(For English version to this please click here)
இந்தியாவின் பழைய பாராளுமன்றம்
- சன்சத் பவன் என்பது இந்தியாவின் நாடாளுமன்றத்தின் ஒரு பகுதியாகும், என்பதோடு மக்களவை (கீழ்சபை) மற்றும் ராஜ்யசபா (மேல்சபை) ஆகியவற்றின் தாயகமாகும்.
- பழைய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு “சம்விதன் சதன்” அல்லது “அரசியலமைப்பு மாளிகை” என்ற புதிய பெயரைப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
வரலாற்று அம்சங்கள்
- கட்டிடக் கலைஞர்களான சர் எட்வின் லுட்டேயென்ஸ் மற்றும் சர் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோர் இந்தக் கட்டிடத்தின் வடிவமைப்பில் இந்திய வடிவங்கள் மற்றும் புதிய பாணிகளை இணைத்தனர்.
- புது டெல்லியில் ராஜாவின் புதிய ஏகாதிபத்தியத் தலைநகரை வடிவமைக்கும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது.
- புது தில்லியின் இந்த மையப் பகுதி லுட்டேயன்ஸின் டெல்லி என்றும் அழைக்கப் படுகிறது,
- இது சம்பந்தப்பட்ட இரண்டு கட்டிடக் கலைஞர்களில் ஒருவரான எட்வின் லுட்டேயென்ஸின் பெயரைக் கொண்டுள்ளது.
- பேக்கர் புகழ்பெற்ற ஒரு பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் ஆவார்.
- அவர் தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள மற்றொரு பிரிட்டிஷ் காலனி நகரத்தில் முக்கியக் கட்டிடங்களை வடிவமைத்தார்.
- அந்த வடிவமைப்பின் ஒரு பகுதியாக, ‘அரசு மாளிகை’ (ராஷ்டிரபதி பவன்) மற்றும் ‘இந்திய அரசாங்கச் செயலகங்களின் இரண்டு முக்கியத் தொகுதிகள் மற்றும் இணைக்கப்பட்ட கட்டிடங்கள் (வடக்கு மற்றும் தெற்குத் தொகுதி) ஆகியவையும் அடங்கும்.
- 1919 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் இந்தியாவிற்கு ஈரவை சட்டமன்றமானது வழங்கப்பட்டது.
- இது ஒரு புதிய கட்டிடத்தை நிர்மாணிப்பதைக் குறிக்கிறது.
- இது மூன்று அறைகளை உள்ளடக்கியது: அவையாவன மாநிலங்களின் அவை, இளவரசர்களின் அறை மற்றும் சட்டமன்றம் ஆகியவை ஆகும்.
- பின்னோக்கிப் பார்க்கையில், 1911 ஆம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் கீழ் தலைநகரானது கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.
- இறையாண்மை, கூட்டாட்சி, தேசியவாதம் மற்றும் சுதந்திரம் பற்றிய முடிவில்லாத விவாதங்களுக்கு இது சாட்சியமாக உள்ளது.
- 1911 ஆம் ஆண்டு டிசம்பர் 12 அன்று இந்தியாவின் பேரரசராக ஐந்தாம் ஜார்ஜ் முடி சூட்டப் பட்ட போது, "இந்திய அரசாங்கத்தின் இருக்கையை கல்கத்தாவிலிருந்து பண்டையத் தலைநகரான டெல்லிக்கு மாற்றுவது குறித்து நாங்கள் முடிவு செய்து உள்ளோம்" என்று மன்னர் அறிவித்தார்.
- மேலே கூறப் பட்ட இரண்டு கட்டிடக் கலைஞர்களும் பின்னர் நாடாளுமன்ற மாளிகை, ராஷ்டிரபதி பவன், வடக்கு மற்றும் தெற்குத் தொகுதிகள், ராஜ்பாத், இந்தியா கேட், தேசிய ஆவணக் கட்டடம் மற்றும் இந்தியா கேட்டைச் சுற்றி இளவரசர்களின் வீடுகளையும் கட்டினார்கள்.
- இக்கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளுக்கு ஆறு ஆண்டுகள் ஆனது.
- 1927 ஆம் ஆண்டு ஜனவரி 18 அன்று இந்தியாவின் வைசிராய் மற்றும் கவர்னர் ஜெனரலான பிரபு இர்வின் அவர்களால் திறப்பு விழாவானது நடத்தி வைக்கப் பட்டது.
- இது 1927 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை, காலனியச் சட்ட சபையின் இடமாக இருந்தது.
- 1929 ஆம் ஆண்டு பகத் சிங் மற்றும் பத்துகேஷ்வர் தத் வீசிய குண்டுகள் போன்ற போராட்டங்களால் அதன் கட்டிடம் அதிர்வினைக் கண்டது.
- அதுதான் முதன்முறையாகப் பாராளுமன்ற அரங்குகளுக்குள் நுழைந்த புரட்சி ஆகும்.
- 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த தினத்தன்று, கடிகாரம் நள்ளிரவை நோக்கி நகர்ந்த போது, ஜவஹர்லால் நேரு நிரம்பிய அதன் மத்திய மண்டபத்தில் அரசியல் நிர்ணய சபையின் முன் வருகையளித்தார்.
