இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் (SDG 7) - பாகம் 22
(For English version to this please click here)
மேற்கூரை சூரிய உற்பத்தித் திட்டம்
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம் (MNRE).
நோக்கங்கள்:
- குடியிருப்புக் கட்டிடங்களுக்கு மின்சார விநியோக அமைப்புடன் இணைக்கப்பட்ட மேற்கூரை சூரிய உற்பத்தி அமைப்புகளை ஊக்குவித்தல்.
- புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த சூரிய மின் உற்பத்தியை ஊக்குவித்தல்.
- சூரிய ஆற்றல் துறையில் தனியார் முதலீடு மற்றும் ஒத்துழைப்பிற்கு ஏற்ற சூழலை உருவாக்குதல்.
- பிரதான மின்சார விநியோக அமைப்புடன் இணைக்கப்படாத தொலைதூரப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குதல், ஆற்றல் அணுகல் மற்றும் மீள்தன்மையை மேம்படுத்துதல்.
பயனாளிகள்:
- குடியிருப்பு நுகர்வோர்.
- மாநில அரசுகள் மற்றும் தனியார் துறை பங்கேற்பாளர்கள்.
- நிறுவல் மற்றும் இணைப்புகளை எளிதாக்கும் மின் விநியோக நிறுவனங்கள் (DISCOMs).
தகுதி அளவுகோல்கள்:
- குடியிருப்புக் கட்டிடங்கள் மற்றும் சமூகங்கள், நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் போன்ற பிற நிறுவனங்கள், மேற்கூரை சூரியத் தகடு நிறுவுவதற்கு தேவையான இடம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
- தனிநபர்கள் தங்கள் உள்ளூர் மின் விநியோக நிறுவனங்கள் அல்லது தேசியத் தளத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட தகுதி அளவுகோல்களை கடைபிடிக்க வேண்டும்.
பலன்கள்:
- மேற்கூரை சூரிய உற்பத்தி நிறுவலுக்கு அமைச்சகத்தால் வழங்கப்படும் மானியங்கள்: 3 kW வரையிலான சூரிய உற்பத்தி அமைப்புகளுக்கு 40% மானியம் மற்றும் 3 kW முதல் 10 kW வரையிலான சூரிய உற்பத்தி அமைப்புகளுக்கு 20% மானியம் வழங்கப்படுகிறது.
- சுயமாக உருவாக்கப்படும் சூரிய ஆற்றல் மூலம் மின் கட்டணமானது குறைக்கப் படுகிறது.
- நிகர அளவீடு மூலம் சூரிய மின் உற்பத்தி அமைப்பால் செலுத்தப்படும் அதிகப்படியான ஆற்றலில் இருந்து வருமானம் பெறலாம்.
- ஆற்றல் சுதந்திரம் மற்றும் மையப்படுத்தப்பட்ட மின் கட்டங்களை நம்பியிருப்பதைக் குறைத்தல்.
- சூரிய மின் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற பொருளாதார நன்மைகள்.
கூடுதல் தகவல்கள்:
- ஆரம்பத்தில் 2022 ஆம் ஆண்டுக்குள் 40 ஜிகாவாட் மேற்கூரை சூரிய உற்பத்தித் திறனை அடைவதை இலக்காகக் கொண்ட இந்த இலக்கானது 2026 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட உள்ளது.
- இத்திட்டம் மாநிலத் தலைமை முகமைகள் மற்றும் மின் விநியோக நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப் படுகிறது.
- குறிப்பிடத்தக்கச் செயல்திறன் கொண்ட மாநிலங்களில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகியவை அடங்கும், அதே நேரத்தில் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகியவை குறைவான செயல்திறன் கொண்டவை.
- மேற்கூரை சூரிய உற்பத்தி அமைப்பானது நிலையான வளர்ச்சிக்குப் பங்களிக்கிறது மற்றும் 2030 ஆம் ஆண்டளவில் 500 GW புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை அடைவதாக COP26 மாநாட்டில் செய்யப்பட்ட உறுதிமொழி போன்ற உலகளாவியக் கடமைகளை இந்தியா பூர்த்தி செய்ய உதவுகிறது.
