இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் (SDG 8 & 9) - பாகம் 28
(For English version to this please click here)
நகர்ப்புறக் கற்றல் பயிற்சித் திட்டம் (TULIP)
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA).
- கல்வி அமைச்சகம் (MoE).
- அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (AICTE).
நோக்கங்கள்:
- இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULBs) மற்றும் சிறந்த நகரங்களில் 25,000 புதிய பட்டதாரிகளுக்கு உள்ளிருப்புப் பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல்.
- "செயல்பாட்டின் மூலம் கற்றல்" எனும் அடிப்படையில் வேலைவாய்ப்பை மேம்படுத்துதல் மற்றும் நகர்ப்புறச் சவால்களுக்குப் புதுமையான தீர்வுகளை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குதல்.
- நகர்ப்புறச் சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவன திறனை வலுப்படுத்துதல் மற்றும் நகர்ப்புற முன்னெடுப்புகளில் இளைஞர்களின் ஈடுபாட்டை வளர்த்தல்.
- நகர்ப்புறம் தொடர்பான பல்வேறு துறைகளை வெளிப்படுத்துவதன் மூலம், வாழக் கூடிய அமைப்பில் நகரங்களை உருவாக்க இளைஞர்கள் பங்களிக்கக் கூடிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல்.
பயனாளிகள்:
- புதிய பட்டதாரிகள் (கல்லூரியின் இறுதி ஆண்டை முடித்த 18 மாதங்களுக்குள்).
- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULBs).
- இந்தியா முழுவதும் உள்ள சிறந்த நகரங்கள்.
தகுதி அளவுகோல்கள்:
- விண்ணப்பதாரர்கள் இந்தியக் குடிமக்களாக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் கடந்த 18 மாதங்களுக்குள் கல்லூரியின் இறுதியாண்டை முடித்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் பின்வரும் துறைகளில் ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்: B.Tech, B.Planning, B.Arch, BA, B.Sc, B.Com, LLB.
பலன்கள்:
பயிற்சியாளர்களுக்கு:
- நகர்ப்புறத் திட்டமிடல், வடிவமைப்பு, பொறியியல், தகவல் தொழில்நுட்பம், நகர்வு, நிதி மற்றும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் நிஜ உலக அனுபவத்தின் மூலம் மேம்படுத்தப் பட்ட வேலைவாய்ப்பு.
- நகர்ப்புற நிர்வாகம் மற்றும் சேவை வழங்கலின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்துதல்.
- நகர்ப்புறச் சவால்களுக்குப் புதுமையான தீர்வுகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு.
ULB அமைப்புகள் மற்றும் சிறந்த நகரங்களுக்கு:
- இளம், திறமையான பட்டதாரிகளிடமிருந்து புதிய யோசனைகள் மற்றும் ஆற்றலினை உட்செலுத்துதல்.
- முக்கியமான நகர்ப்புறச் சவால்களைத் தீர்ப்பதில் இளைஞர்களின் ஈடுபாடு மற்றும் நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கான தீர்வுகளை இணைத்தல்.
- சிக்கலான நகர்ப்புறப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறன் வாய்ந்த, உயர்தரப் பணியாளர்களை உருவாக்குதல்.
கூடுதல் தகவல்கள்:
- TULIP திட்டம் 2020-21 பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து, ‘இலக்கு நிர்ணயிக்கப்பட்ட இந்தியா’ என்ற கருத்துருவின் கீழ், கல்வியை "கற்றலின் மூலம் செயல்பாடு" என்பதிலிருந்து "செயல்பாட்டின் மூலம் கற்றல்" என மாற்றுவதில் கவனம் செலுத்தப் பட்டது.
- திட்டத்தின் உள்ளிருப்புப் பயிற்சிகள் 8 வாரங்கள் முதல் 1 வருடம் வரை இருக்கலாம்.
