TNPSC Thervupettagam

இந்தியாவின் தேசிய சின்னங்கள் - பகுதி 2

December 17 , 2023 390 days 2493 0

(For English version to this please click here)

இந்தியாவின் தேசிய சின்னங்கள்

தேசிய விலங்கு: வங்கப்புலி

  • இந்தியாவின் தேசிய விலங்கான ராயல் வங்காளப் புலி, உலகின் மிகப்பெரிய பூனை வகைகளில் ஒன்றாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தியா, ங்க தேசம், நேபாளம், மியான்மர் மற்றும் இலங்கை உட்பட ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் இந்த வகையான புலியானது காணப்படுகிறது.
  • இது ஒரு குறுகிய ரோமங்களைக் கொண்ட செழுமையான நிறமுடைய கோடுகளை உடலில் கொண்டுள்ள விலங்காகும்.
  • கருணை, வலிமை, சக்தி ஆகியவற்றின் கலவையான இந்த வகை புலிகளானது, மிகுந்த மரியாதையையும் உயர் மதிப்பையும் பெற்றுள்ளது.
  • அறியப்பட்ட எட்டு இனங்களில், இந்திய இனமான ராயல் வங்கப் புலியும் ஒன்றாகும்.
  • இந்த ராயல் வங்கப் புலியின் அறிவியல் பெயர் Panthera Tigris ஆகும்.
  • புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அதனைப் பாதுகாக்கவும், அதன் எண்ணிக்கையினைப் பெருக்கவும் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தப் புலியானது இந்தியாவின் தேசிய விலங்காக ஏற்றுக் கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டது.
  • இந்தப் புலியினைத் தேசிய விலங்காக ஏற்றுக் கொள்வதற்கு முன்பு, சிங்கமானது 1950 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டிருந்தது.

தேசியப் பறவை: மயில்

  • இந்த இனத்தினைச் சேர்ந்த ஆண் மயிலானது, பெண் மயிலினை விட மிகவும் வண்ணமயமானது என்பதோடு, இது பளபளக்கும் நீல நிற மார்பகப் பகுதிகளையும் கழுத்துப் பகுதிகளையும் மற்றும் சுமார் 200 நீளமான இறகுகள் கொண்ட கண்கவர் வெண்கல-பச்சைச் சுவட்டினையும் கொண்டுள்ளது.
  • பெண் மயிலானது பழுப்பு நிறமாகவும், ஆண் மயிலினை விட சற்று சிறியதாகவும் மற்றும் எந்தச் சுவடு இல்லாததாகவும் காணப்படுகிறது.
  • வாலை விசிறிக் கொண்டு அதன் இறகுகளை முன்னிறுத்தும் ஆண் மயிலின் விரிவான நயநாகரிக நடத்தை சார்ந்த நடனமானது, ஒரு அழகான காட்சியாக காணப் படும்.
  • இந்திய வகையினைச் சேர்ந்த இந்த மயில்களையே இந்தியாவின் தேசியப் பறவையாக அறிவித்துள்ளனர்.
  • பாவோ கிரிஸ்டேடஸ் (கிரீட மயில்) அதன் மிகவும் பிரபலமான பிரதிநிதியாக காணப்படுகிறது.
  • இந்தியத் துணைக்கண்டத்தினைப் பூர்வீகமாகக் கொண்ட பறவையான இந்த மயில்கள், இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு துடிப்பான வண்ணங்களின் ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது.
  • இது ஒரு விசிறி வடிவ முகடுகளைக் கொண்ட வண்ணமயமான, அன்னப்பறவை அளவிலான பறவையாகும்.
  • 1963 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி, இந்த மயில் இந்தியாவின் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது.
  • இந்தியாவின் தாழ்வான பகுதிகளை இவை பெரும்பாலும் தங்களது இனத்தின் தாயகமாகக் கொண்டு, ஆண்டு முழுவதும் அங்கு தொடர்ந்து வசிக்கிறது.

தேசிய நீர்வாழ் விலங்கு: டால்பின்

  • 2010 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்காக கங்கை நதி டால்பின் அறிவிக்கப்பட்டது.
  • அசாமின் கவுகாத்தி நகரமானது கங்கை நதி டால்பினை அதன் நகர விலங்காக ஏற்றுக் கொண்ட வகையில் இந்தியாவிலேயே இது இம்மாதிரியிலான முதல் நகரமாக உரு மாறியது.
  • மேலும், கவுகாத்தி நகரமானது, மலைப் பாம்புகள் வசிக்கும் நகரமாகவும் உள்ளது.
  • கங்கை, யமுனை, சம்பல் மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் மற்றும் தெற்காசியாவில் பாயும் அவற்றின் துணை நதிகளிலும் கங்கை நதி டால்பின்கள் காணப்படுகின்றன.
  • கங்கை நதி டால்பின்களானது, புனிதமான கங்கை நதியின் தூய்மையைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது, ஏனெனில் அது தூய மற்றும் நன்னீரில் மட்டுமே வாழக் கூடிய விலங்காகும்.
  • இது IUCN பட்டியலில் ஆபத்தான உயிரினங்களின் சிவப்புப் பட்டியலில் அழியும் நிலையில் உள்ளதாக பட்டியலிடப் பட்டுள்ளது.

