TNPSC Thervupettagam

இந்தியாவின் புதிய பாராளுமன்றம் - பகுதி 2

October 6 , 2023 463 days 1266 0

(For English version to this please click here)

இந்தியாவின் புதிய பாராளுமன்றம்

கட்டிடத்தின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள்

  • புதிய பாராளுமன்ற மாளிகை முதன்முதலில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று பாராளுமன்றச் சிறப்பு அமர்வின் போது, ​​இந்தியாவின்  பாராளுமன்றம் என்ற பெயருடன் அதிகாரப்பூர்வ அலுவல்களுக்காகப் பயன்படுத்தப் பட்டது.
  • புதியப் பாராளுமன்றமானது தேசிய கீதத்துடன் தொடங்கப்பட்டது.
  • அந்த அறையின் உட்கூரையானது ராஷ்டிரபதி பவனில் உள்ளதைப் போன்ற பாரம்பரியப் பாணி தரைவிரிப்பு மற்றும் ஃப்ரெஸ்கோ ஓவியங்களைக் கொண்டிருக்கும்.
  • தற்போதைய நாடாளுமன்றத்தின் சில குணங்களைப் பாதுகாக்கும் வகையில், அதன் உள் சுவர்களில் மந்திரங்கள் எழுதப்படும்.

  • தற்போதைய கட்டமைப்பைப் போலவே, தோல்பூர் கல் என்பது ஒரு முக்கியக் கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்தப்படும்.
  • சிவப்பு கிரானைட் என்பது பல்வேறு உட்புற இடங்களில் சிவப்பு மணற்கற்களுக்கு பதிலாகப் பயன்படுத்தப்படும்.
  • இடையூறுகளைக் குறைப்பதற்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் கூடுதல் கவனத்துடன் கட்டுமானம் செய்யப்பட்டது.
  • பாராளுமன்ற மாளிகையில் ஞான துவார் (அறிவு வாயில்), சக்தி த்வார் (சக்தி வாயில்) மற்றும் கர்ம துவார் (கர்மா வாயில்) என்று பெயரிடப்பட்டுள்ள 3 நுழைவாயில்கள் உள்ளன.
  • கஜ, அஸ்வ, கருடன், மகர, ஷர்துலா மற்றும் ஹம்ஸ் ஆகிய ஆறு காவலர் சிலைகள் அதன் மூன்று நுழைவாயில்களிலும்  உள்ளன.

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2023/5/30/New-Parliment-21.jpg?dpr=1.0&q=70&w=640

சுற்றுச்சூழலுக்கு இணக்கம்

  • பசுமைக் கட்டுமான நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட இந்தப் புதியக் கட்டிடமானது பழைய கட்டிடத்தை விட 30% மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கும்.
  • மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி அமைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இது அதிக இடவசதித் திறன் கொண்டதாகவும், அடுத்த 150 ஆண்டுகளுக்கு செயல்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பூகம்ப-பாதுகாப்பு அமைப்பு

  • தில்லி நகரம் எனபது நில அதிர்வு மண்டலம்-V என்பதில் உள்ளதால், இந்தக் கட்டிடமானது பூகம்பத்திலிருந்துப் பாதுகாப்பதற்கான துல்லியமான  அமைப்பினைக் கொண்டுள்ளது.

அரசியலமைப்பு மண்டபம்

  • புதிய கட்டிடமானது இந்திய மக்களாட்சியின் பயணமானது ஆவணப்படுத்தப் பட்டு ள்ள அரசியலமைப்பு மண்டபத்தைக் கொண்டுள்ளது..

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2023/5/30/New-Parliment-3.jpg?dpr=1.0&q=70&w=640

இந்தியா முழுவதிலுமிருந்து பொருள்

  • இந்தக் கட்டிடத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்திற்காக, தோல்பூரில் உள்ள சர்மதுராவில் இருந்து மணற்கல் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள லகா கிராமத்தில் இருந்து கிரானைட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் நாடு முழுவதிலுமிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.
  • இதேபோல், அதன் அலங்காரத்தில் பயன்படுத்தப்படும் மரம் நாக்பூரிலிருந்தும் கொண்டு வரப் பட்டதோடு, மும்பையைச் சேர்ந்த கைவினைஞர்கள் அதன் மரக் கட்டிடக்கலை வடிவமைப்பிற்குப் பொறுப்பு வகித்தனர்.
  • உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பதோஹி நெசவாளர்கள் பாரம்பரியமான கையால் கட்டப்பட்ட கம்பளங்களைக் கட்டிடத்திற்காக உருவாக்கியுள்ளனர்.

