TNPSC Thervupettagam

ஆசிய விளையாட்டு - பகுதி 1

October 19 , 2023 446 days 846 0

(For English version to this please click here)

ஆசிய விளையாட்டு

  • ஆசியாட் என்றழைக்கப்படும் ஆசிய விளையாட்டுப் போட்டியானது, ஆசியா முழுவதிலும் உள்ள விளையாட்டு வீரர்களிடையே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒரு கண்டம் சார்ந்த பல்முறை  விளையாட்டு போட்டி கும்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியானது, ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியாகும்.
  • அவை ஆசிய ஒலிம்பிக் மன்றத்தால் (OCA) ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • 1951 ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் நடைபெற்ற முதல் விளையாட்டுப் போட்டியிலிருந்து 1978 ஆம் ஆண்டு வரையிலான விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஆசிய விளையாட்டுக் கூட்டமைப்பால் (AGF) ஒழுங்குபடுத்தப்பட்டு நடத்தப்பட்டது.
  • 1982 ஆம் ஆண்டு முதல், ஆசிய விளையாட்டுக் கூட்டமைப்பானது உடைந்த பிறகு, ஆசிய ஒலிம்பிக் மன்றத்தால் (OCA) ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • சர்வதேச ஒலிம்பிக் குழுவால் (IOC) இவ்விளையாட்டுப் போட்டிகள் அங்கீகரிக்கப் பட்டுள்ளன.
  • மேலும் இவை ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு இரண்டாவது பெரியளவில் நடைபெறும் பல்முனை விளையாட்டு நிகழ்வாக விவரிக்கப் படுகிறது.

  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளை ஒன்பது நாடுகள் நடத்தியுள்ளன.
  • விளையாட்டுப் போட்டிகளில் நாற்பத்தாறு நாடுகள் இதில் பங்கேற்றுள்ளன.
  • 1974 ஆம் ஆண்டு இஸ்ரேல் கடைசியாக போட்டிகளில் பங்கேற்ற பிறகு இவ்விளையாட்டுகளிலிருந்து விலக்கப் பட்டதும் இதில் அடங்கும்.
  • 2010 ஆம் ஆண்டு முதல், ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துபவரே ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளையும் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்து முடிந்த சிறிது காலத்திலேயே ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
  • ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகும்.
  • பாராலிம்பிக் விளையாட்டுகளில், விளையாட்டுகளுக்குத் தலைமையேற்கும் நகரத்தின் ஒப்பந்தத்தில் இரண்டு போட்டிகளை நடத்துவதை பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.
  • ஆனால் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு போட்டிகளையும் ஒருவரே கட்டாயமாக நடத்தவேண்டும் என்பது பற்றிக் குறிப்பிடப் படவில்லை.

வரலாறு

தோற்றம்

  • இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பல்வேறு ஆசிய நாடுகள் சுதந்திரம் அடைந்தன.
  • இந்திய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினரான குரு தத் சோந்தி என்பவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை ஒரு விளையாட்டு நிகழ்வுகளாக நடத்துவதற்கு முன்மொழிந்தார்.
  • அங்கு அனைத்து ஆசிய நாடுகளும் பிரதிநிதித்துவப் படுத்தப்படலாம்.
  • 1951 ஆம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளானது புதுதில்லியில் நடத்தப் பட்டன.

ஒழுங்குமுறைகள்

  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளானது 1951 ஆம் ஆண்டு முதல் 1978 ஆம் ஆண்டு வரை ஆசிய விளையாட்டுக் கூட்டமைப்பால் ஒழுங்குபடுத்தப்பட்டது.
  • 1982 ஆம் ஆண்டு முதல், ஆசிய ஒலிம்பிக் மன்றமானது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை ஒழுங்குபடுத்துகிறது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பு  தூரக் கிழக்கு நாடுகளின் சாம்பியன்ஷிப் விளையாட்டுகள் (FECG) என்ற பெயரில் இவ்விளையாட்டுகள் நடைபெற்றது.
  • 1912 ஆம் ஆண்டில் FECGயின் விளையாட்டுகளை நடத்துவதற்குத் தேவையான இடங்களானது ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே .தேர்வு செய்யப்பட்டு அமைக்கப் பட்டது.

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/19/Asian_Games_logo.svg/1200px-Asian_Games_logo.svg.png

  • 1913 ஆம் ஆண்டு 6 நாடுகள் பங்கேற்ற முதல் தூரக் கிழக்கு விளையாட்டுப் போட்டிகள் மணிலாவில் நடைபெற்றன.
  • 1934 ஆம் ஆண்டு பத்து போட்டிகளானது தூரக் கிழக்கு விளையாட்டுப் போட்டிகளில் நடத்தப்பட்டன.
  • 1934 ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது சீன-ஜப்பானியப் போர் நடைபெற்ற காலக் கட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளில் மஞ்சு பேரரசினை ஒரு போட்டி நாடாக சேர்க்க வேண்டும் என்ற ஜப்பானின் வற்புறுத்தலால், இவ்விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து சீனா விலகுவதாக அறிவித்தது.
  • 1938 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட தூரக் கிழக்கு விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.
  • பின்னர் அந்த அமைப்பும் கலைக்கப்பட்டது.

