட்டமிடப் பட்டது.
  • ஆனால் ஹையான் சூறாவளியானால் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக இது 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு மாற்றப்பட்டது.

2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுகள் 

  • 2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுகளானது, அதிகாரப் பூர்வமாக 19வது ஆசிய விளையாட்டு ஹாங்சோ 2022 என்று அழைக்கப்படுகிறது.
  • இது சீனாவில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை நடத்தப் பட்டது.
  • இப்போட்டியானது 40 விளையாட்டுகள் மற்றும் 61 துறைகளில் மொத்தமாக 481 போட்டிகளை மையமாக கொண்டிருக்கும்.
  • இது ஹாங்சோவில் உள்ள 54 போட்டித் தளங்கள் மற்றும் ஐந்து இணை தலைமையேற்கும் நகரங்களில் நடைபெறும்.
  • 2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார்.
  • ஆசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைவர் ரந்தீர் சிங் இப்போட்டியை முடித்து வைத்தார்.
  • 2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுகளின் சின்னமானது "துள்ளும் (மேலெழும்பும்) அலைகள்" ஆகும்.
  • இது 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 அன்று ஹாங்சோவில் வெளியிடப்பட்டது.
  • இந்த சின்னமானது ஜீஜாங்கின் பாரம்பரிய விசிறியை ஒத்ததாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இது ஓடுதளப் பாதை, கியான்டாங் ஆற்றின் அலைகள் மற்றும் ரேடியோ அலைகளை ஒத்திருக்கிறது.

2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டின் சின்னம்

  • 2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுகளின் சின்னமானது "காங்காங், லியான்லியன் மற்றும் சென்சென்" (ஜியாங்னனின் நினைவுகள்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • ஹாங்க்சோ நகரம் மற்றும் ஜெஜியாங் மாகாணத்தின் இணையத் திறனை இந்த சின்னத்தின் ஸ்மார்ட் முப்பொருள் தொகுதியானது பிரதிபலிக்கிறது.
  • இந்த முப்பொருள் எந்திரத் தொகுதி என்பது 2023 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் அதிகாரப்பூர்வச் சின்னம் ஆகும்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்