TNPSC Thervupettagam

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 03

November 15 , 2024 20 days 226 0

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 03

(For English version to this please click here)

தேசிய சமூக உதவித் திட்டம் (NSAP)

தொடங்கப்பட்ட தினம்:

  • தேசிய சமூக உதவித் திட்டம் (NSAP) ஆகஸ்ட் 15, 1995 அன்று மத்திய அரசின் நிதியுதவித் திட்டமாகத் தொடங்கப்பட்டது.
  • இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அரசு நெறிமுறைக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகளுக்கு இணங்க, சமூக நலன் மற்றும் சமூகத்தில் பாதிக்கப்படக் கூடிய பிரிவுகளுக்கு உதவிகளை வழங்குவதற்கான இந்திய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டது.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • ஊரக வளர்ச்சி அமைச்சகம், NSAP திட்டத்தினைச் செயல்படுத்துவதை மேற்பார்வையிடும் பொறுப்பான தலைமை முகமை ஆகும்.
  • இது இந்தியா முழுவதும் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் செயல்படுகிறது.

நோக்கங்கள்:

  • தேசிய சமூக உதவித் திட்டத்தின் (NSAP) முக்கிய நோக்கங்கள்:
  • சமூகப் பாதுகாப்பை வழங்குதல்: முதியவர்கள், விதவைகள், ஊனமுற்றோர் மற்றும் குடும்பங்களை இழந்து தவிக்கும் குடும்பங்கள் போன்ற பாதிக்கப்படக் கூடிய குழுக்களுக்கு நிதி உதவி வழங்குதல்.
  • விளிம்புநிலைச் சமூகங்களை ஆதரித்தல்: வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள (BPL) குடும்பங்களின் மீது கவனம் செலுத்துகிறது, அவர்கள் நிதி நெருக்கடியைத் தணிக்கத் தேவையான உதவிகளை பெறுவதையும் உறுதி செய்கிறது.
  • வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்: தேவைப்படும் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு, குறிப்பாக சமூகத்தில் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப் பட்டப் பிரிவுகளின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்.
  • இத்திட்டம் அரசியலமைப்பு ஆணைகளுடன் இணைந்திருத்தல்: வேலையின்மை, முதுமை, நோய், மாற்றுத் திறனாளிகளுக்குப் பொது உதவியை உறுதி செய்யும் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 41 மற்றும் 42 ஆகிய விதிகளை நிறைவேற்றுகிறது.

பயனாளிகள்:

  • தேசிய சமூக உதவித் திட்டத்தின் முதன்மைப் பயனாளிகள்:
  • முதியவர்கள் (60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்).
  • விதவைகள் (40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்).
  • மாற்றுத் திறனாளிகள் (18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடன் 80% அல்லது அதற்கு மேற்பட்ட சதவீதத்துடன் குறைபாடு உடையவர்கள்).
  • உயிரிழந்தோர்களின் குடும்பங்கள் (முதன்மையாக வருமானம் ஈட்டுபவரை இழக்கும் குடும்பங்கள்).
  • இந்தியா முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்கள் (BPL).

தகுதி அளவுகோல்கள்:

  • NSAP திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கான தகுதி அளவுகோல்கள் பின்வருமாறு:

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (IGNOAPS):

  • தகுதி: 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள்.
  • ஓய்வூதியத் தொகை: 60-79 வயதுடைய நபர்களுக்கு ₹200; 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ₹500.

இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம் (IGNWPS):

  • தகுதி: 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதை அடைந்த விதவைகள்.
  • ஓய்வூதியத் தொகை: 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதை அடைந்த விதவைகளுக்கு ₹300; 80 வயதுக்கு மேற்பட்ட விதவைகளுக்கு ₹500.

இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் (IGNDPS):

  • தகுதி: 80% அல்லது அதற்கு மேற்பட்ட சதவீதத்துடன் குறைபாடு உடையவர்கள், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்கள்.
  • ஓய்வூதியத் தொகை: 80% அல்லது அதற்கு மேற்பட்ட சதவீதத்துடன் குறைபாடு உடைய நபர்களுக்கு ₹300; 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ₹500.

தேசியக் குடும்ப நலன் திட்டம் (NFBS):

  • தகுதி: முதன்மையாக வருமானம் ஈட்டிய நபர்கள் இறந்தோர்களின் குடும்பங்கள் (இயற்கைக் காரணங்கள் அல்லது பிற காரணங்களால்).
  • உதவித் தொகை: மொத்தத் தொகை ₹20,000.

அன்னபூர்ணா திட்டம்:

  • தகுதி: IGNOAPS திட்டத்தின் கீழ் வராத மூத்த குடிமக்கள்.
  • உதவித் தொகை: மாதத்திற்கு 10 கிலோ இலவச உணவு தானியங்கள் (கோதுமை அல்லது அரிசி).

