TNPSC Thervupettagam

இந்தியாவின் சந்திரயான் திட்டப் பணிகள் - பகுதி 2

August 28 , 2023 315 days 478 0

(For English version to this, please click here)

சந்திரயான் 2

  • சந்திரயான்- 2 திட்டம் என்பது சந்திரயான்-1  திட்டத்தின்  வெற்றிக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது சந்திரப் பயணமாகும்.
  • சந்திரயான்-2 திட்டமானது, இந்தியாவின் முதல் தரையிறங்கும் (லேண்டர்) திட்டப் பணியாகும்.
  • நிலவின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியைப் பற்றி நன்கு புரிந்து கொள்வதற்காகவும் நிலவின்  நிலப்பரப்பு மீதான ஆய்வுகள் மற்றும் கனிமவியல் ஆய்வுகளுக்காகவும் இந்தத் திட்டமானது உருவாக்கப்பட்டது.
  • இது ஒரு ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • இதில் நிலவினை ஆய்வு செய்வதற்கான அறிவியல் கருவிகள் அனைத்தும் பொருத்தப் பட்டுள்ளன.
  • லேண்டர் மற்றும் ரோவர் தொகுதிகள் ஆர்பிட்டரில் இருந்து பிரிக்கப்படும்.
  • இது சந்திரனின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்குமாறு திட்டமிடப் பட்டுள்ளது. (2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 அல்லது 6).
  • லேண்டர் மற்றும் ரோவர் 14 நாட்கள் (1 சந்திர நாள்) மட்டுமே வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ஆர்பிட்டர் ஒரு வருடத்திற்கு சுற்று வட்டப்பாதையில் இருக்குமாறு வடிவமைக்கப் பட்டுள்ளது.

சந்திரயான்-2: வடிவமைப்பு மற்றும் திட்டத்தின் விவரம்

ஆர்பிட்டர்  

  • ஆர்பிட்டர், மீண்டும் 100 கிமீ சுற்றுப்பாதையில் இருந்து சந்திரனைப் பார்க்கும் வகையில் செலுத்தப்படும்.
  • ஆர்பிட்டர் என்பது 7 கருவிகளைக் கொண்ட 2379 கிலோ எடையுள்ள ஒரு விண்கலமாகும்.
  • இதில் நிலவின் மேற்பரப்பில்  உயர் தெளிவுத் திறன் கொண்ட முப்பரிமாண வரைபடங்களை எடுக்கத் தேவையான, பல்வேறு வகையான கேமராக்களுடன் பொருத்தப் பட்டுள்ளது.
  • நிலவில் உள்ள கனிமக் கலவைகளை ஆய்வு செய்வதற்கான கருவிகளும் இதில் உள்ளன.
  • இது சந்திரனின் வளிமண்டலம்  மற்றும் நீரின் மிகுதியை மதிப்பிடுவதற்கான விண்கலம் ஆகும்.
  • ஆர்பிட்டர் சந்திரனின் மேற்பரப்பைக் கண்காணிக்கும்.
  • இது பூமிக்கும் லேண்டருக்கும் இடையிலான நிலையினைத் தகவலாக வழங்கும்.

லேண்டர்

  • லேண்டர் தொகுதிக்கு விக்ரம் சாராபாயின் நினைவாக விக்ரம் என்று இஸ்ரோ பெயரிட்டுள்ளது.
  • இவர் இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் முன்னோடி ஆவார்.
  • இந்த 1471 கிலோ எடையுள்ள லேண்டர் நிலவின் மேற்பரப்பைத் தொட்டப் பிறகும் நிலையாக இருக்கும்.

  • இது முக்கியமாக சந்திரனின் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் மூன்று கருவிகளைக் கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இக்கருவி சந்திரனின் மேற்பரப்பில் ஏற்படும் நில அதிர்வு செயல்பாடுகளையும் கவனிக்கும்.

ரோவர்

  • ரோவரானது 6 சக்கரங்களுடன் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது பிரக்யான் என்று பெயரிடப்பட்ட சூரிய சக்தியில் இயங்கும் வாகனம் ஆகும்.
  • பிரக்யான் என்றால் மெய்யறிவு (ஞானம் ஆகும்).
  • சந்திரனில் ஒருமுறை இறங்கியவுடன், ரோவர் லேண்டரிலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்ளுமாறு தயாரிக்கப் பட்டுள்ளது.
  • ரோவரானது இரண்டு கருவிகள் பொருத்தப்பட்டு, அது மெதுவாக நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து செல்லும்.
  • இது சந்திரனைக் கண்காணிப்பதோடு தரவுகளையும் சேகரித்து வழங்கும்.

