இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் (SDG 7) - பாகம் 24
(For English version to this please click here)
மின்னாற்றலால் வேகமாக ஓடும் கலப்பு வாகனங்களை தயாரிக்கும் (FAME) திட்டம்
தொடங்கப்பட்ட ஆண்டு:
- கட்டம் I: ஏப்ரல் 1, 2015 அன்று தொடங்கப்பட்டது.
- கட்டம் II: ஏப்ரல் 1, 2019 அன்று தொடங்கப்பட்டது.
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- கனரக தொழில்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் அமைச்சகம்.
நோக்கங்கள்:
- நிதி மானியங்கள் மூலம் ஆரம்ப முதலீட்டுச் செலவைக் குறைப்பதன் மூலம் மின்சார வாகனங்களை (EV) ஏற்றுக் கொள்வதை துரிதப் படுத்துதல்.
- இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தி மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்பை ஊக்குவித்தல்.
- காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு வாகன உமிழ்வைக் குறைத்தல்.
- நாடு முழுவதும் நிலையான மின்சார வாகன மின்னேற்ற உள்கட்டமைப்பை உருவாக்குதல்.
- 2030 ஆம் ஆண்டிற்குள் ஒட்டு மொத்தப் போக்குவரத்தில் 30% மின்மயமாக்கலை அடைதல்.
- மின்சார வாகன மின்னேற்ற உள்கட்டமைப்புடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை உருவாக்கி ஒருங்கிணைத்தல்.
பயனாளிகள்:
- மின்சார வாகனம் வாங்குபவர்கள்: மின்சார இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், மின்சாரப் பேருந்துகள் மற்றும் மின்சார வாகன மின்னேற்ற நிலையங்கள் வாங்குவதற்கு மானியம்.
- மின்சார வாகன உற்பத்தியாளர்கள்: மின்சார மற்றும் கலப்பு வாகனங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஊக்கத் தொகை.
- மின்சார வாகன மின்னேற்ற உள்கட்டமைப்பு வழங்குநர்கள்: இந்தியா முழுவதும் மின்சார வாகன மின்னேற்ற நிலையங்களை நிறுவுவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஊக்கத் தொகை.
தகுதி அளவுகோல்கள்:
- மின்சார வாகனங்கள்:
- மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989 என்பதின் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும்.
- தனிப்பட்ட முறையில் வாங்குபவருக்கு ஒரு குறிப்பிட்ட வாகன வகைக்கு ஒரு மானியம் மட்டுமே கிடைக்கும்.
- வாகன வகைகள்: மின்சாரப் பேருந்துகள், மின்சார நான்கு சக்கர வாகனங்கள், மின்சார மூன்று சக்கர வாகனங்கள் (மின்-ரிக்சாக்கள், மின் வண்டிகள் உட்பட) மற்றும் மின்சார இரு சக்கர வாகனங்கள் தகுதியானவை.
- மின்சார வாகன மின்னேற்ற நிலையங்கள்: மின்சார வாகன மின்னேற்ற நிலையங்களை அமைக்கும் நிறுவனங்கள் தொழில்நுட்பத் தகுதியைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
பலன்கள்:
- மின்சார வாகனங்களுக்கான ஊக்கத்தொகை: வாகன வகையைப் பொறுத்து ₹10,000/KWh முதல் ₹20,000/KWh வரையிலான நேரடி மானியங்கள் (எ.கா., மின்சார இருசக்கர வாகனங்களுக்கு ₹15,000/KWh மற்றும் மின்சாரப் பேருந்துகளுக்கு ₹20,000/KWh).
- சுற்றுச்சூழல்: வாகன உமிழ்வுகளில் குறிப்பிடத் தக்க குறைப்பு, தூய காற்றின் தரத்திற்குப் பங்களிக்கிறது மற்றும் காலநிலை இலக்குகளை அடைகிறது.
- உள்கட்டமைப்பு: நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மின்சார வாகன மின்னேற்ற நிலையங்களை நிறுவுதல் மற்றும் விரிவாக்குதல்.
- பொருளாதார தாக்கம்: எண்ணெய் இறக்குமதி குறைப்பு மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, மின்சார வாகனம் மற்றும் மின் கல அடுக்கு உற்பத்தியில் தன்னிறைவை ஊக்குவித்தல்.
