இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் (SDG 7) - பாகம் 23
(For English version to this please click here)
தேசிய உயிரி ஆற்றல் திட்டம்
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம் (MNRE).
நோக்கங்கள்:
- ஆற்றல் மீட்புக்காக உபரி உயிரி வளங்கள், கால்நடைச் சாணம் மற்றும் தொழில்துறை / நகர்ப்புற உயிரிக் கழிவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல்.
- உயிரி எரிவாயு, அழுத்தப்பட்ட உயிரி இயற்கை எரிவாயு, மின் உற்பத்தி நிலையங்கள், உயிரி வளங்கள் அடிப்படையிலான இணை மின் நிலையம் மற்றும் உயிரி எரிவாயு ஆலைகள் போன்ற உயிரி ஆற்றல் ஆலைகளை அமைப்பதை ஆதரித்தல்.
- கழிவுகளை வளமாகவும், ஆற்றலாகவும் மாற்றுவதன் மூலம் கழிவுகளைக் குறைத்து வட்டப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்.
- கிராமப்புறங்களில் உயிரி எரிவாயுப் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் கிராமப்புற வளர்ச்சிக்குப் பங்களித்தல்.
- கார்பன் வெளியேற்றம் மற்றும் மாசுபாட்டை குறைத்தல்.
பயனாளிகள்:
- தொழிற்சாலைகள், நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறக் குடும்பங்கள் உயிரி ஆற்றல் தொடர்பான திட்டங்களை அமைக்கலாம்.
- விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் கிராமப்புற சமூகங்கள்.
- கழிவு - ஆற்றல் திட்டங்கள், உயிரி உற்பத்தி மற்றும் உயிர்வாயு உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள்.
தகுதி அளவுகோல்கள்:
- ஆற்றல் மீட்புத் திட்டங்களை (உயிரி எரிவாயு, அழுத்தப்பட்ட உயிரி இயற்கை எரிவாயு, மின் உற்பத்தி நிலையங்கள் உட்பட) அமைக்க விரும்பும் திட்ட உருவாக்குநர்கள், தொழில் முனைவோர் மற்றும் தொழிற்சாலைகள்.
- குடும்பம் அல்லது நடுத்தர அளவிலான உயிரி எரிவாயு ஆலைகளை அமைப்பதற்கு தகுதியுடைய கிராமப்புற குடும்பங்கள் மற்றும் சமூகங்கள்.
- உயிரி நிறை இழுவிசைக் கட்டிகள் (பயோமாஸ் ப்ரிக்வெட்டுகள்) / குறுணைகள் மற்றும் கரும்புச் சக்கையில் இருந்து அல்லாத மின் நிலைய அமைப்புத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்கள்.
பலன்கள்:
- உயிரி ஆற்றல் திட்டங்களை அமைப்பதற்கு மத்திய நிதி உதவி (CFA) மூலம் நிதி உதவி.
- குறைக்கப்பட்ட மூலதனச் செலவு / கடன்களுக்கான வட்டி, திட்டங்களை மேலும் சாத்தியமாக்குகிறது.
- தூய்மையான ஆற்றல் ஆதாரங்களை ஊக்குவித்தல் மற்றும் கார்பன் உபயோகத்தைக் குறைத்தல்.
- கழிவு மேலாண்மை மற்றும் மேம்படுத்தப்பட்ட கிராமப்புற வாழ்வாதாரத்திற்கான பங்களிப்பு.
- ஸ்வச் பாரத் திட்டம் (கிராமப்புறம்) மற்றும் கிராமப்புற தூய்மை முயற்சிகளுக்கு ஆதரவு.
கூடுதல் தகவல்கள்:
மூன்று துணைத் திட்டங்கள்:
- கழிவிலிருந்து ஆற்றல் உருவாக்க மாற்றத் திட்டம்: நகர்ப்புற, தொழில்துறை மற்றும் விவசாயக் கழிவுகளில் இருந்து ஆற்றல் உற்பத்திக்கு வழி வகுக்கிறது.
