இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 13
(For English version to this please click here)
பிரதான் மந்திரி டிபி முக்த் பாரத் அபியான்
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MOHFW).
நோக்கங்கள்:
- 2025 ஆம் ஆண்டிற்குள் காச நோயை ஒழிப்பதை நோக்கி நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துதல்.
- ஒரு கூடுதல் ஆதரவை வழங்குவதன் மூலம் காச நோயாளிகளின் சிகிச்சை முறைகளை மேம்படுத்துதல்.
- காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் சமூகத்தை ஈடுபடுத்துதல் மற்றும் காசநோய் ஒழிப்புத் திட்டத்திற்குப் பங்களிக்கப் பொதுமக்களை ஊக்குவித்தல்.
- பெருநிறுவனச் சமூகப் பொறுப்பு (CSR) செயல்பாடுகளைப் பயன்படுத்துதல்.
பயனாளிகள்:
- இந்தியாவில் காசநோயால் பாதிக்கப் பட்டவர்கள்.
தகுதி அளவுகோல்கள்:
- காசநோயாளிகள் (காசநோய்க்குச் சிகிச்சை பெறும் நபர்கள்) நி-க்ஷய் மித்ரா முன்னெடுப்பின் கீழ் கூடுதல் உதவி பெறத் தகுதியுடையவர்கள்.
- காசநோயாளிகளை தத்தெடுக்கக் கூடிய அல்லது காசநோய்ப் பராமரிப்பு முயற்சிகளுக்கு பங்களிக்கக் கூடிய தனிநபர்கள், பெருநிறுவன அமைப்புகள் அல்லது பிற நிறுவனங்கள் உட்பட நன்கொடையாளர்களும் இந்தத் தகுதிக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக உள்ளனர்.
பலன்கள்:
- நி-க்ஷய் மித்ரா முன்னெடுப்பு: காச நோயாளிகளுக்கான நோயறிதல் சேவைகள், ஊட்டச்சத்து ஆதரவு மற்றும் தொழில் பயிற்சி போன்ற வடிவங்களில் கூடுதல் ஆதரவை வழங்குகிறது.
- நி-க்ஷய் எண்ம தளம்: காச நோயாளிகளுக்கான சமூக அடிப்படையிலான ஆதரவை செயல்படுத்துகிறது, நன்கொடைகள் மற்றும் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கான ஒரு தளத்தை வழங்குகிறது.
- மேம்படுத்தப்பட்ட சிகிச்சை வெற்றி விகிதங்கள்: அதிகரித்த நோயாளிகளைக் கண்டறிதல் மற்றும் சிறந்த சிகிச்சை விகிதங்கள், சிறந்த சிகிச்சை முடிவுகள் மூலமாக காசநோய் தொடர்பான இறப்பு மற்றும் நோயுற்ற தன்மையைக் குறைக்கின்றன.
- தொழில்நுட்ப ஆதரவு: விரைவான நோயறிதலுக்கான CBNAAT இயந்திரங்கள் மற்றும் காசநோய் மருந்து விநியோகச் சங்கிலிகளைச் சீரமைக்க மின்னணு-மருந்தகம் மற்றும் மின்னணு-ஆய்வக அமைப்புகள் போன்ற கருவிகள் அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளன.
- தனியார் துறை ஈடுபாடு: காசநோய் சிகிச்சையை வழங்குவதில் தனியார் சுகாதார சேவைகளையும் ஈடுபடுத்துவதன் மூலம் எந்த காசநோயாளியும் பின் தங்கியிருக்கவில்லை என்பதை உறுதி செய்கிறது.
கூடுதல் தகவல்கள்:
- இந்த முன்னெடுப்பானது தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய இலக்கான 2030 ஆம் ஆண்டிற்கு முன்னதாக, 2025 ஆம் ஆண்டளவில் இந்தியாவில் காசநோயை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அனிமியா (இரத்த சோகை) முக்த் பாரத் (AMB) உத்தி
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MOHFW)
நோக்கங்கள்:
- வாழ்க்கைச் சுழற்சி அணுகுமுறை மூலம் ஆறு பயனாளிகளின் வயதுக் குழுக்களிடையே (குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெண்கள்) இரத்த சோகையின் பரவலைக் குறைத்தல்.