தேசிய பழம்: மாம்பழம்

  • இந்தியாவின் தேசிய பழம் மாம்பழம் ஆகும்.
  • இது "பழங்களின் அரசன்" (Mangifera indica) என்று அன்புடன் குறிப்பிடப் படுகிறது.
  • உலகெங்கிலும் உள்ள பலர் பழங்காலத்திலிருந்தே அதன் இனிமையான நறுமணத்தையும் மிக்க மகிழ்ச்சி தருகிற சுவைகளையும் விரும்புகின்றனர்.
  • இது தேசிய சின்னமாக கருதப் படுவதால் செழிப்பும் மிகுதியும் இந்தப் பழத்துடன் தொடர்புடையது ஆகும்..
  • இந்த மாம்பழமானது, வெப்பமண்டல நாடுகளில் அதிகம் விளையும் பழங்களில் ஒன்றாகும்.
  • இந்தியாவில், மலைப்பாங்கான பகுதிகள் தவிர்த்து, கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளிலும் இந்த மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது.
  • இந்தியாவில் பழங்காலத்திலிருந்தே மாம்பழங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.
  • கவிஞர் காளிதாசரும் அதைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
  • சீனப் பயணியான யுவான் சுவாங்கினைப் போலவே அலெக்சாண்டரும் அதன் சுவையினை ருசித்துள்ளார்.
  • லக்கி பாக் என்றழைக்கப்படும் தர்பங்காவில் அக்பர் 100,000 மாமரங்களை நட்டார்.

தேசிய மலர்: தாமரை

  • தாமரை அல்லது நீர் அல்லி என்பது ஆழமற்ற நீரில் மட்டுமே வளரும் பரந்த மிதக்கும் இலைகள் மற்றும் பிரகாசமான மணம் கொண்ட மலர்களைக் கொண்ட நீல லில்லியின் (நிம்பேயா) ஒரு நீர்வாழ் தாவரமாகும்.
  • சமஸ்கிருதத்தில் ‘பத்மா’ என்றழைக்கப்படும் இந்த நீர்வாழ் மூலிகையானது, இந்தியக் கலாச்சாரத்தில் மந்திரத்தாயத்து என்று போற்றப்படுகிறது.
  • இது பண்டைய இந்தியாவின் கலை மற்றும் புராணங்களில் ஒரு தனித்துவமான இடத்தினைப் பிடித்திருக்கும் ஒரு புனிதமான மலராகும்.
  • ஆன்மீகம், செழிப்பு மிக்கது, ஞானம், இதயம் மற்றும் மனத்தின் தூய்மை ஆகியவையனைத்தும் தாமரை மலருடன் தொடர்புடையது.

தேசிய மரம்: ஆலமரம்

  • Ficus benghalensis என்ற அறிவியல் பெயர் கொண்ட ஆலமரம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேசிய மரமாகும்.
  • இது நீண்ட ஆயுள்காலத்துடன் இணைக்கப்பட்டு, ஏராளமான சிகிச்சைப் பயன்களைக் கொண்டுள்ளது.
  • இந்த மரமானது "கல்ப விருட்சம்" அல்லது "ஆசைகளை நிறைவேற்றும் மரம்" என்று அடிக்கடி சித்தரிக்கப்படுகிறது.
  • ஆலமரத்தின் கிளைகளானது, ஒரு பெரிய பகுதியில் புதிய மரங்கள் போல் வேரூன்றி உள்ளன.
  • ஆலமரமானது, அதன் அளவு மற்றும் நீண்ட ஆயுள் சுழற்சி காரணமாக அதிக எண்ணிக்கையிலான விலங்குகளைக் கொண்டிருப்பதைக் காணலாம்.

தேசிய நதி: கங்கை

  • இந்தியாவின் தேசிய நதியானது கங்கை நதி என்றழைக்கப்படுகிறது.
  • இது உள்நாட்டில் பாகீரதி நதி என்றழைக்கப்படுகிறது.
  • இது இமயமலையில் கங்கோத்ரி என்றழைக்கப்படும் பனிப்பாறையின் பனி மூடிய பனிப்பொழிவுகளிலிருந்து தொடங்குகிறது.
  • இந்து சமயத்தினைச் சேர்ந்தவர்கள் கங்கை நதியினைப் பூமியின் மிகவும் புனிதமான நதியாகக் கருதுகின்றனர்.
  • கங்கை நதிப் படுகையில் 2,510 கிலோமீட்டர் தூரத்திற்கு மலை, சமவெளி மற்றும் பள்ளத்தாக்குகள் ஆகியவை காணப்படுகின்றன.
  • இது இந்தியாவின் மிக நீளமான நதியாகும்.
  • இது இந்தியாவின் முக்கிய நகரங்களான வாரணாசி, அலகாபாத் மற்றும் ஹரித்வார் வழியாக பாய்கிறது.

