TNPSC Thervupettagam

இந்தியாவின் தேசிய சின்னங்கள் - பகுதி 1

December 1 , 2023 405 days 2880 0

(For English version to this please click here)

இந்தியாவின் தேசிய சின்னங்கள்

  • இந்தியாவின் அடையாளத்தினைப் பிரதிபலிக்கும் பல்வேறு வகையான தேசிய சின்னங்களை வெவ்வேறு காலக் கட்டங்களில் நமது தேசமானது தேர்ந்தெடுத்துள்ளது.
  • இந்தியாவில் உள்ள தேசிய சின்னங்கள் அதன் சமூக-கலாச்சார உள்ளடக்கங்களின் வளமான பாரம்பரியத்தைச் சித்தரிக்கின்றன.
  • இவை உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும் போது இந்தியத் துணைக் கண்டத்திற்கு தனித்துவமானதாக உள்ளது.
  • இந்தியாவின் தேசிய சின்னங்களானது, முழு தேசத்தின் கட்டமைப்பினை உருவாக்குவதன் மூலம் அதன் பெருமை மற்றும் கௌரவத்தை எடுத்துக் காட்டுகின்றன.

இந்திய தேசிய சின்னங்களின் முக்கியத்துவம்

  • மாம்பழம், கங்கை நதி, வங்காளப் புலி, இந்திய ஆலமரம், மூவர்ணக்கொடி, தேசிய கீதம், சாகா நாட்காட்டி, தேசியப் பாடல், இந்திய தேசிய இலச்சினை, கங்கை ஆற்று ஓங்கில், இந்திய மயில், இந்திய ரூபாய், இராச நாகம், இந்திய யானை, தாமரை, பூசணி மற்றும் தேசிய உறுதிமொழி ஆகிய 17 தேசிய சின்னங்கள் இந்தியாவில் உள்ளன.
  • முதலாவதாக, இச்சின்னங்கள் நாட்டின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன.
  • அவை இந்திய மக்களிடையே இதயப்பூர்வமான மிகப்பெரிய பெருமை சார்ந்த சிந்தனைகளை வளர்க்கின்றன.
  • இந்தியாவிற்கும் அதன் மக்களுக்கும் இடையே குறிப்பிட்ட விவரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உள்ளன.
  • இவை தேர்ந்தெடுக்கப்பட்ட இனங்களைப் பற்றிய செயல்பாடுகளைப் பரந்த பார்வையாளர்களுக்கு விளம்பரப்படுத்தும் வகையில் உள்ளன.
  • இவை எதிர்காலச் சந்ததியினருக்காக தேசிய சின்னங்களைப் பாதுகாக்க உதவுகிறது.

தேசியக் கொடி: மூவர்ணக்கொடி

  • இந்தியக் கொடியானது மூவர்ணக்கொடி என்று அழைக்கப்படுகிறது.
  • 1947 ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று அரசியல் நிர்ணய சபையானது இக்கொடிக்கு ஒப்புதல் அளித்தது.
  • இது பிங்காலி வெங்கையாவால் உருவாக்கப்பட்டது.
  • தேசியக் கொடியில் காணப்படும் காவி நிறமானது நாட்டின் வலிமை மற்றும் வீரத்தின் சின்னமாக காணப்படுகிறது.
  • தேசியக் கொடியின் மையத்தில் காணப்படும் வெள்ளை நிறத்தின் மையத்தில் உள்ள தர்ம சக்கரமானது அமைதியையும் நேர்மையையும் குறிப்பிடுகின்றது.
  • பச்சை நிறமானது, மங்களகரமான மற்றும் மிகுதியான வளர்ச்சியின் நீண்ட கால ஒரு அடையாளமாக இடத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது.