- இரத்த சோகைக்கான ஊட்டச்சத்து மற்றும் ஊட்டச்சத்து அல்லாத காரணங்களை நிவர்த்தி செய்தல்.
- நோய்த் தடுப்பு, சிகிச்சை மற்றும் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு விரிவான மூலோபாயத்தைச் செயல்படுத்துதல்.
- செறிவூட்டப்பட்ட உணவுகளை வழங்குவதை உறுதி செய்தல் மற்றும் இரத்த சோகை குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைத் தொடர்ந்து நடத்துதல்.
பயனாளிகள்:
- குழந்தைகள் (6-59 மாதங்கள்)
- குழந்தைகள் (5-9 வயது)
- இளம் பருவத்தினர் (10-19 வயது)
- இனப்பெருக்க வயதுடைய பெண்கள் (15-49 வயது)
- கர்ப்பிணிப் பெண்கள்
- பாலூட்டும் பெண்கள்
தகுதி அளவுகோல்கள்:
- பாதிக்கப்படக்கூடிய வயதுக் குழுக்கள்: குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் உட்பட வரையறுக்கப்பட்ட வயது வகைகளின் கீழ் வரும் பெண்கள்.
- இலக்குப் பகுதிகள்: சமூகங்கள், குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கியப் பகுதிகள் போன்ற அதிக இரத்த சோகை பாதிப்பு உள்ள பகுதிகள்.
பலன்கள்:
- இரும்பு மற்றும் ஃபோலேட் குறைநிரப்புகள்: இரத்த சோகையை தடுக்க இலக்குப் பயனாளிகளுக்கு நோய்த் தடுப்பு இரும்பு ஃபோலிக் அமிலக் குறை நிரப்புகளை வழங்குதல்.
- குடற்புழு நீக்கம்: இரத்த சோகைக்குப் பங்களிக்கும் ஒட்டுண்ணி நோய்த் தொற்றுகளை நிவர்த்தி செய்ய அவ்வப்போது குடற்புழு நீக்கப் படுகிறது.
- நடத்தை மாற்றப் பிரச்சாரம்: ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் மற்றும் இரத்த சோகை தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆண்டு முழுவதுமான தகவல் தொடர்பு பிரச்சாரங்களை நடத்துதல்.
- செறிவூட்டப்பட்ட உணவுகள்: பொது சுகாதாரத் திட்டங்கள் மற்றும் பிற நலத் திட்டங்களில் கீழ் இரும்பு ஃபோலிக் அமிலச் செறிவூட்டப்பட்ட உணவுகளை வழங்குதல்.
- சோதனை மற்றும் சிகிச்சை: இரத்த சோகையைப் பரிசோதிப்பதற்காக எண்ம முறை ஹீமோகுளோபினோமீட்டர்களைப் பயன்படுத்துதல் மற்றும் தேவைப்படும் இடங்களில், நோயாளி இருக்கும் இடங்களுக்குச் சென்று சிகிச்சை அளித்தல்.
- ஊட்டச்சத்து அல்லாத தலையீடுகள்: குறிப்பாக உள்ளூர்ப் பகுதிகளில், இரத்த சோகைக்கான பிற காரணங்களான நோய்த் தொற்றுகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளை எதிர் கொள்தல்.
கூடுதல் தகவல்கள்:
6X6X6 உத்தி:
- 6 பயனாளிகள்: குழந்தைகள் (6-59 மாதங்கள்), குழந்தைகள் (5-9 வயது), இளம் பருவத்தினர் (10-19 வயது), பெண்கள் (15-49 வயது), கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள்.
- 6 தலையீடுகள்: இரும்பு ஃபோலிக் அமிலக் குறைநிரப்புகள், குடற்புழு நீக்கம், நடத்தை மாற்றப் பிரச்சாரங்கள், சோதனை மற்றும் சிகிச்சை, செறிவூட்டப்பட்ட உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து அல்லாத காரணங்களை நிவர்த்தி செய்தல்.
- 6 நிறுவன வழிமுறைகள்: அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, மற்ற அமைச்சகங்களுடன் ஒன்றிணைதல், விநியோகச் சங்கிலி மற்றும் தளவாடங்களை வலுப்படுத்துதல், ஆராய்ச்சி மையங்களுடன் ஈடுபாடு, மற்றும் AMB கட்டுப்பாட்டு அமைப்பு வழியாக கண்காணித்தல்.