தேசிய ஊர்வன: ராஜநாகம்

  • இதன் அறிவியல் பெயரானது, ஓபியோபகஸ் ஹன்னா என்பதோடு, இந்திய ராஜநாகம் அல்லது பாம்பினை உண்பவர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
  • இது நாட்டின் அதிகாரப் பூர்வ ஊர்வனவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இது இந்திய மற்றும் தென்கிழக்காசிய காடுகளில் காணப்படுகிறது.
  • இது உலகின் மிக நீளமான விஷப் பாம்பாகும்.
  • இது அதிகபட்சமாக 19 அடி நீளம் வரை வளரும் மற்றும் 25 ஆண்டுகள் வரை வாழக் கூடியது ஆகும்.
  • இது ஒவ்வொரு கடியிலும் 6 ccs என்ற அளவிற்கு விஷத்தை வெளியிடும்.
  • இந்து மதத்தில், ராஜநாகமானது, நாகா என்றும் அழைக்கப்படுவதோடு, அவை தெய்வங்களாகவும் மதிக்கப்படுகின்றன.
  • சிவன் பொதுவாக மரணத்தின் கடவுளாக பார்க்கப் படுவதோடு, அவரது கழுத்தில் ஒரு நாகப் பாம்பும் அமைந்திருக்கும்.

தேசியப் பாரம்பரிய விலங்கு: இந்திய யானை

  • இந்திய யானையானது 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி முதல் இந்தியாவின் தேசியப் பாரம்பரிய விலங்காக அறிவிக்கப்பட்டது.
  • இந்திய யானை (Elephas maximus indicus) இனத்தின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் காக்கும் பொருட்டு அது தேசியப் பாரம்பரிய விலங்காக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆசிய யானைகளில் 60% இந்தியாவில் வாழ்கின்றன.
  • நாட்டில் 25,000 யானைகள் உள்ள நிலையில் இதில் 3,500 யானைகள் உயிரியல் பூங்காக்கள் மற்றும் கோயில்களில் காணப்படுகின்றன.
  • அவை குறிப்பாக நாட்டின் தெற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளிலும் சிதறிக் கிடக்கின்றன.
  • கடந்த மூன்று தலைமுறைகளில் அதன் எண்ணிக்கை 50% அளவிற்குக் குறைந்துள்ளதால், இந்திய யானைகள் IUCN பட்டியலில் அழிந்து வரும் நிலையில் பட்டியலிடப் பட்டுள்ளது.
  • வாழ்விட இழப்பு, வாழ்விடம் துண்டாடப் படுதல் மற்றும் வாழ்விடச் சீரழிவு போன்றவற்றால் இது அழிந்து வரும் இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உறுதிமொழி: தேசிய உறுதிமொழி

  • நாட்டிற்குச் சூளுரை செய்து சத்தியம் செய்கிற வகையில் இந்தியர்கள் இந்த தேசிய உறுதிமொழியை எடுக்க வேண்டும்.
  • இந்தியாவில் உள்ளவர்கள் பெரும்பாலும் பள்ளி விழாக்களிலும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தேசிய விடுமுறை நாட்களிலும் இதை ஒரே நேரத்தில் உறுதிமொழியாக எடுத்துக் கொள்கிறார்கள்.
  • 1962 ஆம் ஆண்டு தெலுங்கு எழுத்தாளரான பைடிமரி வெங்கட சுப்பாராவ் என்பவர் இந்த உறுதிமொழியினை எழுதினார்.
  • தொடர்ச்சியாக, இது 1963 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் தொடங்கி பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

தேசிய விளையாட்டு

  • இந்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகமானது, அதிகாரப் பூர்வமாக, நாட்டில் தேசிய விளையாட்டு எதுவும் இல்லை என்றும் ஹாக்கி உட்பட எந்த விளையாட்டும் அவ்வாறு அறிவிக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தியது.

தேசிய காய்கறி - பூசணி

  • இந்தியாவின் தேசிய காய்கறி என்பது பூசணி ஆகும்.
  • மஞ்சள் நிறத்தில் மென்மையான மற்றும் பலப்படுத்தப்பட்ட தோலுடன் வட்டமாக காணப்படும் பூசணி ஒரு குளிர்காலத்தில் விளையக் கூடிய பரங்கிக்காய் ஆகும்.
  • இது இந்தியா முழுவதும் வளரக்கூடிய காய்கறியாகவும், வளர அதிக அளவிலான மண்ணும் தேவைப்படாத ஒரு காய்கறியாகவும் காணப்படுகிறது.
  • பூசணிக்காய் கொடியினை உயரத்தில் ஏற்றியும் அல்லது படரச் செய்தும் எளிதாக வளர்க்கலாம்.

தேசிய நுண்ணுயிர்

  • 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் லாக்டோபாகிலஸ்  என்பது இந்தியாவின் தேசிய நுண்ணுயிரியாக அறிவிக்கப்பட்டது.
  • இது தயிர் உற்பத்திக்கு பயன்படுகிறது.

​​​​​​​

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்