  • புகழ்பெற்ற சாரநாத் பகுதியில் காணப்படும் சிங்கத் தலைகள் பதித்த அசோகரின் கற்றூணில் உள்ள அதன் வடிவமைப்பால் ஈர்க்கப்பட்டு இந்திய தேசியக் கொடியின் மையப் பகுதியில் கடற்படை நீலத்தில் இடம் பெற்றுள்ளது.
  • இது வெள்ளைப் பட்டை மற்றும் 24 ஆரங்களின் விட்டம் கொண்ட ஒரு தனித்துவமான சக்கரம் ஆகும்.
  • 1947 ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று, இந்தியாவின் அரசியலமைப்பு நிர்ணயச் சபை நாட்டின் தேசியக் கொடியின் இத்தகைய வடிவமைப்பிற்கு ஒப்புதல் அளித்தது.

தேசிய இலச்சினை

  • 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று இந்தியாவின் தேசிய சின்னமானது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • இது மாதவ் சாஹ்னி என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
  • இது சாரநாத்தில் உள்ள அசோகரின் சிங்கத்தலைகள் பொருந்திய கற்றூணின் வடிவமைப்பினைத் தழுவி அமைக்கப்பட்டுள்ளது.
  • அதில் சத்யமேவ ஜெயதே ("வாய்மையே வெல்லும்") என்னும் ஒரு வழிகாட்டும் கொள்கையும் பொறிக்கப்பட்டுள்ளது.
  • முண்டக உபநிஷத்திலிருந்து சத்யமேவ ஜெயதே (‘வாய்மையே வெல்லும்’ என்று பொருள்) என்ற வார்த்தைகள் தேவநாகரி எழுத்துக்களில் அச்சின்னத்தில் கீழே பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
  • ஒரு பீடத்தில் நான்கு ஆசிய சிங்கங்கள் பின்புறமாக நிற்கின்றன.
  • இது உத்தரப் பிரதேசத்தில் வாரணாசிக்கு அருகில் அமைந்துள்ளது.
  • இது பளபளப்பான ஒற்றைத் தொகுதி மணற்கற்களால் செதுக்கப்பட்டது.
  • இந்த சிங்கத்தலைகளின் பீடமானது தர்மச் சக்கரத்தால் அலங்கரிக்கப்பட்டது போன்று வடிவமைக்கப் பட்டுள்ளதோடு, இத்தூணின் மகுடமாகத் தர்மச் சக்கரம் விளங்குகின்றது.
  • இந்திய தேசிய சின்னத்தில் உள்ள நான்கு சிங்கங்கள் சக்தி, தைரியம், தன்னம்பிக்கை மற்றும் பெருமை ஆகியவற்றைக் குறிக்கின்ற வகையில் ஒரு வட்ட வடிவ பீடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • இந்தப் பீடத்தில் கிழக்கில் யானை, மேற்கில் குதிரை, தெற்கே எருது, வடக்கே சிங்கம் ஆகிய விலங்குருக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
  • இந்த பீடமானது முழு மலர்ந்த தாமரையின் மீது அமைந்துள்ளதோடு, மலர்ந்த தாமரை மலரானது வாழ்க்கைக்கான நீரூற்றாகவும், படைப்பூக்க அகவெழுச்சியையும் குறிப்பதாக விளங்குகிறது.
  • 2005 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய மாநிலச் சின்னம் (முறையற்ற பயன்பாட்டுத் தடை) சட்டத்தின் கீழ் இந்திய அரசின் சின்னத்தினை இந்திய அரசின் ஒரு அதிகாரப்பூர்வ முத்திரையாகப் பயன்படுத்துவது கட்டுப்படுத்தப் படுகிறது.