மிஷன் போஷன் 2.0:
- சமூக ஈடுபாடு, மேம்பட்ட ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மூலம் AMB உத்தியை ஆதரிக்கும் ஒரு முக்கியத் திட்டமாகும்.
- இது அதீத ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட ஊட்டச் சத்துக் குறைபாட்டைக் குறைப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
- அரிசி செறிவூட்டல்: இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 12 கொண்ட செறிவூட்டப் பட்ட அரிசி இலக்கு பொது விநியோக அமைப்பு (TPDS) மற்றும் PM-POSHAN திட்டம் போன்ற பல்வேறு அரசாங்கத் திட்டங்களின் கீழ் விநியோகிக்கப் படுகிறது.
- கண்காணிப்பு: AMB திட்டத்தின் கீழ் செயல்முறைகளில் இரும்பு ஃபோலிக் அமில குறை நிரப்புகள் மற்றும் இலக்குக் குழுக்கள் முழுவதும் இரத்த சோகை விகிதங்கள் குறைப்பு மூலம் கண்காணிக்கப்படுகிறது.
ஜனனி சுரக்சா யோஜனா (JSY)
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் / தலைமை முகமை:
- சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்.
நோக்கங்கள்:
- ஏழை கர்ப்பிணிப் பெண்களிடையே மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களை ஊக்குவிப்பதன் மூலம் தாய் மற்றும் பிறந்த குழந்தை இறப்பைக் குறைத்தல்.
- பிரசவ காலம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தையப் பராமரிப்புக்கான கூடுதல் அணுகல் மூலம் பாதுகாப்பான தாய்மையை ஊக்குவித்தல்.
- வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் (BPL) மற்றும் பட்டியலிப்பட்ட சாதியில் உள்ள தாழ்த்தப்பட்டப் பெண்களுக்கும் (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கும் (ST) நிதி உதவி வழங்குதல்.
- கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் விகிதத்தை அதிகரித்தல்.
- ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்கள் மூலம் ஏற்படும் பொருளாதாரச் செலவுகளைக் குறைத்தல்.
பயனாளிகள்:
- கர்ப்பிணிப் பெண்கள், முதன்மையாக BPL (வறுமைக் கோட்டிற்கு கீழ்) குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், மற்றும் பட்டியலிடப்பட்ட சாதிகள் (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) பெண்கள்.
- குறைந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் (LPS) மற்றும் அதிக செயல்திறன் கொண்ட மாநிலங்களின் (HPS) மீது கவனம் செலுத்துவதோடு, குறைந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களின் மீது (LPS) சிறப்புக் கவனம் செலுத்துகிறது.
- அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களை ஊக்குப்படுத்துகின்றனர்.
தகுதி அளவுகோல்கள்:
குறைந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் (LPS):
- துணை மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூக சுகாதார மையங்கள் அல்லது மாவட்ட / மாநில மருத்துவமனைகள் போன்ற அரசு சுகாதார மையங்களில் பிரசவிக்கும் அனைத்து கர்ப்பிணிப் பெண்கள்.
உயர் செயல்திறன் கொண்ட மாநிலங்கள் (HPS):
- அனைத்து BPL / SC / ST பெண்களும் அரசு சுகாதார மையங்களில் பிரசவத்தை மேற் கொள்கிறார்கள்.
- அங்கீகரிக்கப்பட்ட தனியார் சுகாதார நிறுவனங்களில் பிரசவித்தை மேற்கொள்ளும் BPL / SC / ST பெண்கள்.
- குழந்தைகளின் வயது மற்றும் எண்ணிக்கை: தாயின் வயது அல்லது குழந்தைகளின் எண்ணிக்கையில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.
பலன்கள்:
மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களுக்கான பண உதவி:
- LPS (கிராமப்புறம்): ரூ. 2,000 (தாய் பெறும் தொகை ரூ. 1,400 மற்றும் ASHA ரூ. 600).
- LPS (நகர்ப்புறம்): ரூ. 1,400 (தாய் பெறும் தொகை ரூ. 1,000 மற்றும் ASHA ரூ. 400).
