TNPSC Thervupettagam

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 05

November 21 , 2024 14 days 243 0

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 05

(For English version to this please click here)

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN)

தொடங்கப்பட்ட தினம்:

  • 1 டிசம்பர் 2018.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், இந்திய அரசு.

குறிக்கோள்கள்

  • PM-KISAN திட்டம் தகுதியான விவசாயிகள் குடும்பங்களுக்கு வருமான ஆதரவை வழங்கும் இலக்குடன் தொடங்கப்பட்டது.
  • விவசாயத்திற்கான இடுபொருட்களை வாங்குதல், சரியான பயிர் ஆரோக்கியத்தை உறுதி செய்தல் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட விவசாய விளைச்சலை அடைதல் போன்ற நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

பயனாளிகள்

  • இத்திட்டம் இந்தியாவில் நிலம் வைத்திருக்கும் விவசாயி குடும்பங்களை குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகளை இலக்காகக் கொண்டது.
  • இது நாடு முழுவதும் உள்ள சுமார் 14.5 கோடி பயனாளிகளை உள்ளடக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

தகுதி அளவுகோல்கள்

PM-KISAN திட்டத்தின் பலன்களைப் பெறப் பின்வரும் தகுதி நிபந்தனைகள் பூர்த்தி செய்யப் பட வேண்டும்:

  • நிலம் வைத்திருக்கும் விவசாயிகள்: இத்திட்டம் 2 ஹெக்டேர் வரை பயிரிடக் கூடிய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளை இலக்காகக் கொண்டது.

விலக்கு அளிக்கப்பட்ட அளவுகோல்கள்:

  • நிறுவன நில உரிமையாளர்கள் (எ.கா., பெரு நிறுவனங்கள் அல்லது நிறுவனங்கள்).
  • அரசியலமைப்பு பதவியை வகிக்கும் எந்தவொரு உறுப்பினரும் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளை வகித்த குடும்பங்கள் (நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதலியோர்).
  • அரசு ஊழியர்கள் (தற்போதைய அல்லது ஓய்வு பெற்றவர்கள்) மற்றும் மாதாந்திர ஓய்வூதியமாக ₹10,000 அல்லது அதற்கு மேல் பெறும் ஓய்வூதிய நபர்கள் (பலதரப்பட்ட பணிகளை செய்யும் பணியாளர் / குரூப் டி ஊழியர்கள் தவிர).
  • கடந்த மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்திய நபர்கள்.
  • மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் போன்ற தொழில் வல்லுநர்கள், பதிவு செய்யப் பட்ட தொழில் வல்லுநர்களாக தங்கள் பணிகளை மேற்கொள்பவர்கள்.

நன்மைகள்

  • தொகை: தகுதியான விவசாயி குடும்பங்கள் ஆண்டுதோறும் ₹6,000 பெறுகிறார்கள், இந்தத் தொகையானது மூன்று சம தவணைகளில் தலா ₹2,000 விநியோகிக்கப் படுகிறது, மேலும் இது ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் வழங்கப்படும்.
  • நோக்கம்: இந்தத் தொகை விவசாயிகளுக்கு விவசாய இடுபொருட்களின் செலவுகள் மற்றும் பிற தொடர்புடைய செலவுகளைச் சமாளிக்க உதவுகிறது, இதன் மூலம் முறையான பயிர் சாகுபடியை உறுதி செய்து, இது விவசாய உற்பத்தியை மேம்படுத்துகிறது.

கூடுதல் தகவல்

பயனாளிகளிடமிருந்துத் தேவைப்படும் விவரங்கள்

  • தகுதியான பயனாளிகளின் தரவுதளத்தைச் சேகரித்துப் பராமரிப்பதற்கு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் பொறுப்பாகும், இதில் பின்வருவன அடங்கும்:
  • பெயர், வயது, பாலினம், வகை (பட்டியலிடப் பட்ட சாதியினர் / பட்டியலிடப் பட்ட பழங்குடியினர்).
  • ஆதார் எண் (ஆதார் இல்லையெனில் என்றால் மாற்று அடையாள அட்டையான வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை).
  • வங்கிக் கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண்.