உருவாக்கம்

  • இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆசியாவின் பல்வேறு பகுதிகள் இறையாண்மை கொண்ட நாடுகளாக மாறியது.
  • இந்த நாடுகளில் பல நாடுகள் ஆசியாவில் தனது வல்லமையை வன்முறை இல்லாமல் வெளிப்படுத்த முயன்றன.
  • 1948 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற கோடைக் கால ஒலிம்பிக் போட்டியின் போது, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே ஒரு உரையாடல் தொடங்கியது.
  • அவ்வுரையாடலானது தூரக் கிழக்கு விளையாட்டுப் போட்டிகளை மீட்டெடுப்பதை உள்ளடக்கியதாக இருந்தது.
  • தூரக் கிழக்கு விளையாட்டுகளின் மறுசீரமைப்பானது, ஆசிய விளையாட்டுகள் நடைபெறும் போது ஒற்றுமை மற்றும் சாதிக்க வேண்டுமென்ற நாடுகளின் நிலை ஆகியவற்றைப் போதுமான அளவு வெளிப்படுத்தும் என்று குரு தத் சோந்தி நம்பினார்.
  • அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்ற ஒரு புதிய போட்டியினைப் பற்றிய யோசனையினை முன்மொழிந்தார்.

  • அதன் இறுதியில் ஆசிய தடகளக் கூட்டமைப்பானது உருவாக்கப்பட்டது.
  • இந்த புதிய அமைப்பிற்கான சாசனத்தினை உருவாக்குவதற்காக ஒரு ஆயத்தக் குழுவானது அமைக்கப்பட்டது.
  • 1949 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி, ஆசிய தடகளக் கூட்டமைப்பானது முறைப்படி புது தில்லியில் தொடங்கப்பட்டது.
  • மேலும் 1950 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த போட்டிகளின் தலைமையேற்று அந்தப் போட்டியினை நடத்தும் நகரமாக புது தில்லி அறிவிக்கப்பட்டது.

முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா

  • 1962 ஆம் ஆண்டு இவ்விளையாட்டு போட்டிகளானது பல நெருக்கடிகளால் பாதிக்கப் பட்டது.
  • தலைமையேற்றுப் போட்டியினை நடத்தும் நாடான இந்தோனேஷியாவானது, அரசியல் அங்கீகாரம் பெறுதல் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக இஸ்ரேல் மற்றும் தைவானை அப்போட்டிகளில் பங்கேற்க தேவையான அனுமதியினை அளிக்க மறுத்தது.
  • எனவே IOC அமைப்பானது விளையாட்டுப் போட்டிகளுக்கான அதன் ஆதரவினையும் IOC அமைப்பில் இந்தோனேசியாவின் உறுப்பினர் பதவியினையும் நிராகரித்தது.
  • ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பு (AFC), சர்வதேசப் பொழுதுபோக்குத் தடகளக் கூட்டமைப்பு (IAAF) மற்றும் சர்வதேசப் பளுதூக்கும் கூட்டமைப்பு (IWF) ஆகியவையும் இவ்விளையாட்டுகளுக்கான தங்கள் அங்கீகாரத்தை நீக்கியுள்ளன.
  • 1970 ஆம் ஆண்டு தேசியப் பாதுகாப்பு நெருக்கடியின் காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் திட்டத்தினை தென் கொரியாவும் கை விட்டது.

  • மேலும், இவ்விளையாட்டுகளை நடத்த இயலாமைக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது நிதி நெருக்கடியாகும்.
  • முந்தைய தலைமை நாடான, தாய்லாந்து, தென் கொரியாவிலிருந்து மாற்றப்பட்ட நிதியைப் பயன்படுத்தி பாங்காக்கில் இவ்விளையாட்டுகளை நடத்தும்.
  • இப்போட்டிகளை நடத்தும் படி ஜப்பான் நாடும் கேட்டுக் கொள்ளப் பட்டது.
  • ஆனால் ஜப்பான் நாடானது ஏற்கனவே ஒசாகாவில் எக்ஸ்போ’70 என்ற கண்காட்சியினை நடத்த உறுதியளித்ததால் அந்த வாய்ப்பை நிராகரித்தது.
  • இந்த விளையாட்டுகளின் பதிப்புகளானது தொடக்க நிகழ்ச்சி முதல் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
  • தெஹ்ரானில் 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளானது சீனா, வட கொரியா மற்றும் மங்கோலியாவின் பங்கேற்பினை முறையாக அங்கீகரித்தது.
  • அரபு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி இஸ்ரேல் ஆனது இவ்விளையாட்டுகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.
  • அதனைத் தொடர்ந்து தைவான் நாடும் இதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது ("சீன தைபே" என்ற பெயரில்).
  • ஆனால் அதன் அந்தஸ்தானது 1973 ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்று விளையாட்டுக் கூட்டமைப்பால் அதன் பொதுக் கூட்டத்தில் ரத்து செய்யப்பட்டது.
  • 1978 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னர், நிதி நெருக்கடி மற்றும் அரசியல் சிக்கல்கள் காரணமாக 1975 ஆம் ஆண்டு இவ்விளையாட்டுப் போட்டிகளுக்குத் தலைமையேற்கும் திட்டத்தினைப் பாகிஸ்தான் திரும்பப் பெற்றது.