  • நிலவின் தரையிறங்கும் இடத்திற்கு அருகிலுள்ள, அதன் மேற்பரப்பின் கலவைகளை ஆய்வு செய்வதே இதன் முதன்மை நோக்கம் ஆகும்.
  • இது சந்திரனின் மேற்பரப்பில் உள்ள பல்வேறு தனிமங்களின் மிகுதியையும் தீர்மானித்துத் தகவல்களை  வழங்கும்.
  • சந்திரயான்-2 விண்கலமானது நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க திட்டமிடப் பட்டது.
  • இது 2019 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி ஏவப் பட்டது.
  • இருப்பினும், விக்ரம் லேண்டர் 2019  ஆம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று நிலவின் கடுமையான நிலப்பரப்பில் தரையிறங்கியது.
  • சமீபத்தில், சந்திரயான்-3 விண்கலத்தின் ஏவுதல் தேதியை (ஜூலை 15, 2019) இஸ்ரோ அறிவித்தது.
  • விண்கலமானது திட்டமிடப்பட்ட செலுத்துதல் நாளிலிருந்து நீண்ட தாமதத்திற்குப் பிறகு இது அறிவிக்கப் பட்டது.
  • இதில் மேற்கண்ட கருவிகளின் பகுதிகள் அனைத்தும் இந்தியாவில் உருவாக்கப் பட்டவை.
  • ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை மொத்தமாக அறிவியல் ஆராய்ச்சி சார்ந்த 14 உபகரணங்களை அல்லது பேலோடுகளைச் சுமந்து சென்று உள்ளது.
  • மேற்கண்டக் கருவிகளோடுச் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தின் துல்லியமான அளவீடுகளை வழங்கிய நாசாவின் Laser Retro Reflector Array என்ற கருவியையும் அது சுமந்து சென்றுள்ளது.

சந்திரயான்-2 திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?

  • நாசாவின் நிலவிற்கான Deep Impact-EPOXI திட்டத்தின் மூலமாகவும் இதே வகையான தகவல் கிடைத்துள்ளது.
  • 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் EPOXI விண்கலமானது சந்திரனுக்கு அருகில் சென்றது.
  • 2019 ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று, இந்தியா சந்திரயான்-2 விண்கலத்தினை விண்ணில் செலுத்தியது.
  • சந்திரனின் மீதான இந்த இரண்டாவது ஆய்வுப் பணியானது, சந்திரயான்-1 திட்டத்திற்குப் பிறகு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.
  • இது லூனார் ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றைக் கொண்டு உள்ள ஒரு திட்டமாகும்.
  • இது 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று நிலவில் மென்மையாக தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • சந்திரயான்-2 திட்டம் என்பது இஸ்ரோவின் முதல் வேற்றுக் கிரக மேற்பரப்பில் தரையிறங்குவதற்கான முதல் முயற்சியாகும்.

முதன்மைக் குறிக்கோள்

  • இது நிலவிலுள்ள நீரின் இருப்பிடத்தை அறிவதையும், நிலவின் வரைபடத்தை உருவாக்கச் செய்வதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பின்னணி

  • இந்தத் திட்டமானது 2007 ஆம் ஆண்டு இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோ மற்றும் ரஷ்யாவின் ROSCOSMOS இடையே பரஸ்பர ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்துடன் தொடங்கியது.
  • இருப்பினும், இத்திட்டமானது 2013 ஆம் ஆண்டு ஜனவரி வரை ஒத்தி வைக்கப் பட்டது.
  • இந்தத் திட்டமானது ரஷ்யாவால் குறித்த நேரத்தில் லேண்டரை உருவாக்க முடியாததால், 2016 ஆம் ஆண்டில் மீண்டும் செலுத்த மறு திட்டமிடப்பட்டது.
  • பின்னர், ரஷ்யா இத்திட்டத்திலிருந்து வெளியேறிய பிறகு இந்தியா சந்திரனுக்கான சுதந்திரமான பயணத் திட்டத்தை உருவாக்க முடிவு செய்தது.
  • இறுதியாக, 2019 ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று, GSLV MK III M1 அதன் முதல் செயல்பாட்டு விமானத்தில் சந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டது.
  • வெற்றிகரமாக இவ்விண்கலம் செலுத்தப்பட்டவுடன், யு.எஸ்.எஸ்.ஆர் அல்லது ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பிறகு சந்திரனில் விண்கலத்தை மென்மையாக தரையிறக்கும் நான்காவது நாடாக இந்தியா மாறும்.
  • சந்திரயான்-2 விண்கலமானது முந்தைய விண்கலம் எதுவும் செல்லாத இடத்தில் தரையிறங்கும்.
  • இது நிலவின் தென் துருவத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியாக இருக்கும்.
  • சந்திரயான்-2 என்பது சந்திரயான்-1 விண்கலத்தின் இயற்கையான மற்றும் தொடர்ச்சியான நிலவின் பயணமாகும்.
  • இது 2008 ஆம் ஆண்டு அக்டோபர்  மாதத்தில் தொடங்கப்பட்ட ஆர்பிட்டர் மிஷன் ஆகும்.