பலன்கள்:

  • NSAP திட்டத்தின் பல்வேறு திட்டங்களின் கீழ் உள்ள நன்மைகள்:

நிதி உதவி:

  • முதியவர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளி நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம்.
  • முதன்மையாக வருமானம் ஈட்டிய நபர்கள் இறந்தோர்களின் குடும்பங்களுக்கு மொத்தமாக ₹20,000 உதவி.

உணவுப் பாதுகாப்பு:

  • தகுதியுள்ள மூத்தக் குடிமக்களுக்கு அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் மாதம் 10 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கபடுகின்றன.

சமூக உள்ளடக்கம்:

  • இந்தத் திட்டம் BPL பிரிவின் கீழ், வகைப்படுத்தப்படாத தனிநபர்கள் போன்ற சமூகப் பாதுகாப்புப் பலன்களில் இருந்து விலக்கப்படக் கூடியவர்களுக்கும் முக்கிய நிதி உதவியை வழங்குகிறது.

கூடுதல் தகவல்கள்:

  • NSAP திட்டத்தின் கூறுகள்:
  • தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (NOAPS), தேசிய குடும்ப நலத் திட்டம் (NFBS), தேசிய மகப்பேறு நன்மைத் திட்டம் (NMBS) (பின்னர் 2001 ஆம் ஆண்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது) மற்றும் அன்னபூர்ணா திட்டம் உட்பட பல முக்கியத் திட்டங்களை இந்த NSAP திட்டம் கொண்டுள்ளது.

அடல் ஓய்வுதியத் திட்டம் (APY)

தொடங்கப்பட்ட தினம்:

  • அடல் ஓய்வுதியத் திட்டம் (APY) குடிமக்களுக்கு, குறிப்பாக அமைப்புசாராத துறையில் உள்ளவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்காக, இந்திய அரசால், 2015 ஆம் ஆண்டு மே 9 அன்று தொடங்கப்பட்டது.
  • இது 60 வயதிற்குப் பிறகுத் தனிநபர்களுக்கு நிலையான ஒரு மாதாந்திர ஓய்வூதியத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • அடல் ஓய்வுதியத் திட்டத்தை (APY) மேற்பார்வையிடும் பொறுப்பு நிதித் துறை அமைச்சகமாகும்.
  • இந்தத் திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) கட்டுப்படுத்தப் படுகிறது.

நோக்கங்கள்:

  • அடல் ஓய்வுதியத் திட்டத்தின் (APY) முதன்மை நோக்கங்கள்:
  • முதியோர்களுக்கான வருமானப் பாதுகாப்பு: 60 வயதிற்குப் பிறகு ₹1,000 முதல் ₹5,000 வரையிலான உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்குதல், தனிநபர்களுக்கு, குறிப்பாக அமைப்புசாராத துறையினருக்கு சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்.
  • பிற்படுத்தப்பட்டோருக்கான ஆதரவு: பிற ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் வராத ஏழைகள், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் வேலையில்லாத நபர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்குவதில் கவனம் செலுத்துதல்.
  • ஸ்வாவலம்பன் யோஜனாவிற்கு மாற்றீடு: பல்வேறு வரம்புகளைக் கொண்டிருந்த  மற்றும் 60 வயதில் உத்தரவாதமான ஓய்வூதியத்தை வழங்காத ஸ்வாவலம்பன் யோஜனாவிற்குப் பதிலாக APY திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • அரசாங்க கூட்டுப் பங்களிப்பு: இந்தத் திட்டத்தில் பங்கேற்பதை ஊக்குவிக்கத் தகுதியுள்ள சந்தாதாரர்களுக்கு, குறிப்பாக வேறு எந்த ஓய்வூதியத் திட்டத்திலும் பங்கேற்காதவர்களுக்கு அரசாங்கம் ஒரு இணைப் பங்களிப்பை வழங்குகிறது.

பயனாளிகள்:

  • அடல் ஓய்வுதியத் திட்டத்தின் பயனாளிகள்:
  • வேறு எந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வராத இந்தியக் குடிமக்கள்.
  • முறையான ஓய்வூதியத் திட்டங்களைப் பெறாத அமைப்பு சாராத துறையில் உள்ள தனி நபர்கள்.
  • 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள், 60 வயதில் ஓய்வூதியம் பெறும் திட்டத்தில் பங்களிக்கத் தொடங்கலாம்.
  • மனைவி மற்றும் வாரிசுதாரர்: சந்தாதாரர் இறந்து விட்டால், மனைவி தொடர்ந்து அதே ஓய்வூதியத்தைப் பெறுகிறார்.
  • சந்தாதாரர் மற்றும் அவர்களது மனைவி இருவரும் இறந்தவுடன், வாரிசுதாரர் ஒரு மொத்தத் தொகையைப் பெறுவார்.

