இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் (SDG 8) - பாகம் 26
(For English version to this please click here)
பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY)
தொடங்கப்பட்ட ஆண்டு:
- 2015 (PMKVY 1.0).
- 2016-2020 (PMKVY 2.0).
- 2020-2021 (PMKVY 3.0 - சோதனைக் கட்டம்).
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் (MSDE).
- தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC).
நோக்கங்கள்:
- திறன் மேம்பாட்டைச் செயல்படுத்துதல்: இந்திய இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த திறன் பயிற்சி மற்றும் சான்றிதழை வழங்குதல், சிறந்த வாழ்வாதாரத்தைப் பெற அவர்களுக்கு உதவுதல்.
- முன் கற்றல் சான்றிதழ்: தனிநபர்களின் முந்தைய அனுபவங்களின் அடிப்படையில், குறிப்பாக ஒழுங்குபடுத்தப்படாத துறைகளில் பணிபுரிபவர்களின் திறன்களை அங்கீகரித்துச் சான்றளித்தல்.
- ஆதரவு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு: பயிற்சியின் மூலம் இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை அணுகலாம் அல்லது சுயதொழில் செய்யலாம்.
- தொழிற்கல்வியை ஊக்குவித்தல்: திறன் மேம்பாட்டுடன் கல்வியை இணைக்க, அதிக வேலைவாய்ப்பை ஊக்குவித்தல்.
- திறன் இடைவெளிகளைக் குறைத்தல்: பல்வேறு தொழில்துறைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI), எந்திரனியல் மற்றும் முப்பரிமாண அச்சிடல் (PMKVY 3.0) போன்ற புதிய வகைத் துறைகளில் அதிக-தேவை திறன்களில் கவனம் செலுத்துதல்.
பயனாளிகள்:
- இளைஞர்கள் (வயது 15-29).
- வேலையில்லாத அல்லது தகுதி குறைந்த வேலையில் உள்ள நபர்கள்.
- பள்ளி / கல்லூரி இடைநிற்றல்.
- முன் அனுபவம் உள்ள ஒழுங்குபடுத்தப்படாத துறைகளில் உள்ள தனிநபர்கள் (முன் கற்றல் அங்கீகாரத்திற்காக - RPL).
தகுதி அளவுகோல்கள்:
- வயது வரம்பு: பொதுவாக 15 முதல் 29 வயது வரை உள்ளவர்கள்.
- குடியுரிமை: இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
- கல்வித் தகுதிகள்: பள்ளி / கல்லூரி படிப்பை இடைநிறுத்துபவர்கள் உட்பட பல்வேறு கல்விப் பின்னணியில் உள்ளவர்களுக்கு அமைக்கப் பட்டுள்ளது.
- வேலைவாய்ப்பு நிலை: முதன்மையாக வேலையில்லாத அல்லது தகுதி குறைந்த வேலையில் உள்ள இளைஞர்களை இலக்காகக் கொண்டது.
- ஆதார் அட்டை: விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்ய தேவைப்படுகிறது.
பலன்கள்:
- இலவசப் பயிற்சி: பயிற்சி மற்றும் மதிப்பீட்டுக் கட்டணங்களை அரசாங்கம் செலுத்தி விடும்.
- திறன் சான்றிதழ்: பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவுடன், விண்ணப்பதாரர்களுக்குத் திறன் சான்றிதழ் வழங்கப்படுகிறது, இது வேலைவாய்ப்பை மேம்படுத்துகிறது.
- பண ஊக்கத்தொகை: சான்றிதழின் மீதான நிதி வெகுமதிகள் வழங்கப் படுகின்றன.
- வேலை வாய்ப்பு உதவி: தொழிற்துறைகளுடனான கூட்டாண்மை உட்பட, பயிற்சிக்குப் பிந்தைய வேலைவாய்ப்பைக் கண்டறிவதில் ஆதரவு.
- தொழில் முனைவோர் ஆதரவு: தொழில்களை அமைப்பதில் ஆர்வமுள்ள தனிநபர்களுக்கான உதவி.
