(For English version to this please click here)
சந்திரயான் 3
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது (இஸ்ரோ) தனது இலட்சிய திட்டமான சந்திரயான்-3 திட்டத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
- இது நிலவில் மென்மையான தரையிறக்கத்திற்கான திறனை மெய்ப்பிக்கிறது.
- சந்திரயான்-2 திட்டத்தின் ஒரு பின்னடைவைத் தொடர்ந்து இத்திட்டமானது செயல் படுத்தப்பட்டுள்ளது.
- சந்திரயான்-3 திட்டமானது இந்தியாவின் மூன்றாவது சந்திரப் பயணமாகும்.
- இது சந்திரனின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கத்தை அடைவதற்கான இரண்டாவது முயற்சியாகும்.
- 2023 ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று பிற்பகல் 2:35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து (SDSC) இந்த விண்கலமானது ஏவப்பட்டது.
- சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கிய சில நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் தற்போது அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுடன் இணைந்துள்ளது.
- இது சந்திரனின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கும் உலாவுவதற்கும் இந்தியாவின் இறுதி முதல் இறுதி வரையிலான திறனை நிரூபிக்கும்.
நோக்கங்கள்
- இது ஒரு உள்நாட்டு லேண்டர் தொகுதி (LM), உந்துவிசைத் தொகுதி (PM) மற்றும் ஒரு ரோவர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கம்
- சந்திரயான்-3 திட்டத்தின் முதன்மையான நோக்கமானது நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் கலத்தினை (லேண்டரை) பாதுகாப்பாகவும் மற்றும் மென்மையாகவும் தரையிறக்குவதாகும்.
- இந்த திட்டமானது நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கும் கலத்தின் (லேண்டர்) தொகுதியை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வெற்றிகரமாக தரையிறக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரோவரின் திறன்களை மெய்ப்பித்தல்
- சந்திரயான்-3 ரோவரின் திறன்களை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
- இது சந்திரனின் மேற்பரப்பில் சுழலுதல் மற்றும் ஆய்வு திறன்களை வெளிப்படுத்துகிறது.
- தரையிறங்கும் கலமானது (லேண்டர்) வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு ரோவர் பயன்படுத்தப் படும்.
சந்திர தளத்தின் மீதான அறிவியல் கண்காணிப்புகள்
- இந்தத் திட்டமானது நிலவின் தளத்திற்கான அறிவியல் கண்காணிப்புகள் மற்றும் சோதனைகளை நடத்த முயல்கிறது.
- இது சந்திரனின் கலவையை நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது.
- இதில் நிலவின் மேற்பரப்பில் கிடைக்கும் இரசாயன மற்றும் இயற்கைக் கூறுகள், மண், நீர் மற்றும் பிற வளங்களைப் பகுப்பாய்வு செய்வதும் அடங்கும்.
- இந்தக் கண்காணிப்பானது சந்திரனின் கலவையைப் பற்றிய நமது அறிவை நன்கு விரிவுபடுத்த உதவும்.
- இது சந்திரனின் வரலாறு மற்றும் பரிணாமத்தைப் பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது.
மென்மையான தரையிறக்கம் மற்றும் அறிவியல் ஆய்வுகளை நிரூபித்தல்
- இந்தச் சாதனையை நிறைவேற்றுவதன் மூலம், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாடுகளின் ஒரு பிரத்தியேக குழுவில் இந்தியா சேருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- வேதியியல் பகுப்பாய்வுகளை நடத்தவும், மதிப்புமிக்க அறிவியல் தரவுகளைச் சேகரிக்கவும், சந்திர ஆராய்ச்சியின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கவும் இந்தத் திட்டமானது விரும்புகிறது.
நோக்கங்கள்
- நிலவின் உட்புற (in-situ) மற்றும் வெளிப்புற (on-site) சுற்றுச்சூழலுக்கான அறிவியல் சோதனைகளை நடத்துதல்.
- சந்திரனின் மேற்பரப்பிற்கு அருகிலுள்ள பிளாஸ்மா அடர்த்தியின் ஏற்ற இறக்கங்களை அளவிடல்.
- நிலவின் குளிர்ச்சியான துருவ மண்டலங்களின் வெப்ப பண்புகளைச் செயல்படுத்தல்.