- 2025 ஆம் ஆண்டுக்குள் 1 கோடி வெற்றிகரமான உள்ளிருப்புப் பயிற்சியைப் அடைய MHRD மற்றும் AICTE நிர்ணயித்த இலக்குக்கு TULIP பங்களிக்கிறது.
- இந்தத் திட்டமானது மாநில அளவில் நகர்ப்புற வளர்ச்சித் துறைகளால் ஆதரிக்கப் படுகிறது என்பதோடு ULB அமைப்புகள் மற்றும் சிறந்த நகரங்கள் தங்கள் நிறுவனங்களுக்குள் TULIP அமைப்பைச் செயல்படுத்த உதவுகிறது.
உத்யமி பாரத் திட்டம்
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் (MSME).
நோக்கங்கள்:
- தேசியப் பொருளாதாரத்திற்கு MSME நிறுவனங்களின் பங்களிப்பைக் கொண்டாடுதல்.
- தொழில்முனைவை வளர்ப்பதிலும், வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலிலும் MSME நிறுவனங்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துதல், மேம்படுத்துதல்.
- உத்யம் பதிவு தளம், PM விஸ்வகர்மா, PMEGP, SFURTI மற்றும் MSE நிறுவனங்களுக்கான பொதுக் கொள்முதல் கொள்கை போன்ற MSME நிறுவனங்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட சாதனைகள் மற்றும் அரசாங்க முயற்சிகளை முன்னிலைப்படுத்துதல்.
- பாரம்பரியக் கைவினைஞர்கள் மற்றும் குறுந்தொழில்களை முறையான பொருளாதாரத்தில் ஒருங்கிணைத்து, அவர்களின் உற்பத்தித் திறன் மற்றும் நிலைத் தன்மையை மேம்படுத்துதல்.
பயனாளிகள்:
- இந்தியா முழுவதும் குறிப்பாக MSME துறையில் உள்ள தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிகங்கள்.
- பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் உள்ள கைவினைஞர்கள்.
- உத்யம் தளம் மற்றும் PMEGP மூலம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்.
- இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள நிறுவனங்கள், பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC) / பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) மற்றும் பெண் தொழில்முனைவோர்.
- SFURTI திட்டத்தின் கீழ் பாரம்பரியத் தொழில்கள் செய்வோர் மற்றும் கைவினைஞர்கள்.
தகுதி அளவுகோல்கள்:
- பிரதம மந்திரி விஸ்வகர்மாவுக்கு: திறன் மேம்பாடு மற்றும் நிதி உதவிக்கு ஆதரவைத் தேடும் கைவினைஞர்கள் மற்றும் பாரம்பரியத் தொழில்கள் செய்வோர்.
- உத்யம் பதிவுக்கு: Udyam தளம் மூலம் இணைய தளத்தில் பதிவு செய்வதன் மூலம் தற்போதுள்ள நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை முறைப்படுத்த விரும்புகின்றன.
- PMEGP திட்டத்திற்கு: சிறப்புப் பிரிவினருக்கு (SC, ST, பெண்கள், முதலியன) குறிப்பிட்ட மானியங்களுடன், விவசாயம் அல்லாத துறையில் உள்ள குறு நிறுவனங்கள்.
- SFURTI திட்டத்திற்கு: பாரம்பரியக் கைவினைஞர்கள் தங்கள் தயாரிப்பு மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்துதலை மேம்படுத்த முயல்கின்றனர்.
- பொதுக் கொள்முதல் கொள்கைக்கு: அரசாங்கத்தின் கொள்முதல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தகுதியான பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொண்ட MSME நிறுவனங்கள்.
பலன்கள்:
- PM விஸ்வகர்மா: நிதி ஆதரவு, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் ஒருங்கிணைப்பு.
- உத்யம் பதிவு: இலவச, காகிதமில்லாப் பதிவு, அரசுத் திட்டங்களை எளிதாக அணுகுதல் மற்றும் முன்னுரிமைத் துறைக் கடன் போன்ற முறையான துறை நன்மைகளின் ஒருங்கிணைப்பு.