- HPS (கிராமப்புறம்): ரூ. 1,300 (தாய் பெறும் தொகை ரூ. 700 மற்றும் ASHA ரூ. 600).
- HPS (நகர்ப்புறம்): ரூ. 1,000 (தாய் பெறும் தொகை ரூ. 600 மற்றும் ASHA ரூ. 400).
ASHA ஊக்கத்தொகை:
- கிராமப்புறங்களுக்கு ரூ. 600 (பிறப்புக்கு முந்தையப் பரிசோதனைக்கு (ANC) ரூ. 300 மற்றும் பிரசவத்தை எளிதாக்க ரூ. 300).
- நகர்ப்புறங்களுக்கு ரூ. 400 (பிறப்புக்கு முந்தையப் பரிசோதனைக்கு (ANC) ரூ. 200 மற்றும் பிரசவத்தை எளிதாக்க ரூ. 200).
- பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு: பிரசவத்திற்குப் பிந்தைய சேவைகள் மற்றும் சுகாதாரப் பரிசோதனைகளுக்கான பண உதவி.
கூடுதல் தகவல்கள்:
- இந்தத் திட்டம் தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாகும் என்பதோடு இது மத்திய அரசின் 60% நிதியுதவியுடனும் மற்றும் 40% மாநில அரசுகள் நிதியுதவியுடனும் ஒரு மத்திய நிதியுதவி மாதிரியில் செயல்படுகிறது.
- இது மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் பகுதிகளான (எ.கா., உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம்) குறைந்த செயல் திறன் கொண்ட மாநிலங்களை (LPS) இலக்காகக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது.
- அவர்களின் சமூகங்களில் மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களை ஊக்குவிப்பதற்காக ஆஷாக்களுக்கு செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகைகளும் வழங்கப்படுகின்றன.
- JSY திட்டமானது பொது மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் சுகாதார வசதிகளை உள்ளடக்கி, சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துகிறது.
- நிர்வாகச் செலவுகள் சுமூகமாகச் செயல்படுத்தப் படுவதற்காக வேண்டி மாநில மற்றும் மாவட்ட அளவில் ஒரு சதவீத நிதியை விடுவிப்பதன் மூலம் ஈடுசெய்யப்படுகிறது.
இலக்கு 4: தரமான கல்வி
சமக்ரா சிக்சா திட்டம்
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- கல்வி அமைச்சகம் (பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை)
நோக்கங்கள்:
- தரமான கல்வியை வழங்குதல்: தரமான கல்விக்கான சமமான அணுகலை உறுதி செய்தல், கற்றல் விளைவுகளை மேம்படுத்துதல் மற்றும் பள்ளிக் கல்வியில் சமூக மற்றும் பாலின இடைவெளிகளைக் குறைத்தல்.
- உள்ளடக்கிய கல்வி: ஒதுக்கப்பட்ட குழுக்களைச் சேர்ந்த குழந்தைகள், சிறப்புத் தேவையுடைய குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட அனைவருக்கும் கல்வியை உறுதிசெய்தல்.
- தொழிற்கல்வியை ஊக்குவித்தல்: தொடக்கக் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை தொழிற்பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துதல்.
- ஆசிரியர் திறன் மேம்பாடு: மேம்படுத்தப் பட்டப் பயிற்சி மற்றும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலம் ஆசிரியர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துதல்.
- உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல்: ICT ஆய்வகங்கள், நூலகங்கள் மற்றும் சுகாதார வசதிகள் உட்பட பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல்.
- பள்ளிக் கல்வியில் குறைந்தபட்ச தரநிலைகளை உறுதி செய்தல்: உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் தரத்திற்கான முன்னெடுப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் சாதகமான கற்றல் சூழலை மேம்படுத்துதல்.
- எண்ம கல்வியை ஊக்குவிக்க: திறன் பலகைகள், மெய்நிகர் வகுப்பறைகள் மற்றும் DIKSHA போன்ற ஆன்லைன் தளங்கள் போன்ற முன்னெடுப்புகள் மூலம் வகுப்பறைகளில் எண்மக் கருவிகளின் பயன்பாட்டை மேம்படுத்துதல்.
பயனாளிகள்:
- மாணவர்கள்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முன் தொடக்க நிலை முதல் உயர்நிலை இடைநிலை வரை பயிலும் 156 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள்.