- நிலவின் நில அதிர்வுச் செயல்பாட்டை அளவிட சந்திர மேலோட்டுக் கவசத்தில் ஒரு கட்டமைப்பினை அமைத்தல்.
- சந்திர அமைப்பின் இயக்கவியலைப் புரிந்து கொள்ளுதல்.
- இது கோள்களுக்கிடையேயான பயணங்களுக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி நிரூபிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இத்திட்டத்தின் வெற்றி என்பது அது நிலவின் தென் துருவத்திற்கு அருகில் ஒரு மென்மையான தரையிறக்கத்திற்கான உலகாளாவிய முதல் திட்டமாக சந்திரயான்-3 மாற்றுவது என்பதாகும்.
- சந்திரனில் மென்மையாக தரையிறங்கிய நான்காவது நாடாக இந்தியா உள்ளது.
பின்னணி
- சந்திரயான்-2 திட்டமானது இஸ்ரோவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
- இருப்பினும், இஸ்ரோவானது இந்தப் பின்னடைவைக் ஒரு பிழைநீக்கம் கற்றல் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தியது.
- அதன் அதன் முந்தையத் திட்டங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து நல்ல முறையில் நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது சந்திரனின் மேற்பரப்பில் ஒரு வெற்றிகரமான மென்மையான தரையிறக்கம் ஆகும்.
- சந்திரயான்-3 திட்டமானது, சந்திரயான்-2 திட்டத்தின் தொடர்ச்சியாகும்.
- சந்திரயான்-2 2019 ஆம் ஆண்டு ஜூலையில் ஏவப்பட்டது
- இது சந்திரனின் தென் துருவத்தில் ஒரு ரோவரைச் செலுத்துவதை அதன் இலக்காக கொண்டுள்ளது.
- இத்திட்ட விண்கலமானது 2023 ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ஒரு ஏவுகணை வாகனமான GSLV Mk 3 (LVM3) என்பதனைப் பயன்படுத்தி விண்ணில் ஏவப் பட்டது.
- இந்தியா 2022 ஆம் ஆண்டு சந்திரயான் 3 விண்கலத்தை ஏவுவதற்கு தயாராக இருந்தது, ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக அதன் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டது.
- இஸ்ரோவின் சந்திரயான் 2 விண்கலத்தின் வடிவமைப்புடன் ஆர்பிட்டர், ரோவர் மற்றும் லேண்டர் ஆகியவையும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.
சந்திரயான்-3 விண்கலம்
சந்திரயான்-3 விண்கலத்தின் மூன்று அத்தியாவசியக் கூறுகள்
- அவையாவன தரையிறங்கும் விண்கலத் தொகுதி (லேண்டர்), உந்துவிசை தொகுதி மற்றும் ஒரு ரோவர்.
- தரையிறங்கும் விண்கலத் தொகுதியானது (லேண்டர்) நிலவில் மென்மையான தரையிறக்கத்தை அடைய வடிவமைக்கப் பட்டுள்ளது.
- இது விஞ்ஞான ஆய்வுக்காக ரோவரைப் பயன்படுத்துகிறது.
- ரோவர் வேதியியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்.
- சந்திரனின் மேற்பரப்பைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்த ரோவரானது விஞ்ஞான பேலோடுகளையும் எடுத்துச் செல்லும்.
- கூடுதலாக, நிலவின் சுற்றுப்பாதைக்கு லேண்டர் மற்றும் ரோவரைக் கொண்டு செல்வதில் உந்துவிசை தொகுதி ஒரு முக்கியப் பங்கினை வகிக்கிறது.
ஏவு வாகனம் Mk-III (LVM-3)
- இது இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் சக்தி வாய்ந்த விண்கலமாகும்.
- இது சந்திரயான்-3 திட்டத்திற்கான ஒரு ஏவுகணை வாகனமாகச் செயல்படுகிறது.
- முன்னதாக ‘ஜிஎஸ்எல்வி எம்கே-III’ என்று அழைக்கப்பட்ட இது இஸ்ரோவின் மிகவும் சக்தி வாய்ந்த விண்கலமாகும்.
- ஏவு ஊர்தியான Mk - III (எல்விஎம்3) என்பது இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட மூன்று-நிலை நடுத்தர அளவில்- விண்கலத்தினை உயர்த்தும் ஒரு விண்கல ஏவு வாகனமாகும்.