- உயிரி வளங்கள் திட்டம்: ப்ரிக்வெட்டுகள் / குறுணைகள் உற்பத்தி மற்றும் உயிரி அடிப்படையிலான மின் உற்பத்தியை ஆதரிக்க.
- உயிர் எரிவாயுத் திட்டம்: கிராமப்புறங்களில் உயிரி எரிவாயு ஆலைகளை அமைப்பதற்கு உதவுதல்.
- உயிரி உர்ஜா மற்றும் உயிரி எரிவாயுத் தளங்களில் பதிவு மற்றும் CFA மானியத்திற்கான விண்ணப்பங்களுக்காகத் தொடங்கப் பட்டுள்ளன.
- கழிவு மேலாண்மை மற்றும் மாற்றுப் போக்குவரத்துக்கான GOBAR-Dhan மற்றும் SATAT போன்ற பிற அரசாங்க முன்னெடுப்புகளுடன் இத்திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.
- இந்தத் திட்டம் நிதியாண்டு 2021-22 முதல் 2025-26 ஆம் நிதியாண்டு வரை இயங்கும்.
தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் (NGHM)
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம் (MNRE).
நோக்கங்கள்:
- இந்தியாவைப் பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் வழித் தோன்றல்களின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக நிறுவுதல்.
- 2030 ஆம் ஆண்டுக்குள் பசுமை ஹைட்ரஜனை ஆண்டுக்கு 5 மில்லியன் டன்கள் உற்பத்தித் திறனை அடைதல்.
- ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் உள்கட்டமைப்பு மூலம் பசுமை ஹைட்ரஜன் சுற்றுச்சூழலின் வளர்ச்சியை எளிதாக்குதல்.
- பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்தி எஃகு, போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் மின் உற்பத்தி போன்ற முக்கியத் துறைகளை கார்பனேற்றம் செய்தல்.
- புதைபடிவ எரிபொருள் இறக்குமதியில் இந்தியா பிற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, உலகளாவியத் தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்குப் பங்களித்தல்.
பயனாளிகள்:
- எஃகு, போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, உரம் மற்றும் மின் உற்பத்தித் துறைகள் போன்ற ஹைட்ரஜனைப் பயன்படுத்தும் தொழில்கள்.
- ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள்.
- பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர், உற்பத்தியாளர்கள் மற்றும் நிறுவனங்கள்.
- மாநில மற்றும் பிராந்திய அரசாங்கங்கள் பசுமை ஹைட்ரஜன் மையங்களை உருவாக்குகின்றன.
- பரவலாக்கப்பட்ட எரிசக்திப் பயன்பாடுகளால் விவசாயிகள் மற்றும் கிராமப்புறங்கள் பயனடைகின்றன.
தகுதி அளவுகோல்கள்:
- மின்பகுப்புகள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பொது மற்றும் தனியார் நிறுவனங்கள்.
- தகுதியுள்ளப் பங்கேற்பாளர்கள் குறிப்பிட்ட தரம் மற்றும் செயல்திறன் அளவுகோல்களை உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு இணங்க வேண்டும்.
- SIGHT திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் பணி நோக்கங்கள் மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்புகளுடன் இணைக்கப்பட வேண்டும்.
பலன்கள்:
- இந்தியா 6 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது மற்றும் ரூ. 8 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை 2030 ஆம் ஆண்டிற்குள் ஈர்க்கவுள்ளது.
- பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க கரியமில நீக்கம் மற்றும் சுமார் 50 MMTக்கும் அதிகமான வருடாந்திரப் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைத்தல்.
- புதைபடிவ எரிபொருள் இறக்குமதியில் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் குறைப்பு.
- பசுமை ஹைட்ரஜன் மையங்களை நிறுவுதல் மற்றும் பெரிய அளவிலான உள்கட்டமைப்பை உருவாக்குதல்.
- பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா மற்றும் பசுமை மெத்தனால் போன்ற வழித் தோன்றல்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்குதல்.
கூடுதல் தகவல்:
இந்தத் திட்டத்திற்கு ரூ. 19,744 கோடியில் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்.
- கட்டம் I (2022-23 முதல் 2025-26 வரை): பசுமை ஹைட்ரஜனுக்கான தேவை மற்றும் அளிப்பை உருவாக்குவதில் குறிப்பாகச் சுத்திகரிப்பு நிலையங்கள், உரங்கள் மற்றும் நகர எரிவாயு போன்ற தற்போதுள்ள துறைகளில் கவனம் செலுத்துகிறது.
- இரண்டாம் கட்டம் (2026-27 முதல் 2029-30 வரை): எஃகு, போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற புதிய துறைகளில் விரிவாக்கம்.
- இந்தத் திட்டம் நகர எரிவாயு விநியோக வலையமைப்புகள் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் கலன் பேருந்துகளில் ஹைட்ரஜன் கலப்பு போன்ற சோதனைத் திட்டங்களை உள்ளடக்கியது.
- இந்தத் திட்டம் காண்ட்லா (குஜராத்), பாரதீப் (ஒடிசா), தூத்துக்குடி (தமிழ்நாடு) போன்ற முக்கியப் பகுதிகளில் பசுமை ஹைட்ரஜன் மையங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
- பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் தரம் மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்காக ஒழுங்குமுறைக் கட்டமைப்புகள் மற்றும் தரநிலைகள் உருவாக்கப்படுகின்றன.
- முக்கியக் கூறுகளில் மின்பகுப்பு உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் பசுமை ஹைட்ரஜனுக்கான சான்றிதழ் கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஊக்கத் தொகைகள் இதில் அடங்குகிறது.
- இந்தத் திட்டம் நிலையான ஆற்றல் மற்றும் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான இந்தியாவின் பரந்த அர்ப்பணிப்புடன் இணைந்துள்ளது.
தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா (DDUGJY)
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- மின் அமைச்சகம், இந்திய அரசு.
- ஊரக மின்சார வசதியளிப்புக் கழகம் (REC).
நோக்கங்கள்:
- இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்குதல்.
- விவசாய நுகர்வோருக்குப் போதுமான மின்சாரம் மற்றும் விவசாயம் அல்லாத நுகர்வோருக்கு நிலையான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்தல்.
- கிராமப்புறங்களில் உள்ள விவசாயம் அல்லாத நுகர்வோருக்கு மின்சார விநியோகத்தின் தரத்தை மேம்படுத்துதல்.
- சிறந்த மின்சார விநியோகத்திற்காக விவசாயம் அல்லாத ஊட்டங்களில் இருந்து விவசாயத் தீவனங்களைப் பிரித்தல்.
- கிராமப்புறங்களில் துணை பரிமாற்றம் மற்றும் விநியோக உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.
- இழப்புகளைக் குறைக்க அனைத்து நிலைகளிலும் அளவீட்டைச் செயல்படுத்துதல்.
பயனாளிகள்:
- கிராமப்புறக் குடும்பங்கள்.
- கிராமப்புறங்களில் விவசாயம் மற்றும் விவசாயம் செய்யாத நுகர்வோர்.
- கிராமப்புற உள்கட்டமைப்பு மற்றும் உள்ளூர் வணிகங்கள்.
தகுதி அளவுகோல்கள்:
- இத்திட்டம் அனைத்து மின்சாரம் இல்லாத கிராமங்கள், கிராமப்புற வீடுகள் மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்புகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பலன்கள்:
- முழுமையான மின்மயமாக்கல்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமமும் வீடும் மின்மயமாக்கப் படும்.
- விவசாயப் பயன்கள்: போதிய நீர்ப்பாசன வசதியுடன் விவசாய விளைச்சலை அதிகரிக்கும் மற்றும் கிராமப்புறங்களில் உடல் உழைப்பைக் குறைக்கும்.