- முன் கற்றலின் அங்கீகாரம் (RPL): ஏற்கனவே உள்ள திறன்களை அடிப்படையாகக் கொண்ட ஆனால் முறையான சான்றிதழ் எதுவும் கொண்டிராத தனிநபர்களுக்கான சான்றிதழ்.
- தொழில்துறை-தரமான பயிற்சிக்கான அணுகல்: தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்படுகிறது, இது வேலைச் சந்தைக்குப் பொருத்தமாக இருப்பதை உறுதி செய்கிறது.
கூடுதல் தகவல்கள்:
- பயிற்சி காலம்: பொதுவாக 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை.
- பயிற்சி வழங்குதல்: நாடு முழுவதும் உள்ள PMKVY பயிற்சி மையங்களில் (TCs) நடத்தப் படுகிறது.
கூறுகள்:
- குறுகிய காலப் பயிற்சி (STT): கட்டமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டை வழங்குகிறது.
- சிறப்புத் திட்டங்கள்: அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்புகளை உள்ளடக்கியது.
- கௌஷல் மற்றும் ரோஸ்கர் மேளா: பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் விழிப்புணர்வை எளிதாக்குவதற்கு அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகளாகும்.
- தொடர்ச்சியான கண்காணிப்பு: ஆய்வுகள் மற்றும் தணிக்கைகள் மூலம் தரத்தை உறுதி செய்கிறது.
கட்டம் சார்ந்த அம்சங்கள்:
- PMKVY 2.0 (2016-20): இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களுடன் அதிகரித்த ஒருங்கிணைப்புடன், துறை சார்ந்த மற்றும் புவியியல் பரவலை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
- PMKVY 3.0 (2020-21): புதிய வகைத் தொழில்கள் மற்றும் மாவட்டத் திறன் குழுக்கள் (DSCகள்) மூலம் பயிற்சியை உள்ளூர்மயமாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
- அரசாங்க நிதியுதவி: இத்திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிதியளிக்கப்படுகிறது, என்பதோடு 50:50 என்ற ரீதியில் நிதி ஒதுக்கீடு.
- PMKVY மூலம், திறன் மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி மற்றும் மில்லியன் கணக்கான இந்திய இளைஞர்களுக்கு மேம்படுத்தப் பட்ட வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வலுவான மற்றும் நிலையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டம்(NSDM)
தொடங்கப்பட்ட ஆண்டு:
- ஜூலை 1, 2015 அன்று மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.
- 15 ஜூலை 2015 அன்று உலக இளைஞர் திறன் தினத்தன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப் பட்டது.
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் (MSDE).
நோக்கங்கள்:
- தேசியத் திறன் மேம்பாடு தகுதி கட்டமைப்பு (NSQF): நீண்ட கால மற்றும் குறுகிய காலப் பயிற்சியை வழங்க NSQF கட்டமைப்பைச் செயல்படுத்துதல், இது வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு வழி வகுக்குகிறது.
- தரமான தரநிலைகள்: கற்பித்தல் மற்றும் தரப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் மூலம் உயர்தர பயிற்சித் தரநிலைகளை உறுதி செய்தல்.
- இலக்குகளை அடைதல்: இலக்குத் திறன் மேம்பாட்டின் மூலம் சமூகத்தின் பலவீனமான மற்றும் பின்தங்கிய பிரிவுகளுக்கு ஆதரவு.
- உயர்-திறன் மற்றும் மறு-திறன்: குறிப்பாக அமைப்புசாராத் துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு உயர்-திறன் மற்றும் மறு-திறன் வழங்குவதற்கான வசதிகளை வழங்குதல்.
- மாற்றத்திற்கான பாதைகள்: கடன் பரிமாற்றத்தின் மூலம் தொழில் பயிற்சியிலிருந்து முறையான கல்வி முறைகளுக்கு மாறுதல்.
