TNPSC Thervupettagam

இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல்களின் வரலாறு – பாகம் 9

May 21 , 2024 234 days 510 0

(For English version to this please click here)

10வது லோக் சபா தேர்தல் (1991 / 1996)

  • வெற்றி பெற்ற கட்சி: இந்திய தேசிய காங்கிரஸ்
  • பிரதமர்: பி.வி. நரசிம்ம ராவ்
  • பதவிக் காலம்: ஜூன் 21, 1991 - மே 16, 1996
  • எதிர்க்கட்சித் தலைவர்: எல்.கே. அத்வானி மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் (ஜூலை 1993 முதல் மே 1996 வரை)
  • சபாநாயகர்: சிவராஜ் பாட்டீல்
  • காலம்: ஜூலை 10, 1991 - மே 22, 1996

மீள்பார்வை:

  • ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, பிரதமர் பதவி ஏற்ற பி.வி. நரசிம்மராவ், பொருளாதார தாராளமயமாக்கல் பாதையில் நுழைந்தார்.
  • இவரின் பதவிக்காலம் மண்டல்-மந்திர் அரசியலால் குறிக்கப்பட்டது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) இடஒதுக்கீடு மற்றும் ராம ஜென்ம பூமி இயக்கமானது பாபர் மசூதி இடிப்புக்கு வழி வகுத்தது.
  • பஞ்சாப், அசாம் மற்றும் ஜம்மு & காஷ்மீரில் பிரிவினைவாத அச்சுறுத்தல்கள் வெளிப்பட்டன.

பாராளுமன்றச் செயல்பாடு:

  • பத்தாவது மக்களவையானது 16 கூட்டத் தொடர்களில் நடைபெற்ற 423 அமர்வுகளில் 2,528 மணி நேரம் கூடியது.
  • குறிப்பாக பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு பற்றிய விவாதங்கள் முக்கியமானவை ஆகும்.
  • பி.வி. நரசிம்ம ராவின் பொருளாதாரக் கொள்கைகள் காங்கிரஸின் முந்தைய சமதர்மச் சார்புகளிலிருந்து விலகி, பணவீக்கம், நிதிப் பற்றாக்குறை மற்றும் வெளிநாட்டுக் கடன் போன்ற பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ள முற்போக்கானத் தாராளமயமாக்கலில் கவனம் செலுத்தியது.

முக்கிய நிகழ்வுகள்:

  • மண்டல் மற்றும் மந்திர் பிரச்சினைகள் 1992 ஆம் ஆண்டில் மீண்டும் வெடித்தன.
  • நரசிம்ம ராவ் இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையை மறுவடிவமைத்து, தாராளமயமாக்கல் சகாப்தத்தை அறிமுகப்படுத்தி, குறிப்பிடத்தக்க வகையில் பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடங்கினார், னார்.
  • பாபர் மசூதி இடிப்பு மற்றும் மண்டல் கமிஷன் அறிக்கை நாடு முழுவதும் சமூகப் பிளவுகளையும், வன்முறைகளையும் அதிகரித்தது.

11வது மக்களவை (1996 / 1998)

  • வெற்றி பெற்ற கட்சி: தெளிவான பெரும்பான்மை யாருக்கும் இல்லை; காங்கிரஸ் ஆதரவுடன் ஐக்கிய முன்னணி (கூட்டணி) ஆட்சி அமைத்தது.
  • பிரதமர்(கள்):
  • அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் மே 16, 1996 முதல் ஜூன் 1, 1996 வரை பாஜக ஆட்சி அமைந்தது.
  • எச்.டி. தேவகவுடா மற்றும் ஐ.கே. குஜ்ரால் 1996 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை ஜனதா தள் கட்சித் தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணிக்குத் தலைமை தாங்கினர்.
  • பதவிக் காலம்(கள்): மே 23, 1996 - மார்ச் 23, 1998
  • எதிர்க் கட்சித் தலைவர்: இந்திய தேசிய காங்கிரஸின் சரத் பவார் ஒரு குறிப்பிடத்தக்க எதிர்க் கட்சிப் பிரமுகராக இருந்தார்.
  • சபையின் சபாநாயகர்(கள்): பி.ஏ. சங்மா