- ஆசிரியர்கள்: தோராயமாக 5.7 மில்லியன் ஆசிரியர்கள்.
- சிறப்புத் தேவைகள் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் (CwSN): தற்காப்புப் பயிற்சி, உதவித் தொகை மற்றும் மேம்படுத்தப்பட்ட ஒதுக்கீடுகளுடன் கூடிய CwSN குழந்தைகள் உட்பட பெண்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள்.
- பள்ளி செல்லாத குழந்தைகள் (16-19 வயது): இடைநிலை மற்றும் உயர் இடைநிலைக் கல்வியை முடிப்பதற்கான ஆதரவு.
தகுதி அளவுகோல்கள்:
- இத்திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேரும் அனைத்து குழந்தைகளையும் இலக்காக வைக்கிறது.
- இத்திட்டம் முன்-முதன்மை முதல் உயர் வகுப்பு முதல் இரண்டாம் நிலை வரையிலான குழந்தைகளுக்குப் பொருந்தும்.
- ஒதுக்கப்பட்ட குழுக்கள், பெண்கள், குறைபாடுகள் உள்ள குழந்தைகள் மற்றும் பள்ளிகளில் வெளியேறிய குழந்தைகளுக்கான குறிப்பிட்ட ஏற்பாடுகள்.
பலன்கள்:
- தரமான கல்வி மற்றும் கற்றல் முடிவுகள்: கற்றல் முடிவுகள், நூலகங்கள் மற்றும் எண்ம வளங்களை மேம்படுத்த மானியங்கள்.
- திறன் மேம்பாடு: தொழில் திறன்களை வெளிப்படுத்துதல் மற்றும் இரண்டாம் நிலை மற்றும் உயர் வகுப்பு இடைநிலை கல்வியில் தொழிற்கல்வியை வலுப்படுத்துதல்.
- அதிகரித்த அணுகல் மற்றும் சேர்த்தல்: பெண் கல்வி, சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மேம்படுத்தப்பட்ட ஆதரவினை வழங்குதல்.
- உள்கட்டமைப்பு மேம்பாடு: பள்ளிகளை மேம்படுத்துதல், சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குதல்.
- எண்ம கற்றல் கருவிகள்: ICT ஆய்வகங்கள், திறன் வகுப்பறைகள், மெய்நிகர் வகுப்பறைகள் மற்றும் DIKSHA போன்ற எண்ம கல்வித் தளங்கள் போன்றவை.
- நிதி உதவி: மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவுகளுக்கு நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) மூலம் நேரடி நிதி உதவி.
- விளையாட்டு மற்றும் உடற்கல்வியில் சிறப்பு கவனம்: அனைத்துப் பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணங்களை வழங்குவதோடு, பாடத்திட்டத்தில் விளையாட்டை ஒருங்கிணைப்பதற்கான ஆதரவு.
கூடுதல் தகவல்கள்:
சமக்ரா சிக்சா 2.0:
- அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண்ணறிவுக்கான நிபுன் பாரத் மற்றும் குழந்தைகளை மையமாகக் கொண்ட தலையீடுகளுக்கான நேரடிப் பலன் பரிமாற்றத்தினை (DBT) செயல்படுத்தல் போன்ற கூடுதல் கூறுகளை உள்ளடக்கியதாக விரிவாக்கப் பட்டது.
- பாடப் புத்தகங்கள், சீருடைகள் மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளுக்கான நேரடி பலன் பரிமாற்றத்தில் கவனம் செலுத்துதல்.
- தொழிற்கல்வியை முந்தைய வகுப்புகளுக்கு (வகுப்பு 6) விரிவாக்கம் செய்தல் மற்றும் உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் தொழில் திறன்களை ஒருங்கிணைத்தல்.
- கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களைக் கொண்ட பள்ளிகளுக்கு விளையாட்டு உதவித் தொகை வழங்குதல்.
- இது தற்காப்புப் பயிற்சித் திட்டங்கள் மற்றும் KGBV பள்ளிகளுக்கு (கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயாக்கள்) ஊக்கத் தொகைகளை அறிமுகப்படுத்துதல் போன்றவை உட்பட பள்ளியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
-------------------------------------