- PMEGP: புதிய நிறுவனங்களை அமைப்பதற்கான மூலதனத்திற்கான பணம் (மானியம்), இலவசத் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் பிணையமில்லாத கடன்கள்.
- SFURTI: பாரம்பரியத் தொழில்களை குழுக்களாக ஒழுங்கமைப்பதற்கான மானியங்கள், தயாரிப்பு மேம்பாட்டிற்கான நிதி உதவி மற்றும் சந்தை இணைப்புகள்.
- பொது கொள்முதல் கொள்கை: SC / ST மற்றும் பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடு உட்பட, MSME நிறுவனங்களுக்கான அரசாங்கக் கொள்முதல் முன்னுரிமை.
கூடுதல் தகவல்கள்:
- உத்யம் பதிவு: உத்யம் பதிவுத் தளம் சுமார் 4.63 கோடி நிறுவனங்களை, அதிலும் முதன்மையாக குறுந்தொழில்களைப் பதிவு செய்துள்ளது.
- பிரதமர் விஸ்வகர்மா: முதற்கட்ட நிதியாக ரூ. 13,000 கோடிகள் இத்திட்டத்தின் வெற்றிக்காக 2023-24 ஆம் ஆண்டு முதல் 2027-28 ஆம் ஆண்டு வரை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
- PMEGP: 2023-24 ஆம் ஆண்டில் 22,050 திட்டங்கள் நிறுவப்பட்டு, 1.76 லட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் வேலை உருவாக்கத்தில் குறிப்பிடத் தக்க பங்களிப்பு அளிக்கிறது.
- SFURTI: 2014-15 ஆம் ஆண்டு முதல் 513 குழுக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது, இதன் மூலம் கிட்டத்தட்ட 3 லட்சம் கைவினைஞர்கள் பயனடைந்து உள்ளனர்.
- பொது கொள்முதல் கொள்கை: 2023-24 ஆம் ஆண்டில் 2.36 லட்சம் MSME நிறுவனங்களை ஆதரிக்க, MSME நிறுவனங்கள் ரூ. 82,431 கோடி மதிப்புள்ள கொள்முதலைப் பெற்றன.
இலக்கு 09: தொழிற்சாலை, புத்தாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு
டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பு
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை (DeitY), தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்.
நோக்கங்கள்:
- இந்தியாவை எண்ம அதிகாரம் பெற்ற சமூகமாகவும், அறிவுசார் பொருளாதாரமாகவும் மாற்றுதல்.
- எண்ம தொழில்நுட்பத்தின் மூலம் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துதல்.
- எளிதாக வணிகம் செய்வதற்கும், நிதிச் சேர்க்கைக்கும், பொதுச் சேவைகளை மேம்படுத்துவதற்கும் எண்ம ஆளுகை முறையை உருவாக்குதல்.
- உலகளாவிய எண்மக் கல்வியறிவு மற்றும் தகவல் மற்றும் சேவைகளுக்கான அணுகலுடன் குடிமக்களை மேம்படுத்துதல்.
- மின்னணுச் சாதனங்கள் உற்பத்தி, வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் பணமில்லாப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல்.
பயனாளிகள்:
- அனைத்து இந்தியக் குடிமக்கள்.
- குறிப்பாக தொலைதூரக் கிராமங்கள் போன்ற பின்தங்கிய பகுதிகளில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள்.
- எண்ம கல்வி, வேலை வாய்ப்புகள் மற்றும் எண்ம சேவைகளால் பயனடையும் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள்.
- மின்-ஆளுமை, எண்மக் கல்வியறிவு மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படக் கூடிய செயல்முறைகள் மூலம் பயனடையும் அரசாங்கத் துறைகள், சேவை வழங்குநர்கள் மற்றும் வணிகங்கள்.
தகுதி அளவுகோல்கள்:
- எண்ம நிர்வாகம், உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் ஈடுபடும் பொது மற்றும் தனியார் துறைகள்.