- பொருளாதார வாய்ப்புகள்: மின்மயமாக்கல் அதிக உற்பத்தி நேரங்களுக்கு வழி வகுக்கும் என்பதோடு சிறு வணிக முயற்சிகள் மற்றும் சிறு நிறுவனங்களை அதிகரிக்கும்.
- மேம்படுத்தப்பட்டச் சேவைகள்: கிராமப்புறங்களில் மின்சாரம் சுகாதாரம், கல்வி, வங்கி மற்றும் சமூகச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தும்.
- சமூகப் பாதுகாப்பு: மின்சாரத்திற்கான அதிகச் சமமான அணுகல் சமூகப் பாதுகாப்பை ஊக்குவிக்கும் மற்றும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும்.
- கிராமப்புற வளர்ச்சி: கிராமங்களில் மின்சாரம் கிடைப்பது பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும், புதிய வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கும், மற்றும் உள்ளூர்த் தொழில்களை ஊக்குவிக்கும்.
கூடுதல் தகவல்கள்:
- இந்தத் திட்டம் ராஜீவ் காந்தி கிராமின் வித்யுதி கரன் யோஜனாவின் (RGGVY) மேம்படுத்தப்பட்டப் பதிப்பாகும் என்பதோடு இது இந்தியாவின் கிராமப்புறங்களில் தீவனப் பிரிப்பு, அளவீடு மற்றும் துணைப் பரிமாற்ற உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
- இந்தத் திட்டத்திற்காக அரசாங்கம் ₹756 பில்லியன் (US$9.5 பில்லியன்) ஒதுக்கீடு செய்துள்ளது.
- சிறப்பு மாநிலங்களுக்கு சுமார் 85% நிதியுதவியுடன் 60% திட்ட மதிப்பீட்டை மத்திய அரசு வழங்குகிறது.
- கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் (REC) GARV (கிராமீன் வித்யுதிகரன்) செயலி மூலம் வெளிப்படையான அறிக்கையிடலுடன், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதைக் கண்காணிக்கிறது.
தேசிய சூரிய ஆற்றல் திட்டம்
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம் (MNRE), இந்திய அரசு.
நோக்கங்கள்:
- இந்தியாவை சூரிய ஆற்றல் தொழில்நுட்பங்களை விரைவாக ஏற்றுக் கொள்ளச் செய்வதையும், அதனைப் பரப்புவதையும் ஊக்குவிப்பதன் மூலம் சூரிய ஆற்றலில் உலகத்தின் தலை சிறந்தவராக நிலை நிறுத்துதல்.
- எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்துதல், காலநிலை மாற்றத்தைத் தணித்தல், மாசுபாட்டைக் குறைத்தல், புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல்.
- சூரிய வெப்பத் தொழில்நுட்பங்கள், பகுதி மின்சார விநியோக அமைப்புப் பயன்பாடுகள் மற்றும் கிராமப்புறச் சூரிய ஒளி அமைப்புகளை உருவாக்குதல்.
- சூரிய ஆற்றல் வரிசைப்படுத்தலை ஊக்குவிக்க ஒரு சாதகமான கொள்கை மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்பை உருவாக்குதல்.
பயனாளிகள்:
- மேற்கூரை சூரிய நிறுவல்களுக்கான குடியிருப்பு, வணிக மற்றும் நிறுவனக் கட்டிடங்கள்.
- பகுதி மின்சார விநியோக அமைப்பு சூரிய ஒளிர்வு மற்றும் ஆற்றல் தீர்வுகளுக்கான கிராமப்புறச் சமூகங்கள்.
- சூரியசக்தித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளப் பயன்பாட்டு நிறுவனங்கள், சாதகமான மின் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள்.
தகுதி அளவுகோல்கள்:
- மேற்கூரை சூரிய மின்ஆற்றல்: குடியிருப்பு, நிறுவன, சமூக மற்றும் அரசுத் துறைகளுக்குப் பொருந்தும்.
