இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் (SDG 6) - பாகம் 19
(For English version to this please click here)
அம்ருத் 2.0
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் (MoHUA).
நோக்கங்கள்:
- சுமார் 4,800 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (ULBs), 2.68 கோடி குழாய் இணைப்புகள் வழங்கப் படுவதை உறுதி செய்வதன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் 100% நீரினை பரவலாக வழங்குதல்.
- 2.64 கோடி கழிவுநீர்/ கழிவுநீர்த் தொட்டி இணைப்புகளை வழங்கும் 500 அம்ருத் நகரங்களில் 100% கழிவுநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மையை உறுதி செய்தல்.
- சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரின் மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டை வலியுறுத்துவதன் மூலம் வட்ட பொருளாதாரத்தை ஊக்குவித்தல்.
- நீர்நிலைகளின் பாதுகாப்பு மற்றும் புத்துயிர் மற்றும் நிலத்தடி நீர் மீளுருவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல்.
- நீர் மேலாண்மையில் தரவுசார் தலைமையிலான நிர்வாகத்தை செயல்படுத்துதல்.
- தொழில்நுட்பத் துணைத் திட்டத்தின் மூலம் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதை ஊக்குவித்தல்.
- நகரங்களுக்கு இடையே போட்டியை ஊக்குவிக்கவும், நீர் விநியோகம் மற்றும் கழிவு நீர் மறுபயன்பாட்டை மதிப்பிடவும் பே ஜல் சர்வேக்சனை நடத்துதல்.
- கழிவுநீர் ஆறுகளில் கலப்பதைத் தடுத்தல், நகரங்களில் நீர் பாதுகாப்பிற்கு வழிவகுத்தல், கழிவுநீர் மற்றும் கழிவுநீர்த் தொட்டி மேலாண்மைக்குத் தீர்வு காணுதல்.
பயனாளிகள்:
- ஏறத்தாழ 4,800 நகரங்கள் மற்றும் நகரங்களில் உள்ள நகர்ப்புறக் குடியிருப்பாளர்கள், சட்டப் பூர்வமாக நகரங்களில் உள்ளவர்களை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.
- மேம்படுத்தப்பட்ட நீர் வழங்கல், கழிவுநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை மூலம் 10.5 கோடி மக்கள் பயனடைவார்கள் என இதன் மூலம் எதிர்பார்க்கப் படுகிறது.
- செயல்பாட்டு நீர் குழாய் இணைப்புகளைப் பெறும் குடும்பங்கள்.
- நகரங்கள் மற்றும் நகரங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு, நீர்நிலைகளைப் புத்துயிர் பெற வைத்தல் மற்றும் பூங்காக்களை மேம்படுத்துவதற்கான உள்கட்டமைப்பைப் பெறுகின்றன.
தகுதி அளவுகோல்கள்:
- இந்தத் திட்டம் இந்தியாவில் உள்ள சட்டப்பூர்வ நகரங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை (ULBs) நோக்கமாகக் கொண்டுள்ளது.
- போதிய நீர் மற்றும் கழிவுநீர் உள்கட்டமைப்பு இல்லாத நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULBs) முக்கியமாக கவனம் செலுத்தப்படும் பகுதிகளாகும்.
பலன்கள்:
- ULBகளின் அனைத்து வீடுகளிலும் 100% செயல்பாட்டு நீர் குழாய் இணைப்புகள் வழங்கப் படுகிறது.
- 500 AMRUT நகரங்களில் கழிவுநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மைப் பாதுகாப்பினை அளிக்கிறது.
- ஆறுகளில் கழிவுநீர் வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் நீர்ப் பாதுகாப்பு அதிகரித்துள்ளது.
- சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் நிலையான நீரியல் நடைமுறைகளை மேம்படுத்த முடிகிறது (மொத்த நீர் தேவையில் 20% மற்றும் தொழில்துறை தேவையில் 40%).