- இணையவழி வங்கி, அலைபேசிப் பயன்பாடுகள், மின்-கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற எண்ம சேவைகளிலிருந்துப் பயனடைய விரும்பும் குடிமக்கள்.
பலன்கள்:
- கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு அதிவேக அகலப் பட்டை அலைவரிசை மற்றும் இணைய அணுகல்.
- மின்-ஆளுமை, மின்-சுகாதாரம், மின்-கல்வி மற்றும் இணையவழி வங்கிச் சேவை போன்ற எண்மச் சேவைகளுக்கான அணுகல்.
- தகவல் தொழில்நுட்ப (IT) பயிற்சித் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப் படக் கூடிய பணிகள் மூலம் அதிகரித்த வேலை வாய்ப்புகள்.
- அலைபேசி வங்கிச் சேவை, எண்ம தரவுப் பைகள் மற்றும் நுண் பற்று அட்டைகள் மூலம் நிதிச் சேர்க்கையை அளிக்கிறது.
- எண்ம கல்வியறிவு மூலம் அதிகாரமளித்தல், குடிமக்கள் பல்வேறு அரசுச் சேவைகளை எளிதாகப் பெற உதவுகிறது.
- மின்னணுச் சாதனங்கள் உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு உதவுவதோடு இறக்குமதியைச் சார்ந்திருப்பதையும் குறைக்கிறது.
கூடுதல் தகவல்கள்:
டிஜிட்டல் இந்தியா தூண்கள்:
- அகலப் பட்டை அலைவரிசை கொண்ட நெடுஞ்சாலைகள்: குறிப்பாக கிராமப்புறங்களில், நாடு தழுவிய அகலப் பட்டை அலைவரிசை இணைப்பு.
- அலைபேசி இணைப்புக்கான உலகளாவிய அணுகல்: பரவலாக்கப் படாதப் பகுதிகளுக்கு அலைபேசிப் பரவலை விரிவுபடுத்துதல்.
- பொது இணைய அணுகல் திட்டம்: கிராமங்களில் இணைய அணுகல் அமைப்புகளை வழங்குதல்.
- மின்-ஆளுமை: IT மூலம் நிர்வாகம் மற்றும் சேவை வழங்குவதில் சீர்திருத்தங்கள்.
- அனைவருக்கும் தகவல்: அரசாங்கத் தரவு மற்றும் தகவல்களை இணையவழியில் கிடைக்கச் செய்தல்.
- மின்னணு சாதனங்கள் உற்பத்தி: இறக்குமதியைக் குறைத்தல், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல்.
- பணிகளுக்கான IT: IT மற்றும் தொலைத் தொடர்பு துறைப் பணிகளுக்குக் குடிமக்களுக்குப் பயிற்சி அளித்தல்.
- ஆரம்ப கால நிறைவுத் திட்டங்கள்: மின்-வாழ்த்துகள், எண்ம வருகை மற்றும் பொது அருகலை (வைஃபை) போன்ற விரைவான வெற்றிகளைச் செயல்படுத்துதல்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் முக்கிய முன்னெடுப்புகள்
1. பாரத்நெட் திட்டம்
தொடங்கப்பட்ட ஆண்டு:
- 2011 (தேசிய ஒளியிழை வலையமைப்பின் கீழ்).
அமைச்சகம்/ தலைமை முகமை:
- மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY).
நோக்கங்கள்:
- இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் (GPs) அகலப் பட்டை அலைவரிசை இணைப்பை வழங்குதல்.
- கிராமப்புறங்களில் அதிவேக இணைய அணுகலை எளிதாக்குதல்.
பயனாளிகள்:
- கிராமப்புறவாசிகள், அரசு சேவைகள், கல்வி நிறுவனங்கள், சுகாதாரச் சேவைகள் போன்றவை.
தகுதி அளவுகோல்கள்:
- கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் கிராமப்புறங்கள்.