- பகுதி மின்சார விநியோக அமைப்பு சூரிய பயன்பாடுகளுக்கு: மின்சாரக் கட்டங்களுக்கு அணுகல் இல்லாத கிராமப்புறங்கள்.
- மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் சூரிய ஒளி ஆற்றலை ஊக்குவிப்பதற்கான சாதகமான கொள்கை நடவடிக்கைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
பலன்கள்:
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல்: சூரிய ஆற்றல் புதுப்பிக்கத்தக்கது மற்றும் மிகுதியானது என்பதனால் இது புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது.
- சுற்றுச்சூழல்: மாசுபாடு மற்றும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் குறிப்பிடத்தக்கக் குறைப்பு.
- பொருளாதாரம்: புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் வேலை வாய்ப்பு உருவாக்கம், சூரிய ஒளி உற்பத்தி மையங்களின் வளர்ச்சி மற்றும் மின்சாரக் கட்டணத்தில் நீண்ட காலச் சேமிப்பு.
- எரிசக்தி பாதுகாப்பு: குறிப்பாக கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் மேம்படுத்தப் பட்ட மின்சார விநியோக அமைப்பு பாதுகாப்பு.
- எரிசக்தி அணுகல்: கிராமப்புறங்களுக்கு பகுதி மின்சார விநியோக சூரிய ஒளி அமைப்புகள் பாதுகாப்பு, கல்வி மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்றன.
கூடுதல் தகவல்கள்:
- 2022 ஆம் ஆண்டுக்குள் இலக்கை சுமார் 20 ஜிகாவாட்டிலிருந்து 100 ஜிகாவாட்டாக அதிகரிப்பதன் மூலம் தேசிய சூரிய ஆற்றல் திட்டத் திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது.
இதன் செயல்படுத்தல் என்பது மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
- கட்டம் 1 (2010-13): மின்சார விநியோக அமைப்பு-இணைக்கப்பட்ட சூரிய ஆற்றல் ஆலைகள் (1,000 மெகாவாட்), பகுதி மின்சார விநியோக சூரிய ஒளி அமைப்புப் பயன்பாடுகள் (200 மெகாவாட்) மற்றும் மேற்கூரை சூரிய ஆற்றல் நிறுவல்கள் (100 மெகாவாட்) ஆகியவற்றில் கவனம் செலுத்தப் பட்டது.
- கட்டம் 2 (2013-17): பயன்பாட்டு அளவிலான திட்டங்களில் இருந்து 10 ஜிகாவாட் மற்றும் மேற்கூரை நிறுவலுக்கான கூடுதல் ஆதரவு உட்பட சூரிய ஆற்றலை அளவிடுவதை நோக்கமாகக் கொண்டது.
- கட்டம் 3 (2017-22): சூரிய ஆற்றலால் இயங்கும் பூங்காக்கள், ஒருங்கிணைந்த சூரிய உற்பத்தி மற்றும் மின்சார விநியோக அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முதலீடுகளுடன், மொத்த திறனில் 100 ஜிகாவாட் இலக்கு.
- மூலதன மானியங்கள், நம்பகத்தன்மை இடைவெளி நிதி மற்றும் சர்வதேச நிதியியல் வழிமுறைகள் மூலம் நிதி ஆதரவு வழங்கப்படுகிறது.
- இந்திய சூரிய சக்திக் கழகம் (SECI) போன்ற முக்கிய நிறுவனங்கள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கும் கொள்முதல் செய்வதற்கும் வசதியாக நிறுவப்பட்டுள்ளன.
- சூரிய ஆற்றல் பயன்பாட்டை மேம்படுத்த சூரிய கதிர்வீச்சுக் கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
- தேசிய சூரிய ஆற்றல் திட்டம் என்பது இந்தியாவின் நிலையான ஆற்றலை நோக்கிய உந்துதல், எரிசக்தித் தேவைகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றில் ஒரு முக்கியமான படியாகும்.
-------------------------------------