- பொது போக்குவரத்து: மின்சாரப் பேருந்துகள் மற்றும் பகிரப்பட்ட மின்சாரப் போக்குவரத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது.
கூடுதல் தகவல்கள்:
கட்டங்கள்:
- முதல் கட்டம் (2015-2019): தேவைக்கான ஊக்கத் தொகை, மின்சார வாகனங்கள் பயன்படுத்துதல் மற்றும் அடிப்படை மின்சார வாகன மின்னேற்ற உள்கட்டமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
- இரண்டாம் கட்டம் (2019-2024): பொதுப் போக்குவரத்து மின்மயமாக்கலை ஆதரிப்பது, மின்சார வாகன மின்னேற்ற உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் மின்சார வாகனத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
- மின்சார வாகன மின்னேற்ற உள்கட்டமைப்பின் விரிவாக்கம்: குறிப்பாக மெட்ரோ நகரங்கள், சிறந்த நகரங்கள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் மின்சார வாகனம் வேகமாகவும், மெதுவாகவும் மின்னேற்றம் செய்யும் நிலையங்களும் இதில் அடங்கும்.
- தனியார் மற்றும் வணிக வாகனங்களுக்கான ஊக்கத் தொகை: மின்சார வாகனங்களைப் பயன்படுத்தும் தனியார் மற்றும் வணிகப் பயனாளர்களுக்கு மானியங்கள்.
பிரதமர் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம் (MNRE).
- தேசியத் திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனம் (NPIA): ஊரக மின்சார வசதியளிப்புக் கழகம் (REC).
நோக்கங்கள்:
- 2027 மார்ச், மாதத்திற்க்குள் 1 கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய ஆற்றல் தகடுகள் பொருத்துவதன் மூலம் இலவச மின்சாரம் வழங்குதல்.
- கணிசமான நிதி மானியங்களை வழங்குவதன் மூலமும், எளிதாக நிறுவுவதை உறுதி செய்வதன் மூலமும் மேற்கூரை சூரிய ஆற்றல் அமைப்புகளை ஏற்றுக் கொள்வதை ஊக்குவித்தல்.
- 30 GW அளவிற்கு குடியிருப்பு மேற்கூரை சூரிய ஆற்றலைச் சேர்ப்பதன் மூலம் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளுக்குப் பங்களிக்க வேண்டி, புதுப்பிக்க முடியாத எரிசக்தி வளங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல்.
- நிறுவப்பட்ட சூரிய மண்டலங்களின் 25 ஆண்டு வாழ்நாளில் 720 மில்லியன் டன்கள் கார்பன் உமிழ்வைக் குறைத்தல்.
- உற்பத்தி, தளவாடங்கள், நிறுவல் மற்றும் பராமரிப்பு போன்ற பல்வேறு துறைகளில் 17 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க மதிப்பிடப்பட்டுள்ளது.
பயனாளிகள்:
- இந்தத் திட்டம் இந்தியாவில் 1 கோடி குடும்பங்களை இலக்காகக் கொண்டுள்ளது.
- மேற்கூரை சூரிய ஆற்றல் அமைப்புகளை நிறுவிய பின், தகுதியுடைய ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ஒன்றுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
- குழு வீட்டுவசதிச் சங்கங்கள் (GHS) மற்றும் குடியிருப்பு நலச் சங்கங்கள் (RWAs) 500 kW திறன் வரையில் மின்சார வாகன மின்னேற்ற நிலையங்கள் உட்பட பொதுவான வசதிகளுக்கான மானியங்களுடன் இந்தத் திட்டத்தில் இருந்து பயனடையலாம்.
தகுதி அளவுகோல்கள்:
- சூரிய ஆற்றல் அமைப்புகளை நிறுவுவதற்கு பொருத்தமான மேற்கூரையுடன் கூடிய வீடு சொந்தமாக இருக்க வேண்டும்.
- வீட்டிற்குச் செல்லுபடியாகும் மற்றும் செயல்பாட்டில் மின்சார இணைப்பு இருக்க வேண்டும்.
- சூரிய ஆற்றல் அமைப்புகளை நிறுவுவதற்கு குடும்பம் வேறு எந்த மானியத்தையும் பெற்றிருக்கக் கூடாது.
- ஏற்கனவே இருக்கும் மேற்கூரை சூரிய ஆற்றல் அமைப்புகளை கொண்ட குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் தகுதி பெறாது.
