இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் (SDG 9) - பாகம் 30
(For English version to this please click here)
தொழில்துறை வழித்தட மேம்பாட்டுத் திட்டம்
தொடங்கப்பட்ட ஆண்டு:
- 2008 ஆம் ஆண்டு டெல்லி - மும்பை தொழில்துறை வழித்தடம் (DMIC) தொடங்கப்பட்டதன் மூலம் தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுத் திட்டம் (NICDP) ஆரம்பமானது.
- 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் DMIC அறக்கட்டளையின் மறுசீரமைப்பிற்குப் பிறகு NICDP மேலும் விரிவடைந்தது.
- 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் DMICDC கழகம், தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுக் கழகம் (NICDC) என மறுபெயரிடப் பட்டது.
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்.
- வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை (DPIIT) இத்திட்டத்தை மேற்பார்வையிடுகிறது.
- NICDC கழகம் நிறுவுதல்: தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுக் கழகம் (NICDC) கழகம் ஒரு சிறப்பு நோக்க நிறுவனமாக (SPV) நிறுவப்பட்டுள்ளது.
- பணி: NICDC கழகம், தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தை (NICDP) ஒருங்கிணைப்பதற்குப் பொறுப்பாகும்.
- நோக்கம்: இந்தியா முழுவதும் உள்ள தொழில்துறை வழித்தடங்களின் வளர்ச்சியை நிர்வகிப்பதையும், மேற்பார்வையிடுவதையும் SPV நோக்கமாகக் கொண்டுள்ளது.
நோக்கங்கள்:
- தொழில்துறை வளர்ச்சி: நாடு முழுவதும் உள்ள தொழில்துறை வழித்தடங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்துதல், உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கலை ஊக்குவித்தல்.
- நிலையான வளர்ச்சி: நவீன, நிலையான உள்கட்டமைப்பு மற்றும் பசுமைத் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய திறன் நகரங்கள் மற்றும் தொழில்துறை மையங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துதல்.
- வேலை உருவாக்கம்: நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்குதல், பிராந்திய மற்றும் தேசிய சமூக - பொருளாதார மேம்பாட்டிற்குப் பங்களித்தல்.
- உலகளாவிய போட்டித்திறன்: முக்கியத் தொழில்களில் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமும், தடையற்ற பல்முனை இணைப்பை எளிதாக்குவதன் மூலமும் உற்பத்தியில் உலகளாவிய முன்னணியில் இந்தியாவை நிலைநிறுத்துதல்.
- பிராந்திய மேம்பாடு: பல்வேறு பிராந்தியங்களில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், தொழில்துறை முனைகள் மற்றும் நகரங்களை அவற்றின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப உள்கட்டமைப்புகளை உருவாக்குதல்.
பயனாளிகள்:
- உற்பத்தி அலகுகள்: இந்த வழித்தடங்களில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் உற்பத்தி அலகுகளை நிறுவுகின்றனர்.
- குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs): இந்தத் தொழில்துறை மையங்களில் தங்கள் செயல்பாடுகளை நிறுவ ஊக்குவிக்கப் படுகிறது.
- மாநில அரசுகள்: உள்கட்டமைப்பு மேம்பாடு, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் அவர்களது பிராந்தியங்களில் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிலிருந்து பயனடைகின்றன.
- பொது மக்கள்: இந்த வழித்தடங்களைச் சுற்றியுள்ள சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம், மேம்பட்ட வாழ்க்கைத் தரம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் ஆகியவற்றால் பயனடைகிறார்கள்.
தகுதி அளவுகோல்கள்:
- அனைத்து வகையான தொழில துறைகளுக்கும் இது பொருந்தும், ஆனால் முதன்மையாக பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து, மருந்துகள், உயர் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் போன்ற உற்பத்தித் தொழில்களில் கவனம் செலுத்துகிறது.
- தொழில்துறை மண்டலங்களில், உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தகுதியுடையவர்கள்.
- முதலீட்டாளர்களுக்கான குறிப்பிட்டத் தகுதி அளவுகோல்கள் தனிப்பட்ட வழித்தட வழிகாட்டுதல்கள் மற்றும் நிலம் மற்றும் உள்கட்டமைப்பு கிடைக்கும் தன்மை ஆகியவற்றுடன் தொடர்பு படுத்தப் பட்டுள்ளன.
பலன்கள்:
பசுந்தடத் தொழில்துறை திறன் நகரங்களை உருவாக்கியது
தோலேரா சிறப்பு முதலீட்டுப் பகுதி, குஜராத்
- இது 2016 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
- அகமதாபாத்தில் இருந்து தென்மேற்கே 100 கிமீ தொலைவில் அமைந்துள்ள தோலேரா, இந்தியாவின் முதல் பிளாட்டினம் தரப்படுத்தப்பட்ட தொழில்துறை திறன் நகரமாகும்.