- சிறந்த கழிவுநீர் மேலாண்மை, சுத்தமான நீர் வழங்கல் மற்றும் புத்துயிர் பெற்ற நீர்நிலைகள் மூலம் நகர்ப்புற வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துகிறது.
- நகர்ப்புற வளர்ச்சியின் ஒரு பகுதியாக, பசுமையான இடங்கள் மற்றும் பூங்காக்களை உருவாக்குகிறது.
- நகரங்கள் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவின் மூலம் பயனடைகின்றன, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பொது-தனியார் கூட்டாண்மைகளை ஊக்குவிக்கின்றன.
கூடுதல் தகவல்கள்:
- 100 நாள் நிகழ்ச்சி நிரலில் 500 MLD அளவில் கழிவுநீர்ச் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் 150 MLD நீர் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்குவதில் கவனம் செலுத்துகிறது.
- நீர் வழங்கல், கழிவுநீர்ச் சுத்திகரிப்பு மற்றும் நீர்நிலைகள் புத்துயிர் பெறுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் அம்ருத் முதல் கட்டத்தின் தற்போதையத் திட்டங்களும், இந்த திட்டத்தில் அடங்கும்.
- AMRUT 2.0 ஆனது வழக்கமானத் தெரு விளக்குகளை LED விளக்குகளுடன் மாற்றுதல், ஆற்றல் நுகர்வு மற்றும் CO2 உமிழ்வைக் குறைத்தல் போன்ற ஆற்றல் சார்ந்த திறனுள்ள நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஊக்குவிப்பதை உள்ளடக்கியது.
பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாயி யோஜனா (PMKSY)
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- விவசாய அமைச்சகம்.
- நீர்வள அமைச்சகம்.
- ஊரக வளர்ச்சி அமைச்சகம்.
நோக்கங்கள்:
- நீர்ப்பாசன முதலீடுகளின் ஒருங்கிணைப்பை உறுதி செய்தல் மற்றும் விவசாயத்திற்கான நீர் அணுகலை மேம்படுத்துதல்.
- 'ஹர் கெத் கோ பானியை' (ஒவ்வொரு பண்ணைக்கும் நீர்) அடைய பாசனப் பரப்பை அதிகரித்தல்.
- தகுந்த தொழில்நுட்பங்கள் மூலம் நீர் ஆதாரங்களைத் திறம்பட பயன்படுத்தி நீர் வீணாவதைக் குறைத்தல்.
- துல்லியமான நீர்ப்பாசனம் போன்ற நீர் சேமிப்புத் தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதை ஊக்குவித்தல்.
- நீர்நிலை மறுபயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் நிலையான நீர் பாதுகாப்பு வழிமுறைகளைச் செயல்படுத்துதல்.
- மண் மற்றும் நீர்ப் பாதுகாப்பு, நிலத்தடி நீர் மீளுருவாக்கம் மற்றும் வாழ்வாதாரத்திற்காக மானாவாரி பகுதிகளை ஒருங்கிணைத்தல்.
பயனாளிகள்:
- நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், குறிப்பாக நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள், மேம்பட்ட நீர்ப் பாசன வசதிகள் மற்றும் நீர்ப் பாதுகாப்பு முன்னெடுப்புகளால் பயனடைகின்றனர்.
தகுதி அளவுகோல்கள்:
- இந்திய விவசாயிகள், குறிப்பாக விவசாய நடவடிக்கைகளுக்கு நீர்ப் பாசனத்தைச் சார்ந்திருப்பவர்கள்.
பலன்கள்:
- நம்பகமான நீர் வழங்கலுடன் கூடிய அதிகரிக்கப்பட்ட பாசன நிலத்தின் பரப்பளவு.
- மேம்பட்ட நீர் பயன்பாட்டுத் திறன் மற்றும் சிறந்த பயிர் விளைச்சல்.