மீள்பார்வை:

  • கீழவையின் (மக்களவை) பதினொன்றாவது அமர்வானது தொண்ணூறுகளின் பிற்பகுதியில், இந்திய அரசியலின் சிக்கல்களைப் பிரதிபலித்தது.
  • எந்தக் கட்சியும் இங்கு பெரும்பான்மை பெறவில்லை, இது குறுகிய கால அரசாங்கங்களுக்கு வழி வகுத்தது.
  • தேசிய அரசியலில், கூட்டணிக் கட்சிகளின் எழுச்சின் மற்றும் பிராந்தியக் கட்சிகளின் பெரும் செல்வாக்கு வலுப்பெற்றது.
  • இந்த மக்களவையில் ஊழல் மோசடிகள், அதிகரித்து வரும் கிளர்ச்சிகள், வகுப்புவாதப் பதட்டங்கள் மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா போன்ற சட்டங்களை இயற்றுவது மேலோங்கி இருந்தது.

தேர்தல் முடிவுகள்:

  • பாரதிய ஜனதா கட்சி (BJP): 161 இடங்கள்
  • இந்திய தேசிய காங்கிரஸ் (INC): 140 இடங்கள்
  • ஜனதா தள் கட்சி: 46 இடங்கள்

கூட்டணி மாற்றங்கள்:

  • ஆளுங்கட்சியான காங்கிரஸ், பாஜக மற்றும் ஐக்கிய முன்னணிக் கூட்டணியின் கீழ் உள்ள பிராந்திய அரசாங்கங்களின் ஒரு பரந்த கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே ஒரு மும்முனைப் போட்டி நிலவியது.
  • ஒவ்வொருவரும் ஒரு 'மதச்சார்பற்ற' அரசாங்கத்தின் மாற்றுக் கருத்துக்களை முன் வைத்தனர்.

அரசு உருவாக்கம் மற்றும் சரிவு:

  • அடல் பிஹாரி வாஜ்பாயைப் பிரதமராகக் கொண்டு பாஜக ஆட்சி அமைத்தது, ஆனால் அது கூட்டணி நிலைத் தன்மையின்மையால் 13 நாட்களில் சரிந்தது.

எதிர்கொண்ட சவால்கள்:

  • ஜெயின் டைரி தொடர்பான ஹவாலா வழக்கு மற்றும் பீகாரின் மாட்டுத் தீவன ஊழல் உள்ளிட்ட அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் மோசடிகள் பற்றிய கவலைகளுக்குப் பதிலளித்தல்.
  • லஞ்சம் பெற்றதாக, பாஜக தலைவர் எல்.கே அத்வானி உட்பட பத்து அரசியல்வாதிகளின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
  • மேலும், ஜனதா தள் தலைவர் லாலு பிரசாத் யாதவ், 960 கோடி ரூபாய் கால்நடை தீவன ஊழல் வழக்கில் விசாரிக்கப்பட்டார்.

வகுப்புவாதம் மற்றும் பிராந்தியப் பதட்டங்கள்:

  • சில பகுதிகளில் அதிகரித்து வந்த வகுப்புவாதப் பதட்டங்கள் மற்றும் பிரிவினைவாத கிளர்ச்சி ஆகியவை காஷ்மீருக்கு "அதிகபட்ச சுயாட்சி" என்ற பிரதமர் கவுடாவின் வாக்குறுதியால் எதிர் கொள்ளப் பட்டன.
  • ஐக்கிய முன்னணிக் கூட்டணியானது மதச் சார்பற்றப் பொருளாதார முன்னேற்றத்தை வலியுறுத்தியது.
  • மேலும் அவர்கள் குறைந்த வரி விகிதங்களுடன் ஒரு இலக்கு பட்ஜெட்டை வெளியிட்டனர்.

வெளியுறவுக் கொள்கைகளில் கவனம் செலுத்துதல்:

  • குஜ்ராலின் பதவிக் காலமானது, அண்டை நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதையும், சச்சரவுகளை அமைதியான முறையில் தீர்ப்பதையும் நோக்கமாகக் கொண்ட ‘குஜ்ரால் கோட்பாட்டில்’ கவனம் செலுத்தியது.
  • வங்க தேசம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்தியதில் கொள்கை வெற்றியானது பிரதிபலிக்கப் பட்டது.