இந்தியாவில் முக்கிய கூடுதல் சூரிய ஆற்றல் திட்டங்கள்
கிசான் உர்ஜா சுரக்சா ஏவம் உத்தான் மஹாபியன் (PM-KUSUM)
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம் (MNRE).
நோக்கங்கள்:
- மின்சார விநியோக அமைப்பினால் இணைக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின் நிலையங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் தண்ணீர்ப் பம்புகளை ஊக்குவித்தல்.
- விவசாயத்தில் சூரிய மின் உற்பத்தித் திறனை அதிகரித்தல்.
பயனாளிகள்:
- விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைகள்.
தகுதி அளவுகோல்கள்:
- விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள்.
பலன்கள்:
- நீர்ப் பாசனத்திற்கான சூரிய ஆற்றல் மற்றும் மின்சாரக் கட்டமைப்பினைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல்.
- உபரி சூரிய ஆற்றல் விற்பனை மூலம் வருமானம்.
மிகப் பெரும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின் பூங்காக்களை மேம்படுத்துவதற்கான திட்டம்
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம் (MNRE).
நோக்கங்கள்:
- புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகரிக்க பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்காக்களை உருவாக்குதல்.
பயனாளிகள்:
- ஆற்றல் மேம்பாட்டாளர்கள் மற்றும் ஆற்றல் நுகர்வோர்.
தகுதி அளவுகோல்கள்:
- மின் உற்பத்தி நிறுவனங்கள்.
பலன்கள்:
- பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி.
- ஆற்றல் பாதுகாப்பு மற்றும் குறைக்கப்பட்ட பரிமாற்றச் செலவுகள்.
தேசிய காற்று-சூரியஒளி கலப்புக் கொள்கை
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம் (MNRE).
நோக்கங்கள்:
- காற்று-சூரிய கலப்பு அமைப்புகளை ஊக்குவித்தல்.
- நிலம், வளங்கள் மற்றும் பரிமாற்ற உள்கட்டமைப்பு ஆகியவற்றின் பயன்பாட்டை மேம்படுத்துதல்.
பயனாளிகள்:
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டாளர்கள்.
தகுதி அளவுகோல்கள்:
- கலப்பின அமைப்புகளை நிறுவுவதற்கான தொழில்நுட்ப மற்றும் நிதித் திறன்களைக் கொண்ட மேம்பாட்டாளர்கள்.
பலன்கள்:
- திறமையான புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி.
- மின் உற்பத்தியில் குறைக்கப்பட்ட மாறுபாடு, மின் உற்பத்தி அமைப்பின் நிலைத் தன்மைக்குப் பங்களிக்கிறது.
அடல் ஜோதி யோஜனா (AJAY)
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம்.
நோக்கங்கள்:
- குறைந்த மின்சார விநியோக அமைப்பு அணுகல் உள்ள பகுதிகளில் சூரிய ஆற்றலால் இயங்கும் தெரு விளக்குகளை நிறுவுதல்.
பயனாளிகள்:
- பின்தங்கிய பகுதிகளில் உள்ள உள்ளூர் அரசாங்கங்கள் மற்றும் சமூகங்கள்.
தகுதி அளவுகோல்கள்:
- மின்சார விநியோக அமைப்பு இல்லாத கிராமப்புறங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் அல்லது சமூகங்கள்.
பலன்கள்:
- கிராமப்புற மற்றும் பகுதி மின்சார விநியோக அமைப்பு உள்ள பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட ஒளி மற்றும் பாதுகாப்பு.
- பின்தங்கிய பகுதிகளில் சூரிய சக்தியை ஊக்குவிக்கிறது.
சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி (ISA)
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம் (MNRE).
நோக்கங்கள்:
- சூரிய ஆற்றலை மேம்படுத்துதல் மற்றும் சூரிய ஆற்றல் வளம் கொண்ட நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை எளிதாக்குதல்.