- மேம்படுத்தப்பட்ட நிலத்தடி நீர் மறுபயன்பாடு மற்றும் நிலையான நீர் மேலாண்மை செயல் முறைகள்.
- சொட்டு நீர்ப் பாசனம் மற்றும் தெளிப்பான் அமைப்புகள் போன்ற நவீன நீர் சேமிப்பு நுட்பங்களைப் பின்பற்றுதல்.
- நீர்நிலை மேலாண்மை மூலம் மேம்படுத்தப்பட்ட மண் ஆரோக்கியம் மற்றும் ஈரப் பதத்திற்கான பாதுகாப்பு.
கூடுதல் தகவல்கள்:
- PMKSY திட்டத்தில் துரிதப்படுத்தப்பட்ட நீர்ப்பாசனப் பயன் திட்டம் (AIBP), ஹர் கெத் கோ பானி (HKKP), மற்றும் ஒரு சொட்டு அதிகப் பயிர் (PDMC) போன்ற கூறுகள் உள்ளன.
- இது 75:25 (வடகிழக்கு மாநிலங்களுக்கு 90:10) மத்திய-மாநில நிதி விகிதத்துடன் சுமார் 22 லட்சம் விவசாயிகளைப் பயனடையச் செய்கிறது.
- நபார்டு வங்கியின் கீழ் 5000 கோடி ரூபாயில் சொட்டு நீர்ப் பாசன நிதியம் உருவாக்கப் பட்டது.
மிஷன் அம்ரித் சரோவர்
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- ஊரக வளர்ச்சி அமைச்சகம்.
- நில வளங்கள் துறை.
- குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை.
- நீர் வளத் துறை.
- பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்.
- வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்.
- பாஸ்கராச்சார்யா தேசிய விண்வெளிப் பயன்பாட்டு மற்றும் புவி சார் தகவலளிப்பு நிறுவனம் (BISAG-N) (தொழில்நுட்ப கூட்டாளர்).
நோக்கங்கள்:
- இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 75 அமிர்த சரோவர்களை (நீர்நிலைகள்) கட்டுதல் / புத்துயிர் பெறச் செய்தல்.
- கிராமப்புறங்களில் நிலவும் நீர் பற்றாக்குறையை போக்குதல்.
- உள்ளூர் மட்டத்தில் நீர் நிலைத் தன்மையை உறுதி செய்தல்.
- நீரினை சேமித்தல், மக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல்.
- நீர்நிலைகளில் இருந்து தோண்டப்படும் மண்ணை உள்கட்டமைப்புத் திட்டங்களை மேம்படுத்த பயன்படுத்துதல்.
பயனாளிகள்:
- இந்தியா முழுவதும் குறிப்பாகத் தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மாவட்டங்களில் உள்ள கிராமப்புறச் சமூகங்கள்.
பலன்கள்:
- கிராமப்புறங்களுக்கு நிலையான நீர் ஆதாரத்தை வழங்குகிறது.
- நீர்ப் பாதுகாப்பு முயற்சிகளில் சமூகத்தின் பங்களிப்பை ஊக்குவிக்கிறது.
- அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட மண்ணைப் பயன்படுத்தி உள்ளூர் உள்கட்டமைப்புத் திட்டங்களை ஆதரிக்கிறது.
- நீர் பாதுகாப்பைப் பலப்படுத்துகிறது மற்றும் கிராமப்புறங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது.
கூடுதல் தகவல்கள்:
- சுதந்திரத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் வகையில் இந்தியாவின் "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் தொடங்கப் பட்டது.
- 1 லட்சத்துக்கும் அதிகமான அம்ரித் சரோவர்கள் அடையாளம் காணப்பட்டு, 81,000க்கும் அதிகமான கட்டுமான / புத்துயிர் ஊட்டும் பணிகள் தொடங்கப்பட்டு, 66,000க்கும் மேற்பட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
- இந்த திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் (MGNREGA), பிரதான் மந்திரி கிசான் சம்பாதா யோஜனா மற்றும் மாநிலம் சார்ந்த குறிப்பிட்ட முன்னெடுப்புகள் போன்ற பல்வேறு நிதி மானியங்கள் மற்றும் திட்டங்களைப் பயன்படுத்துகிறது.