- முக்கிய துறைகள்: பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து, உயர் தொழில்நுட்பம், மருந்துகள்.
- தென்கிழக்கு ஆசியாவில் மிகப் பெரியது.
- பிராந்திய மற்றும் தேசிய வளர்ச்சியைத் தூண்டுவதற்கு நிலையான, மாசுபடுத்தாத தொழில்களில் கவனம் செலுத்துகிறது.
அவுரங்காபாத் தொழிற்துறை நகரக் கட்டமைப்புக் கழகம், மகாராஷ்டிரா
- மகாராஷ்டிராவில் 10,000 ஏக்கர் பரப்பளவில் பசுந்தடத் திறன் தொழில் நகரம் உள்ளது.
- அவுரங்காபாத் அருகே ஷெந்திரா மற்றும் பிட்கினில் அமைந்துள்ளது.
- டெல்லி - மும்பை தொழில்துறை வழித்தடத்தின் (DMIC) முன்னெடுப்பின் கீழ் உருவாக்கப் பட்டது.
- அவுரங்காபாத் தொழிற்துறை நகரக் கட்டமைப்புக் கழகம் (AITL) மூலம் நிர்வகிக்கப் படுகிறது, இது MIDC மற்றும் NICDC அறக்கட்டளைக்கு இடையே உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு நோக்க நிறுவனம் (SPV).
ஒருங்கிணைந்த தொழில்துறை நகரம், கிரேட்டர் நொய்டா (உத்தரப் பிரதேசம்)
- கிரேட்டர் நொய்டாவில் ஒரு வலுவான தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்தத் தொழில்துறை நகரம், விக்ரம் உத்யோக்புரி (மத்தியப் பிரதேசம்)
- இந்த தொழில்துறை நகரம் உஜ்ஜயினிலிருந்து 8 கிமீ தொலைவிலும், தேவாஸிலிருந்து 12 கிமீ தொலைவிலும் உள்ள நார்வார் கிராமத்தில் அமைந்துள்ளது.
- இந்த திட்டம் 442.3 ஹெக்டேர் (1,096 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ளது.
- வேலைவாய்ப்பு, தொழில்துறை உற்பத்தி மற்றும் பிராந்திய ஏற்றுமதிகளை அதிகரிக்க வடிவமைக்கப் பட்டுள்ளது.
- உயர் ரக உள்கட்டமைப்பு மற்றும் சமூக, இடஞ்சார்ந்த வசதிகளை வழங்குகிறது.
- DMIC பிராந்தியத்தில் மாநில நெடுஞ்சாலை 18 என்பதில் உத்தி ரீதியாக இது அமைந்துள்ளது.
கூடுதல் தகவல்கள்
- முடிக்கப்பட்ட திட்டங்கள்: NICDP ஏற்கனவே நான்கு திட்டங்களை நிறைவு செய்துள்ளது, மேலும் நான்கு திட்டங்களை தற்போது செயல்படுத்தி வருகிறது.
- உத்திசார் இலக்கு: இந்தத் திட்டங்களின் ஒருங்கிணைந்த மேம்பாடு, நிலையான உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் தடையற்ற இணைப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது.
- உலகளாவிய போட்டித்திறன்: இந்த முன்னெடுப்புகள் இந்தியாவை, உலகளாவிய உற்பத்தி சக்தியாக நிலைநிறுத்துவதையும், வரவிருக்கும் ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இயக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
- வழித்தட இருப்பிடங்கள்: NICDP ஆனது இந்தியா முழுவதும் உள்ள பல வழித்தடங்கள் மற்றும் தொழில்துறை முனைகளை உள்ளடக்கியது:
- தோலேரா (குஜராத்)
- அவுரங்காபாத் (மகாராஷ்டிரா)
- கிரேட்டர் நொய்டா (உத்தரப் பிரதேசம்)
- விக்ரம் உத்யோக்புரி (மத்தியப் பிரதேசம்)
தொழில்துறை வழித்தடங்களுக்கு அரசு ஒப்புதல்
- இந்திய அரசு நான்கு கட்டங்களாக ஒழுங்கமைக்கப்பட்ட 32 திட்டங்களை உள்ளடக்கிய 11 தொழில்துறை வழித்தடங்களை மேம்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட தொழில்துறை வழித்தடங்கள்:
- டெல்லி - மும்பை தொழில்துறை வழித்தடம் (DMIC)
- சென்னை - பெங்களூரு தொழில்துறை வழித்தடம் (CBIC)
- கோயம்புத்தூர் வழியாக கொச்சிக்கு CBIC நீட்டிப்பு
- அமிர்தசரஸ் - கொல்கத்தா தொழில்துறை வழித்தடம் (AKIC)
- ஹைதராபாத் - நாக்பூர் தொழில்துறை வழித்தடம் (HNIC)
- ஹைதராபாத் - வாரங்கல் தொழில்துறை வழித்தடம் (HWIC)
- ஹைதராபாத் - பெங்களூரு தொழில்துறை வழித்தடம் (HBIC)
- பெங்களூரு - மும்பை தொழில்துறை வழித்தடம் (BMIC)
- கிழக்குக் கடற்கரை பொருளாதார வழித்தடம் (ECEC), விசாகப்பட்டினம் - சென்னை தொழில் துறை வழித்தடம் (VCIC) கட்டம்-1
- ஒடிசா பொருளாதார வழித்தடம் (OEC)
- டெல்லி-நாக்பூர் தொழில்துறை வழித்தடம் (DNIC).