  • இதனைத் தாய்லாந்து நடத்துவதற்கான வாய்ப்பானது வழங்கப்பட்டு, இவ்விளையாட்டு போட்டிகள் பாங்காக்கில்  நடைபெற்றது.
  • 1962 ஆம் ஆண்டு போலவே, தைவான் மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றின் அரசியல் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு அச்சங்களுக்கு மத்தியில் விளையாட்டுக் கூட்டமைப்பால் இந்நாடுகளின் பங்கேற்பானது மறுக்கப்பட்டது.
  • பல நிர்வாக அமைப்புகள் இத்தடைக்கு எதிராக தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தன.
  • 1980 ஆம் ஆண்டு கோடைக் கால ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களைத் தடை செய்யப் போவதாக சர்வதேச ஒலிம்பிக் குழுவானது அச்சுறுத்தியது.
  • எனவே இவ்விளையாட்டுகள் தொடங்குவதற்கு முன்பே பல நாடுகள் இதிலிருந்து பின்வாங்கின.

https://media.voog.com/0000/0042/3095/photos/destinations_average_LAU2_block.jpg

மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்கம்

  • இந்த நிகழ்வுகளானது ஆசிய விளையாட்டுக் கூட்டமைப்பினை நிறுவுதல் தொடர்பான செயல்பாடுகளை மாற்றியமைக்க ஆசியாவில் உள்ள தேசிய ஒலிம்பிக் குழுக்களுக்கு வழி காட்டியது.
  • 1981 ஆம் ஆண்டு நவம்பரில் ஆசிய ஒலிம்பிக் மன்றமானது இஸ்ரேல் மற்றும் தைவானைத் தவிர்த்து உருவாக்கப்பட்டது.
  • 1982 ஆம் ஆண்டு இந்தியா இதனைத் தலைமையேற்று நடத்த திட்டமிடப்பட்டது.
  • மேலும் பழைய AGF கால அட்டவணையைப் பராமரிக்க OCA அமைப்பு முடிவு செய்தது.
  • 1986 ஆம் ஆண்டு முதல் தென் கொரியாவின் சியோலில் திட்டமிடப்பட்ட ஆசிய விளையாட்டுப் போட்டிகளுடன் இந்த விளையாட்டுகளை OCA அமைப்பு முறையாக மேற்பார்வையிடத் தொடங்கியது.
  • 1990 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தைவான் (சீனா குடியரசு) மீண்டும் சேர்க்கப் பட்டது.

  • 1994 ஆம் ஆண்டு ஹிரோஷிமாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் சோவியத் யூனியனின் முன்னாள் 5 குடியரசுகளின் தொடக்கப் பங்கேற்பானது நிகழ்ந்தது.
  • கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை மத்திய ஆசியாவின் ஒரு பகுதியாக இருந்தன.
  • இது இந்த விளையாட்டுப் போட்டிகளுக்குத் தலைமையேற்கும் நாடுகளில் நடைபெறும் போட்டிகளில், அதன் தலைநகருக்கு வெளியே நடைபெற்ற முதல் பதிப்பாகும்.
  • இருப்பினும், 1990 ஆம் ஆண்டு பாரசீக வளைகுடாப் போரின் காரணமாக ஈராக் நாடானது இவ்விளையாட்டுகளிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டது.
  • இப்போட்டியை நடத்தும் நாடுகளுடனான அரசியல் பிரச்சனைகளால் வடகொரியா நாடும் இப்போட்டியினைப் புறக்கணித்தது.

  • தொடக்க விழாவின் போது நரேஷ் குமார் என்ற அதிகாரிக்கு மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் இந்த விளையாட்டுகள் தடைபட்டன.
  • 1998 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டியானது தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் நான்காவது முறையாக நடத்தப் பட்டதைக் குறித்தது.
  • தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் இந்த விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்த நிலையில், 1998 ஆம் ஆண்டு டிசம்பர் 20 அன்று அதன் நிறைவு விழாவானது நடைபெற்றது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்