பலன்கள்:
- இலவச மின்சாரம்: பயனாளிகளின் குடும்பங்களுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
- மானியங்கள்: இத்திட்டம் சூரிய ஆற்றல் அமைப்புகளை நிறுவுவதற்கான செலவில் 40% வரை மானியங்களை வழங்குகிறது.
- 2kW வரை உள்ள அமைப்புகளுக்கு 60% மானியம்.
- 2kW முதல் 3kW வரையிலான அமைப்புகளுக்கு 40% மானியம்.
- குழு வீட்டுவசதி சங்கங்களுக்கு கூடுதல் மானியம்.
- வருவாய் உருவாக்கம்: உள்ளூர் மின்சார விநியோக அமைப்புகளுக்கு உபரி மின்சாரத்தை விற்பதன் மூலம் குடும்பங்கள் கூடுதல் வருமானம் ஈட்டலாம்.
- கார்பன் உமிழ்வு குறைப்பு: இந்தத் திட்டம் 25 ஆண்டுகளில் CO2 உமிழ்வை 720 மில்லியன் டன்கள் வரை குறைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
- அரசுக்கு சேமிப்பு: பாரம்பரிய எரிசக்தி வளங்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.75,000 கோடி சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
- வேலைவாய்ப்பு உருவாக்கம்: இந்த முன்னேடுப்பானது உற்பத்தி, தளவாடங்கள், நிறுவல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் 17 லட்சம் நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
- பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு: தொழில்நுட்ப வல்லுநர்கள், நிறுவுபவர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு அமைச்சகம் பயிற்சி அளிக்கிறது.
கூடுதல் தகவல்கள்:
- மொத்த நிதிச் செலவு: நிதியாண்டு 2026-27 வரை செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்காக ரூ.75,021 கோடி.
- கடன் ஆதரவு: குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களுக்கு 3kW வரை சூரிய ஆற்றல் அமைப்புகளை நிறுவ 7% வட்டியில் பிணை-இல்லாத கடன்.
- மாதிரி சூரிய ஆற்றல் கிராமங்கள்: ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு "மாதிரி சூரிய ஆற்றல் கிராமம்" உருவாக்கப்படும் என்பதோடு, இது ஆற்றல் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் அமையும்.
- சூரிய மின்சக்திக் கிராமங்களுக்கு ரூ.800 கோடியும், ஒரு கிராமத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும்.
- இதற்குத் தகுதி பெற கிராமங்களில் 5,000 (அல்லது சிறப்பு வகை மாநிலங்களுக்கு 2,000) மக்கள் தொகை இருக்க வேண்டும்.
செயல்படுத்தல் கட்டமைப்பு:
- தேசிய நிலை: ஊரக மின்சார வசதியளிப்புக் கழகம் (NPIA) மூலம் நிர்வகிக்கப் படுகிறது.
- மாநில நிலை: மின்சார விநியோக அமைப்புகளால் நிர்வகிக்கப் படுகிறது, இது ஆய்வுகள், விற்பனையாளர் மேலாண்மை, நிகர மீட்டர் நிறுவல்கள் மற்றும் அமைப்புகளை இயக்குதல் ஆகியவற்றிற்குப் பொறுப்பாகும்.
- திறன் மேம்பாட்டுத் திட்டங்கள்: மின்சார விநியோக அமைப்பு ஊழியர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்துகிறது.
டிசம்பர் 3, 2024 நிலவரப்படி:
- தேசிய இணைய தளத்தில் 1.45 கோடி பதிவுகள் பதிவாகியுள்ளன.
- 26.38 லட்சம் விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன.
- மார்ச் மாதம் 2025 ஆம் ஆண்டிற்குள் நிறுவல்கள் 10 லட்சத்தைத் தாண்டும் என்றும், மார்ச் மாதம் 2027 ஆம் ஆண்டிற்குள் 1 கோடியை எட்டும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
மின்சார வாகன ஊக்குவிப்புத் திட்டம்
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- கனரக தொழில்துறை அமைச்சகம் (MHI).
நோக்கங்கள்:
- பதிவு செய்யப்பட்ட மின்சார வாடகை வாகனங்கள் மற்றும் மின்சார இழுவை வண்டிகள் உட்பட மின்சார இருசக்கர வாகனங்கள் (e-2W) மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் (e-3W) ஏற்றுக் கொள்வதை துரிதப்படுத்துதல்.