காந்தி சிலை

  • 1993 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் முதலில் வைக்கப் பட்ட மகாத்மா காந்தியின் 16 அடி உயர வெண்கலச் சிலையானது, பழைய மற்றும் புதிய கட்டிடங்களுக்கு இடையில் மாற்றப் பட்டது.
  • அது இப்போது மக்களவை சபாநாயகர் பயன்படுத்தும் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பழைய கட்டிடத்தை நோக்கியிருக்கிறது.
  • இந்தச் சிலையானது மாணவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு ஒரு குறிப்பிடத்தக்க இடமாக உள்ளது.
  • இது பத்ம பூஷண் விருது பெற்ற புகழ்பெற்ற சிற்பி ராம் வி சுதாரால் உருவாக்கப் பட்டது.

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2023/5/30/New-Parliment-9.jpg?dpr=1.0&q=70&w=640

தேசிய சின்னங்கள்

  • இந்தக் கட்டிடமானது தேசியச் சின்னமான அசோகரின் சிங்கத் தலைநகரத்தினைக் கொண்டுள்ளது,
  • இது 9,500 கிலோ எடையும் 6.5 மீட்டர் உயரமும் கொண்டது.
  • இது வெகு தூரத்தில் இருந்து கூட தெரியும்.
  • இந்தப் பிரமாண்டமான வெண்கலச் சிற்பத்தை ஆதரிக்கும் வகையில், 6500 கிலோ எடையுள்ள ஒரு அமைப்பு மத்திய முகப்பு மண்டபத்தின் மேல் கட்டப்பட்டது.
  • இதன் நுழைவாயிலில், அசோகச் சக்கரம் மற்றும் 'சத்யமேவ ஜெயதே' என்ற வார்த்தைகள் கல்லில் செதுக்கப் பட்டுள்ளன.

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2023/5/30/New-Parliment-10.jpg?dpr=1.0&q=70&w=640

எண்மமயமாக்கல்

  • புதிய பாராளுமன்றத்தின் சுற்றுச்சூழலுக்கு உகந்த கவனம் செலுத்துவதற்கு ஏற்ப  சபை நடவடிக்கைகள், கேள்விகள் மற்றும் பிற  நடவடிக்கைகள் போன்ற அனைத்துப் பதிவுகளும் எண்ம மயமாக்கப்படுகின்றன.
  • கட்டிடத்தின் காட்சியகங்கள்
  • ஷில்ப்என்ற காட்சிக் கூடமானது, இந்தியா முழுவதும் உள்ள நெசவு சார்ந்த நிறுவல்கள், அனைத்து இந்திய மாநிலங்களிலிருந்தும் தயாரிக்கப்பட்ட மட்பாண்ட பொருட்களுடன் காட்சிப் படுத்தப்படும்.
  • இதன் காட்சிக் கூடங்கள் ஷில்ப் தீர்கா (கைவினைப் பொருட்கள் காட்சியகம்) பர்வ் (திருவிழா), ஸ்வபலம்பன் (தன்னம்பிக்கை), பிரகிருதி (இயற்கை), உல்லாஸ் (மகிழ்ச்சி), க்யான் (ஞானம்), சம்ரஸ்தா (இணக்கம்), அஸ்தா (நம்பிக்கை) மற்றும் யாத்ரா (பயணம்) ஆகிய எட்டு கருப்பொருள்களுடன் கருத்துருவாக்கப் பட்டது.
  • பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ளவை உட்பட இந்தியாவின் சின்னமான நினைவுச் சின்னங்களை ஸ்தபத்யாஎன்ற காட்சிக் கூடமானது காட்சிப்படுத்தும்.
  • இது நினைவுச் சின்னங்கள் தவிர, யோகா ஆசனங்களையும் ஒருங்கிணைக்கிறது.

வாஸ்து சாஸ்திரம்

  • கட்டிடத்தின் அனைத்து நுழைவாயில்களிலும், இந்தியக் கலாச்சாரம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையில், பாதுகாவலர் சிலைகளாக மங்களகரமான விலங்குகள் காட்சிப்படுத்தப்படும்.
  • யானை, குதிரை, கழுகு, அன்னம் மற்றும் புராண உயிரினங்களான ஷார்துலா மற்றும் மகரா ஆகியவை இதில் அடங்கும்.

