வ.எண் |
பெயர் |
புவியியல் வரம்பு |
விளக்கம் |
1. |
கிர் |
சௌராஷ்டிரா (குஜராத்) |
இந்தியாவிலுள்ள மற்ற இன வகையை விட இந்த இனவகைப் பசுக்கள் அதிக பால் தருகின்றன. இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் இவை கலப்பின வகைகளின் உருவாக்கலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. |
2. |
சாஹிவால் |
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், & ஹரியானா |
இவை தனித்தன்மை வாய்ந்த சிவப்பு நிறத்தால் அடையாளப் படுத்தப்படுகின்றன. |
3. |
சிவப்பு சிந்து |
சிந்து, பாகிஸ்தான் |
தற்போது இது பரவலாக காணப்படுகிறது. |
4. |
ரதி |
பிகானீர் (ராஜஸ்தான்), ஹரியானா & பஞ்சாப் |
இது ராஜஸ்தானின் வறண்டப் பகுதியில் காணப்படும் முக்கியமான கறவை இன வகையாகும். இந்தப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக இந்த இனம் விளங்குகிறது. |
5. |
ஹரியானா |
ஹரியானா, உத்திரப்பிரதேசம், பீகார் & ராஜஸ்தான் |
ஏர் உழுதல் மற்றும் போக்குவரத்திற்கு இந்தக் கால்நடைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகைப் பசுக்கள் நிறைய பால் தருகின்றன. |
6. |
காங்க்ரேஜ் |
பூஜ், வடகுஜராத் & ராஜஸ்தான் |
இந்தியாவிலுள்ள கால்நடை இனங்களில் இந்த வகை மாடுகள் பலமானவை மற்றும் கடினமாக உழைக்கக் கூடியவை. |
7. |
ஓங்கோல் |
ஆந்திராவின் குண்டூர் & ஓங்கோல் |
இந்த வகை மாடுகள் ஏர் உழுதல் மற்றும் இழுவை வேலை மற்றும் போக்குவரத்திற்கு பயன்படுகின்றன. இந்தப் பசுக்கள் போதுமான அளவு பால் தருகின்றன. இயற்கையாகவே இந்த வகை மாடுகள் கோமாரி நோய் (Foot-and-mouth disease) மற்றும் Mad Cow எனப்படும் போவின் ஸ்போஞ்சாம்பிக் என்செபலோபதி (Bovine spongiform encephalopathy) நோய் ஆகியவற்றை எதிர்க்கும் திறனுடையவை. |
8. |
சிவப்பு காந்தாரி |
மராத்வாடா (மகாராஷ்ட்ரா) |
இவை நல்ல பாரம் இழுக்கக்கூடியவை ஆகும். இவை போதுமான அளவு பாலினைத் தருகின்றன. |
9. |
நிமாரி |
கந்த்வா (மத்தியப் பிரதேசம்) |
இவை கறவை மற்றும் பாரம் இழுக்கக்கூடிய வகையாகும். இவை செம்பு நிறத்தில் வெள்ளைத் திட்டுக்களைக் கொண்டிருக்கும். |
10. |
அம்ரித் மகால் |
கர்நாடகா |
இந்த வகை மாடுகள் அதிக இழுப்புத் திறன் மற்றும் ஆயுட் காலம் உடையவை. |
11. |
ஹலிகார் |
கர்நாடகாவின் ஹாசன், மைசூர் மற்றும் தும்கூர் மாவட்டங்கள் |
இந்த இழுவை மாடுகள் சாலை மற்றும் விவசாய நில வேலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அம்ரித்மகால் இன மாடுகளுடன் நெருங்கிய தொடர்புடையவை. எனினும் இவை மிகவும் மெலிவாக இருக்கின்றன மற்றும் குறைந்த அளவு பாலினையேக் கொடுக்கின்றன. |
12. |
நகோரி |
நாகூர் (ராஜஸ்தான்) |
மிகச்சிறந்த இழுவை வகையாகும். காளைகள் இழுவைப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றன. |
13. |
கேன்கதா |
பண்டா (உத்திரப்பிரதேசம் & மத்தியப் பிரதேச எல்லைப்பகுதி) |
சிறிய காளைகள் ஆனால் மிகவும் உறுதியான விலங்குகள் பாறை நிலப்பகுதிகளில் பயிரிட உதவுகின்றன. |
14. |
சிரி |
டார்ஜ்லிங் மற்றும் சிக்கிமைச் சுற்றியுள்ள மலைகள் (பூட்டானில் இருந்து இவை இங்கு வந்தன) |
இவை மலைகளின் கரடுமுரடான சூழ்நிலைக்கு ஏற்ற வகையாகும். காளைகளின் வலிமையின் காரணமாக இழுவைப் (ஏர் உழுதல் & போக்குவரத்து) பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றன. |
15. |
கேரிகார் |
கேரி (உத்திரப்பிரதேசம்) |
இந்த இனக் கால்நடைகள் சுறுசுறுப்பானவை இவை மேய்ச்சலுக்கு மட்டும் பயன்படுகின்றன. இவை எளிய இழுவைப் பணிகள் மற்றும் மிக எளியப் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன. மிகக் குறைவான அளவே பால் கொடுப்பவை. |
16. |
மேவாட்டி |
ராஜஸ்தான் |
இந்த வகை மாடுகள் பொதுவாக வலிமையான, மற்றும் சக்திவாய்ந்தவை. மேலும் சாந்தமானவை ஆகும். இவை ஏர் உழுதல், இழுவை வண்டி மற்றும் ஆழமானக் கிணறுகளில் இருந்து நீர் இறைத்தல் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றன. இவை போதுமான அளவு பாலைத் தருகின்றன. |
17. |
கிருஷ்ணா பள்ளத்தாக்கு |
மகாராஷ்ட்ராவின் தெற்கு எல்லை மற்றும் ஆந்திரப் பிரதேசம் |
காளைகள் சக்தி வாய்ந்தவை, கடினமான ஏர் உழுதல் மற்றும் குறைவான இழுவைப் பணிக்கு ஏற்றவை. இந்த வகைப் பசுக்கள் போதுமான அளவு பயன்தருகின்றன. |
18. |
வீச்சூர் |
கேரளா |
உலகிலேயே மிகச் சிறிய மாட்டின் வகை ஆகும். இவை பாரம் இழுப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பசுக்கள் குறைந்த அளவு பாலினையேத் தருபவை. |