TNPSC Thervupettagam

இடைக்கால நிதிநிலை அறிக்கை 2019-20

February 8 , 2019 2163 days 1909 0

நிதிநிலை அறிக்கை 2019-20

  • 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 அன்று மத்திய நிதி அமைச்சர் பியுஷ் கோயல் 2019 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

  • வருகின்ற பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர் பாராளுமன்றம் கூடிய பிறகு ஒரு முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
புதிய அறிவிப்புகள்
விவசாயிகள்
  • பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதியின் கீழ் 12 கோடி சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு நிலையான ஆண்டு வருமானம் ரூபாய் 6000 அளிக்கப்படும்.
  • ராஷ்டிரிய கோகுல் திட்டத்திற்கான நிதி ரூ.750 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • பசு மாட்டு இனங்களின் நீடித்த மரபணு மேம்படுத்தலுக்காக ராஷ்டிரிய காமதேனு ஆயோக் அமைக்கப்படும்.
  • மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள 5 கோடி மீனவர்கள் நலனுக்காக ஒரு புதிய தனிப்பட்ட துறையாக மீன்வளத் துறை அமைக்கப்படும்.
  • விலங்குகள் நலம் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக விவசாயிகளுக்கு 2 சதவிகிதம் வட்டி மானியம் அளிக்கப்படும். மேலும் குறித்த காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தினால் கூடுதலாக 3 சதவிகிதம் வட்டி மானியம் அளிக்கப்படும்.
  • பேரழிவின்போது அளிக்கப்படும் 2 சதவிகித வட்டி மானியமானது தற்பொழுது கடனைச் செலுத்துவதற்கு மாற்றியமைக்கப்பட்ட காலம் முழுவதிற்கும் அளிக்கப்படும்.
  • குறைந்தபட்ச ஆதார விலையை 1.5 மடங்கு அளவிற்கு அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • அரசாங்க மின்னணு முறையிலான சந்தையானது அனைத்து பொதுத் துறை நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள்
  • பிரதான் மந்திரி ஷரம் யோகி மன்தன் திட்டத்தின் கீழ் அமைப்பு சாராத துறையில் பணியாற்றும் 10 கோடி தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் உறுதி செய்யப்படும்.
  • 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ. 3000 அளிக்கப்படும்.
  • மாத வருமானம் 15000 வரை.
  • யார் 18 வயதில் சேருகின்றார்களோ அவர்கள் 60 வயது வரை மாதம் 55 ரூபாய் செலுத்த வேண்டும்.
  • யார் 29 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் சேருகின்றார்களோ அவர்கள் 60 வயது வரை மாதம் 100 ரூபாய் செலுத்த வேண்டும்.
சுகாதாரம்
  • ஹரியானாவில் 22-வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.

 

கிராமப் புறம்
  • கிராம் சதக் யோஜனாவின் கீழ் கிராமப் புறங்களில் சாலைகளை அமைப்பதற்கு ரூ.19,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 2019-20 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்திற்காக ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நேரடி வரி
  • ரூபாய் 5 இலட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • நடுத்தர வரி செலுத்தும் 3 கோடி நபர்களுக்கு ரூபாய் 23,000 கோடிகளுக்கும் மேல் வரி நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.
  • வங்கி, தபால் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் வைப்பு நிதியின் மூலம் பெறப்படும் வட்டிக்கு வருமான வரிப் பிடித்தத்தின் வரம்பானது ரூ.10,000 லிருந்து ரூ.40,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது.

  • வாடகை மீதான வரிப் பிடித்தத்திற்கான வரிப் பிடித்த வரம்பானது 1,80,000 லிருந்து 2,40,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • வருமான வரிச் சட்டத்தின் 80 IBA பிரிவின் கீழ், மலிவு விலையிலான வீடுகளுக்கான வரிச் சலுகைகள் 2020 ஆம் ஆண்டு மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த நிதிநிலை அறிக்கையானது அடுத்த நிதியாண்டிலிருந்து பணிக் கொடை வரம்பை ரூபாய் 10 இலட்சத்திலிருந்து ரூபாய் 30 இலட்சமாக உயர்த்தியுள்ளது.
சரக்கு மற்றும் சேவைகள் வரி
  • 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவைகள் வரி வசூலானது 1 இலட்சம் கோடியைத் தாண்டியது.