- அவர் இந்தியாவின் முயற்சி மற்றும் அதன் இலக்கு பற்றிய தனது புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார்.
- அந்த உரையில் "ஒரு தருணம் வருகிறது, ஆனால் அது வரலாற்றில் நாம் பழையதிலிருந்து புதியதை நோக்கி மாறும் போதும், ஒரு யுகம் முடிவடையும் போதும் மற்றும் ஒரு தேசத்தின் ஆன்மா, நீண்ட காலமாக அடக்கி வைக்கப்பட்டு, அதன் நிலையினைச் சொற்களால் தெரிவிக்கும் போதும் வருகிறது".
- இது தேசத்தின் விருப்பங்களையும், முயற்சியையும் மற்றும் ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள் காலனித்துவ ஆட்சியானது முடிவுக்கு வந்த ஒரு புதிய பயணத்தையும் பிரதிபலிக்கிறது.
- இந்திய அரசியலமைப்பானது அதன் மத்திய மண்டபத்தில் உருவாக்கப்பட்டது.
- மத்திய மண்டபமானது முதலில் பழைய மத்தியச் சட்டமன்றம் மற்றும் மாநிலங்கள் அவையின் நூலகமாகப் பயன்படுத்தப்பட்டது.
- இது 1946 ஆம் ஆண்டில், அரசியலமைப்பு நிர்ணய சபையின் கூடமாக மாற்றப் பட்டுப் புதுப்பிக்கப்பட்டது.
அடித்தளம்
- 1921 ஆம் ஆண்டு பிப்ரவரி 12, அன்று கன்னாட் பிரபுவால் இதற்கு அடிக்கல் நாட்டப் பட்டது.
- இதனைக் கட்டி முடிக்க 6 ஆண்டுகள் ஆனதோடு, முழுத் திட்டத்திற்கும் சுமார் 83 லட்சம் செலவானது.
- இது முதலில் மன்ற மாளிகை (அவைக் கட்டிடம்) என்று அழைக்கப்பட்டதோடு இது பிரிட்டிஷ் இந்தியாவின் சட்டமன்றமான ஏகாதிபத்தியச் சட்டமன்றமாகவும் இருந்தது.
- ஒருவர் கர்தவ்யா பாதையின் மையத்தில் உள்ள விஜய் சௌக்கில் நின்றால், அச்சாலையின் ஒரு முனை இந்தியா கேட் நோக்கிச் செல்வதோடு, அதன் மறுமுனை ராஷ்டிரபதி பவன் நோக்கிச் செல்வது போல் வடிவமைக்கப் பட்டு உள்ளது.
திறப்புவிழா
- 1927 ஆம் ஆண்டு ஜனவரி 18, அன்று கவர்னர் ஜெனரலின் நிர்வாகக் குழுவின் உறுப்பினரும், தொழில்கள் மற்றும் தொழிலாளர் துறையின் பொறுப்பாளருமான சர் பூபேந்திர நாத் மித்ரா என்பவர், இக்கட்டிடத்தைத் திறப்பதற்கு வைஸிராய் இர்வின் பிரபுவினை அழைத்தார்.
- இந்தக் கட்டிடம் 1927 ஆம் ஆண்டு ஜனவரி 18, அன்று அன்றைய இந்தியாவின் வைஸிராயாக இருந்த இர்வின் பிரபுவால் திறந்து வைக்கப்பட்டது.
- இது ஆரம்பத்தில் ஏகாதிபத்தியச் சட்டமன்றத்தினைக் கொண்டிருந்தது.
- இதனைச் சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசியலமைப்பு நிர்ணயச் சபையானது அதனைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
- இது 1950 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றமாக மாறியது.
- 1956 ஆம் ஆண்டில் அதிக இடத்திற்கான தேவை காரணமாக இரண்டு தளங்கள் அதன் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டன.
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் அமைவிடம்
- பாராளுமன்றக் கட்டிடத்தில் உள்ள இளவரசர்களின் அறையானது சுதந்திரத்திற்கு முன்பு இந்தியக் கூட்டாட்சி நீதிமன்றத்தால் பயன்படுத்தப்பட்டது.
- பின்னர், இந்த நீதிமன்றமானது அதன் சொந்தக் கட்டிடத்திற்கு மாறுவதற்கு முன்பு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தின் அமைவிடமாக செயல் பட்டது.
கட்டிடக்கலை அம்சங்கள்
- மேற்கத்திய மற்றும் இந்தியப் பாணிகளின் கட்டடக் கலை கலவைக்காக இந்தக் கட்டிடமானது புகழ்பெற்றது.
- இது பாரம்பரிய மேற்கத்தியக் கூறுகளை உள்ளடக்கியது.
- இது நெடுவரிசைகள் மற்றும் குவிமாடங்களின் பயன்பாடு போன்ற இந்திய கட்டிடக் கலை அம்சங்களையும் கொண்டுள்ளது.