12 புதிய தொழில்துறை முனையங்கள் / நகரங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
- பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல்: பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு 12 புதிய தொழில் முனையங்களை நிறுவ ஒப்புதல் அளித்துள்ளது.
- குறிக்கோள்: பொருளாதார வளர்ச்சியை உந்துவதற்கு இந்தியா முழுவதும் தொழில்துறை மையங்களின் வலுவான வலையமைப்பை உருவாக்குவதே இதன் குறிக்கோள்.
- முதலீடு: இந்த 12 நகரங்களின் வளர்ச்சிக்காக மதிப்பிடப்பட்ட முதலீடு ₹28,602 கோடி.
- தாக்கம்: இந்த முன்னெடுப்பு இந்தியாவின் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்தும் மற்றும் நாட்டின் தொழில்துறை மாற்றத்திற்கு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
- மேம்படுத்தப்பட்ட உலகளாவியப் போட்டித் திறன்: இந்தத் திட்டம் உலகளாவியச் சந்தையில், இந்தியாவின் போட்டித் தன்மையை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.
- உத்திசார் வளர்ச்சி: இந்தத் தொழில்துறை மையங்கள், இந்தியாவின் தொழில்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், நீண்டகால நிலையான வளர்ச்சியை வளர்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்குகிறது.
அங்கீகரிக்கப்பட்ட நகரங்கள்:
- குர்பியா, உத்தரகாண்ட்
- ராஜ்புரா-பாட்டியாலா, பஞ்சாப்
- திகி, மகாராஷ்டிரா
- பாலக்காடு, கேரளா
- ஆக்ரா, உத்தரபிரதேசம்
- பிரயாக்ராஜ், உத்தரபிரதேசம்
- கயா, பீகார்
- ஜஹீராபாத், தெலுங்கானா
- ஓர்வகல், ஆந்திரப் பிரதேசம்
- கோபர்த்தி, ஆந்திரப் பிரதேசம்
- ஜோத்பூர்-பாலி, ராஜஸ்தான்.
- இந்தத் திட்டங்கள், ஆறு முக்கிய வழித்தடங்களில் திட்டமிடப் பட்டுள்ளது.
தேசிய தளவாடக் கொள்கை (NLP)
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (DPIIT).
நோக்கங்கள்:
- ஒருங்கிணைந்த, தடையற்ற, திறமையான, நம்பகமான, பசுமையான, நிலையான மற்றும் செலவு குறைந்த தளவாட வலையமைப்பை உருவாக்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல், வணிகப் போட்டித் தன்மையை மேம்படுத்துதல்.
- மேம்பட்ட தொழில்நுட்பம், செயல்முறைகள் மற்றும் திறமையான மனிதவளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தளவாடச் செலவுகளைக் குறைத்தல் மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல்.
- இந்தியாவில் தளவாடச் செலவினைக் குறைத்தல்.
- இந்தியாவின் தளவாட செயல்திறன் குறியீட்டின் (LPI) தரவரிசையை மேம்படுத்துவதன் மூலம் 2030 ஆம் ஆண்டிற்குள் முதல் 25 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கச் செய்தல்.
- திறமையான தளவாடச் சுற்றுச்சூழல் அமைப்புக்கான தரவு சார்ந்த முடிவு ஆதரவு பொறிமுறையை உருவாக்குதல்.
பயனாளிகள்:
- தளவாடங்கள், உற்பத்தி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள வணிகங்கள்.
- தொழில்துறைகள் மற்றும் தளவாடச் சேவை வழங்குநர்கள்.
- இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் (UTs).
- தளவாடங்கள் மற்றும் விநியோகச் சங்கிலித் துறையின் பங்குதாரர்கள்.
தகுதி அளவுகோல்கள்:
- மாநில மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறைகளுக்கு உள்ள தளவாடங்கள், போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலித் தொழில்களில் உள்ள அனைத்துப் பங்குதாரர்களும் தகுதியானவர்கள்.
பலன்கள்:
- தளவாடச் செலவுகளைக் குறைத்தல் மற்றும் தளவாடச் செயல்திறன் ஆகியவற்றில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
- தடையற்ற மற்றும் திறமையான தளவாட வலையமைப்பு உருவாக்குகிறது.
- தளவாட அமைப்புகளின் ஒருங்கிணைப்பு, சேவைத் தரத்தில் முன்னேற்றம் மற்றும் திறன் மேம்பாடு.
- விநியோகச் சங்கிலி சீர்குலைவதைக் குறைக்க EXIM தளவாடங்கள் மற்றும் துறைமுக இணைப்புகளை நெறிப்படுத்தி உள்ளது.
- தரவு சார்ந்த முடிவெடுப்பதன் மூலம் ஒட்டு மொத்தத் தளவாடச் சுற்றுச்சூழல் அமைப்பில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
- திறமையான மனித வளத்தை மேம்படுத்துதல் மற்றும் தளவாடங்களில் மனித வளத் திறன்களை மேம்படுத்துகிறது.
கூடுதல் தகவல்கள்:
- PM கதிசக்தி & NLP: தேசியத் தளவாடக் கொள்கை (NLP), தளவாடங்கள் சேவைகளை மேம்படுத்துதல், எண்ம மயமாக்கல், செயல்முறைச் சீர்திருத்தங்கள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் பிரதம மந்திரி கதி சக்தி தேசிய ஆளுகைத் திட்டத்துடன் (NMP) இணைந்து செயல்படுகிறது.
- விரிவான தளவாடங்கள் செயல் திட்டம் (CLAP): NLP திட்டத்தின் ஒரு பகுதியாகத் தொடங்கப் பட்டது, இது எண்மத் தளவாட அமைப்புகள், சரக்குகளை தரநிலைப்படுத்துதல், மனித வள மேம்பாடு, EXIM தளவாடங்கள் மற்றும் தளவாடப் பூங்கா மேம்பாடு போன்ற முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியது.
- தனித்துவமான தளவாடங்கள் இடைமுகத் தளம் (ULIP): NLP திட்டத்தின் ஒரு முக்கியச் சாதனையான ULIP பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களிலிருந்து 34 தளவாடங்கள் தொடர்பான அமைப்புகளை ஒருங்கிணைக்கிறது, இதில் 600க்கும் மேற்பட்ட தொழில்துறை வணிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- EXIM தளவாடங்கள்: வர்த்தக வசதிக்கு முன்னுரிமை அளித்தல், NLP உள்கட்டமைப்பு இடைவெளிகளை நிவர்த்தி செய்தல் மற்றும் துறைமுக இணைப்பை மேம்படுத்துதல், சரக்கு கண்காணிப்பை மேம்படுத்துதல், விநியோகச் சங்கிலி சீர்குலைவதைக் குறைத்தல் போன்றவற்றுக்குத் தளவாடங்கள் தரவு வங்கி (LDB) போன்ற கருவிகளைப் பயன்படுத்துகிறது.
- மாநிலத் தளவாடக் கொள்கை: 22 மாநிலங்கள், மாநில அளவில் தளவாடங்களை மேம்படுத்த, தேசிய தளவாடக் கொள்கையுடன் இணைந்து, தங்கள் சொந்த தளவாடத் திட்டங்களை உருவாக்கியுள்ளன.
- பல்வேறு மாநிலங்களில் தளவாடங்களை எளிதாக்கல் (LEADS): இந்த அட்டவணையானது தளவாடச் செயல்பாட்டின் அடிப்படையில் மாநிலங்களை வரிசைப்படுத்துகிறது, இது முன்னேற்றத்திற்கான பகுதிகளை அடையாளம் காண உதவுகிறது.
- தளவாடச் செலவு கட்டமைப்பு: தளவாடச் செலவுகளை மதிப்பிடுவதற்கான ஒரு கட்டமைப்பு உருவாக்கப் படுகிறது, அடிப்படைத் தரவுகளில் தொடங்கி மேலும் துல்லியமான, நீண்ட கால மதிப்பீடுகளை நோக்கி நகரும் இது உதவுகிறது.
-------------------------------------