- பசுமைப் போக்குவரத்தை வலுப்படுத்துதல் மற்றும் இந்தியாவில் மின்சார வாகன (EV) உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துதல்.
- அத்தகைய மின் கல அடுக்குகள் பொருத்தப்பட்ட மின்சார வாகனங்களுக்கு மட்டுமே சலுகைகளை வழங்குவதன் மூலம் மேம்பட்ட மின் கல அடுக்குத் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல்.
- மலிவான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து விருப்பங்களை, குறிப்பாக பொதுப் பயன்பாட்டிற்கு மேம்படுத்த வேண்டிய ஆதரவினை வழங்குதல்.
பயனாளிகள்:
- வணிக மின்சார வாகனங்கள்: மின்சார இரு சக்கர வாகனங்கள் (e-2W) மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் (e-3W), பதிவு செய்யப்பட்ட மின்சார வாடகை வாகனங்கள் மற்றும் மின்சார இழு வண்டிகள் வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன.
- தனியாருக்குச் சொந்தமான e-2Wகள் மற்றும் பெரு நிறுவனங்களுக்குச் சொந்தமான பதிவு செய்யப்பட்ட e-2Wகளும் தகுதிபெறும்.
- தகுதி அளவுகோல்கள்:
- உற்பத்தி மற்றும் பதிவு காலம்: திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்திற்குள் (ஏப்ரல் 1, 2024 முதல் ஜூலை 31, 2024 வரை) EVகள் தயாரிக்கப்பட்டு பதிவு செய்யப் பட்டது.
- மேம்பட்ட மின் கல அடுக்குகள்: மேம்பட்ட மின் கல அடுக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே ஊக்கத் தொகைக்கு தகுதி பெறும்.
பலன்கள்:
- மானியங்கள் / ஊக்கத் தொகைகள்: நுகர்வோர் முன்பணமாக குறைக்கப்பட்ட கொள்முதல் விலையான ரூ. 5,000 தகுதியான EVகளுக்கு kWh ஒன்றுக்கு வழங்கப் படுகிறது.
- இந்தத் தொகை OEM என்பவருக்கு (அசல் உபகரண உற்பத்தியாளர்) இந்திய அரசாங்கத்தால் திருப்பிச் செலுத்தப்படும்.
- மேம்பட்ட தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல்: EV துறையில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், மேம்பட்ட மின் கல அடுக்குகள் கொண்ட EVகள் மட்டுமே இச்சலுகைகளுக்குத் தகுதி பெறும்.
- சுற்றுச்சூழல் பாதிப்பு: இந்தத் திட்டம் பாரம்பரியமான டீசல் மற்றும் பெட்ரோல் மூலம் இயக்கப்படும் வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க உதவுகிறது.
- பொருளாதார வளர்ச்சி: இந்தத் திட்டம் மின்சார மற்றும் கலப்பு வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் என்பதோடு இது ஆத்ம-நிர்பார் பாரத் பார்வைக்குப் பங்களிக்கிறது.
- வேலைவாய்ப்பு உருவாக்கம்: மின்சார வாகன உற்பத்தித் துறையில் குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகள் உருவாக்கப் படுகிறது.
கூடுதல் தகவல்கள்:
- மொத்த நிதி: இத்திட்டத்தின் மொத்த செலவு ரூ. 500 கோடி.
- திட்டத்தின் காலம்: இந்தத் திட்டம் ஏப்ரல் 1, 2024 முதல் ஜூலை 31, 2024 வரையிலான 4 மாதங்களுக்குச் செயல்படுத்தப் பட்டது.
- இலக்கு: இந்தத் திட்டம் சுமார் 3.72 லட்சம் EVகளை ஏற்றுக் கொள்வதை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 3.33 லட்சம் மின்சார இரு சக்கர வாகனங்கள் (e-2W).
- 0.38 லட்சம் மின்சார மூன்று சக்கர வாகனங்கள் (e-3W).
- திட்ட நிர்வாகம்: இந்தத் திட்டம் IEC (தகவல், கல்வி மற்றும் தொடர்பு) நடவடிக்கைகள் மற்றும் திட்ட மேலாண்மை முகமைக்கான (PMA) நிர்வாகக் கட்டணங்கள் உட்பட அனைத்தும் நிர்வகிக்கப் படுகிறது.
-------------------------------------