சட்டமன்றம் மற்றும் கட்சி சவால்கள்:

  • பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு கூட்டணிக்குள் எதிர்ப்பு காரணமாக அது அரசியல் பிரச்னைகளால் முடங்கியது.
  • சாதி, வர்க்கம் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளில் கருத்தியல் வேறுபாடுகள் காரணமாக கட்சிகளுக்குள், குறிப்பாக ஜனதா தள் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது.

காங்கிரஸ் ஆதரவைத் திரும்பப் பெறல் மற்றும் புதிய தேர்தல்கள்:

  • மார்ச் 1997 மற்றும் நவம்பர் 1997 ஆம் ஆண்டில் காங்கிரஸ் இரண்டு முறை ஆதரவைத் திரும்பப் பெற்றது, இதன் விளைவாக மற்றொரு தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டது.
  • 1998 ஆம் ஆண்டுத் தேர்தல்கள், காங்கிரஸ் அரசாங்கத்தின் மீதான ஏமாற்றத்தின் மத்தியில் சாதி அடிப்படையிலான மற்றும் பிராந்திய அரசியலின் எழுச்சியால் குறிப்பிடப் பட்டன.

12வது லோக் சபா தேர்தல் (1998 / 1999)

  • வெற்றி பெற்ற கட்சி: பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA)
  • பிரதமர்: அடல் பிஹாரி வாஜ்பாய்
  • காலம்: மிகக் குறுகிய காலம், மார்ச் 10, 1998 முதல் ஏப்ரல் 26, 1999 வரை.
  • எதிர்க்கட்சித் தலைவர்: சோனியா காந்தி, எதிர்க்கட்சியில் மிகப்பெரிய கட்சியான இந்தியத் தேசிய காங்கிரஸைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்.
  • சபாநாயகர்: ஜி.எம்.சி.பாலயோகி
  • அவரது பதவிக் காலம்: மார்ச் 24, 1998 - மார்ச் 3, 2002 (12வது மக்களவை மற்றும் 13வது மக்களவையின் ஒரு பகுதியை உள்ளடக்கியது)

மீள்பார்வை:

  • அரசாங்க வகை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சிக் கூட்டணியின் கீழ் கூட்டணி ஆட்சி.
  • தலைமை: அடல் பிஹாரி வாஜ்பாய் இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பணியாற்றினார், அவர் பாஜகவின் இந்து தேசியவாத நிகழ்ச்சி நிரலை தேசிய அளவில் உயர்த்தினார்.

தேர்தல் முடிவுகள்:

  • இடங்கள்: இந்திய தேசிய காங்கிரஸ் 141 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 32 இடங்களையும் பெற்றன.

சாதனைகள்:

  • பொக்ரான் அணுசக்தி சோதனைகள்: இவை இரண்டு மாதங்கள் நடத்தப்பட்ட நாடாளுமன்ற அமர்வின் மத்தியில்  மேற்கொள்ளப் பட்டது, மேலும் பொக்ரான் II சோதனைகள் இந்தியாவின் தன்னம்பிக்கை மற்றும் பெரும் திறனை அடையாளப் படுத்தியது.
  • இஸ்ரோவின் சாதனை: விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் கணிசமான முன்னேற்றத்தை வெளிப்படுத்தி, இந்த காலக் கட்டத்தில் இந்தியா தனது அதிநவீன செயற்கைக் கோளை விண்ணில் ஏவியது.

முக்கிய நிகழ்வுகள்:

  • டெல்லி-லாகூர் பேருந்து சேவை: பாகிஸ்தானுடனான உறவில் விரிசல் இருந்த போதிலும் நம்பிக்கை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வாஜ்பாய் அவர்களால் இந்தச் சேவை தொடங்கப் பட்டது.
  • கார்கில் போர்: ஒரு பெரிய தேசியப் பாதுகாப்புச் சவாலாக உருவெடுத்த இந்த மோதலானது  வாஜ்பாயின் தலைமையைச் சோதித்தது.