அடையாளம் காணும் பொறுப்பு

  • இந்தத் திட்டத்திற்கான விவசாயி குடும்பங்களின் தகுதியைக் கண்டறிந்து சரிபார்ப்பது மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்களின் பொறுப்பாகும்.

இது போன்ற மாநில அரசுகளின் திட்டங்கள்

  • பல மாநில அரசுகள் விவசாயிகளுக்கு ஆதரவாக இதே போன்ற முயற்சிகளை செயல்படுத்தியுள்ளன:
  • மத்தியப் பிரதேசம்: பாவந்தர் புக்தான் யோஜனா குறைந்தபட்ச ஆதரவு விலைகள் (MSP) மற்றும் சந்தை விலைகளுக்கு இடையிலான வேறுபாட்டிற்கு இழப்பீடு வழங்குகிறது.

  • தெலுங்கானா: ரைது பந்து என்ற திட்டம் மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு பருவத்திற்கு ஒரு ஏக்கருக்கு ₹4,000 வழங்குகிறது.

  • ஒடிசா: கலியா என்ற திட்டம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை (வருடத்திற்கு ₹10,000) ₹5,000 வழங்குகிறது.

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் (NFSM)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2007-08.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், இந்திய அரசு.

குறிக்கோள்கள்

  • தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் (NFSM) உணவு தானிய உற்பத்தியில் தேக்க நிலை மற்றும் அதிகரித்து வரும் மக்கள்தொகையின் நுகர்வுத் தேவைகளை நிவர்த்தி செய்ய தொடங்கப் பட்டது.
  • பணியின் முக்கிய நோக்கங்கள்:
  • பரப்பளவு விரிவாக்கம் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலம் அரிசி, கோதுமை மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிப்பது.

  • மண் வளத்தை மீட்டெடுத்து விவசாய உற்பத்தியை மேம்படுத்துதல்.
  • விவசாயத் துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.
  • பண்ணை அளவிலான பொருளாதாரத்தை மேம்படுத்துதல்.

பயனாளிகள்

  • NFSM திட்டத்தின் முதன்மைப் பயனாளிகள், இந்தியா முழுவதும் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் பெருந்தானியங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

  • சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் விளைச்சலை அதிகரிப்பதில் உதவி தேவைப் படுபவர்களுக்கு உணவு தானிய உற்பத்தியின் உற்பத்தித் திறன் மற்றும் நிலைத்தன்மையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தகுதி அளவுகோல்கள்

  • விவசாயிகள் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், பெருந் தானியங்கள் அல்லது இத்திட்டத்திற்கு அடையாளம் காணப்பட்ட பிற பயிர்கள் சாகுபடியில் ஈடுபட்டிருந்தால், NFSM திட்டத்தின் கீழ் உதவி பெறத் தகுதியுடையவர்கள்.
  • இத்திட்டம் முதன்மையாக பின்வருவனவற்றில் கவனம் செலுத்துகிறது:
  • பயிர் விளைச்சல் மற்றும் மண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி தேவைப்படும் விவசாயிகள்.
  • சிறந்த விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக் கட்டுப்பாடு முறைகள் உட்பட மேம்படுத்தப்பட்ட விவசாயச் செயல்முறைகளைப் பின்பற்ற விரும்புவோர்.

நன்மைகள்

  • NFSM திட்டம் விவசாயிகளுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.
  • விதைகள், உரங்கள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் விவசாய இயந்திரங்கள் போன்ற உள்ளீடுகளுக்கு நிதி உதவி.
  • புதிய, அதிக மகசூல் தரும் கோதுமை மற்றும் பருப்பு வகைகளை ஊக்குவிப்பதற்காக விதை மினி கிட்களை (சிறு உபகரணங்கள்) விநியோகித்தல்.

  • மண்ணின் தரத்தை மேம்படுத்த நுண்ணூட்ட ஆதரவு மற்றும் ஜிப்சம்.
  • பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த களைக்கொல்லிகள் மற்றும் தாவரப் பாதுகாப்பு இரசாயனங்கள்.
  • செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், சாகுபடிச் செலவைக் குறைக்கவும் வேண்டி விவசாய இயந்திரங்களின் ஆதரவு.
  • உழவர்களின் களப் பள்ளிகள் (FFS) மற்றும் மேம்படுத்தப்பட்ட விவசாய நடைமுறைகள் பற்றிய செயல்முறை விளக்கங்கள் மூலம் விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் திறனை வளர்ப்பது.

