(For English version to this please click here)
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
இந்தியாவும் அதன் பதக்கம் வென்றவர்களும்
- இந்திய ஆடவருக்கான 10 மீட்டர் காற்று துப்பாக்கிச் சுடுதல் போட்டி பிரிவில் உலக சாதனையுடன் முன்னாள் உலகச் சாம்பியனான ருத்ராங்க்ஷ் பாட்டீல், ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்களான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் மற்றும் திவ்யான்ஷ் சிங் பன்வாருடன் இணைந்து 10 மீட்டர் காற்று துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 1893.7 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தினை வென்றனர்.
- 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளின் 3வது அமர்வுகளில் தங்கப் பதக்கத்தினை வென்ற ஆண்கள் அணியில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் என்பவர் இடம் பெற்றிருந்தார்.
- 1769 புள்ளிகளுடன் அந்த தங்கப் பதக்கமும் உலகச் சாதனையுடன் வந்துள்ளது.
- 25 மீட்டர் கைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டிப் பிரிவில் மனு பாக்கர் என்பவர், ஈஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகியோருடன் இணைந்து 1759 என்ற புள்ளிகளுடன் உலகச் சாதனையோடு தங்கப் பதக்கத்தினை வென்றார்.
- பெண்களுக்கான 50 மீட்டர் கைத்துப்பாக்கிச் சுடுதல் போட்டிப் பிரிவின் 3 வது நிலைகளில் சிஃப்ட் கவுர் சம்ரா என்பவர் 469.6 புள்ளிகள் பெற்று உலகச் சாதனையை முறியடித்தார்.
- பெண்களுக்கான 10 மீட்டர் காற்று கைத்துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 17 வயதான பாலக் குலியா என்பவர் 242.1 என்ற புள்ளிகளுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உலகச் சாதனையுடன் தங்கம் வென்றார்.
- ஆறு தங்கம், பதினான்கு வெள்ளி மற்றும் ஒன்பது வெண்கலம் என மொத்தமாக 29 பதக்கங்களுடன் 2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்குத் தடகள விளையாட்டானது மிகவும் ஆற்றல் வாய்ந்த விளையாட்டாக மாறியுள்ளது.
- 2023 ஆசிய விளையாட்டுப் தடகளப் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திரத் தடகள வீரர்கள் தடகளத்தில் கால் பதித்ததோடு, மூன்று தேசியச் சாதனைகளையும் மீண்டும் வரலாற்றில் எழுதியுள்ளனர்.
- பெண்களுக்கான 400 மீட்டர் தடகள ஓட்டப் பந்தயப் போட்டியில், தடகளத்தில் புகழ் பெற்ற பி.டி. உஷாவின் தேசியச் சாதனையைக் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் என்பவர் சமன் செய்தார்.
- தடகள கலப்பு ஓட்டப் பந்தய 4x400 மீட்டர் தொடர் ஓட்ட அணியிலும் வித்யா ராம்ராஜ் இடம் பெற்றிருந்தார்.
- முஹம்மது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன் ஆகியோர் அந்த அணியில் இடம் பெற்றிருந்தனர்.
- இப்போட்டியின் கால்பகுதிப் போட்டிகளில் இந்தியாவானது வெள்ளிப் பதக்கத்தினை வென்றது.
- ஆண்களுக்கான டெகாத்லானில் தேஜஸ்வின் சங்கர் 7666 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தினை வென்று 12 ஆண்டு கால தேசியச் சாதனைகளை மீட்டெடுத்தார்.
- இதற்கிடையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 3000 மீட்டர் இடர்பல கடக்கும் குதிரை ஓட்டப்பந்தயத்தில் தங்கத்தினை வென்றதற்கான சாதனையை அவினாஷ் சேபிள் படைத்துள்ளார்.
- பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பருல் சவுத்ரியும், பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் அன்னு ராணியும் மேற்கண்ட தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க மைல்கற்களைப் பெற்றுத் தந்து உள்ளனர்.
- ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்த மூன்று போட்டிகளிலும் இந்தியா முதலிடம் பிடித்தது இதுவே முதல் முறையாகும்.
- இந்திய நீச்சல் வீரர்கள் எந்தப் பதக்கங்களையும் வெல்லவில்லை என்றாலும், 2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீச்சல் போட்டியில் ஆறு தேசியச் சாதனைகளை மீட்டு எடுத்துள்ளனர்.
- தொடர் ஓட்டப் பந்தயப் போட்டிகளில் ஐந்து தேசிய நீச்சல் போட்டிகளின் சாதனைகளும் முறியடிக்கப்பட்டன.
- யாங்லெம் ரோஜித் சிங், டேவிட் பெக்காம் எல்கடோச்சூங்கோ, ரொனால்டோ சிங் லைடோன்ஜாம் மற்றும் எசோவ் அல்பென் ஆகியோரைக் கொண்ட இந்திய ஆடவர் தடகள அணியானது சைக்கிள் ஓட்டுதலில் தேசியச் சாதனைக்காக 44.609 வினாடிகள் எடுத்தது, என்றாலும் பதக்கத்திற்கான சுற்றுக்கு அந்த அணியால் வர முடியவில்லை.
