TNPSC Thervupettagam

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் (SDG 8) - பாகம் 25

January 18 , 2025 1 hrs 0 min 14 0

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் (SDG 8) - பாகம் 25

(For English version to this please click here)

இலக்கு 08: கண்ணியமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி

உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம் (PLI)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • மார்ச் 2020.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்.

நோக்கங்கள்:

  • உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க: இந்தியாவின் உற்பத்தித் திறன்களை அதிகரித்தல்.
  • இறக்குமதி மாற்றீடு: உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் இறக்குமதி மாற்றீட்டை அதிகரித்தல்.
  • வேலைவாய்ப்பு உருவாக்கம்: குறிப்பாக உழைப்பு மிகுந்த துறைகளில், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.
  • வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க: குறிப்பாக மேம்படுத்தப் பட்டத் தொழில்நுட்பம் மற்றும் முக்கியத் துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்தல்.
  • ஏற்றுமதி போட்டித்தன்மையை மேம்படுத்துதல்: இந்தியாவின் உலகளாவிய விநியோகச் சங்கிலிப் பங்களிப்பை மேம்படுத்தி ஏற்றுமதியை அதிகரித்தல்.
  • தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்: உற்பத்தித் துறைகளில் நவீன தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை ஏற்றுக் கொள்வதை ஊக்குவித்தல்.
  • தன்னிறைவை ஊக்குவித்தல்: 'ஆத்மநிர்பர்' (சுய சார்பு) ஆக வேண்டும் என்ற இந்தியாவின் பார்வையை ஆதரித்தல்.

பயனாளிகள்:

  • குறிப்பிட்டத் துறைகளில் தகுதி வரம்புகளைப் பூர்த்தி செய்யும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள்.
  • சில துறைகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs).

தகுதி அளவுகோல்கள்:

  • நிறுவனங்கள் இந்தியாவில் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும்.
  • அவைகள் உற்பத்தித் திறன், உற்பத்தி அளவு மற்றும் அதிகரிக்கும் விற்பனை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும்.
  • குறிப்பிட்டத் துறைகளுக்கு, உள்ளூர் மதிப்புக் கூட்டல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு முதலீட்டுக்கான தேவைகள் உள்ளன.
  • நிறுவனங்கள் ஒவ்வொரு துறையின் குறிப்பிட்ட வழிகாட்டுதல்களால் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

பலன்கள்:

  • நிதி ஊக்கத்தொகை: நிறுவனங்கள் ஐந்து ஆண்டுகள் வரையிலான காலத்தில் அதிகரிக்கும் விற்பனையின் அடிப்படையில் வெகுமதிகளைப் பெறுகின்றன.
  • ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஊக்கம்: இத்திட்டம் உற்பத்திச் செயல்முறைகளில் அதிநவீனத் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை ஏற்றுக் கொள்வதை ஊக்குவிக்கிறது.
  • வரி தள்ளுபடி மற்றும் சலுகைகள்: தகுதி பெறும் நிறுவனங்களுக்கு வரி தள்ளுபடிகள், இறக்குமதி வரி விலக்குகள் மற்றும் பிற நிதிச் சலுகைகள் வழங்கப் படுகின்றன.
  • வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறது: இந்தியாவில் தங்கள் உற்பத்தி அலகுகளை அமைப்பதில் அல்லது விரிவுபடுத்துவதில் வெளிநாட்டு நிறுவனங்களை ஆதரிக்கிறது.
  • உள்கட்டமைப்பு மேம்பாடு: புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட உற்பத்தி அலகுகளுக்கான தொழில்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்த உதவுகிறது.
  • வேலைவாய்ப்பு உருவாக்கம்: குறிப்பாக உழைப்பு மிகுந்த துறைகளில், குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கூடுதல் தகவல்கள்:

இலக்கு துறைகள்:

  • அலைபேசி மற்றும் அதனுடன் இணைந்த உதிரிபாக உற்பத்தி, மின்னணுச் சாதன உற்பத்தி, மருத்துவச் சாதனங்கள், தானியங்கு வாகனங்கள் மற்றும் வாகனப் பாகங்கள், மருந்தகங்கள், மருந்துகள், சிறப்பு இரும்பு, தகவல் தொடர்பு & வலையமைப்புப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள், வெள்ளைப் பொருட்கள் (குளிர் சாதனங்கள், LED பல்புகள்), உணவுப் பொருட்கள், ஜவுளிப் பொருட்கள், சூரிய சக்தி ஒளி மின்னழுத்தத் தொகுதிகள், மேம்பட்ட வேதியியல் மின்கல (ACC) அடுக்குகள், மற்றும் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களின் பாகங்கள்.