- அதன் மூன்று நிலைகளில் இரண்டு நிலைகளில் திட பூஸ்டர்கள் (S200), மைய திரவ எரிபொருள் அடிப்படையிலான ஒரு நிலை (L110) மற்றும் கிரையோஜெனிக் மேல் நிலை (C25) ஆகியவை அடங்கும்.
- C25 கிரையோஜெனிக் இயந்திரத்தைப் பயன்படுத்தும்.
- இது புவியின் தாழ் வட்டப் பாதைக்கு (LEO) 8,000 கிலோகிராம் வரையிலான எடையினை சுமந்து செல்லும்.
- இதனால் 4,000 கிலோகிராம் பேலோடை ஒரு புவிநிலைப் பரிமாற்றச் சுற்றுப் பாதைக்கு (GTO) கொண்டு செல்ல முடியும்.
- சந்திரயான்-2 திட்டத்திற்கும் எல்விஎம்-3 ஆனது பயன்படுத்தப்பட்டது.
- 4 மீட்டர் விட்டம் கொண்ட 43.5 மீட்டர் உயரத்தில் நிற்கும் இது 640 டன் எடையை உயர்த்தும் திறன் கொண்டதாக உள்ளது.
திட்டத்தின் கூறுகள்
- 3,900 கிலோ எடையுள்ள சந்திரயான்-3 விண்கலமானது மூன்று முக்கிய தொகுதிகளைக் கொண்டுள்ளது: அவையாவன உந்துவிசை தொகுதி, லேண்டர் தொகுதி மற்றும் ரோவர்.
- விக்ரம் என்று பெயரிடப்பட்ட லேண்டர் மற்றும் பிரக்யான் என்று பெயரிடப்பட்ட ரோவர் ஆகியவை சந்திரயான் -2 திட்டத்திலுள்ள அவற்றின் இணைகளைப் போலவே இருக்கின்றன.
- ஆனால் அதன் மேம்பாடு மற்றும் நம்பகத் தன்மைக்காக அவை மேம்படுத்தப் பட்டுள்ளன.
- இத்திட்டத்தின் பட்ஜெட் ரூ. 615 கோடி ஆகும்.
திட்டத்தின் தொகுதிகள், வடிவமைப்பு மற்றும் அணுகுமுறை
- சந்திரயான்-3 திட்டமானது மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது
உந்துவிசை தொகுதி
- 100 கிலோமீட்டர் நிலவின் சுற்றுப்பாதைக்கு லேண்டர் மற்றும் ரோவர் கட்டமைப்பைக் கொண்டு செல்வதற்கு உந்துவிசை தொகுதி பொறுப்பாகும்.
- இது ஒரு பெரிய சூரியத் தகடு மற்றும் ஒரு இடைநிலை பொருத்தி கூம்பினைக் கொண்ட பெட்டி போன்ற ஒரு அமைப்பாகும்.
- இது லேண்டருக்கு ஏற்ற அமைப்பாகச் செயல்படுகிறது.
- கூடுதலாக, இது SHAPE என்ற பேலோடைக் கொண்டுள்ளது.
- இது சந்திரனின் சுற்றுப்பாதையில் இருந்து பூமியின் நிறமாலை மற்றும் துருவ அளவீடுகளை ஆய்வு செய்கிறது.
லேண்டர்
- லேண்டர் தொகுதியானது சந்திரனின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இது நான்கு தரையிறங்கும் கால்கள் மற்றும் நான்கு தரையிறங்கும் உந்துதல்களுடன் கூடிய ஒரு பெட்டி வடிவ அமைப்பைக் கொண்டுள்ளது.
- இது தரையிறங்கும் இடத்தில் ஆய்வு செய்வதற்காக வேண்டி ரோவர் மற்றும் பல்வேறு அறிவியல் கருவிகளைக் கொண்டு சென்றுள்ளன.
- அதன் முன்னோடியுடன் ஒப்பிடுகையில் இதன் கட்டமைப்பின் கடினத் தன்மை, கால்களின் வலிமை மற்றும் கருவிகளின் தேவைக்கதிகமான தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது.