- தொழிலாளர் சந்தை தகவல் அமைப்பு (LMIS): திறமையான பணியாளர்களின் தேவை மற்றும் அளிப்பைப் பொருத்துதல், ஏற்கனவே உள்ள திட்டங்களின் செயல்திறனைக் கண்காணிக்க தேசிய தரவுத் தளத்தைப் பராமரித்தல்.
பயனாளிகள்:
- எந்த இந்திய நாட்டவரும்:
- வேலையில்லாதோர் அல்லது பள்ளி / கல்லூரி இடைநின்றவர்கள்.
- வங்கிக் கணக்கு மற்றும் சரிபார்க்கப்பட்ட அடையாளச் சான்று (ஆதார் / வாக்காளர் அடையாள அட்டை) உள்ளவர்கள்.
தகுதி அளவுகோல்கள்:
- வேலையில்லாத இளைஞர்கள், பள்ளி / கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் அல்லது சிறந்த வேலை வாய்ப்புகளுக்கான திறன்களை மேம்படுத்த விரும்பும் தனிநபர்கள்.
- அடையாளப்படுத்த மற்றும் கண்காணிப்புக்கு ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை இருக்க வேண்டும்.
பலன்கள்:
- வேலை வாய்ப்புகள்: தொழில்நுட்ப மற்றும் மென் திறன்களில் திறன் பயிற்சி மூலம் மேம்படுத்தப் பட்ட வேலை வாய்ப்புகள்.
- உலகளாவிய வேலைவாய்ப்பு: உயர்தரப் பயிற்சி தரநிலைகள் உலகளாவிய வேலை வாய்ப்புகளை செயல்படுத்துகின்றன.
- பயிற்சிக்கான அணுகல்: அரசாங்கத்தால் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான அணுகல்.
- நிலைத்தன்மை: நிலையான வாழ்வாதாரத்திற்கான திறன் மேம்பாடு மூலம் அதிகாரமளித்தல்.
கூடுதல் தகவல்கள்:
- நோக்கம்: "இந்தியாவில் திறன் மேம்பாட்டு முன்னெடுப்புகளை விரைவாக அளவிடுதல், தொடக்கம் முதல் இறுதி வரை, விளைவை மையமாகக் கொண்ட வகையில் செயல்படுத்துதல், கட்டமைப்பை உருவாக்குதல், நிலையான வாழ்வாதாரத்திற்கான இந்தியக் குடிமக்களின் இலக்குகளுடன் நன்கு பயிற்சி பெற்ற திறமையான பணியாளர்களுக்கான முதலாளிகளின் கோரிக்கைகளை சீரமைத்தல்."
- தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டம் என்பது திறன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது இளைஞர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சி திட்டங்களை வழங்குவதன் மூலம் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதில் பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY), திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோருக்கான தேசியக் கொள்கை, திறன் கடன் திட்டம் மற்றும் பிற அரசு திட்டங்கள் ஆகியவை அடங்கும்.
- NSDM திட்டத்தின் கீழ் உள்ள துணைத் திட்டங்களில் நிறுவனப் பயிற்சி, உள்கட்டமைப்பு, ஒருங்கிணைப்பு, பயிற்சியாளர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, நிலையான வாழ்வாதாரம் மற்றும் பொது உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
- நிறுவனப் பொறிமுறை: தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் (NSDA), தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC) மற்றும் பயிற்சி இயக்குநரகம் (DGT) ஆகியவற்றால் இந்தத் திட்டம் ஆதரிக்கப் படுகிறது.
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY)
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- நிதி அமைச்சகம்.
- முத்ரா (MUDRA - Micro Units Development & Refinance Agency Limited)
நோக்கங்கள்:
- பெரு நிறுவனம் அல்லாத, பண்ணை அல்லாத சிறு / குறு நிறுவனங்களுக்கு ₹20 லட்சம் வரை கடன்களை வழங்குவதன் மூலம் (2024 ஆம் ஆண்டின் படி) நிதி உதவி வழங்குதல்.
