இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 06
(For English version to this please click here)
கிசான் கடன் அட்டை (KCC) திட்டம்
தொடங்கப்பட்ட ஆண்டு:
- கிசான் கடன் அட்டை (KCC) திட்டம் 1998 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
அமைச்சகம் அல்லது நோடல் ஏஜென்சி:
- நிதி அமைச்சகம், இந்திய அரசு.
- இந்திய ரிசர்வ் வங்கி (RBI).
- தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (நபார்டு).
நோக்கங்கள்
- கிசான் கடன் அட்டை (KCC) திட்டத்தின் முதன்மை நோக்கம் விவசாயிகளுக்கு விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்குவதாகும்.
- இது பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய எளிமையான மற்றும் மலிவான கடன் வசதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது:
- பயிர் உற்பத்தி: பயிர்ச் சாகுபடிக்கு உரிய நேரத்தில் மற்றும் போதுமான நிதியை வழங்குதல்.
- அறுவடைக்குப் பிந்தைய செலவுகள்: அறுவடைக்குப் பின் ஏற்படும் செலவுகள், சந்தைப் படுத்துதல் செலவுகள் உட்பட.
- நுகர்வுத் தேவைகள்: விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நுகர்வுத் தேவைகளை நிவர்த்தி செய்தல்.
- செயல்பாட்டு மூலதனம்: விவசாயிகள் ஆண்டு முழுவதும் தங்கள் விவசாய நடவடிக்கைகளைத் தக்க வைக்கப் போதுமானச் செயல்பாட்டு மூலதனம் இருப்பதை உறுதி செய்தல்.
- கூடுதலாக, இத்திட்டம், பாரம்பரிய வங்கிச் சேவைகளுக்கு குறைந்த அணுகலைக் கொண்ட விவசாயிகளுக்கு, முறையான கடன் பெறும் வழியை வழங்குவதன் மூலம் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிக்கிறது.
பயனாளிகள்
- விவசாயிகள் பயிர்ச் சாகுபடி, கால்நடை வளர்ப்பு, மீன் பிடித்தல் மற்றும் பிற தொடர்புடைய துறைகள் போன்ற விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
- தனிப்பட்ட விவசாயிகள், கூட்டுக் கடன் வாங்குபவர்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் குத்தகை விவசாயிகள் அனைவரும் KCC அட்டைக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
- முறையான நிதிச் சேவைகளை அணுகுவதில் அடிக்கடி சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் குறு விவசாயிகளையும் இந்தத் திட்டம் இலக்காக வைக்கிறது.
தகுதி அளவுகோல்கள்
- பயிர் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு, மீன் பிடித்தல் மற்றும் பிற விவசாயத் துறைகள் உட்பட விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள்.
- தனிப்பட்ட விவசாயிகள், கூட்டுக் கடன் பெறுவோர், குத்தகை விவசாயிகள், சுய உதவிக் குழுவினர் விண்ணப்பிக்கலாம்.
- தகுதியான விண்ணப்பதாரரின் நிதி அளவானது, நிலத்தின் அளவு மற்றும் பயிர் செய்யும் முறை ஆகியவற்றைப் பொறுத்தது.
- விவசாயிகள் நிலப் பதிவுகள், அடையாளச் சான்று மற்றும் நிதி நிறுவனங்களால் குறிப்பிடப் பட்ட பிற தொடர்புடைய ஆவணங்களையும், பிற தேவையான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
நன்மைகள்
- சுழலும் கடன் வரம்பு: நிதி அளவு, பயிர் முறை மற்றும் சாகுபடி செலவு ஆகியவற்றின் அடிப்படையில் முன் அனுமதியளிக்கப்பட்ட கடன் வரம்பு.
- இந்தத் தொகை நெகிழ்வானது மற்றும் தேவைக்கேற்ப பலமுறை அணுகலாம்.
