இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 14
(For English version to this please click here)
புதிய இந்திய எழுத்தறிவுத் திட்டம் (NILP)
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
நோக்கங்கள்:
- முறையான பள்ளிப்படிப்பைத் தவறவிட்ட 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிறுவர்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்கள் சமூகத்துடன் ஒன்றிணைந்து தேசிய வளர்ச்சிக்குப் பங்களிக்க உதவுதல்.
- அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண்ணியல் (FLN), முக்கியமான வாழ்க்கைத் திறன்கள், தொழில் திறன் மேம்பாடு, அடிப்படைக் கல்வி மற்றும் தொடர் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்துதல்.
- தேசியத் தகவல் மையம் (NIC), NCERT மற்றும் NIOS ஆகியவற்றுடன் இணைந்து ஆன்லைன் கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டு முறைகளைப் பயன்படுத்தி ஐந்து ஆண்டுகளில் (ஆண்டுக்கு 1 கோடி) 5 கோடி கற்பவர்களை இலக்காகக் கொண்டு செயல்படுதல்.
- தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020 உடன் இணைந்து செயல்படுதல்.
பயனாளிகள்:
- அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள பெண்கள் உட்பட 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய எழுத்தறிவு இல்லாத நபர்கள்.
- அலைபேசிச் செயலிகள் அல்லது நேரடிப் பதிவு மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு மூலம் பயனாளிகளை அடையாளம் காணுதல்.
தகுதி அளவுகோல்கள்:
- முறையான பள்ளிப் படிப்பைத் தவற விட்ட மற்றும் கல்வியறிவு இல்லாத 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது வந்தோர்.
பலன்கள்:
- அடிப்படைக் கல்வியறிவு, எண்ணியல், திறனாய்வு பற்றிய வாழ்க்கைத் திறன்கள், தொழில் திறன்கள் மற்றும் தொடர்ச்சியான கல்விக்கான அணுகல்.
- அலைபேசிச் செயலி மூலம் தனிநபர்கள் கல்வியாளர்களாகப் பங்களிக்கத் தன்னார்வக் கற்பித்தல் வாய்ப்புகளை அளித்தல்.
- திக்சா இயங்குதளம் மற்றும் தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமாஜிக் சேத்னா கேந்திரா போன்ற பிற ஊடகத் தளங்கள் மூலம் கற்பித்தல் மற்றும் கற்றல் சார்ந்தப் பொருட்கள் கிடைக்கின்றன.
கூடுதல் தகவல்கள்:
- செயல்பாட்டுக் காலம்: நிதியாண்டு 2022 - 2027 (5 ஆண்டுகள்).
- இந்தத் திட்டம் முதன்மையாக அலைபேசிப் பயன்பாடுகள், ஆன்லைன் தளங்கள் மற்றும் கல்வி உள்ளடக்கத்தைப் பரப்புவதற்கு வேண்டி பல்வேறு ஊடகங்களில் உள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
- 2023 ஆம் ஆண்டில், 39,94,563 வயது வந்தோர் கல்வியறிவு மற்றும் எண்ணியல் மதிப்பீட்டுத் தேர்வில் (FLNAT), 36,17,303 கல்வி கற்பவர்கள், கல்வியறிவு பெற்றவர்கள் எனச் சான்றிதழ் பெற்றனர்.
மதிய உணவுத் திட்டம் (PM POSHAN)
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
நோக்கங்கள்:
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல்.
- பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த குழந்தைகளைத் தவறாமல் பள்ளிக்குச் செல்வதற்கும், வகுப்பறை சார்ந்த நடவடிக்கைகளில் சிறப்பாக கவனம் செலுத்துவதற்கும் ஊக்கப்படுத்துதல்.
- வறட்சியால் பாதிக்கப்பட்ட மற்றும் பேரிடர் பாதித்தப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவை வழங்குதல்.
- தொடக்கக் கல்வியை உலகளாவிய மயமாக்கும் ஒரு குறிக்கோளுடன், பட்டினியைப் போக்கி கல்வியை மேம்படுத்துதல்.