- சமூகத்தின் சிறு மற்றும் ஒதுக்கப்பட்டத் துறைகளுக்கு தொழில் முனைவோர் மற்றும் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவித்தல், முறையான நிறுவன நிதியை அணுக அவர்களுக்கு உதவுதல்.
- பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் பிற குறைவான பிரதிநிதித்துவ குழுக்களுக்கு அதிகாரம் அளித்தல், அவர்களின் வணிகங்களை நிறுவ அல்லது வளர்க்க உதவுதல்.
- குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மற்றும் பகுதி நகர்ப் புறங்களுக்கு நிதியளிப்பதில் உள்ள இடைவெளியைக் குறைத்தல்.
பயனாளிகள்:
- உற்பத்தி, வர்த்தகம், சேவைகள் மற்றும் விவசாயம் (தொடர்புடைய செயல்பாடுகள்) போன்ற துறைகளில் உள்ள குறு மற்றும் சிறு தொழில்முனைவோர்.
- பெண் தொழில்முனைவோர், PMMY கடன் பெறுபவர்களில் குறிப்பிடத்தக்கப் பகுதியினர் பெண்கள்.
- தொழில்முனைவில் அவர்களின் பங்கேற்பை ஊக்குவிக்க இலக்கு ஆதரவுடன் உள்ள சிறுபான்மைச் சமூகங்கள்.
- பெரு நிறுவனம் அல்லாத தொழில்களைத் தொடங்க அல்லது விரிவுபடுத்த விரும்பும் புதிய தொழில்முனைவோர்.
- முந்தையக் கடன்களை வெற்றிகரமாகத் திருப்பிச் செலுத்தி, தருண் பிளஸ் எனும் பிரிவின் கீழ் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த விரும்பும் குறு அலகுகள்.
தகுதி அளவுகோல்கள்:
- விவசாயம் அல்லாத துறை வருமானம் ஈட்டக் கூடிய செயல்பாட்டிற்கான சாத்தியமான வணிகத் திட்டத்தைக் கொண்ட எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தில் பங்கு பெறலாம்.
- வணிகத்திற்கு ₹20 லட்சத்திற்கும் குறைவான கடன் தொகை தேவைப்பட வேண்டும் (வகையைப் பொறுத்து ₹50,000 முதல் ₹20 லட்சம் வரை).
- கடனுக்குப் பிணை எதுவும் தேவையில்லை.
- வகைப்படுத்தப்பட்ட வணிக வங்கிகள், பிராந்தியக் கிராமப்புற வங்கிகள் (RRBs), சிறு நிதி வங்கிகள் (SFBs), வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) மற்றும் குறு நிதி நிறுவனங்கள் (MFIs) போன்ற உறுப்பினர் கடன் வழங்கும் நிறுவனங்கள் (MLIகள்) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பலன்கள்:
கடன் தொகை:
- ஷிஷு: புதிய தொழில்களுக்கு ₹50,000 வரை.
- கிஷோர்: வளர்ச்சிக் கட்டத்தில் உள்ள வணிகங்களுக்கு ₹50,000 முதல் ₹5 லட்சம் வரை.
- தருண்: விரிவுபடுத்த விரும்பும் தொழில்களுக்கு ₹5 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை.
- தருண் பிளஸ்: தருண் பிரிவின் கீழ் முந்தையக் கடனைத் திருப்பிச் செலுத்தியவர்களுக்கு ₹10 லட்சம் முதல் ₹20 லட்சம் வரை.
- பிணை இல்லாத கடன்கள்: கடனைப் பெறுவதற்கு எந்தப் பிணையும் / பாதுகாப்பும் வழங்கத் தேவையில்லை.
- நிதி நிறுவனங்களின் மூலம் கடன் வழங்கல்: அனைவருக்கும் அணுகலை உறுதிசெய்யும் வகையில், நிதி நிறுவனங்களின் பரந்த வலையமைப்பின் மூலம் கடன்கள் வழங்கப் படுகின்றன.