- குறைந்த வட்டி விகிதங்கள்: இந்தத் திட்டம் பாரம்பரிய பணக் கடன் வழங்குபவர்களுடன் ஒப்பிடும் போது குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறுவதற்கான அணுகலை உறுதி செய்கிறது.
- நெகிழ்வான வகையில் பணத்தை திருப்பிச் செலுத்தக் கூடிய கால அவகாசங்கள்: விவசாயச் செயல்முறைகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில், அறுவடைக்குப் பிறகு தவணையாகவோ அல்லது மொத்தமாகவோ பணத்தினைத் திரும்பச் செலுத்தலாம்.
- வட்டி மானியம்: விவசாயிகள் கடன் தொகைக்கு வட்டி மானியம் பெற தகுதியுடையவர்கள், இதன் மூலம் அதிக வட்டி செலுத்தும் சுமையானது அவர்களுக்குக் குறைக்கிறது.
- மானிய விகிதத்தை அரசாங்கம் தீர்மானிக்கிறது, இது அவ்வப் போது மாறலாம்.
- காப்பீட்டுப் பரவல்: பயிர் இழப்பு, இயற்கைப் பேரழிவுகள் அல்லது விவசாயிகளின் இறப்பு / உடல் குறைபாடு போன்ற எதிர்பாராதச் சூழ்நிலைகளுக்கு, எதிராக விவசாயிகளுக்குக் காப்பீட்டுத் தொகையை KCC வழங்குகிறது.
- முழுமையான ஆதரவு: செயல்பாட்டு மூலதனம், சாகுபடி செலவுகள், சந்தைப்படுத்துதல் மற்றும் அறுவடைக்கு பிந்தைய தேவைகள், விவசாயப் பயிர் சுழற்சி முழுவதும் ஆதரவை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை கிசான் கடன் அட்டை பூர்த்தி செய்கிறது.
கூடுதல் தகவல்
- செயல்படுத்தல்: இத்திட்டம் வணிக வங்கிகள், பிராந்தியக் கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உட்பட பல்வேறு நிதி நிறுவனங்களால் செயல்படுத்தப்படுகிறது.
- விரிவாக்கம்: 2004 ஆம் ஆண்டில், மீன்பிடித்தல், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணை போன்ற விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளுக்கான முதலீட்டுக் கடன்களை உள்ளடக்கியதாக KCC அட்டை விரிவாக்கப் பட்டது.
முக்கியத்துவம்:
- KCC திட்டம் விவசாயிகளுக்கான கடன் வழங்கல் செயல்முறையை எளிதாக்கியுள்ளது, மேலும் நிதியை எளிதாகவும், சரியான நேரத்தில் அணுகவும் உதவுகிறது.
- விவசாயிகள், குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள், பாரம்பரிய வங்கிகளில் இருந்து கடன் பெறுவதற்கு அடிக்கடி போராடும் விவசாயிகளுக்கு நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.
- இத்திட்டம் குறைந்த வட்டி விகிதங்களுடன் கடன் வழங்குவதன் மூலம், விவசாயிகள் நவீன விவசாய முறைகளில் முதலீடு செய்யவும், உற்பத்தியை மேம்படுத்தவும், அவர்களின் வருவாயை அதிகரிக்கவும் உதவுகிறது.
- இந்தத் திட்டம் எதிர்பாராத நிகழ்வுகளுக்குக் காப்பீடு வழங்குவதன் மூலம் விவசாயத்துடன் தொடர்புடைய நிதிச் சிக்கல்களைக் குறைக்க உதவுகிறது.
சவால்கள்
- தொலைதூரப் பகுதிகளில் போதிய கடன் புழக்கம்: கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள், மோசமான நிதி உள்கட்டமைப்பு மற்றும் ஆவணச் சிக்கல்கள் காரணமாக சில நேரங்களில் இத்திட்டத்தை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
- ஆவணப்படுத்தல் தொடர்பான தடைகள்: சில விவசாயிகள் நிலப் பதிவுகள் மற்றும் அடையாளச் சான்றுகள் போன்ற தேவையான ஆவணங்களை வழங்குவதில் சிரமப் படுகிறார்கள், இது இத்திட்டத்திற்கான அவர்களின் அணுகலைக் குறைக்கலாம்.
பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY)
தொடங்கப்பட்ட ஆண்டு:
- பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY) 2017 ஆம் ஆண்டில் இந்திய அரசால் தொடங்கப் பட்டது.
- இந்தத் திட்டம் முதலில் 2016 ஆம் ஆண்டில் SAMPADA (வேளாண்-கடல் செயலாக்கம் மற்றும் வேளாண்-செயலாக்கக் குழுக்களின் மேம்பாட்டுக்கானத் திட்டம்) என உருவாக்கப்பட்டது மற்றும் பின்னர் மறுபெயரிடப் பட்டது.
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- உணவு பதப்படுத்தும் தொழிற்துறை அமைச்சகம் (MoFPI), இந்திய அரசு.
- நபார்டு (தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி) மற்றும் பிற முகமைகளும் இத்திட்டம் செயல்படுத்தப் படுவதில் உதவுகின்றன.
நோக்கங்கள்
- உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்: குளிரூட்டப்பட்ட அமைப்புகள், கிடங்குகள் மற்றும் உணவுப் பதப்படுத்தும் அலகுகள் உள்ளிட்ட உணவுப் பதப்படுத்துதலுக்கான நவீன உள்கட்டமைப்பை உருவாக்குதல்.
- மதிப்புக் கூட்டல்: உணவுப் பதப்படுத்துதல் மற்றும் விவசாய வணிகம் மூலம் விவசாய விளைபொருட்களின் மதிப்புக் கூட்டலை மேம்படுத்துதல்.
- வேலைவாய்ப்பை உருவாக்குதல்: உணவுப் பதப்படுத்துதலில் முதலீடு மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம் குறிப்பாகக் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.
- விவசாயிகளின் வருவாயை அதிகரித்தல்: அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்து, சந்தை அணுகுதலை மேம்படுத்தி, விவசாயிகளுக்குச் சிறந்த விலை கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் வருமானத்தை மேம்படுத்துதல்.
- உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத்தை மேம்படுத்துதல்: உணவுப் பதப்படுத்தும் துறையில் உணவுப் பாதுகாப்பு, தரம் சார்ந்த மதிப்பீடுகள் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை உறுதி செய்தல்.
- திறமையான விநியோகச் சங்கிலிகள்: விவசாயிகளை உள்நாட்டு மற்றும் சர்வதேசச் சந்தைகளுடன் இணைக்கும் திறமையான விநியோகச் சங்கிலிகளை நிறுவுதல், கழிவுகளைக் குறைத்தல் மற்றும் சந்தைகளுக்கான அணுகுதலை மேம்படுத்துதல்.
பயனாளிகள்
- விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடையத் துறைகளில் (தோட்டக் கலை, மீன்பிடித்தல் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்றவை) ஈடுபட்டுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகள்.
- விவசாயத்தில் கூட்டு நடவடிக்கையை எளிதாக்கும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) மற்றும் சுய உதவிக் குழுக்கள் (SHGs).
- விவசாயம் சார்ந்தத் தொழில்கள் மற்றும் உணவுப் பதப்படுத்தும் பிரிவுகள் தங்கள் உள்கட்டமைப்பை நவீனமயமாக்க அல்லது விரிவுபடுத்த விரும்புகின்றன.
- உணவுப் பதப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளத் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு அமைப்புகள்.
தகுதி அளவுகோல்கள்
- விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) விவசாயம் அல்லது அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்.
- உணவுப் பதப்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் உணவைப் பொட்டலங்களாக மாற்றுதல் ஆகியவற்றிற்கான வசதிகளை அமைக்க அல்லது விரிவுபடுத்த விரும்புகின்ற உணவுப் பதப்படுத்துதல் அலகுகள் மற்றும் வேளாண் சார்ந்தத் தொழில்கள்.