- வில்வித்தைப் போட்டிகளிலும் இந்தியாவானது கடந்த காலச் சாதனைகளை முறியடித்தது.
- ஜோதி சுரேகா வென்னம் மற்றும் ஓஜஸ் பிரவின் தியோடலே தலைமையிலான இந்திய வில்வித்தை வீரர்கள் குழுவானது 2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வில்வித்தையில் ஒன்பது பதக்கங்களை வென்றனர்.
- இந்திய வில்வித்தை வீரர்கள் வென்ற ஒன்பது பதக்கங்களில் ஐந்து தங்கப் பதக்கங்களும் அடங்கும்.
- 2014 ஆம் ஆண்டு இன்சியானில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியிலிருந்து ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் ஆகியவை இந்தியா பெற்ற முந்தைய சிறந்தப் பதக்கப் பட்டியலாகும்.
- உண்மையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் முந்தைய 18 பதிப்புகளில் இந்தியா வில்வித்தைப் போட்டியில் 10 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது.
- பெண்களுக்கான கூட்டு வில்வித்தைப் போட்டியில் அதிதி கோபிசந்த் சுவாமி என்பவர் ஆசிய விளையாட்டுச் சாதனையை இரண்டு முறை முறியடித்துள்ளார்.
- பின்னர் நடைபெற்ற போட்டிகளில் இதனை ஜோதி சுரேகா வென்னம் என்பவர் சமன் செய்தார்.
- ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி இணையானது பூப்பந்தாட்டத்த்தில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தினை வென்றது.
- ஆடவர் மற்றும் பெண்களுக்கான இந்தியக் கிரிக்கெட் அணிகளும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்களது முதல் தங்கப் பதக்கங்களை தங்கள் போட்டியின் தொடக்கத்திலேயே வென்றன.
- இதற்கிடையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கத்தினை வென்ற இளம் வயது இந்தியர் என்ற பெருமையை சஞ்சனா பத்துலா பெற்றுள்ளார்.
- இவர் பெண்களுக்கான விரைவுச் சறுக்கல் போட்டியிலும், 3000 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியிலும் வெண்கலம் வென்றுள்ளார்.
- பதக்கத்தினை வென்ற போது அவரது வயதானது 15 வயது, மூன்று மாதங்கள் மற்றும் 11 நாட்கள் ஆக இருந்தது.
- 65 வயது, ஏழு மாதங்கள் மற்றும் 20 நாட்களில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற மூத்த இந்தியர் என்ற பெருமையினை ஜக்கி ஷிவ்தாசனி பெற்றார்.
- ஹாங்சோவில் வெள்ளிப் பதக்கத்தினை வென்ற ஆடவருக்கான அட்டைகளைப் பயன்படுத்தி பாலம் அமைக்கும் விளையாட்டுக்கான அணியில் இவரும் ஒருவராக இருந்துள்ளார்.
- 2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவானது ஒரு வரலாற்று மைல்கற்களை அடைந்துள்ளது.
- இதுவரை இல்லாத வகையில் இந்தியாவானது 100 பதக்கங்களை வென்று சாதனையினைப் படைத்துள்ளது.
- நாட்டின் வரலாற்றில் இதுபோன்ற சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.
- இந்திய மகளிர் கபடி அணியின் வெற்றியைத் தொடர்ந்து இந்த முக்கியமான சாதனையானது நிகழ்த்தப்பட்டது.
- அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற பெண்களுக்கான விளையாட்டுப் போட்டியில் அவர்கள் தங்கப் பதக்கத்தினை வென்றனர்.
- இந்த போட்டியின் போது மொத்தமாக 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலப் பதக்கங்களை குவித்து இந்திய அணியானது குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது.
- இது 2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் சீனா, ஜப்பான் மற்றும் கொரியக் குடியரசுக்குப் பின் 4வது இடத்தில் இந்தியாவானது முன்னேறியுள்ளது.
- ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (PTI/AP) இந்தியாவானது மொத்தமாக 107 பதக்கங்களை வென்றுள்ளது.
- துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 22 பதக்கங்களைப் பெற்றதன் மூலம், 2006 ஆம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற 14 பதக்கங்களின் மூலம் இந்தியாவானது தனது முந்தைய சிறந்த பதக்கப் பட்டியலை முறியடித்து முன்னேறியுள்ளது.
- இதில் 12 பதக்கங்களானது குழுப் போட்டிகளில் பெற்றவை என்பதும் குறிப்பிடத் தக்கது.
- இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கிரிக்கெட் மற்றும் கபடி அணியினர் தங்களது திறமையை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.
- அவர்கள் அந்தந்தப் பிரிவுகளின் போட்டிகளில் இரட்டைத் தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
- கூட்டு வில்வித்தைப் போட்டிகளில் இந்தியாவின் ஆதிக்கமானது மறுக்க முடியாததாக இருந்தது.
- இந்திய நாடானது ஐந்து தங்கப் பதக்கங்களையும் உறுதி செய்துள்ளது.