மூன்று பேலோடுகள்
சந்திராவின் மேற்பரப்பு மீதான தெர்மோபிசிக்கல் பரிசோதனை (ChaSTE)
- இது சந்திரனின் மேற்பரப்பின் மீதான வெப்ப கடத்துத்திறன் மற்றும் வெப்பநிலையை அளவிடுகிறது.
சந்திரனின் நில அதிர்வு நடவடிக்கைக்கான கருவி (ILSA)
- இது தரையிறங்கும் இடத்தைச் சுற்றியுள்ள நில அதிர்வுச் செயல்பாட்டை அளவிடுகிறது.
லாங்முயர் ஆய்வு (LP)
- இது பிளாஸ்மா அடர்த்தி மற்றும் அதன் மாறுபாடுகளை மதிப்பிடுகிறது.
ரோவர் (சுற்றுக்கலன்)
- சந்திரயான்-3 விண்கலத்தின் ரோவர் என்பது 26 கிலோ எடை கொண்ட ஆறு சக்கர வாகனமாகும்.
- இதில் புகைப்படக்கருவிகள், ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் துளையிடும் கருவி உள்ளிட்ட அறிவியல் கருவிகள் பொருத்தப் பட்டுள்ளன.
- ரோவர் 500 மீட்டர் தூரம் வரை செல்லும்.
- இது லேண்டர் மற்றும் இந்தியாவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டுக் குழுவுடன் தொடர்பு கொள்ள வடிவமைக்கப் பட்டுள்ளது.
- அதன் எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான ஒரு சந்திர நாள் ஆகும்.
- ரோவர் குறிப்பிடத்தக்க அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- சந்திரனின் மேற்பரப்பு கலவையை ஆய்வு செய்தல், சந்திர மண்ணில் நீர் மற்றும் பனி இருப்பதைக் கண்டறிதல், சந்திர தாக்கங்களின் வரலாற்றை ஆராய்தல் மற்றும் சந்திரனின் வளிமண்டலப் பரிணாமத்தை ஆய்வு செய்தல் ஆகியவை இதில் அடங்கும்.
மாற்றங்கள் மற்றும் முன்னெச்சரிக்கைகள்
- சந்திரயான்-3 திட்டமானது அதன் முன்னோடியான சந்திரயான் 2 உடன் ஒப்பிடும் போது அதன் நம்பகத்தன்மையை அதிகரிக்க இஸ்ரோவால் மாற்றங்களுக்கு உட்படுத்தப் பட்டுள்ளது.
- விக்ரம் லேண்டரானது மேம்படுத்தப்பட்டு, கூடுதல் எரிபொருளைக் கொண்டு செல்கிறது.
- இது ஒரு வெற்றிகரமான தரையிறக்கத்தை உறுதிப்படுத்தவும், சந்திரனின் மேற்பரப்பில் தனது இலக்கு நோக்கியப் பாதையில் இருக்கவும் உதவுகிறது.
- இந்த விண்கலமானது கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
- இது அந்தத் திட்டத்தின் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்க பல பாதுகாப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கியது.
சந்திரனின் சுற்றுப்பாதை
- இந்தத் தொகுதியானது சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழையும் போது, பல்வேறு தலைகீழான செயல்பாடுகள் நிகழும்.
- ஒரு சுழற்சி முறையில் இந்த விண்கலம் சந்திரனை நோக்கி நெருங்கும்.
- இது லேண்டர் பிரிவதற்கு முன்பாக சந்திரனின் மேற்பரப்பில் இருந்து 100 கிமீ மேலே உள்ள ஒரு வட்டப் பாதை வரை சென்றடையும்.
- நிலவில் - லேண்டர் ஒரு குறிப்பிட்ட சந்திரத் தளத்தில் (சந்திரனின் தென் துருவம்) மென்மையாக தரையிறங்கி அதன் பிறகு ரோவரை நிலை நிறுத்தும் செயலினை மேற்கொள்ளும்.
- இந்த ரோவரானது 14 பூமி நாட்களுக்கு (1 சந்திர நாள்) சந்திரனின் நிலப்பரப்பை ஆராயும்.
- இது நிலவின் மேற்பரப்பில் உள்ள இடத்தில் காணப்படும் இரசாயனங்களைப் பகுப்பாய்வு செய்யும் பணியினை மேற்கொள்ளும்.
-------------------------------------