- விவசாயம் மற்றும் உணவுப் பதப்படுத்தும் துறைகளில் செயல்படும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள்.
நன்மைகள்
- நவீன உள்கட்டமைப்பு: மெகா உணவுப் பூங்காக்கள், குளிரூட்டப்பட்ட அமைப்புகள் மற்றும் கிடங்குகள் ஆகியவற்றின் உருவாக்கமானது உணவு விநியோகச் சங்கிலியைச் சீரமைக்கவும், விரயத்தைக் குறைக்கவும் மற்றும் உணவுப் பதப்படுத்துதலின் செயல்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
- அதிகரித்தச் செயலாக்கத் திறன்: இந்தத் திட்டம் உணவுப் பதப்படுத்துதலில் 12% அதிகரிப்புக்கு வழி வகுத்தது மற்றும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைக்க உதவுவதோடு, மேலும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்குச் சிறந்த மதிப்பைப் பெறவும் உதவுகிறது.
- வேலைவாய்ப்பு உருவாக்கம்: PMKSY உணவுப் பதப்படுத்தும் துறையில் 2 மில்லியனுக்கும் அதிகமான வேலைகளை உருவாக்க உதவியது, கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுவதில் பங்களிக்கிறது.
- ஏற்றுமதி ஊக்குவிப்பு: இந்தத் திட்டம் உணவு ஏற்றுமதியை 15% உயர்த்தி, உலக உணவுச் சந்தையில் இந்தியாவின் இருப்பை மேம்படுத்தி, அந்நியச் செலாவணி வருவாயை அதிகரிக்கச் செய்துள்ளது.
- அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் குறைப்பு: குளிரூட்டப்பட்ட அமைப்புகள் மற்றும் திறமையான சேமிப்பு முறைகளை ஊக்குவிப்பதன் மூலம், இந்தத் திட்டமானது அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளை 5% குறைக்க உதவியது, மேலும் விளைபொருட்கள் சந்தையை அடைவதையும் உறுதி செய்கிறது.
- மேம்படுத்தப்பட்ட உணவுத் தரம் மற்றும் பாதுகாப்பு: இந்தத் திட்டம் சர்வதேச உணவுப் பாதுகாப்பு மற்றும் தர மதிப்பீடுகளை கடைபிடிப்பதை ஊக்குவிப்பதோடு, இது இந்திய உணவுப் பொருட்களை உலகளவில் அதிக போட்டித் தன்மை கொண்டதாக மாற்றுகிறது.
கூடுதல் தகவல்
PMKSY திட்டத்தின் முக்கிய கூறுகள்:
- மெகா உணவுப் பூங்காக்கள்: மெகா உணவுப் பூங்காக்களின் உருவாக்கம் நவீன உள்கட்டமைப்பை வழங்குகிறது மற்றும் மதிப்புக் கூட்டலை ஊக்குவிக்கிறது, விவசாய நிலத்தில் இருந்து சந்தைக்குத் திறமையான விநியோகச் சங்கிலிகளை உருவாக்குகிறது.
- தற்போது, இத்திட்டத்தின் கீழ் 41 மெகா உணவுப் பூங்காக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
- ஒருங்கிணைந்த குளிரூட்டப்பட்ட அமைப்புகள் மற்றும் மதிப்பு கூட்டல் உள்கட்டமைப்பு: இந்தப் பிரிவானது, குறிப்பாக தோட்டக்கலை மற்றும் தோட்டக்கலை அல்லாத உற்பத்திகளுக்கு, குளிர் சேமிப்புக் கிடங்கு மற்றும் மதிப்புக் கூட்டல் உள்கட்டமைப்புகளை வழங்குவதன் மூலம், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- உணவு பதப்படுத்துதல் / பாதுகாப்பு திறன் உருவாக்கம்: இந்த முயற்சியானது செயலாக்கத் திறனை அதிகரிக்கவும், விரயத்தைக் குறைக்கவும் வேண்டி செயலாக்க அலகுகளை உருவாக்குதல் மற்றும் விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்துவதற்கு நிதி உதவியை வழங்குகிறது.