நிதித் திட்டம்
  • 2019-20 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 3.4 சதவிகிதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • நிதிப் பற்றாக்குறையின் இலக்கான 3 சதவிகிதம் 2020-21 ஆம் ஆண்டில் எட்டப்படும்.
  • 2018-19 ஆம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 3.4 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • 2019-20 ஆம் நிதியாண்டில் மொத்த செலவினமானது 13 சதவிகிதத்திற்கும் மேல் அதிகரித்து 27,84,200 கோடிகளாக அது உயர்ந்துள்ளது.
  • 2019-20 ஆம் நிதியாண்டிற்கான மூலதனச் செலவு ரூபாய் 3,36,292 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • 2019-20 ஆம் நிதியாண்டில் மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படும் திட்டங்களுக்கான ஒதுக்கீடானது ரூ.3,27,679 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 2019-20 ஆம் நிதியாண்டில் தேசியக் கல்வித் திட்டத்திற்கான ஒதுக்கீடானது ஏறக்குறைய 20 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
  • 2019-20 ஆம் நிதியாண்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்திற்கான ஒதுக்கீடானது (ICDS – Integrated Child Development Scheme) 18 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டு ரூபாய் 27,584 அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான ஒதுக்கீடானது கணிசமான அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
    • பட்டியலிடப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீடானது 35.6 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான ஒதுக்கீடானது 28 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய அரசு ரூ.80,000 கோடி மதிப்பிலான பங்கு விற்பனைக்கான இலக்கினை நிர்ணயித்துள்ளது.
  • இந்திய அரசு தற்பொழுது நிதிப் பற்றாக்குறை ஒருங்கிணைப்புத் திட்டத்துடன் கடன் ஒருங்கிணைப்புத் திட்டத்தின் மீதும் கவனம் செலுத்துகிறது.
  • பண மதிப்பிழப்பிற்குப் பின்பு 3 இலட்சத்து 38 ஆயிரம் போலி நிறுவனங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்
  • நாட்டில் உள்ள வளங்களின் மீதான முதல் உரிமை ஏழைகளுக்கு மட்டுமே உள்ளது.
  • ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பூர்த்தி செய்வதற்காக கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 25 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • கிராமப் புறங்களில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் கிராமப்புற- நகர்ப்புறப் பிளவுகளை இணைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட செலவினங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன.
  • 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளாக தேவைப்படும் அனைத்து குடும்பங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்படும்.
வடகிழக்கு மாநிலங்கள்
  • 2019 – 20 ஆம் நிதியாண்டில் வட கிழக்கு மாநிலங்களுக்கான ஒதுக்கீடானது 21 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு ரூ.58,166 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சமீபத்தில் காற்று தரவரிசைக்கான வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேசம் இணைந்துள்ளது.
  • முதன்முதலாக வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள் இந்தியாவின் இரயில் போக்குவரத்து வரைபடத்தில் இணைந்துள்ளன.
  • பிரம்மபுத்திரா நதியின் மேம்படுத்தப்பட்ட நீர்வழி போக்குவரத்துத் திறன் மூலம் சரக்குப் போக்குவரத்து நடத்தப்படுகிறது.
எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர்
  • மீதமுள்ள அனைத்து அறிவிக்கப்படாத நாடோடிப் பழங்குடிகள் மற்றும் பகுதி நாடோடிப் பழங்குடிகள் ஆகியோரைக் கண்டறிவதற்காக நிதி ஆயோக்கின் கீழ் ஒரு புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது.
  • அறிவிக்கப்படாத நாடோடிப் பழங்குடிகள் மற்றும் பகுதி நாடோடிப் பழங்குடிகளின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஒரு புதிய மேம்பாட்டு நல வாரியம் அமைக்கப்படும்.
பாதுகாப்பு
  • பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடானது முதன்முறையாக 3,00,000 கோடியைத் தாண்டியது.
  • தேவை ஏற்பட்டால் இந்திய அரசு பாதுகாப்புத் துறைக்கு கூடுதல் நிதியை அளிக்கும்.
  • கடந்த சில ஆண்டுகளில் ”ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்” என்ற திட்டத்தின் கீழ் அரசு ரூபாய் 35000 கோடியை ஒதுக்கியுள்ளது.
இரயில்வே
  • 2019-20 ஆம் ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கையில், மூலதன உதவிக்காக ரூபாய் 64,587 கோடி ஒதுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • ஒட்டுமொத்த மூலதன செலவினம் ரூ.1,58,658 கோடியாகும்.