- இது மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஏகதர்சோ மகாதேவா கோயிலால் (சௌசத் யோகினி கோயில்) ஈர்க்கப்பட்டது.
- இக்கட்டிடத்தின் சுற்றளவு வட்டமாகவும், வெளிப்புறத்தில் 144 நெடுவரிசைகளும் உள்ளன.
- பாராளுமன்றத்தின் முழு சுற்றளவு ஒரு மைலில் 1/3 (536.33 மீ) ஆகும்.
- லோக்சபா மற்றும் ராஜ்யசபா அரங்குகள் இரண்டும் குதிரையின் இலாட வடிவில் உள்ளன.
- லோக்சபாவில் 543 எம்.பி.க்களுக்கு இடமளிக்கும் வகையில் பழைய நாடாளுமன்றம் இருந்தது.
- பாராளுமன்றக் கட்டிடத்தின் ராஜ்யசபாவானது 245 இருக்கைகள் கொண்டதாகும்.
- இக்கட்டிடம் பெரிய தோட்டங்களால் சூழப்பட்டுள்ளதோடு அதன் சுற்றளவில் மணற்கல் தண்டவாளங்களால் (ஜாலி) வேலி அமைக்கப்பட்டுள்ளது.
மைய மண்டபத்தின் முக்கியத்துவம்
- 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-15 தேதிகளில் (நள்ளிரவு) நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஐக்கியப் பேரரசிடமிருந்து இந்தியாவிற்கு அதிகாரப் பரிமாற்றமானது நடைபெற்றது.
- பாராளுமன்ற நூலகமானது இந்தியாவின் இரண்டாவது பெரிய நூலகம் ஆகும். (கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகம் மிகப்பெரியது)
- 2006 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட பாராளுமன்ற அருங்காட்சியகமானது, பாராளுமன்ற மாளிகைக்கு அடுத்ததாக, பாராளுமன்ற நூலகக் கட்டடத்தில் உள்ளது.
- சுதந்திரத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்திற்குத் தனிக் கட்டிடம் ஒதுக்கப்படும் வரை இது தற்காலிகமாக நீதிமன்ற அறையாகப் பயன்படுத்தப்பட்டது.
- அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினர்களால் எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆங்கிலம் மற்றும் இந்தியின் முதற்பதிப்புகள் இரண்டும் இந்த நூலகத்தில் நைட்ரஜன் நிரப்பப்பட்ட பேழைகளில் வைத்துப் பாதுகாக்கப் படுகிறது.
வரலாற்றுச் சிறப்புகள்
- பழைய பாராளுமன்றக் கட்டிடத்தின் பெயர் மாற்றமானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வகையில், இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் அதன் பங்கை எடுத்துக் காட்டுகிறது.
- பிரதமர் நரேந்திர மோடி மைய மண்டபத்தில் ஆற்றிய உரையின் போது, இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தில் இக்கட்டிடத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அரசியலமைப்பை உருவாக்குவதில் இதன் பங்களிப்பு
- 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9 முதல் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 வரை பழைய பாராளுமன்றக் கட்டிடமானது அரசியல் நிர்ணய சபையின் அமர்வுகளுக்கான இடமாக செயல்பட்டது.
- மேற்கூறிய காலக் கட்டத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டமானது எழுதப் பட்டது.
கூட்டு அமர்வுகளின் இடமாற்றம்
- இனி வருங்காலங்களில் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் உள்ள மக்களவை அறையில் கூட்டு அமர்வுகள் நடைபெறும்.
- இந்த இடமாற்றமானது, அத்தகைய அமர்வுகளின் போது எம்.பி.க்கள், தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு இடையேயான உரையாடல்களுக்கான இடமாக மாறுவதைக் குறிக்கிறது.
- இது நவீனமயமாக்கலைப் பிரதிபலிப்பதோடு பாராளுமன்ற நடவடிக்கைகளுக்குள் நடைமுறைத் தாக்கங்களை ஏற்படுத்தலாம்.
முறைசாரா கலந்துரையாடல்களை வளர்த்தல்
- எம்.பி.க்கள், தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடையே முறைசாரா கலந்துரையாடல்களுக்குப் பழைய பாராளுமன்றக் கட்டிடமானது ஒரு மையமாக இருந்தது.
- புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டவுடன், இந்த முறைசாரா நிகழ்வுகள் மக்களவை அறையில் நடைபெறும்.
- நமது சுதந்திரத்தின் 75 ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவின் வரலாற்றை இந்த நாடாளுமன்றக் கட்டிடமானது கண்டுள்ளது.
- புதிய பாராளுமன்றக் கட்டடம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, இக்கட்டடம் இடிக்கப் படாமல், 'ஜனநாயகதின் அருங்காட்சியகமாக' மாற்றப்படும்.
- பழைய பாராளுமன்றக் கட்டிடம் "சம்விதன் சதன் (அரசியலமைப்பு மாளிகை)" என்று அழைக்கப்படும்.
- பிரதமர் நரேந்திர மோடி 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று பழைய பாராளுமன்றக் கட்டிடத்திலிருந்து தனது கடைசி உரையில் இதனை அறிவித்தார்.
-------------------------------------