கூடுதல் தகவல்

நிதியளிப்பு முறை

  • இத்திட்டம் 2015-16 ஆம் ஆண்டு முதல், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற நிதி முறையைப் பின்பற்றுகிறது.
  • வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்களுக்கு, மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையே 90:10 என்ற விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப் படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் உள்ள கூறுகள்

  • இந்தத் திட்டமானது பல்வேறு பயிர்களுக்கான பல துணைக் கூறுகளை உள்ளடக்கியது:
  • NFSM-அரிசி
  • NFSM-கோதுமை
  • NFSM-பருப்பு வகைகள்
  • NFSM- பெருந் தானியங்கள்
  • NFSM-ஊட்டச்சத்து மிக்க தானியங்கள்
  • NFSM-வணிகப் பயிர்கள்

தேசிய நிலை:

  • மத்திய விவசாய அமைச்சர் தலைமையில் பொதுக்குழு (GC), கொள்கை வழிமுறைகளை வழங்குகிறது மற்றும் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்கிறது.
  • NFSM நிர்வாகக் குழு (NFSMEC), வேளாண்மை மற்றும் கூட்டுறவுத் துறையின் செயலாளரின் தலைமையில், செயல்படுத்தலை மேற்பார்வையிடுகிறது மற்றும் மாநிலச் செயல் திட்டங்களை அங்கீகரிக்கிறது.

மாநில நிலை:

  • பங்கேற்கும் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் தலைமையில் மாநில உணவுப் பாதுகாப்புத் திட்ட நிர்வாகக் குழுக்கள் (SFSMEC) அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட நிலை:

  • வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனம் (ATMA) மற்றும் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் நிர்வாகக் குழுக்கள் (DFSMEC) ஆகியவை அடிமட்ட அளவில் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளைச் செயல்படுத்துகின்றன.

பணி தலையீடுகள்

  • விவசாயிகளின் களப் பள்ளிகள் (FFS): பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த செயல்முறை அறிவினை வழங்குதல்.
  • ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை (IPM): சுற்றுச்சூழலுக்கு உகந்த முறைகள் மூலம் பூச்சிகள் மற்றும் நோய்களால் ஏற்படும் பயிர் இழப்புகளைக் குறைத்தல்.
  • களைக்கொல்லிகள்: களைகளை நிர்வகிக்க களைக் கொல்லிகளை சரியான நேரத்தில் அளித்தல்.
  • விதை மினி கிட்டுகள்: விவசாயிகளுக்குப் புதிய மற்றும் நம்பகத் தன்மையுடைய விதை வகைகளை விநியோகித்தல்.
  • நுண்ணூட்டச் சத்து மற்றும் ஜிப்சம்: நுண்ணூட்டச் சத்துப் பயன்பாட்டிற்கான நிதி உதவி மற்றும் மண்ணின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கந்தகம் நிறைந்த ஜிப்சத்தை விநியோகித்தல்.
  • பண்ணை இயந்திரங்கள்: செலவுகளைக் குறைப்பதற்கும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் மேம்படுத்தப்பட்ட விவசாய உபகரணங்களை விநியோகித்தல்.

திட்டத்தின் செயல்திறன்

  • உணவு தானிய உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் அடிப்படையில் இந்தத் திட்டமானது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது:
  • உணவு தானிய உற்பத்தி 2014-15 ஆம் ஆண்டில் 252.02 மில்லியன் டன்னிலிருந்து 2019-20 ஆம் ஆண்டில் 296.65 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது என்ற நிலையில் இது 17.71% வளர்ச்சியைக் குறிக்கிறது.

  • பருப்பு உற்பத்தி 2014-15 ஆம் ஆண்டில் 17.15 மில்லியன் டன்னிலிருந்து 2019-20 ஆம் ஆண்டில்  23.15 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது என்ற நிலையில் இது 35% அதிகரித்துள்ளது.
  • உணவு தானியங்களின் உற்பத்தித்திறன் 2014-15 ஆம் ஆண்டில்  ஹெக்டருக்கு 2028 கிலோவிலிருந்து 2019-20 ஆம் ஆண்டில்  ஹெக்டருக்கு 2325 கிலோ என்ற அளவில் அதிகரித்து உள்ளது.