தேசிய நாட்காட்டி: சாகா நாட்காட்டி

  • இந்திய தேசிய நாட்காட்டி சில நேரங்களில் ஷாலிவாஹன ஷாகா காலண்டர் என்று அழைக்கப்படுகிறது.
  • 1957 ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று தேசிய நாட்காட்டியானது கிரிகோரியன் நாட் காட்டியுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • 1957 ஆம் ஆண்டில் நாட்காட்டி குழு முதன்முதலில் சாகா நாட்காட்டியை வெளியிட்ட போது, ​​​​அது ஒரு புரட்சிகர நாட்காட்டியாக பரவலாகக் கருதப்பட்டது.
  • தேசிய நாட்காட்டியின்படி, சைத்ரா, வைஷாக், ஜ்யாயிஷ்டா, ஆஷாதா, ஷ்ரவணம், பத்ரபத், அஷ்வின், கார்த்திக், அக்ரஹாயனம், பௌஷா, மாகா மற்றும் பால்குணா ஆகியவை அதில் உள்ள மாதங்களின் பெயர்களாகும்.

தேசிய கீதம்: ஜன கண மன

  • இந்திய தேசிய கீதமானது இரவீந்திரநாத் தாகூரால் வங்காள-மொழியில் இயற்றப் பட்ட பாடல் ஆகும்.
  • ஜன-கன-மன கீதம் இந்தியாவின் தேசிய கீதமாக 1950 ஜனவரி 24 அன்று இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையால் அறிவிக்கப்பட்டது.
  • இது 1911 டிசம்பர் 27 அன்று முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரஸின் கல்கத்தா அமர்வில் பாடப்பட்டது.
  • தேசிய கீதத்தில் மொத்தமாக ஐந்து சரணங்கள் அக்கீதத்தை உருவாக்குகின்றன.
  • வெவ்வேறு சந்தர்ப்பங்களிலும் நிகழ்ச்சிகளிலும் இந்திய தேசிய கீதமானது பாடப் படுகிறது.
  • தேசிய கீதத்தினை இசைக்க எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் தோராயமாக 52 வினாடிகள் ஆகும்.
  • சரணத்தின் முதல் மற்றும் கடைசி வரிகளைக் கொண்ட ஒரு குறுகியப் பதிப்பும் (சுமார் 20 வினாடிகள் இசைக்கப்பட வேண்டிய நேரம்) சில சந்தர்ப்பங்களில் இசைக்கப் படுகிறது.

தேசிய பாடல்: வந்தே மாதரம்

  • வந்தே மாதரம் பாடல், வங்க மொழியாக்கப் பட்ட சமஸ்கிருதத்தில் பங்கிம்சந்திர சாட்டர்ஜியால் இயற்றப் பட்டது.
  • இது அவரது புகழ்பெற்ற வங்க மொழி நாவலான ஆனந்த மடத்தில் (1882) இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
  • இது தேசிய கீதத்துடன் கூடிய சமமான நிலையினைக் கொண்டுள்ளது.
  • பின்னர் இந்தப் பாடலுக்கு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்தார்.
  • 1896 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் அந்த ஆண்டு அமர்வில் இது முதன்முறையாகப் பாடப்பட்டது.
  • இது 1937 ஆம் ஆண்டு ஒரு தீர்மானம் இயற்றப்பட்டு அதன் மூலம் இது தேசியப் பாடலாக அறிவிக்கப்பட்டது.
  • இதன் சரணத்தின் ஆங்கிலப் பதிப்பின் மொழிபெயர்ப்பு ஸ்ரீ அரவிந்தரால் இயற்றப் பட்டது.
  • இது சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு பெரும் உத்வேகத்தினை அளித்தது.
  • 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று அரசியலமைப்பு நிர்ணய சபையில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆற்றிய உரையில், "இந்திய விடுதலைப் போரில் வந்தே மாதரம் ஆற்றிய வரலாற்றுப் பங்களிப்பானது, ஜன கண மனவுடன் சமமாக மதிக்கப்பட வேண்டும், அதற்குச் சமமான நிலையினையும் அது பெற வேண்டும்" என்று கூறப்பட்டது.