- வேளாண் செயலாக்கக் குழுக்களுக்கான உள்கட்டமைப்பு: இந்த முயற்சியானது உற்பத்தியாளர்கள், செயல்படுத்துபவர்கள் மற்றும் சந்தைகளுக்கு இடையே, பின்தங்கிய மற்றும் முன்னோக்கிய இணைப்புகளை வழங்குவதற்காக வேளாண் உற்பத்திப் பகுதிகளில் உணவுப் பதப்படுத்துதலுக்கான உள்கட்டமைப்பை அமைக்க உதவுகிறது.
- பின்தங்கிய மற்றும் முன்னோக்கிய இணைப்புகள்: இந்தப் பிரிவானது, விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் குழுக்களை அதனைச் செயல்படுத்துபவர்கள் மற்றும் அதன் சந்தைகளுடன் இணைக்கிறது, இது சந்தை அணுகலை மேம்படுத்தி விரயத்தைக் குறைக்கும் தடையற்ற விநியோகச் சங்கிலியை உருவாக்குகிறது.
- உணவுப் பாதுகாப்பு மற்றும் தர உத்தரவாத உள்கட்டமைப்பு: இந்தப் பிரிவானது, உணவுப் பாதுகாப்பைக் கண்காணிப்பதற்கான அமைப்புகளை உருவாக்குதல், உள்நாட்டு மற்றும் சர்வதேசத் தரங்களுக்கு இணங்குவதை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
- மனித வளங்கள் மற்றும் நிறுவனங்கள்: இத்திட்டம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) நடவடிக்கைகள், திறன் மேம்பாடு மற்றும் உணவுப் பதப்படுத்துதலில் பொட்டலம் செய்தல், செயலாக்கத் தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்புக் கூட்டல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான தரப்படுத்தல் முயற்சிகளை ஊக்குவிக்கிறது.
செயல்படுத்துதல்
- ஒருங்கிணைப்பு: PMKSY திட்டத்தைச் செயல்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள், தொழில்துறையினர் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கிடையே ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது.
- நிதி உதவி: இந்தத் திட்டம் உணவுப் பதப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளத் தகுதியுள்ள நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்குகிறது.
- திறன் மேம்பாடு: விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் உணவுப் பதப்படுத்தும் தொழிலில் உள்ள தொழிலாளர்களுக்கான பயிற்சித் திட்டங்களைத் செயல்படுத்துவது இந்தச் செயல்முறையின் முக்கியப் பகுதியாகும்.
- கண்காணிப்பு: நிதியின் சரியான பயன்பாட்டை உறுதி செய்வதற்கும், முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு அவசியம்.
- அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக, உணவுப் பதப்படுத்துதலுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு கிட்டத்தட்ட 42 மெகா உணவுப் பூங்காக்கள் மற்றும் 236 ஒருங்கிணைந்த குளிரூட்டப்பட்ட அமைப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த முன்னெடுப்பானது இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் மின்னணு வணிகத்தில் 100% FDIக்கும் (அந்நிய நேரடி முதலீடு) உதவியுள்ளது.
சவால்கள்
- ஒருங்கிணைப்பு: திறம்படச் செயல்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகள் உட்பட பல பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
- நிதி ஆதாரங்கள்: இந்தத் திட்டத்தின் வெற்றிக்குப் போதுமான அளவு நிதி முக்கியமானது என்பதோடு போதுமான முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் பட்ஜெட் ஒதுக்கீடுகளைப் பாதுகாப்பது சவாலானதாக இருக்கலாம்.
- திறன் மேம்பாடு: கிராமப்புறங்களில் திறன் மேம்பாடானது, இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் முழுமையாகப் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும்.
-------------------------------------