பூக்கோ தனி ஊசல்

  • புதிய பாராளுமன்றக் கட்டிடத்தின் உள்ளே ஃபூக்கோ ஊசல் நிறுவப்பட்டுள்ளது.
  • இந்த ஊசல் கொல்கத்தாவில் உள்ள தேசிய அறிவியல் அருங்காட்சியகத்தால்  (NCSM) உருவாக்கப் பட்டது ஆகும்.
  • இது இம்மாதிரியிலான வகையில் இந்தியாவிலேயே மிகப்பெரியது ஆகும்.

  • இது 22 மீட்டர் உயரமும், 36 கிலோ எடையும் கொண்டது.
  • அது அதன் அச்சில் சுழலும் போது, அந்த ​​ஊசல் கிட்டத்தட்ட தரையை அடையும் வகையில் அரசியலமைப்பு மண்டபத்தின் உச்சியில் நிலை நிறுத்தப்பட்ட ஒரு மேல்தளச் சாளரதிலிருந்து தொங்குகிறது.
  • அதன் இருப்புநிலையானது இந்தியாவின் கருத்தாக்கத்தைப் பிரபஞ்சத்தின் பரந்த தன்மையுடன் ஒருங்கிணைப்பதைக் குறிக்கிறது.
  • பாராளுமன்றத்தின் அட்சரேகையில், ஒரு சுழற்சியை முடிக்க 49 மணிநேரம், 59 நிமிடங்கள் மற்றும் 18 வினாடிகள் ஆகும்.
  • பிரெஞ்சு இயற்பியலாளர் லியோன் ஃபூக்கோவின் பெயரால் பெயரிடப்பட்ட ஃபூக்கோ ஊசல், பூமியின் சுழற்சியை நிரூபிக்கப் பயன்படுகிறது.
  • ஊசலின் உச்சவரம்பில் ஒரு நிலையான புள்ளியில் இருந்து ஒரு நீண்ட, வலுவான கம்பியானது இறுதியில் இடை நிறுத்தப்பட்ட ஒரு கனமான ஊசல் குண்டினைக் கொண்டுள்ளது.
  • ஊசல் ஊசலாடும்போது, ​​கம்பி மற்றும் ஊசல் குண்டானது அலைவீச்சு செய்யும் கற்பனை மேற்பரப்பு ஊசலின் விமானம் என்று அழைக்கப் படுகிறது.

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2023/5/30/New-Parliment-13.jpg?dpr=1.0&q=70&w=640

மத்திய எழில்முற்றம்

  • புது தில்லியின் மத்திய எழில்முற்றத்தில் ராஷ்டிரபதி பவன், பாராளுமன்ற அவைகள், வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகள், இந்தியாவின் நுழைவுவாயில், தேசிய ஆவணக் காப்பகம் போன்றவை உள்ளன.
  • மத்திய எழில்முற்றத்தின் மறுவடிவமைப்பு திட்டம் என்பது மத்திய எழில்முற்றத்தினை மறுசீரமைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமாகும்.
  • இது புது தில்லியின் ரைசினா மலைக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் மத்திய நிர்வாகப் பகுதியாகும்.
  • 1911 ஆம் ஆண்டு டிசம்பரில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், டெல்லி தர்பாரில் (ஒரு மாபெரும் சபை) இந்தியாவின் தலைநகரைக் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றுவதற்கான ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
  • ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு டெல்லி தர்பார் நடத்தப் பட்டது.
  • இந்தப் புதிய நகரத்தை உருவாக்கும் பணியானது, எட்வின் லுட்டேயென்ஸுக்கும் தென்னாப்பிரிக்காவின் முக்கியக் கட்டிடக் கலைஞரான ஹெர்பர்ட் பேக்கருக்கும் வழங்கப்பட்டது.

  • ஹெர்பர்ட் பேக்கர் தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள ஒன்றிய அரசுக் கட்டிடங்களின் கட்டிடக் கலைஞர் ஆவார்.
  • இந்தியப் பாராளுமன்றக் கட்டிடமும் லுட்டேயன்ஸ் மற்றும் பேக்கர் ஆகியோரால் வடிவமைக்கப் பட்டது.
  • ராஷ்டிரபதி பவனை வடிவமைத்தவர் எட்வின் லுட்டேயன்ஸ் ஆவார்.
  • ஹெர்பர்ட் பேக்கரால் வடக்கு மற்றும் தெற்குப் தொகுதிகள் அடங்கிய செயலகம் வடிவமைக்கப் பட்டது.
  • அகமதாபாத்தை தளமாகக் கொண்ட HCP வடிவமைப்பு, திட்டமிடல் மற்றும் மேலாண்மை நிறுவனம் மூலம் புதிய பாராளுமன்றக் கட்டிடம் உருவாக்கப்பட்டது.
  • இது கட்டிடக் கலைஞர் பிமல் படேல் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, நிர்வகிக்கப் படுகிறது.