- ஜோதி சுரேகா வென்னம் மற்றும் ஓஜஸ் பிரவின் தியோட்டலே ஆகியோர் அரிய மும்முனை சாதனைகளைப் படைத்துள்ளனர்.
- இந்த வெற்றியானது, எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு நிரந்தர இடத்தைப் பெறுவதற்காக கூட்டு வில்வித்தையின் மூலம் இம்முயற்சியினை நன்கு முன்னிறுத்தியுள்ளது.
- அது லாஸ் ஏஞ்சல்ஸில் 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு வழி வகுக்கும் வகையில் உள்ளது.
- சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணையானது, பூப்பந்தாட்டப் போட்டிகளில் உலக அளவில் மூன்றாவது இடத்தினைப் பிடித்துள்ளனர்.
- அவர்கள் ஆடவருக்கான இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டிகளில் உறுதியான வெற்றியுடன் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தினை உறுதி செய்தனர்.
- இந்தியப் பூப்பந்தாட்டப் போட்டிகளில் கலந்து கொண்ட அணியின் ஒட்டு மொத்த செயல்திறனானது அவர்களுக்கு மூன்று பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளது.
- விளையாட்டுப் போட்டிகளில் அவர்களின் இரண்டாவது சிறந்த ஆட்டத்தை இது குறிக்கிறது.
- இந்தப் போட்டிகளில் வென்ற பதக்கங்களானது இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளன.
- 2024 ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கிற்கான விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்களுக்கான இடத்தினை அவர்கள் உறுதி செய்துள்ளனர்.
- ஆடவருக்கான இந்திய ஹாக்கி அணியானது தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளது.
- குத்துச்சண்டை வீரர்களான நிகத் ஜரீன், பர்வீன், ப்ரீத்தி, லோவ்லினா ஆகியோர் வெண்கலப் பதக்கத்தினை வென்றனர்.
- இதன் மூலம் பிரான்ஸின் தலைநகரான பாரீஸில் நடைபெறவிருக்கும் மார்கியூ வகை போட்டிகளில் பங்கேற்பதற்கு அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப் பட்டு உள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மின்னணு-விளையாட்டு (Hangzhou)
- சீனாவின் ஹாங்சோவில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிகாரப் பூர்வமான போட்டியாக மின்னணு-விளையாட்டானது அதிகாரப் பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
- இது பாரம்பரிய அமைப்புகளின் கூட்டிணைவு உட்பட ஏழு சிறந்த தலைப்புகளைக் கொண்டுள்ளது.
- இதில் 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.
- இப்போட்டிகளில் கணினி மற்றும் கைபேசி விளையாட்டுகள் இரண்டும் அடங்கும்.
- இது பல தரப்பு மற்றும் ஒற்றை வீரர் வகையிலான இணைய அடிப்படையிலான போர் அரங்கத்தினையும் (MOBA) உள்ளடக்கியது.
- ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிகளுக்கும் தங்கப் பதக்கங்களானது வழங்கப் பட்டன.
மின்னணு-விளையாட்டு என்றால் என்ன?
- மின்னணுசார் விளையாட்டு என்பதன் சுருக்கமான மின்னணு-விளையாட்டு என்பது ஒழுங்கமைக்கப்பட்ட காணொளி விளையாட்டுகளைக் குறிக்கிறது.
- இது பெரும்பாலும் குறிப்பிடத்தக்கப் பரிசுகளுடன் நடைபெறும் போட்டியையும், தொழில்முறை மட்டத்தில் பல்வேறு காணொளி விளையாட்டுப் போட்டிகளில் போட்டியிடும் தனிநபர்களையும் அல்லது அணிகளையும் உள்ளடக்கியுள்ளது.
மின்னணு விளையாட்டு பற்றிய கூடுதல் தகவல்கள்
- 2018 ஆம் ஆண்டு முன்பு ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு செயல் விளக்க விளையாட்டாகவும் இடம் பெற்றதோடு மிகவும் பிரபலமானதாகவும் இந்த மின்னணு விளையாட்டானது இருந்தது.
- சில விளையாட்டுகளில் வன்முறை அல்லது பாரபட்சமான உள்ளடக்கம் ஆகியவை பற்றிய கவலைகளை இது கொண்டிருப்பதால், ஒலிம்பிக்கில் விளையாட்டுகளில் இதனைச் சேர்ப்பது நிச்சயமற்றதாகவே உள்ளது.
- ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தினை வென்றால், தென் கொரிய விளையாட்டு வீரர்களுக்குக் கட்டாய ராணுவப் பணியிலிருந்து விலக்களிக்கப் படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இணைய விளையாட்டின் வகைகள்
- மின்னணு விளையாட்டு
- கற்பனை விளையாட்டு
- சாதாரண விளையாட்டுகள்
- இவை திறன், மன திறன் போன்றவற்றின் அடிப்படையிலான அல்லது வாய்ப்பு அடிப்படையிலான (ஒரு பகடை போன்ற சீரற்றச் செயல்பாட்டின் அடிப்படையில்) இணையப் போட்டிகளாக இருக்கலாம்.
-------------------------------------