முக்கிய சாதனைகள்:

  • அலைபேசி இறக்குமதியில் குறிப்பிடத்தக்க குறைப்பு மற்றும் ஏற்றுமதியில் ஏற்றம் ஆகியன நேர்மறையான வர்த்தகச் சமநிலையை உருவாக்குகிறது.
  • நவம்பர் 2023 நிலவரப்படி 6.78 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன.
  • இத்திட்டத்தின் கீழ், ரூ.1000க்கு மேல் 1.03 லட்சம் கோடி முதலீடு, ரூ. 8.61 லட்சம் கோடி உற்பத்தி செய்யப் பட்டுள்ளன.
  • இதனால் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்துள்ளது, குறிப்பாக மின்னணுச் சாதனங்கள் மற்றும் தகவல் தொடர்பு தயாரிப்புகள், உணவுப் பதப்படுத்துதல் மற்றும் மருந்தகங்கள் போன்ற தொழில்கள் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளன.

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2008-09.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் (MoMSME).
  • காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (KVIC).

நோக்கங்கள்:

  • வேலைவாய்ப்பை உருவாக்குதல்: புதிய குறுந்தொழில்களை நிறுவுவதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.
  • கைவினைஞர்கள் மற்றும் இளைஞர்களை மேம்படுத்துதல்: பாரம்பரிய கைவினைஞர்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற வேலையற்ற இளைஞர்களை ஒன்றிணைத்து, உள்நாட்டில் சுயவேலை வாய்ப்புகளை வழங்குதல்.
  • நிலையான வேலைவாய்ப்பு: கைவினைஞர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களின் பெரும் பகுதியினருக்குத் தொடர்ச்சியான, நிலையான வேலைவாய்ப்பை வழங்குதல், இதன் மூலம் கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வதைத் தடுக்கிறது.
  • ஊதியம் பெறும் திறனை அதிகரிப்பது: தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் ஊதியம் பெறும் திறனை மேம்படுத்துதல், கிராமப்புற மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்புகளின் வளர்ச்சிக்குப் பங்களிக்கிறது.
  • நிதி அளிப்பை எளிதாக்குதல்: குறுந்தொழில் துறைக்கு நிதி அளிப்பை அதிகரிக்க நிதி நிறுவனங்களை ஊக்குவித்தல்.

பயனாளிகள்:

  • 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள்.
  • சுய உதவிக் குழுக்கள் (SHGs), சங்கங்கள், உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள், தொண்டு அறக்கட்டளைகள் மற்றும் சங்கங்கள் பதிவு சட்டம் 1860 என்ற சட்டத்தின் கீழ் பதிவு செய்யப் பட்ட நிறுவனங்கள்.
  • திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட புதிய திட்டங்கள் / அலகுகள்.

தகுதி அளவுகோல்கள்:

  • தனிநபர்கள்: 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
  • கல்வித் தகுதி: உற்பத்தித் துறையில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் அல்லது சேவைத் துறையில் ரூ. 5 லட்சம் செலவாகும் திட்டங்களுக்கு, பயனாளி குறைந்தபட்சம் VIII வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • திட்ட வகை: புதிய திட்டங்கள் அல்லது அலகுகள் மட்டுமே தகுதியானவை.
  • ஏற்கனவே உள்ள அலகுகள் அல்லது பிற திட்டங்களின் கீழ் அரசு மானியம் பெற்றவர்கள் தகுதியற்றவர்கள்.

திட்டச் செலவு:

  • உற்பத்தித் துறை: அதிகபட்சம் ரூ. 50 லட்சம்.
  • சேவைத் துறை: அதிகபட்சம் ரூ. 20 லட்சம்.

தனிநபர் முதலீடு:

  • ரூ. 1 லட்சம் சமவெளிப் பகுதிகளில் மற்றும் ரூ. 1.5 லட்சம் மலைப்பகுதிகளில்.