பலன்கள்:
- கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட இணைய அணுகல்.
- எண்ம சேவைகள் மூலம் கிராமப்புறச் சமூகங்களை மேம்படுத்துதல்.
- மின்-ஆளுமை, கல்வி, தொலைதூர மருத்துவம் மற்றும் எண்ம தகவல் தொடர்பு ஆகியவற்றை எளிதாக்குதல்.
கூடுதல் தகவல்கள்:
- பாரத்நெட்டின் ஒரு பகுதியாக ஒளியிழை மூலம் 1.15 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகள் இணைக்கப் பட்டுள்ளன.
- இந்தியா முழுவதும் அகலப் பட்டை அலைவரிசை ஊடுருவலை மேம்படுத்தவும், தொலைதூரப் பகுதிகளில் எண்ம உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக எதிர்பார்க்கப் படுகிறது.
2. மின்னணு கிராந்தி
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம்/ தலைமை முகமை:
- மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY).
நோக்கங்கள்:
- அனைத்து அரசு சேவைகளையும் மின்னணு முறையில் வழங்குதல்.
- ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் இயங்கக் கூடிய அரசு சேவை விநியோக முறையை செயல்படுத்துதல்.
பயனாளிகள்:
- இந்தியா முழுவதும் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள குடிமக்கள்.
தகுதி அளவுகோல்கள்:
- அரசாங்க சேவைகளை அணுகும் எந்தவொரு குடிமகனும் இதற்குத் தகுதியுடையவர்கள்.
பலன்கள்:
- அரசாங்கச் சேவைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரித்தல்.
- அரசுச் சேவைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் அணுகுதல்.
- மேம்படுத்தப்பட்ட மின் ஆளுமை மற்றும் எண்ம விநியோகம்.
கூடுதல் தகவல்கள்:
- காகிதமில்லா நிர்வாகத்தின் டிஜிட்டல் இந்தியாவின் பார்வையை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
- பயனுள்ள மற்றும் மலிவு சேவை வழங்கல் வழிமுறைகளில் கவனம் செலுத்துகிறது.
3. எண்ம எழுத்தறிவுத் திட்டம்
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம்/ தலைமை முகமை:
- மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY).
நோக்கங்கள்:
- எண்ம கல்வியறிவை ஊக்குவித்தல் மற்றும் எண்ம இடைவெளியைக் குறைத்தல்.
- அடிப்படை தகவல் தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் எண்மக் கல்வியறிவுடன் குடிமக்களை மேம்படுத்துதல்.
பயனாளிகள்:
- கிராமப்புற மக்கள், பெண்கள், மூத்த குடிமக்கள், விளிம்பு நிலைச் சமூகங்கள்.
தகுதி அளவுகோல்கள்:
- அனைத்து இந்தியக் குடிமக்கள் மீதும், குறிப்பாக ஒதுக்கப்பட்ட சமூகங்கள் மீது, சிறப்புக் கவனம் செலுத்தப் படுகிறது.
பலன்கள்:
- கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதி மக்களிடையே எண்ம விழிப்புணர்வு மற்றும் கல்வியறிவு அதிகரித்தது.
- எண்மத் திறன் பயிற்சி மூலம் குடிமக்களை மேம்படுத்துகிறது.
- எண்ம பொருளாதாரத்தில் மேம்படுத்தப் பட்ட பங்கேற்பு மற்றும் அரசாங்கச் சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது.
கூடுதல் தகவல்கள்:
- தேசிய எண்ம எழுத்தறிவுத் திட்டத்தின் (NDLM) ஒரு பகுதி, 2020 ஆம் ஆண்டிற்குள் 1 கோடி நபர்களுக்குப் பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதில் வழங்கப்படும் படிப்புகள் இலவசம் என்பதோடு இதன் பயிற்சியானது பொதுச் சேவை மையங்கள் (CSCs) மூலம் வழங்கப் படுகிறது.
-------------------------------------