- உலகெங்கிலும் உள்ள சூரிய மின்சக்தி திட்டங்களுக்கான மூலங்களைத் திரட்டுதல்.
பயனாளிகள்:
- சூரிய ஆற்றல் நிறைந்த நாடுகள் மற்றும் சர்வதேச சூரிய ஆற்றல் மேம்பாட்டாளர்கள்.
தகுதி அளவுகோல்கள்:
- கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடையில் அமைந்துள்ள நாடுகள்.
பலன்கள்:
- சூரிய ஆற்றல் வளர்ச்சியில் உலகளாவிய ஒத்துழைப்பு.
- சூரிய ஆற்றலில் சிறந்த செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பகிர்தல்.
ஒரு சூரியன், ஓர் உலகம், ஒரு கட்டமைப்பு (OSOWOG)
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம்.
நோக்கங்கள்:
- உலகளாவிய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சூரிய ஆற்றல் வலையமைப்பை நிறுவுதல்.
பயனாளிகள்:
- உலகம் முழுவதும் சூரிய ஆற்றல் பயன்படுத்துபவர்கள்.
தகுதி அளவுகோல்கள்:
- உலகளாவிய சூரிய ஆற்றல் மின்சார விநியோக அமைப்புடன் இணைக்க விரும்பும் நாடுகள்.
பலன்கள்:
- சூரிய ஆற்றல் வளங்களின் உலகளாவிய பகிர்வு, செலவுகளைக் குறைத்தல் மற்றும் ஆற்றல் பாதுகாப்பை அதிகரித்தல்.
சூர்யமித்ரா திறன் மேம்பாட்டுத் திட்டம்
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம் (MNRE).
நோக்கங்கள்:
- நிறுவல் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட சூரிய ஆற்றல் தொடர்பான திறன்களில் கிராமப்புற இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்தல்.
பயனாளிகள்:
- சூரிய ஆற்றல் துறையில் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள்.
தகுதி அளவுகோல்கள்:
- சூரிய சக்தியில் ஆர்வம் கொண்ட கிராமப்புற இளைஞர்கள்.
பலன்கள்:
- வளர்ந்து வரும் சூரிய ஆற்றல் துறையில் திறன் மேம்பாடு.
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரித்தன.
பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம் (MNRE).
நோக்கங்கள்:
- 1 கோடி வீடுகளில் மேற்கூரை சூரிய ஆற்றலால் இயங்கும் மின்சார அமைப்புகளை நிறுவுதல்.
பயனாளிகள்:
- இந்தியா முழுவதும் உள்ள குடியிருப்புகள்.
தகுதி அளவுகோல்கள்:
- சோலார் தகடுகளுக்கான மேற்கூரை இடவசதி உள்ள வீட்டு உரிமையாளர்கள்.
பலன்கள்:
- நேரடி மின் உற்பத்தி.
- நிறுவலுக்கான நிதி உதவி.
பசுமை ஆற்றல் வழித்தடம் (GEC)
தொடங்கப்பட்ட ஆண்டு:
- கட்டம் 1: 2015-16.
- கட்டம் 2: 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டது, அது 2025-26 ஆண்டு வரை தொடரவுள்ளது.
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- இந்திய மின்சார அமைப்புக் கழகம் (POWERGRID).
- மாநிலத்துக்குள் பரிமாற்றத்திற்கான மாநில பரிமாற்றப் பயன்பாடுகள் (STUs).
நோக்கங்கள்:
- மின்சார விநியோக அமைப்பு ஒருங்கிணைப்பு: புதுப்பிக்கத்தக்க ஆற்றலை (முக்கியமாக சூரிய மற்றும் காற்று) இந்தியாவின் மின்சார விநியோக அமைப்பில் உள்ள வழக்கமான மின் நிலையங்களுடன் ஒருங்கிணைத்தல்.
- ஆற்றல் வெளியேற்றம்: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளம் உள்ள மாநிலங்களில் இருந்து ஆற்றல் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வெளியேற்றுவதை எளிதாக்குகிறது.
- புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிக்கவும்: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் உட்பட, 2030 ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் நிறுவப்பட்ட புதைபடிவ எரிபொருள் திறன் இலக்கை அடைதல்.
- மின்சார விநியோக அமைப்புத் திறன் மேம்பாடு: மின்சார விநியோக மேலாண்மை அமைப்புகளை மேம்படுத்துதல், திறன் மற்றும் நிலையான மற்றும் நம்பகமான ஆற்றல் பரிமாற்றத்தை உறுதி செய்தல்.
- செயல்திறனை அதிகரித்தல்: இடைவிடாத மற்றும் மாறக்கூடிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களுக்கு இடமளிக்கும் வகையில் தேசிய மின் கட்டத்தின் செயல்திறனை மேம்படுத்துதல்.
பயனாளிகள்:
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டாளர்கள்: உருவாக்கப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் ஒருங்கிணைப்பு மற்றும் வெளியேற்றத்தை உறுதி செய்கிறது.
- ஆற்றல் குறைபாடுள்ள பகுதிகளில் உள்ள நுகர்வோர்: புதுப்பிக்கத்தக்க வளம் உள்ள பகுதிகளிலிருந்து ஆற்றல் குறைபாடுள்ள பகுதிகளுக்கு உபரி புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மாற்றுவதன் மூலம் நிலையான 24x7 மின்சாரத்தை வழங்குகிறது.
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கொண்ட மாநிலங்கள்: குஜராத், தமிழ்நாடு, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள், ஆற்றல் வெளியேற்றத்திற்கான உள்கட்டமைப்பிலிருந்துப் பயனடைகின்றன.
- சுற்றுச்சூழல்: சுத்தமான ஆற்றலை ஊக்குவிப்பதன் மூலம் கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் பங்களிக்கிறது.
தகுதி அளவுகோல்கள்:
- கணிசமான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறன் கொண்ட மாநிலங்கள் (எ.கா., குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம்).
- ஆற்றல் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகள் பசுமை ஆற்றல் வழித்தடத்தின் மூலம் பரிமாற்றம் செய்யப் படும் ஆற்றலால் பயனடைகின்றன.
பலன்கள்:
- நிலையான வளர்ச்சி: கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து, சுத்தமான மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது.
- ஆற்றல் பாதுகாப்பு: இந்தியா முழுவதும் நம்பகமான மற்றும் சீரான ஆற்றல் விநியோகத்தை உறுதி செய்வதன் மூலம் ஆற்றல் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
- வேலைவாய்ப்பு உருவாக்கம்: கட்டுமானம், நிறுவுதல் மற்றும் உள்கட்டமைப்பின் பராமரிப்பு ஆகியவற்றில் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
- திறமையான மின்சார விநியோகம்: சிறந்த செயல்திறனுக்காக HVDC (உயர் மின்னழுத்த நேரடி மின்னோட்டம்) போன்ற மேம்பட்ட மின்சார விநியோகம் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது.
- காலநிலை மாற்றத்தைத் தணித்தல்: புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலமும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதன் மூலமும் இந்தியாவின் காலநிலை உறுதிப்பாட்டிற்குப் பங்களிக்கிறது.
- பொருளாதார வளர்ச்சி: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையின் வளர்ச்சியைத் தூண்டி, சாதகமான முதலீட்டுச் சூழலை உருவாக்குகிறது.
கூடுதல் தகவல்கள்:
திட்டச் செலவு:
- கட்டம் 1: ₹10,041 கோடி (மத்திய அரசு: 40%, மாநில பங்கு: 20%, KfW கடன் (ஜெர்மனி): 40%).
- கட்டம் 2: ₹12,000 கோடி (மத்திய அரசு: 33%).
பரிமாற்ற வலையமைப்பு:
- கட்டம் 1: 9,700 கிமீ போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் 24 ஜிகாவாட் வெளியேற்ற 22,600 MVA அளவைக் கையாளும் திறன் கொண்ட துணை மின் நிலையங்கள்.