தகுதி அளவுகோல்கள்:

  • அடல் ஓய்வூதியத் திட்டத்திற்கான தகுதி அளவுகோல்கள் பின்வருமாறு:
  • வயது: பதிவு செய்யும் போது சந்தாதாரர் 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்: இந்தத் திட்டம் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைத்து நபர்களுக்கும் கிடைக்கும்.
  • ஆதார் தேவை: சந்தாதாரரிடம் ஆதார் எண் இருக்க வேண்டும், இது அங்கீகாரம் மற்றும் பங்களிப்புக்கு மிக அவசியம்.
  • வரி செலுத்தாதவர்: வருமான வரி செலுத்துவோர் அல்லாத மற்றும் வேறு எந்த ஓய்வூதியத் திட்டத்தின் பகுதியாக இல்லாத சந்தாதாரர்களுக்கான ஓய்வூதியத்திற்கு அரசாங்கம் பங்களிக்கும்.
  • பங்களிப்புத் தொகை: சந்தாதாரரின் வயது மற்றும் விரும்பிய ஓய்வூதியத் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் பங்களிப்பு மாறுபடும் என்பதோடு இதில் தாமதமாகப் பதிவு செய்வதற்கு அதிக அளவுப் பங்களிப்புகள் தேவைப்படும்.

பலன்கள்:

  • அடல் ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய நன்மைகள்:
  • உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியம்: சந்தாதாரர்கள் 60 வயதை அடைந்த பிறகு, அவர்களின் பங்களிப்பைப் பொறுத்து ₹1,000 முதல் ₹5,000 வரை நிலையான மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுவார்கள்.
  • அரசாங்க கூட்டுப் பங்களிப்பு: தகுதியான சந்தாதாரர்களுக்கு, பதிவு செய்த முதல் 5 ஆண்டுகளுக்கு சந்தாதாரரின் பங்களிப்பில் 50% அல்லது வருடத்திற்கு ₹1,000 (இதில் எது குறைவாக இருக்கிறதோ அது) என்ற அளவிற்கு அரசாங்கம் பங்களிக்கிறது.

  • வரி பலன்கள்: APY திட்டத்திற்கானப் பங்களிப்புகளுக்கு பிரிவு 80 CCD (1) இன் கீழ் வரி விலக்கு அளிக்கப் படும், மேலும் பிரிவு 80 CCD (1B) இன் கீழ் கூடுதலாக ₹50,000 கழிக்கப்படும்.
  • தானாகப் பிடித்தம் செய்யும் வசதி: சந்தாதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து தானாகப் பற்று வைப்பதன் மூலம் பங்களிப்புகள் செய்யப் படுகின்றன என்பதோடு இது அந்தச் செயல் முறையை எளிதாக்குகிறது.

கூடுதல் தகவல்:

  • பதிவுச் செயல்முறை: இந்தத் திட்டம் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைத்து நபர்களுக்கும் கிடைக்கும்.
  • சந்தாதாரர் 60 வயதை அடையும் வரை சேமிப்புக் கணக்குகளில் இருந்து தொடர்ச்சியாகப் பிடித்தம் மூலம் பங்களிப்புகளைச் செய்யலாம்.
  • அரசாங்க பங்களிப்பு காலம்: தகுதியான சந்தாதாரர்களுக்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு (2015-16 முதல் 2019-20 வரை) APY கணக்கில் அரசாங்கம் பங்களிக்கிறது.
  • தாமதமாக பணம் செலுத்துவதற்கான அபராதம்: தாமதமானப் பங்களிப்புகளுக்கான அபராதங்கள் ஒருவர் செலுத்த வேண்டிய தொகையைப் பொறுத்து மாறுபடுகிறது.
  • பங்களிப்பு அளவைப் பொறுத்து, அபராதம் மாதத்திற்கு ₹1 முதல் ₹10 வரை இருக்கலாம்.
  • கணக்கைச் செயலிழக்கச் செய்தல்: தொடர்ந்து 6 மாதங்களுக்கு பணம் செலுத்தப் படா விட்டால், கணக்கு முடக்கப்படும், 12 மாதங்களுக்கு பணம் செலுத்தவில்லை என்றால், கணக்கு செயலிழந்து விடும்.

  • 24 மாதங்கள் பணம் செலுத்தாத பிறகு, அக்கணக்கு மூடப்படுகிறது.
  • சாதனை மற்றும் பதிவுகள்: இது தொடங்கப்பட்டதிலிருந்து ஆண்டுக்கு ஆண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் 2020 ஆம் ஆண்டு மே மாத நிலவரப்படி, அடல் பென்ஷன் யோஜனா 2.23 கோடி சந்தாதாரர்களைப் பதிவு செய்துள்ளது.
  • இந்தத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வரும் பங்கேற்பைக் கண்டுள்ளது, என்பதோடு மிகவும் குறிப்பிடத் தக்க அளவில் ஆண்-பெண் சந்தா விகிதம் 57:43 விகிதத்தையும் கொண்டுள்ளது.

                -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்