தேசிய நாணயம்: இந்திய ரூபாய்

  • தற்போது, ​​இந்திய ரூபாய் (ISO குறியீடு: INR) நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயமாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் நாணயத்தினை அச்சிட்டு வெளியிடுகிறது.
  • 2010 ஆம் ஆண்டு நிலவரப்படி, தேவநாகரி எழுத்துக்களின் மெய்யெழுத்துக்கான “ ("ra" என்றும் உச்சரிக்கப்படுகிறது) க்குப் பதிலாக "R" என்ற லத்தீன் எழுத்து இந்திய ரூபாய் குறியீடாக பயன்படுத்தப்பட்டது.
  • "₹" என்பது தேவநாகரி "ra" மற்றும் ரோமானிய வரிவடிவ ஒலிக்குறி "R" ஆகியவற்றின் ஒரு கலவையாகும்,
  • இரண்டு இணையான கிடைமட்டக் கோடுகளுடன் தேசியக் கொடியினைக் குறிக்கும் வகையிலும் மற்றும் "சமமானது" (=) என்ற அடையாளத்தினையும் அவை மேல்புறத்தில் உள்ளன.

  • உதய குமார் தர்மலிங்கம் அதற்கான கருத்தினை உருவாக்கி முன்வைத்தார்.
  • பொருளாதாரச் சமத்துவமின்மையை அகற்றும் நாட்டின் நோக்கத்தினை அடையாளப் படுத்தும் காரணமாக சமத்துவ அடையாளம் உருவாக்கப்பட்டது.
  • சமத்துவ அடையாளமானது INR என்பதில் தோன்றும்.
  • INR என்பதின் வடிவமைப்பு முன்னர் பரிசீலனைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஐந்து சின்னங்களின் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இந்த வடிவமைப்பானது இந்திய மூவர்ணக் கொடியினை அடிப்படையாகக் கொண்டது.
  • மும்பையிலுள்ள இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் வடிவமைப்புத் துறையில் முதுகலைப் பட்டதாரியான உதய குமார் என்பவரால் இந்தச் சின்னத்திற்கான கருத்தானது உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டது.

தேசிய நதி: கங்கை நதி

  • 2008 ஆம் ஆண்டு நவம்பர் 4 அன்று கங்கை நதியானது இந்தியாவின் தேசிய நதியாக, அப்போதைய இந்தியப் பிரதமரான மன்மோகன் சிங்கால் அறிவிக்கப் பட்டது.
  • அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, இது இந்தியாவின் தேசிய சின்னங்களின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
  • இந்தியாவின் மிக நீளமான நதியாகங்கை நதியானது 2,510 கிலோமீட்டர் தூரம் மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் சமவெளிகளைக் கடந்து பாய்கிறது.
  • இது பாகீரதி நதியாக இமயமலையில் உள்ள கங்கோத்ரி பனிப்பாறையின் பனிப்பொழிவுகளில் உருவாகிறது.
  • இது பின்னர் அலக்நந்தா, யமுனா, சோன், கும்தி, கோசி மற்றும் காக்ரா போன்ற பிற நதிகளுடன் இணைகிறது.
  • கங்கை நதிப் படுகையானது 1,000,000 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டு உலகின் மிகவும் வளமான மற்றும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகள்ளது.
  • ஹரித்வாரிலும், ஃபராக்காவிலும் இந்த ஆற்றின் குறுக்கே இரண்டு அணைகள் உள்ளன.
  • கங்கை நதியானது, இந்துக்களால் பூமியில் மிகவும் புனிதமான நதி என்று போற்றப் படுகிறது.
  • வாரணாசி, ஹரித்வார் மற்றும் அலகாபாத் போன்ற நகரங்களில் இந்த ஆற்றின் கரையில் முக்கிய மத விழாக்கள் நடத்தப்படுகின்றன.
  • கங்கை நதியானது வங்காள விரிகுடாவில் தனது பயணத்தை முடிக்கும் முன், வங்காளதேசத்தின் சுந்தரவனம் என்ற சதுப்பு நிலத்தில் உள்ள கங்கை கழிமுகப் பகுதி வரை விரிவடைகிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்