சவால்கள் மற்றும் சிக்கல்கள்

  • மாவட்ட அளவிலான ஆலோசகர்களின் குறைவான பயன்பாடு: பல மாவட்ட ஆலோசகர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் தொழில்நுட்பச் சேவைகளுக்குப் பதிலாக நிர்வாகப் பணிகளுக்கு பயன்படுத்தப் படுகின்றனர்.
  • DFSMEC கூட்டங்களில் கவனம் இல்லாமை: மாவட்ட அளவிலான குழுக்களின் மோசமான ஒருங்கிணைப்பு மற்றும் அடிக்கடி நிகழாத, கட்டமைக்கப்படாத கூட்டங்கள் இந்தத் திட்டத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன.
  • வரையறுக்கப்பட்ட விவசாயிகள் பங்கேற்பு: விவசாயிகளின் களப் பள்ளிகள் மற்றும் செயல் விளக்கங்களில் 50%க்கும் குறைவான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
  • காலதாமதமான மண் பரிசோதனை அறிக்கை: பல விவசாயிகள் மண் பரிசோதனை செய்த நிலையில், அறிக்கைகள் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால், இடுபொருட்களை உரிய நேரத்தில் பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளது.

போஷன் அபியான் திட்டம்

தொடங்கப்பட்ட தினம்:

  • மார்ச் 8, 2018.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் (MWCD)
  • செயல்படுத்தும் நிறுவனம்: இந்த அமைச்சகம், மாநில மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன், சுகாதாரம், கல்வி மற்றும் ஊரக வளர்ச்சி போன்ற பிற அமைச்சகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

நோக்கங்கள்:

  • முக்கிய குறிக்கோள்: ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பது, குறிப்பாக ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பருவப் பெண்கள் மத்தியில் வளர்ச்சி குன்றிய நிலை, தொடர்ச்சியான இழப்பு மற்றும் எடை குறைவு.

  • முக்கிய இலக்குகள்:
  • ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஆண்டுக்கு 2% குறைத்தல்.
  • இரத்த சோகையை ஆண்டுக்கு 3% குறைத்தல்.
  • குறைந்த பிறப்பு எடையை ஆண்டுக்கு 2% குறைத்தல்.
  • தாய்வழி ஊட்டச்சத்தை மேம்படுத்துதல் மற்றும் குழந்தை பருவப் பராமரிப்பை மேம்படுத்துதல்.
  • நோய்த் தடுப்பு, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துக் கல்வியை மேம்படுத்துதல்.

பயனாளிகள்:

முதன்மைப் பயனாளிகள்:

  • 0-6 வயதுடைய குழந்தைகள்.
  • கர்ப்பிணி பெண்கள்.
  • பாலூட்டும் தாய்மார்கள்.
  • பருவப் பெண்கள் (14-18 வயது).

இரண்டாம் நிலை பயனாளிகள்:

  • குழந்தைகள் சுகாதாரம், ஊட்டச்சத்துக் குறைபாடு தடுப்பு மற்றும் ஊட்டச்சத்துக் கல்வி ஆகியவற்றில் குறைபாடு உள்ள பெண்கள் மற்றும் குடும்பங்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • குழந்தைகள் (0-6 வயது): ஊட்டச்சத்து ஆதரவு, வளர்ச்சிக் கண்காணிப்பு மற்றும் கூடுதல் சத்துக்களை வழங்குதல்.
  • கர்ப்பிணிப் பெண்கள்: தாய்வழி ஊட்டச்சத்து, கூடுதல் சத்துக்கள் மற்றும் சுகாதார சேவைகளுக்குத் தகுதியானவர்கள்.
  • பாலூட்டும் தாய்மார்கள்: ஊட்டச்சத்து ஆலோசனை, கூடுதல் உணவு மற்றும் சுகாதாரச் சேவைகளுக்குத் தகுதியானவர்கள்.
  • இளம் பருவப் பெண்கள் (14-18 வயது): இலக்கு ஊட்டச்சத்து தலையீடுகளுக்கு, குறிப்பாக குறைவான  சுகாதார வசதி உள்ள பகுதிகளில் உள்ளவர்கள் (எ.கா., ஆர்வமுள்ள மாவட்டங்கள், வடகிழக்கு).