கூட்டணி சவால்கள்:

  • ஆதரவு திரும்பப் பெறப்பட்டது: ஏப்ரல் 1999 ஆம் ஆண்டு கூட்டணியில் இருந்த தனது ஆதரவை ஜெயலலிதா விலக்கிக் கொண்டார், இதனால் அக்கூட்டணியில் நிலைத் தன்மையின்மை ஏற்பட்டது.
  • பெரும்பான்மையைப் பெறத் தவறியது: பாஜக அரசு பெரும்பான்மையைப் பெறத் தவறியதால், வாஜ்பாய் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

தலைமை முடிவு:

  • சோனியா காந்தியின் முடிவு: தனது வெளிநாட்டுப் பூர்வீகம் உட்பட பல்வேறு காரணங்களால் அரசாங்கத்தை வழி நடத்த அவர் முன்வரவில்லை.

முன்கூட்டிய ஆட்சிக் கலைப்பு:

  • லோக்சபா முன்கூட்டியே கலைக்கப்பட்டது, இது கூட்டணி அரசியல் மற்றும் உறுதியற்ற சவால்களைப் பிரதிபலித்தது.
  • இது அடல் பிஹாரி வாஜ்பாயின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியைத் தேசிய அளவில் உயர்த்தியது.

13வது லோக்சபா தேர்தல் (1999 / 2004)

  • வெற்றி பெற்ற கட்சி: பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA)
  • பிரதமர்: அடல் பிஹாரி வாஜ்பாய்
  • காலம்: அக்டோபர் 13, 1999 - மே 22, 2004
  • எதிர்க் கட்சித் தலைவர்: இந்தியத் தேசிய காங்கிரஸின் சோனியா காந்தி
  • சபாநாயகர்: மனோகர் ஜோஷி
  • காலம்: மே 10, 2002 - ஜூன் 2, 2004 (ஜி. எம். சி. பாலயோகிக்குப் பிறகு)

மீள்பார்வை:

  • நிலைத்தன்மை: நிலைத்தன்மை உணர்வுடன், ஆட்சிக் காலத்தை முழுமையாக முடித்த முதல் காங்கிரஸ் அல்லாத அரசு இதுவாகும்.
  • தலைமைத்துவம்: மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்ற அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு பொருளாதார மற்றும் உள்கட்டமைப்புச் சீர்திருத்தங்களால் வகைப்படுத்தப்பட்டது.

தேர்தல் விவரம்:

  • தேர்தல் கட்டங்கள்: செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 3, 1999 வரை ஐந்து கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன.
  • மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (EVM) பரிசோதனை: இந்தத் தேர்தலின் போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (EVM) அறிமுகப் படுத்தப் பட்டன.
  • முடிவுகள்: பாரதிய ஜனதா கட்சி 182 இடங்களைப் பெற்று முழுமையான வெற்றியைப் பெற்றது, இந்திய தேசிய காங்கிரஸ் 114 இடங்களையும் மற்றும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 33 இடங்களையும் பெற்றன.

முக்கிய முன்னெடுப்புகள்:

  • உள்கட்டமைப்புத் திட்டங்கள்: இந்தியாவின் சாலை இணைப்பு வலையமைப்பை மாற்றி அமைக்கும் தங்க நாற்கரத் திட்டம் மற்றும் பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா ஆகியவை தொடங்கப்பட்டன.
  • கல்வி: 2001 ஆம் ஆண்டு சர்வ சிக்சா அபியான் தொடங்கப்பட்டது.
  • தனியார்மயமாக்கல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கத்தின் கீழ் தனியார் மயமாக்கலின் நோக்கம் விரிவாக்கப் பட்டது.

சட்டம்:

  • பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (POTA): டிசம்பர் 13, 2001 அன்று லோக்சபா மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது, பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகியவை இந்தத் தாக்குதலுக்குக் காரணமாகும்.