பொழுதுபோக்கு
  • இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒற்றை சாளர முறையை அணுகுவதற்கும் படப்பிடிப்பை எளிதாக மேற்கொள்வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • திருட்டு வீடியோக்களைக் கட்டுப்படுத்துவதற்காக திரைப்படத் துறை சட்டத்தில் புதிய திருட்டு வீடியோ எதிர்ப்பு விதிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
வணிகர்கள்
  • பதிவு செய்யப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் 1 கோடி கடன்களுக்கான வட்டியில் 2 சதவிகிதம் மானியம் அளிக்கப்படும்.
  • உள்நாட்டு வர்த்தகத்தின் மீது புதுப்பிக்கப்பட்ட கவனம் செலுத்தப்படும்.
  • தொழில்கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையானது, தொழிற்சாலைகள் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை என்று பெயரிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கிராமங்கள்
  • இந்திய அரசாங்கம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 இலட்சம் கிராமங்களை டிஜிட்டல் கிராமங்களாக மாற்ற உள்ளது.
மற்ற அறிவிப்புகள்
  • தேசிய செயற்கை நுண்ணறிவுத் திட்டத்திற்கு உதவுவதற்காக ஒரு புதிய தேசிய செயற்கை நுண்ணறிவுத் தளம் ஏற்படுத்தப்படும்.
முன்னுரிமைத் துறைகள் மற்றும் 2030 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வைக்கான 10 பரிமாணங்கள்
  • அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பை உருவாக்குதல்
  • அனைத்து குடிமக்களையும் சென்றடையக் கூடிய டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குதல்.
  • தூய்மையான மற்றும் பசுமையான இந்தியா.
  • தூய மற்றும் பசுமை இந்தியா மூலம் ஊரக தொழில்மயமாக்கலை விரிவுபடுத்துதல்.
  • அனைத்து இந்தியர்களுக்கும் பாதுகாப்பான குடிநீருடன் கூடிய தூய நதிகள்.
  • கடல் மற்றும் கடற்கரையோரங்கள்
  • உலகின் ஏவுதளமாக இந்தியா விளங்கச் செய்தல்.
  • உணவில் தன்னிறைவு அடைதல் மற்றும் கரிம உணவு (ரசாயனங்களற்ற) மீதான வலியுறுத்தல்களுடன் விவசாய உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்.
  • ஆரோக்கியமான இந்தியா
  • உயிர்ப்புள்ள, பொறுப்புள்ள மற்றும் சகோதரத்துவ நிர்வாகத் திறனுடன் கூடிய சிறிய அமைச்சரவையைக் கொண்டு நல்லாட்சியை அளித்தல்.
இடைக்கால பட்ஜெட் 2019-20-ன் முக்கியத் தகவல்கள்
  • 2022 ஆம் ஆண்டில் “புதிய இந்தியாவிற்கான” பாதையை நோக்கி நகர்தல்.
  • கழிப்பறை வசதி, குடிநீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை அனைவரும் அணுகக்கூடிய தூய்மையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குதல்.
  • இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அவர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகளை வழங்குவது.
  • தீவிரவாதம், வகுப்பு வாதம், சாதியம், ஊழல் மற்றும் அரசுத் துறையில் உறவினர்களுக்கு உயர் பதவி அளித்தல் ஆகியவற்றிலிருந்து இந்தியாவை விடுவித்தல்.
அடுத்த தலைமுறைக்கான தொலைநோக்குப் பார்வை
  • கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவை அடுத்த தலைமுறைக்கான அடித்தளம்.

  • அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய தயாராக இருத்தல்.
  • அதற்குப் பிறகு அடுத்த 8 ஆண்டுகளில் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய எண்ணுதல்.

--------------

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்