- BISAG-N என்பது தொழில்நுட்பக் கூட்டாளியாகும், புவியியல் தரவு மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திட்டத்தின் இலக்குகளை அடையாளம் கண்டு செயல்படுத்துகிறது.
ஜல் சக்தி அபியான்: மழை நீர் சேமிப்புப் பிரச்சாரம் (JSA: CTR) 2024
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- ஜல் சக்தி அமைச்சகம்.
- தேசிய நீர்த் திட்டம்.
- நீர்வளம், நதி மேம்பாடு & கங்கை புத்துயிராக்கத் துறை.
- குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறை.
நோக்கங்கள்:
- நீர் சேமிப்பு மற்றும் நீர் ஆதாரங்களின் நிலையான மேலாண்மையை மேம்படுத்துதல்.
- நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் குடிமக்களின் பங்கேற்பை ஊக்குவித்தல்.
- நீர் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் பெண்களின் முக்கியப் பங்கை வலியுறுத்துதல்.
- வண்டல் மண் அகற்றுதல், செயலிழந்த ஆழ்துளை கிணறுகளுக்குப் புத்துயிர் அளித்தல், புவிசார் குறியிடுதல் நீர்நிலைகள் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் காடு வளர்ப்பு போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்துதல்.
- லடாக் போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் பனி நீர் அறுவடை மற்றும் சிறு ஆறுகள் புத்துயிர் பெறச் சிறப்புக் கவனம் செலுத்துதல்.
பயனாளிகள்:
- கிராமப்புற மற்றும் நகர்ப்புறச் சமூகங்கள், குறிப்பாக பெண்கள், நீர்ப் பாதுகாப்பு முன்னெடுப்புகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- தோராயமாக சுமார் 24 லட்சம் பெண்கள் களச் சோதனைக் கருவிகளை (FTK) பயன்படுத்தி தண்ணீரின் தரத்தைச் சோதிக்கப் பயிற்சி பெற்றுள்ளனர்.
- அடல் பூஜல் யோஜ்னா மற்றும் ஜல் ஜீவன் மிஷன் போன்ற முன்னெடுப்புகளால் கிராமப்புறக் குடும்பங்கள் பயனடைகின்றன.
பலன்கள்:
- மேம்படுத்தப்பட்ட நீர் சேமிப்பு மற்றும் மேலாண்மைச் செயல்முறைகள்.
- நீர் ஆதாரங்கள் தொடர்பான முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்களின் வலிமையான பங்கு.
- புத்துயிர் பெற்ற ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் நீர்நிலைகள் மூலம் நிலத்தடி நீர் பெருகுகிறது.
- நீடித்த நீர் சார்ந்த செயல்முறைகளில் மேம்படுத்தப்பட்ட விழிப்புணர்வு மற்றும் பங்கேற்பு.
- குழாய் நீர் இணைப்புகளுடன் கிராமப்புறக் குடும்பங்களில் சுமார் 75% நிறைவை அடையச் செய்துள்ள வகையில் ஜல் ஜீவன் மிஷன் போன்ற முன்னெடுப்புகள் மூலம் கிராமப்புற நீர் விநியோகத்தில் நேர்மறையான தாக்கம் ஏற்படுத்தி உள்ளது.
கூடுதல் தகவல்கள்:
- நீர் பாதுகாப்பில் பெண்களின் முக்கிய பங்கை எடுத்துக் காட்டுகிற வகையில் 2024 பதிப்பு "நாரி சக்தி சே ஜல் சக்தி" என்ற கருத்துருவில் உள்ளத.