அமைதிக்கான முயற்சிகள்:

  • இராஜதந்திர முயற்சிகள்: ஜனவரி 2004 ஆம் ஆண்டில் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய கூட்டமைப்பு (சார்க்) உச்சி மாநாட்டிற்காக வாஜ்பாய் பாகிஸ்தானுக்குச் சென்றது உட்பட, தொடர்ச்சியான முயற்சிகள் பாகிஸ்தானுடன் அமைதி நிலைமையினை அடையச் செய்வதற்காக முன்னெடுக்கப் பட்டன.
  • உறுதியளிப்பு: பாகிஸ்தானின் நிலப் பரப்பைப் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் இந்தியாவுக்கு உறுதி அளித்தார்.

சவால்கள்:

  • குஜராத் கலவரங்கள்: குஜராத் கலவரங்களைக் கையாள்வதில் விமர்சனங்கள் எழுந்ததால், பாதிக்கப் பட்டவர்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் மூலமான உதவிகளை வாஜ்பாய் அறிவித்தார்.
  • தேர்தல் பிரச்சாரம்: பாஜகவின் "இந்தியா ஒளிர்கிறது" என்ற பிரச்சாரம், சிலரால் தவறாகக் கருதப் பட்ட நிலையில், இது 2004 ஆம் ஆண்டில் முன்கூட்டிய தேர்தலுக்கு வழி வகுத்தது.

ஆட்சிக் கலைப்பு:

  • 13வது மக்களவையானது பிப்ரவரி 5, 2004 அன்று கலைக்கப் பட்டது.

14வது லோக்சபா தேர்தல் (2004 / 2009)

  • வெற்றி பெற்ற கட்சி: இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA)
  • பிரதமர்: மன்மோகன் சிங்
  • காலம்: மே 22, 2004 - மே 22, 2009
  • எதிர்க்கட்சித் தலைவர்: எல்.கே. அத்வானி (பாஜக)
  • சபாநாயகர்: சோம்நாத் சாட்டர்ஜி
  • காலம்: ஜூன் 4, 2004 - மே 30, 2009

மீள்பார்வை:

  • மீண்டும் ஆட்சிக்கு வருதல்: காங்கிரஸ் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை (UPA) உருவாக்கி, 14வது மக்களவையை முழுமையான ஆட்சிக் காலத்திற்கும் வழி நடத்தியது.
  • பிரதமர்: இந்தக் காலக் கட்டத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு அமைக்கப் பட்டது.

தேர்தல் விவரங்கள்:

  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் அறிமுகம்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMகள்) அறிமுகமாகி, குறிப்பிடத்தக்க அளவில் காகிதங்களைச் சேமித்து என்பதோடு, வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையையும் குறைக்கச் செய்தன.
  • தொகுதி மாற்றங்கள்: புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்ற நிலையில் இது தொகுதிப் பங்கீட்டில் மாற்றங்களுக்கு வழி வகுத்தது.

தேர்தல் முடிவுகள்:

  • காங்கிரஸ் செயல்திறன்: காங்கிரஸ் 145 இடங்கள் மற்றும் 26.53% வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

சவால்கள்:

  • உள்நாட்டுப் பாதுகாப்பு: இந்த காலக் கட்டத்தில் மும்பையில் நடந்த 26/11 தாக்குதல்கள் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குக் குறிப்பிடத்தக்கச் சவாலாக அமைந்தன.

முக்கியச் சட்டங்கள்:

  • தகவல் அறியும் உரிமை (RTI) சட்டம்: இந்த பதவிக்காலத்தில் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் வகையில் இச்சட்டம் நிறைவேற்றப் பட்டது.
  • தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் (NREGA): இது கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக இயற்றப்பட்டது.
  • இந்தியா-அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தம்: இது அணுசக்தித் துறையில் இந்தியாவின் நிலையை உயர்த்துவதற்காக மன்மோகன் சிங்கால் கையெழுத்திடப் பட்டது.

பொருளாதார வளர்ச்சி:

  • வேகமான வளர்ச்சிக் காலம்: 2008 ஆம் ஆண்டில் உலகளாவிய நிதி நெருக்கடி இருந்த போதிலும், 2004 மற்றும் 2009 ஆண்டிற்கு இடையில் பொருளாதார வளர்ச்சியின் வேகமான காலக் கட்டத்தை இந்தியா கண்டது.

கலைப்பு:

  • மக்களவையானது மே 18, 2009 அன்று கலைக்கப்பட்டது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்