திட்டத்தின் நோக்கங்கள்

  • இந்தியா சந்திரனின் தென் துருவத்தை ஆய்வு செய்ய வேண்டுமென விருப்பம் கொண்டிருந்தது.
  • உலகளவில் இதுவரை எந்தவொரு நாடும் தனது விண்கலத்தை நிலவின் தெற்குப் பகுதியில் செலுத்தியதில்லை.
  • இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு:
  • நீர் மற்றும் ஹைட்ராக்சில் குழுவின் இருப்பினைக் கண்டறிதல்.

  • நிலவின் இடவியல் மற்றும் வெளிக்கோளத்தைப் படித்தறிதல்.
  • சந்திரனின் கனிமவியல், மேற்பரப்பின் இரசாயன அமைப்பு, சந்திரனின் வளிமண்டலம் ஆகியவற்றை ஆய்வு செய்தல்.
  • சந்திரனின் வெப்ப-இயற்பியல் கூறுகள் மற்றும்  சந்திரனின் தோற்றம் மற்றும் அதன் பரிணாமத்தை ஆய்வு செய்தல்.
  • நிலவின் மேற்பரப்பினது முப்பரிமாண (3D) வரைபடத்தை உருவாக்குதல்.
  • சந்திரயான்-I விண்கலமானது வெளிப்படுத்திய நீர் மூலக்கூறுகளின் ஆதாரங்களை உருவாக்க முயற்சித்தல்.
  • நிலவிலுள்ள நீரின் அளவு மற்றும் பரவலை ஆய்வு செய்தல்.
  • சந்திரனிலுள்ள பண்டையப் பாறைகள் மற்றும் பள்ளங்கள் பற்றிய ஆய்வு செய்தல்.
  • சந்திரயான் 2 திட்டத்தின் கூறுகளானது சந்திர ரீகோலித் எனப்படும் சந்திரனில் படிந்துள்ள துகள்களின்  தடிமனை அளவிட வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா சுதந்திரமாக சந்திரயான் 2 விண்கலத்தின் அனைத்துக் கருவிகளின் கூறுகளையும் வடிவமைத்தது.
  • இந்தியா இந்தத் திட்டத்தின் மூலம் சந்திரனின் மேற்பரப்பில் ஒரு மென்மையான தரையிறக்கத்தைப் பரிசோதிக்க விரும்பியது.
  • இது சந்திரனின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சிக்கான அறிகுறிகளை வழங்க முடியும்.
  • சந்திரனின் தென் துருவப் பகுதியானது, ஆரம்ப காலச் சூரியக் குடும்பத்தின் புதைபடிவப் பதிவுகளுக்கான தடயங்களைக் கொண்டுள்ளது.
  • எனவே, இது ஆரம்ப காலச் சூரியக் குடும்பத்தைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்த உதவும்.
  • இது சந்திரனின் மேற்பரப்பை வரைபடமாக்கி அதன் முப்பரிமாண வரைபடங்களைத் தயாரிக்க உதவும்.