- அடல் பூஜல் யோஜ்னா போன்ற முன்முயற்சிகள் மூலம் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர், இது நீர்வளத் திட்டத்திற்காக கிராமப் பஞ்சாயத்துகளில் பெண்களின் குறைந்தபட்சம் 33% பிரதிநிதித்துவத்தை உறுதி செய்கிறது.
- மழைநீர் சேகரிப்பு, நீர்நிலைகளைப் புவியிடக் குறியீடு செய்தல் மற்றும் நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளின் பட்டியல்களை உருவாக்குதல் போன்ற தலையீடுகளிலும் இந்த பிரச்சாரம் கவனம் செலுத்துகிறது.
- இந்தப் பிரச்சாரமானது, நீர் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதையும், இந்தியா முழுவதும் நிலையான நீர் மேலாண்மை அமைப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட ஜல் சக்தி அபியான் முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாகும்.
அடல் பூஜல் யோஜனா (ABHY)
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
நோக்கங்கள்:
- சமூகப் பங்கேற்பின் மூலம் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மேலாண்மையை மேம்படுத்துதல்.
- திறமையான நீர்ப் பயன்பாடு, நிலத்தடி நீர் மறுபயன்பாடு மற்றும் நிலையான மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்துதல்.
- நீர் பாதுகாப்புத் திட்டங்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் நிலத்தடி நீர் பயன்பாடு தொடர்பாக உள்ளூர்ச் சமூகங்களில் நடத்தை மாற்றத்தை ஊக்குவித்தல்.
- நிலத்தடி நீர் மேலாண்மைக்கான நிறுவனக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு மற்றும் தரவுச் சேகரிப்பு அமைப்புகளை மேம்படுத்துதல்.
பயனாளிகள்:
- தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் உள்ளூர்ச் சமூகங்கள்.
- நிலத்தடி நீர் வள மேலாண்மையில் ஈடுபட்டுள்ள மாநிலங்கள்.
தகுதி அளவுகோல்கள்:
- இந்தத் திட்டம் குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஏழு குறிப்பிட்ட மாநிலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளை இலக்காகக் கொண்டுள்ளது.
பலன்கள்:
- மேம்படுத்தப்பட்ட நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் நீர் ஆதாரங்களைத் திறமையாக பயன்படுத்துதல்.
- சிறந்த நீர் மேலாண்மைக்காக உள்ளூர்ப் பங்குதாரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்குத் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி.
- நிலையான நீர் செயல்முறைகளை (திறமையான நீர்ப்பாசன நுட்பங்கள் போன்றவை) பின்பற்றும் சமூகங்கள் மற்றும் விவசாயிகளுக்கான ஊக்கத் தொகை.
- நீர் பயனர் சங்கங்கள் மற்றும் பஞ்சாயத்து தலைமையிலான முன்னெடுப்புகள் மூலம் நிலத்தடி நீர் மேலாண்மையில் சமூகப் பங்கேற்பு அதிகரித்தது.
- கிராமப் பஞ்சாயத்து அளவில் உள்ளூர்மயமாக்கப்பட்ட நீர்ப் பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல்.
- விரிவான நீர் மேலாண்மை தீர்வுகளை உறுதி செய்வதற்காக, நடந்து கொண்டிருக்கும் பிற அரசாங்கத் திட்டங்களுடன் ஒன்றிணைதல்.
கூடுதல் தகவல்கள்:
- இந்தத் திட்டமானது ஏழு மாநிலங்களில் 78 மாவட்டங்களில் உள்ள 193 தொகுதிகளில் உள்ள 8,353 கிராமப் பஞ்சாயத்துகளை உள்ளடக்கியது.
- இந்தத் திட்டம் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு, நீர்ப் பாதுகாப்புத் திட்டமிடல் மற்றும் தேவைக்கேற்ப மேலாண்மை நுட்பங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட நிலத்தடி நீர் மேலாண்மை செயல்முறைகளில் மாநிலங்களின் சாதனைகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
-------------------------------------