TNPSC Thervupettagam

இது தேர்தல்களின் ஆண்டு!

April 1 , 2024 286 days 191 0
  • 2024-ஐத் ‘தேர்தல்களின் ஆண்டு’ என்றே கூறலாம். இந்த ஆண்டில் உலகில் 50 நாடுகளாவது பொதுத் தேர்தலைச் சந்திக்கின்றன; உலக மக்கள்தொகையில் 60% பேர் வாக்களிக்க உள்ளனர். ஜனவரியில் பூடான், வங்கதேசம், தைவான், பின்லாந்து ஆகிய நாடுகளிலும், பிப்ரவரியில் பாகிஸ்தான், இந்தோனேசியா, கம்போடியா ஆகிய நாடுகளிலும், மார்ச்சில் ரஷ்யா, ஈரான், போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் தேர்தல் முடிந்துவிட்டது.
  • இந்தியாவில் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. மே-செப்டம்பர் இடையே தென் ஆப்ரிக்கா, மெக்சிகோ, ஆஸ்திரியா, ருவாண்டா, மங்கோலியா, லிதுவேனியா, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் தேர்தலைச் சந்திக்கின்றன.
  • செப்டம்பர்-அக்டோபர் இடையே இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அக்டோபர்-டிசம்பரில் உருகுவே, ஜோர்டான், உஸ்பெகிஸ்தான், வெனிசூலா ஆகிய நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்காவில், நவம்பர் 5 அன்று அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது.
  • கரீபியப் பகுதியில் உள்ள ஹைதி தீவு நாட்டில் 2019இல் திட்டமிடப்பட்ட தேர்தல், இந்த ஆண்டாவது நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. உள்நாட்டுக் கலவரங்கள் காரணமாக அங்கு தேர்தல் பல முறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
  • பிரிட்டனில் ஜனவரி, 2025இல் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடக்க வேண்டும். எனினும், தற்போதைய பிரதமர் ரிஷி சுனக், அதற்கு முன் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பிரிட்டனில் இந்த ஆண்டே தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்