பயனாளிகள்:
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறப்புப் பயிற்சி மையங்கள் (எஸ்டிசி), மதர்சாக்கள், மக்தாப்கள் மற்றும் சர்வ சிக்சா அபியான் (SSA) கீழ் செயல்படும் பள்ளிகளில் பால் வாடிகா (அங்கன்வாடி பள்ளிகள்) முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள்.
தகுதி அளவுகோல்கள்:
- அனைத்துக் குழந்தைகளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பாலினம் அல்லது சமூக வகுப்பின் அடிப்படையில் எந்த பாகுபாடும் இல்லாமல் சேர்ப்பது.
பலன்கள்:
- தகுதியான குழந்தைகளுக்கு சூடாகச் சமைத்த உணவு வழங்கப் படுகிறது.
- குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 450-700 கலோரிகள் மற்றும் 12-20 கிராம் புரதத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது.
- உணவு தானியங்கள், பொருள் செலவுகள் (பருப்பு வகைகள், காய்கறிகள், மசாலாப் பொருட்கள் போன்றவை) மற்றும் சமையல் செலவுகளுக்கான நிதி உதவி.
- சமையல் அறையுடன் கூடிய அங்காடிகளின் கட்டுமானம் மற்றும் சமையலறைச் சாதனங்களை வழங்குவதற்கான ஆதரவு.
- திதி போஜன் முன்னெடுப்பானது முக்கியச் சந்தர்ப்பங்கள் மற்றும் திருவிழாக்களில் சத்தான உணவை வழங்குவதில் சமூகத்தின் பங்களிப்பை அனுமதிக்கிறது.
- கூடுதல் நுண்ணூட்டச் சத்துகளுக்காக பள்ளிகளில் சத்துணவுத் தோட்டங்களை உருவாக்குதல்.
- இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதிப்படுத்த சமூகத் தணிக்கைகளை மேற்கொள்ளுதல்.
கூடுதல் தகவல்கள்:
- இந்தத் திட்டம் 2021-22 ஆம் ஆண்டு நிலவரப்படி, 11.20 லட்சம் பள்ளிகளில் உள்ள சுமார் 11.80 கோடி குழந்தைகளை உள்ளடக்கியது.
- இரத்த சோகை அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள மாவட்டங்களுக்கு, கூடுதல் ஊட்டச் சத்து பொருட்களை வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
- இதற்கான கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு (MME) நிதிகள் மொத்தப் பட்ஜெட்டில் 3% ஆகும் என்பதோடு இது வழக்கமான மதிப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது.
பட்டியலிடப்பட்ட சாதியினருக்கான பதின்மநிலை (மெட்ரிக்) முன் மற்றும் பிந்தைய உதவித் தொகை திட்டங்கள்
தொடங்கப்பட்ட ஆண்டு:
- பதின்மநிலை முன் உதவித் தொகை திட்டம்: 2006.
- பட்டியலிடப்பட்ட சாதியை சார்ந்த மாணவர்களுக்கான பிந்தைய உதவித் தொகை திட்டம் (PMS-SC): 2014.
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் (MoSJ&E).
பட்டியலிடப்பட்ட சாதியினருக்கான (SC) பதின்மநிலை (மெட்ரிக்) முன் உதவித் தொகை திட்டம்
நோக்கங்கள்:
- கல்வியறிவை ஊக்குவித்தல் மற்றும் பட்டியலிடப்பட்டச் சாதிகள் மற்றும் தூய்மையற்ற இடத்தில் வேலை செய்வோர்கள் மற்றும் அபாயகரமான தொழில்களில் ஈடுபட்டுள்ளப் பெற்றோர் / பாதுகாவலர்களின் குழந்தைகளுக்கு பதின்மநிலைக்கு (மெட்ரிக்) முந்தைய நிலையில் தடையில்லா கல்வியை உறுதி செய்தல்.
- இடைநிற்றல் விகிதங்களைக் குறைத்து, மாணவர்கள் ஒன்றிலிருந்து பத்தாம் வகுப்பு வரை கல்வியைத் தொடர ஊக்குவித்தல்.
பயனாளிகள்:
கூறு 1:
- IX மற்றும் X வகுப்புகளில் படிக்கும் SC பிரிவு மாணவர்கள்.