சந்திரயான்-2 திட்டத்தின் சவால்கள்

  • சந்திரயான் 2 திட்டமானது, தொழில்நுட்ப ரீதியாக ஒரு சவாலானப் பணியாகும்.
  • இதனைச் சரிவர செயல்படுத்த வேண்டி, இதற்கு முதல்முறையாக பல்வேறு புதிய அமைப்புகளின் பன்முக வளர்ச்சியானது  தேவைப் படுகிறது.
  • லேண்டர் என்பது ஒரு தனித்துவமான அம்சமாகும்.
  • பூமிக்கு அப்பாற்பட்ட விண்வெளியில் ஒரு கருவித் தொகுதியை மென்மையாக தரையிறக்க இஸ்ரோ முயற்சிப்பது இதுவே முதல் முறை ஆகும்.
  • லேண்டர் மற்றும் ரோவரானது சந்திரனின் ஈர்ப்பு விசையில் நுழைந்தவுடன், அவை தானாகவே பிரிந்து செல்லும் நிலையில் இருக்கும்.
  • இது சில நேரங்களில் தரையிறங்கும் போது கருவிகள் மோதி நொறுங்குவதற்கும் நொறுங்கி அந்தக் கருவி அழிவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
  • நிலவின் மேற்பரப்பினை நோக்கி ஆய்வுக் கலமானது வரும் போது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்துவது என்பது ஒரு முக்கியச் சவாலாக உள்ளது.
  • விண்கலத்தை ஒரே சீரான தரையிறக்கத்தில் செயல்படுத்த, நிலவினை தொடுவதற்கு சற்று முன்னதாக லேண்டரின் வேகம் 1 மீ/வி (3.6 கிமீ/ம) அல்லது அதற்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.
  • இதில் இழுவையினை வழங்குவதற்கு போதுமான காற்று இல்லாததால், இந்த கருவிகளில் வான்குடை மிதவை போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியாது.
  • எனவே அதற்கு பதிலாக, லேண்டரானது எதிர் திசையின் உந்துதலை நோக்கி செலுத்துவதன் மூலம் அதன் வேகத்தைக் குறைக்க முடியும்.
  • இதற்கு மிக உயர்ந்த ஒரு பரிபூரண துல்லிய நிலையானது  தேவைப்படுகிறது

முழுமையான திட்டத்திலுள்ள உள்ள முக்கியச் சவால்கள்

  • GSLV-Mark III செலுத்து வாகனம் மூலம் இந்த கனமான ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்படுதல் வேண்டும்.
  • இவ்வளவு தூரம் பயணிக்கும் போது அதன் பாதையின் துல்லியத்தை உறுதி செய்தல் வேண்டும்.
  • இது அந்த விண்கலத் தொகுதியினை மிக உயர்ந்த சுற்றுப் பாதையில் உயர்த்தத் தேவையான வகையில் அடுத்தடுத்தச் சுற்றுப்பாதை சூழ்ச்சி வழிமுறைகளைக்  கையாளும் வகையில் உள்ளது.
  • இது பூமியிலிருந்து சந்திரனை நோக்கியப் பரிமாற்றச் சுற்றுப்பாதையை அடையும் வரை செயல்படும்.

பாதுகாப்பான ஆபத்து இல்லாத மண்டலத்தில் தரையிறங்குதல்

  • இஸ்ரோ இதுவரை எந்த விண்வெளிப் பொருட்களிலும் மென்மையான தரையிறக்கம் செய்ததில்லை.
  • சந்திரனின் மேற்பரப்பானது பள்ளங்கள், பாறைகள், தூசி மற்றும் சூடான வாயுக்கள் போன்றவற்றால் மூடப்பட்டிருக்கும்.
  • இது தீவிரமான மேற்பரப்பு மீதான வெப்பநிலை மாறுபாடுகளை எதிர்கொள்கிறது.
  • இதனால், இது லேண்டர் மற்றும் ரோவர் நடவடிக்கைகளுக்கு மிகவும் எதிரான சூழலாக உள்ளது.
  • மேலும், நிலவின் தென் துருவப் பகுதியானது பூமத்திய ரேகைப் பகுதியுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவான சூரிய ஒளியைப் பெறுகிறது.
  • அந்த நிலநடுக்க ரேகைப் பகுதிக்கு சூரிய சக்தியால் இயங்கும் கருவிகளே பெரும்பாலும் தேவைப்படுகிறது.
  • எனவே, இதனால் ஏற்படும் பிழையின் விளிம்பு நிலையானது மிகவும் குறுகியதாக உள்ளது.
  • இஸ்ரேலின் நிலவின் மீதான தரையிறங்கும் திட்டத்தின் சமீபத்திய தோல்வியானது, மென்மையான மற்றும் துல்லியமாக நிலவில் தரையிறங்குவதில் உள்ள சிரமத்தைக் குறிப்பிடுகிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்