பலன்கள்:

அரசு மானியம்:

  • கிராமப் பகுதிகள்: பொதுப் பிரிவினருக்கு 25%, சிறப்புப் பிரிவினருக்கு 35%.
  • நகர்ப்புறங்கள்: பொதுப் பிரிவினருக்கு 15%, சிறப்புப் பிரிவினருக்கு 25%.
  • மானிய விநியோகம்: அரசு மானியம் KVIC மூலம் அடையாளம் காணப்பட்ட வங்கிகள் மூலம் பயனாளிகளின் கணக்குகளுக்கு விநியோகிக்கப் படுகிறது.
  • கடன் வசதி: பொதுத்துறை வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாநிலப் பணிக்குழுக்களால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் அட்டவணை வணிக வங்கிகளால் கடன்கள் வழங்கப் படுகின்றன.
  • பயிற்சி மற்றும் ஆதரவு: இத்திட்டம் KVIC, NGOக்கள் மற்றும் SHGகள் உட்பட பல்வேறு அமைப்புகளால் வழங்கப்படும் பயிற்சி மூலம் தொழில்முனைவோர் மேம்பாட்டிற்கு உதவுகிறது.

கூடுதல் தகவல்கள்:

  • செலவினம்: இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 2021-22 நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரையிலான காலக் கட்டத்தில் ரூ. 13,554.42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

செயல்படுத்துதல்:

  • தேசிய நிலை: KVIC.
  • மாநில நிலை: மாநில KVIC இயக்குநரகங்கள், KVIB கள் மற்றும் மாவட்ட தொழில் மையங்கள் (DICகள்) மூலம் செயல்படுத்தப் படுகிறது.
  • திட்ட வகைகள்: எதிர்மறைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவை (எ.கா., இறைச்சி உற்பத்தி, போதைப் பொருட்கள் மற்றும் சில வகையான கழிவுகள்) தவிர பல்வேறு துறைகளில் உள்ள குறு நிறுவனங்களை உள்ளடக்கியது.
  • முக்கியத்துவம்: இந்தத் திட்டம் ஐந்து ஆண்டுகளில் சுமார் 40 லட்சம் நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தாக்கம்:

  • அதன் தொடக்கத்தில் இருந்து, தோராயமாக 7.8 லட்சம் குறுந்தொழில்கள் நிறுவப்பட்டு, சுமார் 64 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது.
  • ஆதரிக்கப்படும் அலகுகளில் சுமார் 80% கிராமப்புறங்களில் உள்ளன, மேலும் 50% யூனிட்கள் பட்டியலிடப் பட்ட சாதியினர் /  பட்டியலிடப் பட்ட பழங்குடியினர் மற்றும் பெண் தொழில்முனைவோருக்குச் சொந்தமானது.
  • இத்திட்டம் சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, குறிப்பாக இளைஞர்கள், கைவினைஞர்கள் மற்றும் விளிம்புநிலைக் குழுக்களுக்கு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பு வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்குகிறது.

தேசிய திறன் இந்தியா திட்டம்

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2015.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் (MSDE).

நோக்கங்கள்:

  • இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பங்களிக்கக்கூடிய திறமையான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்குதல்.
  • இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் சான்றிதழை வழங்குதல், அவர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு அல்லது சுயதொழில் செய்ய உதவுதல்.
  • தேவையான திறன்கள் மற்றும் அறிவுடன் தனிநபர்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் தொழில் முனைவோரை ஊக்குவித்தல் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SMEs) வளர்ச்சியை ஆதரித்தல்.
  • இந்தியப் பணியாளர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தி, அவர்களை உலக வேலை வாய்ப்புச் சந்தையில் அதிகப் போட்டித் தன்மையுடன் உருவாக்குதல்.
  • பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளில் இருக்கும் திறன் இடைவெளியைக் குறைத்து, அதன் மூலம் இந்தியப் பணியாளர்களின் உற்பத்தித் திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல்.

பயனாளிகள்:

  • இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் (16-35 வயது), வேலையில்லாத தனிநபர்கள், பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் மற்றும் புதிய வேலை வாய்ப்புகளைத் தேடுபவர்களை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.
  • பெண்கள், பட்டியலிடப்பட்ட சாதியினர் / பட்டியலிடப் பட்ட பழங்குடியினர்கள், சிறுபான்மையினர் மற்றும் கிராமப்புற மக்கள் உட்பட பின்தங்கிய பிரிவினருக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப் படுகிறது.
  • தொழில்முனைவோர் மற்றும் SMEக்கள் தங்கள் தொழிலாளர் திறன்களை மேம்படுத்த முயல்கின்றனர்.