கூறு 2:
- கையால் சுத்தம் செய்பவர்கள், தோல் பதனிடுபவர்கள், கழிவுகளை எடுப்பவர்கள் மற்றும் அபாயகரமானப் பகுதிகளில் சுத்தம் செய்வதில் ஈடுபடுபவர்கள் போன்ற தூய்மையற்ற மற்றும் அபாயகரமான தொழில்களில் ஈடுபடும் பெற்றோர் / பாதுகாவலர்களின் குழந்தைகள்.
தகுதி அளவுகோல்கள்:
கூறு 1:
- ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளில் படிக்கும் SC பிரிவு மாணவர்கள்.
- பெற்றோர் / பாதுகாவலரின் வருமானம் ஆண்டுக்கு ரூ. 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கூறு 2:
- சாதி / மதத்தைப் பொருட்படுத்தாமல் தூய்மையற்ற அல்லது அபாயகரமான தொழில்களில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள் / பாதுகாவலர்களின் குழந்தைகள்.
- இந்தக் கூறுகளின் கீழ் வருமான உச்ச வரம்பு இல்லை.
பலன்கள்:
- முதலாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள SC பிரிவு மாணவர்களுக்கு நிதி உதவி.
- குடும்ப வருமான உச்சவரம்புடன் IX மற்றும் X வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கான உதவித் தொகை.
- கையால் துப்புரவு செய்பவர்கள், தோல் பதனிடுபவர்கள், கழிவுகளை எடுப்பவர்கள் மற்றும் அபாயகரமான துப்புரவுப் பணியில் ஈடுபடுபவர்களின் குழந்தைகளுக்கு வருமான வரம்பு இல்லாமல் உதவித் தொகை வழங்குதல்.
SC மாணவர்களுக்கான பிந்தைய பதின்மநிலை (மெட்ரிக்) உதவித் தொகை திட்டம் (PMS-SC)
நோக்கங்கள்:
- இந்தியாவில் பிந்தைய பதின்மநிலை (மெட்ரிக்) கல்வியைத் தொடரும் SC மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குதல்.
- உயர்கல்வியில் SC பிரிவு மாணவர்களின் மொத்தச் சேர்க்கை விகிதத்தை (GER) அதிகரிக்கவும், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை மையப்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் ஒரு நோக்கமாகும்.
பயனாளிகள்:
- SC மாணவர்கள் பிந்தைய பதின்மநிலை (மெட்ரிக்) கல்வியில் (உயர் கல்வி) சேர்ந்தவர்கள்.
தகுதி அளவுகோல்கள்:
- பிந்தைய பதின்மநிலைக் (மெட்ரிக்) கல்வியைத் தொடரும் SC மாணவர்கள்.
- பெற்றோர் / பாதுகாவலர் வருமானம் ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பலன்கள்:
- பதின்மநிலைக்குப் (மெட்ரிக்) பிந்தைய மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் மற்றும் பராமரிப்புக் கொடுப்பனவை உள்ளடக்கிய நிதி உதவி வழங்கப் படுகிறது.
கூடுதல் தகவல்கள்:
சமீபத்திய மாற்றங்கள் மற்றும் செயல்படுத்துதல்:
நிதியளிப்பு முறை:
- பதின்மநிலைக்கு (மெட்ரிக்) முந்தைய உதவித் தொகை: வடகிழக்கு மாநிலங்கள் (90:10), உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்கள் (100:0) ஆகியவற்றுக்கான சிறப்பு ஏற்பாடுகளுடன், 60:40 (மத்திய மற்றும் மாநிலம்) என்ற விகிதத்தில் நிதி பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
- PMS-SC: PMS-SC திட்டத்திற்கான நிதி முறையும், மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே 60:40 என்ற அளவில், வடகிழக்கு மாநிலங்களுக்கான குறிப்பிட்ட விதிமுறைகளுடன் (90:10) பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT):
- இரண்டு திட்டங்களுக்கான மத்திய அரசின் பங்கானது, (பராமரிப்புக் கொடுப்பனவு மற்றும் திருப்பிச் செலுத்தப்படாத கட்டணம்) மாநில அரசு தனது பங்கை வெளியிட்ட பிறகு, DBT வழியாக மாணவர்களின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப் படும்.