பலன்கள்:

  • நேரடி ஊட்டச்சத்து ஆதரவு: துணை ஊட்டச்சத்து திட்டம் (SNP), அங்கன்வாடி சேவைகள் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை வழங்குதல்.
  • சுகாதாரப் பலன்கள்: மேம்படுத்தப் பட்ட குழந்தை வளர்ச்சி, வளர்ச்சி குன்றிய நிலை, வீணாதல் மற்றும் எடை குறைவு, அத்துடன் சிறந்த தாய்வழி ஆரோக்கியம்.
  • சமூக நடத்தை மாற்றம்: போஷன் மா மற்றும் போஷன் பக்வாடா போன்ற விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

  • தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு: போஷான் கண்காணிப்பு அமைப்பு, ஒரு மையப்படுத்தப் பட்டத் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் (ICT) கருவி, நிகழ்நேரத்தில் ஊட்டச்சத்து நிலையைக் கண்காணிக்கவும், சேவை வழங்கலை மேம்படுத்தவும் உதவுகிறது.
  • சத்தான உணவுக்கான அணுகல்: தினை உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை மேம்படுத்துதல் மற்றும் சிறந்த உணவுப் பன்முகத்தன்மை.
  • பாரம்பரிய சுகாதார நடைமுறைகளைச் சேர்த்தல்: ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) பயன்பாடு.

கூடுதல் தகவல்:

  • போஷன் 2.0: 2022 ஆம் ஆண்டில்  தொடங்கப்பட்ட இது ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் போஷன் அபியானின் நோக்கத்தை விரிவுபடுத்தியது, தாய்வழி ஆரோக்கியம், குழந்தை பருவப் பராமரிப்பு மற்றும் அதீத ஊட்டச்சத்து குறைபாடு (SAM) மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு (MAM) ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

  • போஷன் மா: ஒவ்வொரு வருடமும் செப்டம்பரில் ஒரு மாத காலம், ஊட்டச்சத்து விழிப்புணர்வை மேம்படுத்தவும், வளர்ச்சியைக் கண்காணிக்கவும், குழந்தைக்குச் சரிவிகித உணவு அளிப்பு மற்றும் தாய்வழி ஆரோக்கியம் பற்றி கல்வி கற்பிக்கவும் பிரச்சாரம் நடத்தப் படுகிறது.

  • தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்: திறன்பேசிகள் / கையடக்கக் கணினிகளைப் பயன்படுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் சிறந்த கண்காணிப்பு மற்றும் சேவையை வழங்குவதற்கான ICDS-CAS (பொதுப் பயன்பாட்டு மென்பொருள்) பயன்பாடு.

  • கொள்கைச் சீர்திருத்தங்கள்: போஷன் அபியான் 2.0 உணவுப் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கிறது, இதில் தினைகள் மற்றும் பாரம்பரிய சுகாதார அமைப்புகளை (ஆயுஷ்) ஒருங்கிணைப்பது, பொது சுகாதார அணுகுமுறையை வலுப்படுத்துகிறது.
  • ஒருங்கிணைப்பு: ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு ஒரு முழுமையான தீர்வை உருவாக்க பல அரசுத் துறைகளுக்கு இடையே (சுகாதாரம், விவசாயம், சுகாதாரம்) ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது.
  • ஜன் அந்தோலன்: ஊட்டச்சத்து தொடர்பான நடத்தை மாற்றம் மற்றும் விழிப்புணர்வில் சமூகத்தின் செயலில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் ஒரு பொது இயக்கமாகும்.

  • அறிக்கைகள்: NITI ஆயோக் போன்ற அறிக்கைகள் மூலம் வழக்கமான முன்னேற்றத்தைக் கண்காணித்தல்.
  • ஊட்டச்சத்துக் குறைபாடு குறிகாட்டிகளைக் குறைப்பதில் திட்டத்தின் விளைவுகளைப் பற்றிய தொடர்ச்சியான புதுப்பிப்புகளும் அடங்கும்.

                -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்