தகுதி அளவுகோல்கள்:

  • 14 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள்.
  • தேவை மற்றும் எதிர்கால வேலைச் சந்தைத் தேவைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட துறைகளில் திறன் மேம்பாட்டைத் தொடர விரும்பும் நபர்கள்.
  • பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்கள், வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் வேலையில்லாத நபர்களுக்குத் திட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
  • துறைத் திறன் அமைப்புகள் (SSCs) குறிப்பிட்ட தொழில் திறன் பயிற்சி மற்றும் சான்றிதழுக்கான தகுதியை வரையறுக்கின்றன.

பலன்கள்:

  • இலவச அல்லது மானியத்துடன் கூடிய தொழிற்பயிற்சித் திட்டங்கள்.
  • பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பை மேம்படுத்துதல்.
  • PMKVY (பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா) போன்ற திட்டங்களின் கீழ் வேட்பாளர்களுக்கு நிதிச் சலுகைகள் அல்லது ஆதரவு.
  • பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கான அணுகல் அதிகரித்தது.
  • ஜம்மு & காஷ்மீர் இளைஞர்களுக்கான UDAAN போன்ற சிறப்புப் பயிற்சித் திட்டங்கள் மற்றும் பிராந்திய அதிகாரமளிப்பதற்கான பிற மாநில குறிப்பிடப்பட்ட திட்டங்கள்.
  • தொழில்களுடன் கூட்டாண்மை மூலம் வேலை வாய்ப்புகள் மற்றும் பயிற்சிகளுக்கு வெளிப்பாடு.

கூடுதல் தகவல்கள்:

முதன்மை திட்டங்கள்:

  • பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY): குறுகிய காலப் பயிற்சி, முன் கற்றல் அங்கீகாரம் (RPL) மற்றும் வேலை வாய்ப்பு உதவிகளை வழங்குகிறது.
  • துறை திறன் அமைப்புகள் (SSCs): தரநிலைகள் மற்றும் தகுதிகளை வரையறுக்க தன்னாட்சி தொழில்துறை தலைமையிலான அமைப்புகள்.
  • முன் கற்றலின் அங்கீகாரம் (RPL): ஏற்கனவே உள்ள திறன்களைக் கொண்ட தனிநபர்களை மதிப்பீடு செய்து சான்றளிக்கிறது.
  • தேசியத் திறன் மேம்பாடு தகுதி கட்டமைப்பு (NSQF): தகுதிகளை வரைபடமாக்குவதற்கும் உலகளாவிய இயக்கத்தை எளிதாக்குவதற்கும் ஓர் அமைப்பு.
  • சங்கல்ப் திட்டம்: நிறுவனக் கட்டமைப்பை வலுப்படுத்துவதையும், மேலும் பயிற்சி வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட உலக வங்கியின் நிதியுதவி முயற்சி.
  • UDAAN திட்டம்: ஜம்மு & காஷ்மீரில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

சாதனைகள்:

  • 2009 முதல் 2.5 கோடி பேர் பல்வேறு திட்டங்களின் கீழ் பயிற்சி பெற்றுள்ளனர்.
  • PMKVY வெற்றிகரமாக 1.37 கோடி விண்ணப்பதாரர்களுக்குப் பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.
  • PMKVY 4.0 போன்ற புதிய பதிப்புகள் PMNAM போன்ற உள்ளூர்ப் பயிற்சிக் கண்காட்சிகளுடன் நடந்து வருகின்றன.
  • வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எளிதாக்குவதற்கு வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் (MEA) அதிகரித்த ஒத்துழைப்பு.
  • ITIகள் (தொழில்துறைப் பயிற்சி நிறுவனங்கள்) ஆளிலா விமானச் செயல் திட்டம் போன்ற படிப்புகளுடன் மேம்படுத்தப் பட்டுள்ளன.
  • தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு: இந்த முயற்சி திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் அணுகல் மற்றும் அளவிடுதல் ஆகியவற்றை அதிகரிக்க ஆன்லைன் கற்றல் தளங்கள், அலைபேசிப் பயன்பாடுகள் மற்றும் எண்ம கருவிகளை ஒருங்கிணைக்கிறது.
  • சிறப்புப் பயிற்சி மையங்கள் மற்றும் ITI பயிற்சி நிறுவனங்கள் பயிற்சி உள்கட்டமைப்பை மேம்படுத்த நவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.
  • இந்தத் திட்டமானது, இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் இந்தியாவின் பொருளாதார மாற்றத்தின் பெரிய குறிக்கோளுடன் ஒருங்கிணைத்து, தன்னம்பிக்கை மற்றும் அதிகாரம் பெற்ற பணியாளர்களை உருவாக்குவதற்கான ஒரு படியாகும்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்