ஆன்லைன் செயலாக்கம்:
- வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தவும், போலித் தன்மையைக் குறைக்கவும், தவறான உரிமைக் கோரல்களைத் தவிர்க்கவும், ஆன்லைன் தளங்கள் மூலம் திட்டங்கள் நிர்வகிக்கப் படுகின்றன.
சாதனைகள்:
- முன் பதின்மநிலை (மெட்ரிக்) உதவித் தொகை: 2023-24 நிதியாண்டில், DBT மூலம் 6.25 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.141.01 கோடி விடுவிக்கப் பட்டது.
- PMS-SC: நிதியாண்டு 2023-24 ஆம் ஆண்டில், DBT மூலம் 12.70 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1516.84 கோடி விடுவிக்கப் பட்டது.
PM SHRI திட்டம்
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- கல்வி அமைச்சகம், இந்திய அரசு.
PM SHRI திட்டத்தின் நோக்கங்கள்:
- PM SHRI (பிரதான் மந்திரி எழுச்சி பெரும் இந்தியாவிற்கான பள்ளிகள்) திட்டம் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதையும், தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 என்ற கொள்கையின் கொள்கைகளைக் கடைபிடிக்கும் மாதிரி நிறுவனங்களாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மாணவர்களின் அறிவாற்றல் மற்றும் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்தி, உள்ளடக்கிய மற்றும் உயர்தர கல்வியை வழங்கும் 14,500 மாதிரிப் பள்ளிகளை நிறுவுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
- தற்போதுள்ள பள்ளிகளைத் தரமான கல்வியின் ஒரு முன்மாதிரியாகச் செயல்படும் வகையில் PM SHRI பள்ளிகளாக மேம்படுத்துதல்.
- நல்வாழ்வு மற்றும் மாணவர் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்ளடக்கிய, பாதுகாப்பான மற்றும் வளர்க்கும் சூழலை உருவாக்குதல்.
- நவீன உள்கட்டமைப்பு மற்றும் வளங்களுடன் பல்வேறு கற்றல் அனுபவங்களை வழங்குதல்.
- தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020 என்பதின் இலக்குகளுடன் இணைவதற்கு, சமத்துவம், உள்ளடக்கம் மற்றும் பன்மைத்துவத்தின் அடிப்படையில் ஒரு சமூகத்தை உருவாக்குதல்.
பயனாளிகள்:
- PM SHRI பள்ளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள்.
- ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மேம்படுத்தப்பட்ட வளங்கள், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்முறை மேம்பாட்டு வாய்ப்புகளுடன் அதிகாரம் பெறுவார்கள்.
தகுதி அளவுகோல்கள்:
- மத்திய / மாநில / யூனியன் பிரதேஷ அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப் படும் பள்ளிகள்.
- கேந்திரிய வித்யாலயாக்கள் (KVs) மற்றும் நவோதயா வித்யாலயாக்கள் (JNVs) திட்டமில்லாதவை மற்றும் நிரந்தரக் கட்டிடங்களில் இருந்து செயல்படும் பள்ளி அமைப்புகள்.
PM SHRI பள்ளிகளின் முக்கிய அம்சங்கள்:
- முழுமையான கல்வி: பள்ளிகள் மாணவர்களின் ஒட்டு மொத்த மேம்பாடு, தகவல் தொடர்பு, ஒத்துழைப்பு, திறனாய்வுச் சிந்தனை மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் போன்ற திறன் சார்ந்த கல்வியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
- நவீன கற்பித்தல்: கற்பித்தல் முறைகள் அனுபவமிக்கதாகவும், ஆய்வினை அடிப்படையாகக் கொண்டதாகவும், கற்றலை மையப்படுத்தியதாகவும் மற்றும் நெகிழ்வானதாகவும் இருக்கும்.
அதிநவீன உள்கட்டமைப்பு:
- நவீன ஆய்வகங்கள் (அறிவியல், தொழில் மற்றும் கணினி ஆய்வகங்கள்).
- திறன் வகுப்பறைகள், நூலகங்கள் மற்றும் கலை அறைகள்.