- கட்டம் 2: 10,500 கிமீ போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் 20 ஜிகாவாட் வெளியேற்ற 27.5 GVA அளவைக் கையாளும் திறன் கொண்ட துணை மின் நிலையங்கள்.
- மேம்பட்ட தொழில்நுட்பங்கள்: கட்டம் ஒருங்கிணைப்பு மற்றும் நிலைத் தன்மையை மேம்படுத்த HVDC வழித்தடங்கள் மற்றும் திறன் சார்ந்த மின்சார விநியோக அமைப்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.
- ஆற்றல் குறைபாடுள்ள பகுதிகள்: உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற ஆற்றல் பற்றாக்குறை மாநிலங்கள் பசுமை வழித்தடங்கள் மூலம் அனுப்பப் படும் உபரி புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் பயனடைகின்றன.
பசுமை ஆற்றல் வழித் தடத்தின் கட்டங்கள்:
- கட்டம் 1 (2015-2022):
- இலக்கு: குஜராத், தமிழ்நாடு, ராஜஸ்தான், கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து 24 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வெளியேற்றல்.
- நிறைவு: ஆரம்பத்தில் 2020 ஆம் ஆண்டிற்கு அமைக்கப் பட்டு, கோவிட் - 19 தாமதம் காரணமாக 2022 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப் பட்டது.
- கட்டம் 2 (2021-2026):
- இலக்கு: ஏழு மாநிலங்களிலிருந்து (குஜராத், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம்) 20 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வெளியேற்றல்.
- முக்கிய அம்சம்: மேம்படுத்தப்பட்ட மின்சார விநியோக அமைப்புத் திறன் மற்றும் விரிவாக்கப்பட்ட போக்குவரத்து வழித்தடங்களுடன், கட்டம் 1 என்பதில் தொடங்கப்பட்ட பணியானது தொடர்கிறது.
முக்கியத்துவம்:
- ஆற்றல் பாதுகாப்பு: வளர்ந்து வரும் ஆற்றல் தேவையை பூர்த்தி செய்து, இந்தியாவிற்கு நீண்ட கால ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
- புதைபடிவ எரிபொருள் சார்பு குறைப்பு: பழைய, மாசுபடுத்தும் புதைபடிவ எரிபொருள் மின் நிலையங்களைப் படிப்படியாக அகற்ற உதவுவதோடு, காற்று மாசுபாட்டைக் குறைக்கிறது.
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களின் உற்பத்தியில் உலகளாவிய தலைமைத்துவம்: இந்தியாவை 2030 ஆம் ஆண்டிற்குள் 450 GW நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றலை இலக்காகக் கொண்டு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் முன்னணியில் வைக்க செயல்படுகிறது.
- இந்தியாவின் காலநிலை இலக்குகளை ஆதரிக்கிறது: கணிசமான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை அடைவதன் மூலம் பாரீஸ் ஒப்பந்தம் மற்றும் COP 26 ஆகியவற்றில் இந்தியாவின் உறுதிப்பாட்டிற்குப் பங்களிக்கிறது.
GEC தொடர்பான முக்கிய முன்னெடுப்புகள்:
- ஒரு சூரியன், ஓர் உலகம், ஒரு கட்டமைப்பு (OSOWOG): உலகளாவியப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை இணைக்க COP 26 மாநாட்டில் தொடங்கப்பட்ட ஒரு சர்வதேச முயற்சியாகும்.
- தேசிய சூரிய ஆற்றல் திட்டம், சூரிய ஆற்றலால் இயங்கும் பூங்காத் திட்டம், தேசிய காற்று-சூரிய ஒளி கலப்புக் கொள்கை மற்றும் சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி: இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டை ஊக்குவிக்கிறது.
- PM-KUSUM, அடல் ஜோதி யோஜனா மற்றும் சூர்ய மித்ரா திறன் மேம்பாட்டுத் திட்டம்: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் விரிவாக்கத்தை ஆதரிக்கும் துணைத் திட்டங்கள் ஆகும்.
-------------------------------------