உட்பகுதி அலங்காரங்கள்

  • இந்தியப் பாராளுமன்றத்தில் இந்தியத் தொல்லியல் துறை அமைப்பு, UNESCO மற்றும் பிற நிறுவனங்களால் பாதுகாக்கப் படும் நினைவுச் சின்னங்களான சுவரோவிய வரைபடங்கள் பண்டைய இந்தியாவின் வரைபடத்தினைச் சித்தரிக்கின்றன.
  • மகாத்மா காந்தி, சாணக்யா, கார்கி, சர்தார் வல்லபாய் படேல், பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் பிரமாண்ட பித்தளை உருவங்களுடன் 3 மரபார்ந்த நுழைவு மண்டபங்கள் மற்றும் கோனார்க் சூரியனார் கோவிலிலுள்ள தேர் சக்கரம் ஆகியவை இந்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
  • இந்தியாவின் கலாச்சாரப் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில், "இந்தியாவில் தயாரிப்போம்" என்ற முயற்சிக்கு ஏற்ப திரிபுராவின் தலைசிறந்த மூங்கில் மரத்தடிகள் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மிர்சாபூரின் தரை விரிப்புகள் ஆகியவை புதிய பாராளுமன்றத்தை அழகுபடுத்துகிறது.

புதிய பாராளுமன்றத்தின் சிறப்பியல்புகள்

  • இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் செயல்பாடுகளின் சின்னம், மாற்றத்தின் மீதான ஆர்வம் மற்றும் அதன் தொடர்ச்சி, மற்றும் மன உறுதி ஆகியவை இந்தியாவை ஆத்மநிர்பர் பாரத்என்பதாக உருவாக்கச் செய்வதற்கு ஒரு சாட்சியாக இருக்கும்.

புதிய பாராளுமன்றத்தின் மீதான எதிர்பார்ப்புகள்

  • அதிகரித்து வரும் இடையூறுகள் மற்றும் நீண்ட கால முட்டுக் கட்டைகளின் போக்கு என்பது பொது விவாதம், விவாதம் மற்றும் ஒருமித்த கருத்து மூலம் சட்டம் இயற்றுவது போன்ற பாராளுமன்றத்தின் உறுதிக்கு எதிரானதாகும்.
  • எனவே, புதிய பாராளுமன்றமானது, பாராளுமன்ற நடத்தைகள் குறித்து தீவிரமாக சுய பரிசோதனை செய்து, பாராளுமன்றத்தை மேலும் திறமையாகவும், ஆக்கப் பூர்வமாகவும் மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
  • கட்டிடக் கலை சிறப்பின் ஊற்றுக்கண் / சிறுகதையாக மட்டுமல்லாமல், இந்தியாவை அதன் லட்சியப் பயணமான புதிய இந்தியா@100’, மற்றும் ஏக் பாரத், ஸ்ரேஷ்ட பாரத்போன்றவற்றிற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகவும் புதிய பாராளுமன்றமானது செயல்பட வேண்டும்.

  • இந்தியாவின் புதிய பாராளுமன்றக் கட்டிடமானது, இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒரு நவீன வசதியாகும் என்பதோடு, பயனுள்ள சட்டமன்ற நடவடிக்கைகளுக்குத் தேவையான நவீன வசதிகளையும் வழங்குகிறது.
  • நாடாளுமன்ற விவகாரங்கள் சுமூகமாக நடைபெறுவதற்கு வேண்டி இந்தஇரண்டு கட்டிடங்களையும் இணைத்துப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
  • இது இந்தியாவின் கலாச்சாரப் பன்முகத்தன்மையைப் பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு உள்ளடக்கிய மற்றும் வெகு திறமையான மக்களாட்சி செயல் முறைக்கும் வழி வகுக்கிறது.
  • தேசமானது இந்தப் புதிய அத்தியாயத்தைத் தொடங்கச் செய்கையில், புதிய நாடாளுமன்றக் கட்டிடமானது  நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் கலங்கரை விளக்கமாக மாறி, வருங்காலத் தலைமுறையினரை ஊக்குவிக்கிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்