- பசுமை முன்னெடுப்புகளின் ஒருங்கிணைப்பு (நீர் பாதுகாப்பு, கழிவு மறுசுழற்சி, ஆற்றல் திறன் கொண்ட உள்கட்டமைப்பு).
- மதிப்பீடு: கருத்தியல் புரிதல் மற்றும் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளில் அறிவைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும் திறன் அடிப்படையிலான மதிப்பீடுகள்.
- உள்ளடக்கம்: கற்றல் சூழல் உள்ளடக்கியதாக இருப்பதை உறுதி செய்தல், அனைத்து மாணவர்களுக்கும் அணுகலை உறுதி செய்தல், மற்றும் உடல் உள்கட்டமைப்பு மற்றும் வள இடைவெளிகளை நிவர்த்தி செய்தல்.
நிதி மற்றும் நிதி ஆதரவு:
- PM SHRI திட்டத்திற்கான நிதியானது 60:40 விகிதத்தின் அடிப்படையில், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சட்டமன்றம் இல்லாத ஒன்றியப் பிரதேசங்கள் தவிர, மற்ற மத்திய மற்றும் மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப் படுகிறது.
- வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இமயமலை மாநிலங்களுக்கு (J&K உட்பட), பங்கு 90:10 ஆகும்.
- சட்டமன்றம் இல்லாத ஒன்றியப் பிரதேசங்கள் 100% மத்திய நிதியைப் பெறுகின்றன.
திட்டத்தின் காலம்:
- இத்திட்டம் 2022-23 முதல் 2026-27 வரை செயல்படும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
- இந்தக் கால கட்டத்திற்குப் பிறகு, இந்தப் பள்ளிகளால் அடையப்பட்ட அளவுகோல்களைப் பராமரித்து நிலை நிறுத்துவது மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்களின் பொறுப்பாகும்.
கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு:
- பள்ளிகளுக்கான தர மதிப்பீட்டுக் கட்டமைப்பானது (SQAF) PM SHRI பள்ளிகளின் செயல்திறன் மற்றும் முன்னேற்றத்தை தொடர்ந்து மதிப்பிடும், உயர் தரங்கள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்கிறது.
பள்ளிகள் சவால் பயன்முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகின்றன, இதில் பின்வருவன அடங்கும்:
- நிலை 1: மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடுதல்.
- நிலை 2: UDISE+ தரவைப் பயன்படுத்தித் தகுதியான பள்ளிகளை அடையாளம் காணுதல்.
- நிலை 3: சில நிபந்தனைகளின் அடிப்படையில் பள்ளிகளுக்கு இடையில் போட்டியிடும் சவால்.
- மாநில / ஒன்றியப் பிரதேச அதிகாரிகள், KVs, JNVs மற்றும் அமைச்சகத்தின் செயலாளரின் தலைமையிலான இறுதித் தேர்வுக் குழு ஆகியவற்றின் சரிபார்ப்பு.
கூடுதல் தகவல்கள்:
- தேர்வுச் செயல்முறை: உள்கட்டமைப்பு, கற்பித்தல் தரம் மற்றும் NEP 2020 கொள்கைகளுடன் சீரமைத்தல் உள்ளிட்ட முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில் போட்டியை உள்ளடக்கிய கடுமையானச் செயல்முறையின் மூலம் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
- திட்டத்திற்குப் பிந்தையப் பொறுப்பு: திட்டம் முடிவடைந்த பிறகு, இந்தப் பள்ளிகளால் நிறுவப் பட்ட அளவுகோல்களைப் பராமரித்தல் மற்றும் உருவாக்குவதற்கான பொறுப்பை மாநிலங்கள்/ ஒன்றியப் பிரதேசங்கள் ஏற்கும்.
- தாக்கம்: சமூகத்திற்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிக்கும் திறன் கொண்ட, நன்கு வரையறுக்கப் பட்ட, உற்பத்தித் திறன் கொண்ட குடிமக்களை உருவாக்கும் இறுதி நோக்கத்துடன், இந்தியா முழுவதும் பிரதிபலிக்கக் கூடிய மாதிரியிலான கல்விச் சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் குறிக்கோள் ஆகும்.
-------------------------------------