- உள்ளடக்கிய வளர்ச்சி: பெண்கள், பட்டியலிடப்பட்ட சாதியினர் / பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (SC/ST), மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினைச் சார்ந்தச் சமூகங்கள் (OBC) மீது சிறப்புக் கவனம் செலுத்துதல், சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவினரை மேம்படுத்த உதவுகிறது.
- கிராமப்புற மற்றும் பகுதி நகர்ப்புறப் பகுதிகளுக்கான ஆதரவு: இந்தத் திட்டம் கிராமப்புறங்களில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கிறது, வேலை உருவாக்கம் மற்றும் சுய வேலைவாய்ப்பை மேம்படுத்துகிறது.
- முத்ரா அட்டை: ரூபே பற்று அட்டையானது (ஓவர் டிராஃப்ட்) கடன் வசதியுடன் வழங்கப் படுகிறது, இது கடன் வாங்குபவர்கள் ஏடிஎம்கள் அல்லது POS இயந்திரங்களில் இருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கிறது.
- வட்டி மானியம்: ஷிஷு கடன்களை 12 மாதங்கள் வரை (ஆத்மநிர்பார் பாரத் தொகுப்பின் கீழ் மே மாதம் 2020 ஆம் ஆண்டில் அறிவிக்கப் பட்டது) உடனடியாகத் திருப்பிச் செலுத்த 2% வட்டி மானியம் வழங்கப் படுகிறது.
- திறன் மேம்பாடு: முத்ரா மித்ரா செயலியானது கடன் தேடுபவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குகிறது, வங்கிகளை அணுகவும் செயல்முறையைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது.
கூடுதல் தகவல்கள்:
சாதனைகள்:
- தொடக்கத்தில் இருந்து 47 கோடி சிறு தொழில் முனைவோருக்கு ₹27.75 லட்சம் கோடிக்கு மேல் வழங்கப் பட்டுள்ளது.
- SC/ST மற்றும் OBC சமூகங்களின் குறிப்பிடத்தக்கப் பங்கேற்புடன், 69% கடன் கணக்குகள் பெண்களிடம் உள்ளன.
- சிறு நிறுவனங்களுக்கான மேம்பட்ட கடன் அணுகல் மூலம் கிராமப்புற மற்றும் பகுதி நகர்ப்புறங்களில் வேலைகள் உருவாக்கப் படுகின்றன.
- கடன் விண்ணப்ப தளங்கள்: PSBloansin59minutes மற்றும் Udyamimitra போன்ற இணையதளங்கள் மூலம் கடன்களைப் பெறலாம்.
- முத்ரா செயலி: முத்ரா மித்ரா செயலியானது தகவல்களை வழங்குகிறது மற்றும் கடன் தேடுபவர்களுக்கு விண்ணப்பச் செயல்முறையைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
- கடன் உத்தரவாத நிதி: தருண் பிளஸின் கீழ் மேம்படுத்தப்பட்ட கடன் வரம்புகளை ஈடுகட்ட குறு அலகுகளுக்கான (CGFMU) கடன் உத்தரவாத நிதி நீட்டிக்கப் பட்டுள்ளது.
சமீபத்திய மாற்றங்கள் (2024 புதுப்பிப்பு):
- குறிப்பாக தருண் பிரிவின் கீழ் கடனை வெற்றிகரமாகத் திருப்பிச் செலுத்திய கடனாளிகளுக்கு கடன் வரம்பு ₹10 லட்சத்தில் இருந்து ₹20 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.
- புதிய தருண் பிளஸ் வகை ₹10 லட்சம் முதல் ₹20 லட்சம் வரையிலான கடனுக்காக அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
- பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதிலும், இந்தியா முழுவதும் உள்ள தொழில்முனைவோரை மேம்படுத்துவதிலும் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது.
- இந்தத் திட்டம் அதிகரித்த கடன் வரம்புகள் மற்றும் மேம்பட்ட ஆதரவுடன், சிறு வணிகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், குறிப்பாக பெண்கள், சிறுபான்மையினர் குழுக்கள் மற்றும் கிராமப்புறத் தொழில்முனைவோருக்குச் சிறப்பாக அமைந்துள்ளது.
-------------------------------------